search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம் - வார பலன்கள்

    ரிஷபம்

    இந்த வார ராசிபலன்

    28.8.2023 முதல் 3.9.2023 வரை

    புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டிய வாரம்.ராசி அதிபதி சுக்ரன் வக்ரம். 2,5-ம் அதிபதி புதன் வக்ரம். 9,10-ம் அதிபதி சனி வக்ரம் என திரிகோணங்கள் வலு குறைகிறது. எனவே பங்குச்சந்தையில் புதிய முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பு உயரும். விண்ணப்பித்த வீட்டுக்கடன் கிடைக்கும். வழக்குகளை ஒத்திப்போடுவது நலம்.புதிய சொத்துக்களின் பத்திரப்பதிவு இந்த வாரத்தில் நடக்கும்.உங்கள் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் உங்கள் மறைமுக எதிரிகளே காரணமாக அமைவார்கள். பணியில் இருப்பவர்கள் விரைந்து செயல்படுவதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெற முடியும். உங்களை புண்படுத்திய சகோதரி மன்னிப்பு கேட்பார். தவறு செய்வது மனித இயல்பு என்பதால் நீங்களும் மன்னித்து விடுவீர்கள். உடல் நலம் சீராகும். பிரிந்த தம்பதிகள் கூடி மகிழ்வார்கள். திருமணத்தடை அகலும். பூர்வீக சொத்தை பிரிப்பதில் சர்ச்சைகள் அதிகரிக்கும்.பிரதோஷத்தன்று சிவனுக்கு விபூதி அபிசேகம் செய்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்த வார ராசிபலன்

    21.8.2023 முதல் 27.8.2023 வரை

    உற்சாகமான வாரம். 2, 5-ம் அதிபதி புதன் சுக ஸ்தானத்தில் சூரியனுடன் இணைந்து புத ஆதித்ய யோகம் பெறுவதால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தைரியம் ஏற்படும். சொத்து சார்ந்த பிரச்சினைகள் சீராகும். ராசி அதிபதி சுக்ரன் வக்ர கதியில் சகாய ஸ்தானம் செல்லுவதால் முக்கிய ஆவணங்கள், ஆபரணங்களைக் கவனமாக கையாளவும். புதிய தொழில் ஒப்பந்தங்களில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. சிலர் உத்தியோக நிமித்தமாக பூர்வீகத்தை, குடும்பத்தை விட்டுப் பிரியலாம். உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணியில் சேர உத்தரவு வரும்.தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தரும். தடைபட்ட பதவி உயர்வு தற்போது கை கூடும். ஆரோக்கியத் தொல்லைகள் சீராகும்.26.8.2023 காலை 8.37 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் பெண்கள் ஆன்லைனில் பொருள் வாங்கி ஏமாறும் வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்க்க வும். கருட பஞ்சமியன்று கருடரை திருமஞ்சனம் அபிசேகம் செய்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    14.08.2023 முதல் 20.8.2023 வரை

    திட்டங்கள், எண்ணங்கள் செயலாக்கம் பெறும் வாரம். 4-ம் அதிபதி சூரியன் 2,5-ம் அதிபதி புதனுடன் சேர்ந்து புத ஆதித்ய யோகம் பெறுகிறது.எதற்கும் முடிவு காண முடியாமல் தவித்த நிலை மறையும். குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். தன வரவில் தன்னிறைவு உண்டாகும். செய்யும் தொழிலில் லாபம், முன்னேற்றம் உண்டு. சிலர் தொழில் முதலீட்டை அதிகரிக்க கடன் தொகை விண்ணப்பிக்கலாம். இடமாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றல் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும். பங்குச் சந்தை ஆதாயம் உண்டு.

    புதிய சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வாங்கலாம். பெண்களுக்கு சரளமான பண புழக்கம் இருக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். திருமணம் பற்றிய நல்ல தகவல்கள் கிடைக்கும். மறு திருமணம் முயற்சி பலன் தரும். கைபேசியை கவனமாக கையாளவும். கணவன், மனைவியிடம் இயல்பு நிலை நீடிக்கும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆடி அமாவாசையன்று பட்சிகளுக்கு உணவிடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    07.08.2023 முதல் 13.8.2023 வரை

    திருமண முயற்சி கைகூடும் வாரம். வக்ரம் பெற்ற ராசி அதிபதி சுக்ரன் 4-ம் அதிபதி சூரியனுடன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அறிவாற்றல் அதிகரிக்கும், முன் கோபம் குறையும். உங்களின் சொத்துக்களை உடன் பிறந்தவர்கள் பயன்படுத்துவார்கள் அல்லது பூர்வீக சொத்தில் அவர்களுக்கு அதிக பங்கு கிடைக்கலாம். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். ஆனால் சனி வக்ரமாக இருப்பதால் லாபத்திற்கு கடுமையாக உழைக்க நேரும். கூட்டுத் தொழிலில் பிரிவினை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளால் ஆதாயம் உண்டு.

    சிலரின் பிள்ளைகளுக்கு வெளி நாட்டு குடியுரிமை கிடைக்கும். 7-ம் அதிபதி செவ்வாய் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் திருமண முயற்சி வெற்றி தரும். அரசியல் பிரமுகர்களில் சிலர் கட்சி மாறலாம். மிகப் பெரிய கட்சியில் இணையும் வாய்ப்பு கிட்டலாம். தந்தைவழி உறவினர்கள் வெளிப்பேச்சில் நல்லவர்களாகவும் மனதிற்குள் வஞ்சகம் வைத்தும் பேசுவார்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தென்படும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடி வெள்ளிக் கிழமை அஷ்ட லட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    31.7.2023 முதல் 6.8.2023 வரை

    தனவரவு தாராளமாக இருக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன், புதன் மற்றும் செவ்வாயுடன் 4-ம்மிடத்தில் சேர்க்கை பெறுவதால் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாயின் அன்பும் ஆசீர்வாதமும் கிடைக்கும். நிலுவையில் உள்ள வாடகை, குத்தகை பணம் வசூலாகும். தொழில், உத்தியோகத்தில் நிலவிய சிக்கல்கள் தீரும். வருமானத்தை அதிகரிக்க புதிய பாதை தென்படும்.

    குரு விரைய ஸ்தானத்தில் நிற்பது வரவிற்கு மீறிய செலவை உண்டாகும். விரையத்தை வீடு, வாகனம் வாங்குவது, பிள்ளைகளின் திருமணச் செலவு, நகை வாங்குவது, எதிர்கால சேமிப்பு திட்டங்களில் சேமிப்பது, இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது என சுப விரயமாக மாற்றியமைப்பது புத்திசாலித்தனம். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். 31.7.2023 இரவு 12.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். மனக்குழப்பம், பதட்டம் அதிகரிக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆடிப்பெருக்கு அன்று சர்க்கரைப் பொங்கல் தானம் வழங்கவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    24.7.2023 முதல் 30.7.2023 வரை

    சுமாரான வாரம். ராசி மற்றும் 6-ம் அதிபதி சுக்ரன் வக்ரம் பெறுவதால் கடன் தொகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். தொழில், உத்தியோகம் போன்றவற்றில் சிறு சுணக்கம் உண்டாகும்.தாய் வழி உறவுகளை, தாய்மாமனை, அனுசரித்துச் செல்ல வேண்டும். ராசி அதிபதி சுக்ரன் மற்றும் 7ம் அதிபதி செவ்வாய்க்கு சனி பார்வையால் ஏற்படும் பாதிப்பை குருவின் பார்வை சமாளிக்கும்.

    வாழ்க்கை துணையுடன் நிலவிய கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு பிரிவினைகள் ஒரு முடிவிற்கு வரும். பூர்வீகச் சொத்து பாகப்பிரிவு தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கும். சொத்துதகராறு, பாகப்பிரிவினை போன்றவற்றால் மன சஞ்சலமும் உண்டாகும். வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம் உண்டாகும்.

    ஆரோக்கியம் மேன்மையடையும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். 29.7.2023க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சிலருக்கு ஞாப சக்தி குறையும். ஆடி வெள்ளிக் கிழமை வயது முதிர்ந்த சுமங்கலிகளிடம் ஆசி பெறவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    17.7.2023 முதல் 23.7.2023 வரை

    அதிர்ஷ்டம் செயல்படும் வாரம்.ராசி அதிபதி சுக்ரனுக்கு குருப்பார்வை. 2,5-ம் அதிபதி புதன், 4-ம் அதிபதி சூரியனுடன் சகாய ஸ்தானத்தில் நிற்கிறார். எனவே இந்த வாரத்தில் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும்.நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

    வீடு, மனை சார்ந்த செயல்களில் பொறுமை வேண்டும்.அரசாங்க காரியங்களில் லாபமும் அனுகூலமும் ஏற்படும். தந்தைவழி உறவுகளால் ஒத்துழைப்பு ஏற்படும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் சில விஷயத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்வது உங்களுக்கு சிக்கலைத் தரலாம். மாணவர்களுக்கு விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் மேம்படும்.

    சிலர் பெரிய நிறுவனத்தின் கேம்பஸ் இன்டர்வியூவில் வெற்றி பெறுவார்கள். சுப மங்கல நிகழ்வுகள் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. ஆரோக்கிய தொல்லைகள் சீராகும். ஆடி வெள்ளிக்கிழமை குங்கும அர்ச்சனை செய்து அம்பிகையை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    10.7.2023 முதல் 16.7.2023

    எண்ணங்களும் லட்சியங்களும் நிறைவேறும் வாரம்.ராசி அதிபதி சுக்ரன் 7, 12-ம் அதிபதி செவ்வாயுடன் ராசிக்கு 4-ம்மிடமான சுக ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால்பொருளா தாரத்தில் தன்னிறைவு ஏற்படும். தந்தையின் அன்பும் அனுசரனையும் கிடைக்கும்.திருமண முறிவு ஏற்பட்டு பிரிந்துவாழும் கணவன், மனைவி சேர்ந்து வாழ்வர்.

    சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்கு சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்கு வந்து விடுவார்கள். வீண் செலவுகள், விரயங்கள் இருந்தாலும் சமாளிக்கும் தைரியமும் ஆற்றலும் உண்டாகும்.சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டே, தொழில் செய்து வருமானத்தை பெருக்குவார்கள். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர உத்தரவு வரும்.

    காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். புத்திரப் பேறில் நிலவிய தடைகள் விலகும். சிறுசிறு ஆரோக்கிய குறைபாடுகள் தோன்றி மறையும்.ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு கூழ் படைத்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    3.7.2023 முதல் 9.7.2023 வரை

    உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும் வாரம். வார இறுதியில் ராசி அதிபதி சுக்ரன், சனி மற்றும் குருவின் பார்வைக்குச் செல்கிறது. குரு மங்கள யோகம், குருச் சுக்ர யோகத்தால் கடன் பிரச்சி னைகள் படிப்படியாக குறையும். கடந்த கால பிரச்சினைகள் விலகி முன்னேற்றமான நிலை உண்டாகும். நீண்ட நாள் கனவுகள் திட்டங்கள், எண்ணங்கள் நிறைவேறும்.

    தொழிலில் நிலவிய தேக்க நிலை மாறி நிறைந்த லாபம் கிடைக்கும். உழைப்பிற்கான முழு பலனும் கிடைக்கும். சிலருக்கு கவுரவப் பதவிகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் வேலைப் பளு குறைந்து நிம்மதியுடன் பணிபுரிய முடியும். அரசாங்க பணி முயற்சி சாதகமாகும். மங்களகரமான சுபகாரிய முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெறும். மாமனாரால் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும்.புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அழகு, ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகமாகும்.

    4.7.2023 பகல் 1.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் சிக்கல்களை குறைத்துக் கொள்ள முடியும். குல தெய்வ வழிபாடு மேன்மை தரும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    26.6.2023 முதல் 2.7.2023 வரை

    தடைகள் தாமாக விலகும் வாரம். 2,5-ம் அதிபதி புதன் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் கடந்த காலத்தில் நிலவிய தடைகள் விலகி வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். மதிப்பு, மரியாதை அந்தஸ்தும் உயரும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் சீராகும். பொருளாதாரத்தில் நிலவிய பின்னடைவு அகலும்.

    பங்குச் சந்தை முதலீடுகளால் உபரி வருமானம் உண்டு.பேச்சை மூலதனமாக கொண்ட தொழில், கமிஷன் அடிப்படையான தொழில் புரிபவர்களுக்கும் மிக மிக சாதகமான நேரம். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.பிள்ளைகளின் உத்தியோகம், சுப விசேஷ அனுகூலம் உங்களை ஆனந்தப்படுத்தும். பெண்கள் குடும்பத்திற்குத் தேவையான நவீன பொருட்கள் வாங்குவார்கள்.

    திருமணத் தடை அகலும். புதிய எதிர்பாலின நட்பு உருவாகும். காதல் திருமண முயற்சி வெற்றி தரும்.குடும்ப விருந்து உபசாரங்கள், கேளிக்கைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இடமாற்றம் கிடைக்கும்.உடல் ஆரோக்கியம் சீராகும். ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டால் மன நிறைவு ஏற்படும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    19.6.2023 முதல் 25.6.2023 வரை

    விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வாரம்.ராசி அதிபதி சுக்ரன் செவ்வாயுடன் தைரிய ஸ்தானத்தில் சேர்ந்து நிற்பதால் மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் எதிலும் முதலிடத்தை பிடிப்பது ஒன்றே தலையாய நோக்கமாக இருப்பீர்கள்.வீரமும் தைரியமும் எடுத்த காரியத்தில் இறுதிவரை போராடி ஒரு முடிவை பார்த்து விட வேண்டும் என்ற உத்வேகமும் கூடும்.

    9, 10-ம் அதிபதி சனி வக்ரம் பெறுவதால் புதிய ஒப்பந்தத் திற்கு கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் கஷ்ட ஜீவனம் நடத்துவார்கள். மத நம்பிக்கை குறையும், மத மாற்ற சிந்தனை மேலோங்கும். பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் இருந்து வந்து சர்ச்சைகள் அதிகரிக்கும்.

    விவாகரத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிள்ளைகளிடம் கவன மாக பேசுவது நல்லது. அரசியல் பிரமுகர்கள், அரசாங்க ஊழியர்க ளுக்கு தனிமை, அடிமை, சிறை தண்டனை, நோயால் படுத்த படுக்கையாக கிடப்பது போன்ற பலன் நடக்கும்.எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரத்து கூடும். கண் சிகிச்சைக்கு உதவுவது நல்லது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    12.6.2023 முதல் 18.6.2023 வரை

    முழுமையான அனுகூலம் கிடைக்கும் வாரம். 2,5-ம் அதிபதி புதன் ராசியில் சஞ்சரிப்பதால் ஆழ்மனதில் புதிய உணர்வுப் பூர்வமான எண்ணங்கள் அதிகரிக்கும். சிலருக்கு தகுதிக்கு மீறிய பதவி கிடைக்கும். 6 மாதம் தொழில், 6மாதம் உத்தியோகம் என மாறி மாறி காலத்தை கடத்தியவர்களுக்குநிலையான வேலை கிடைக்கும்.

    நிலையற்ற வருமானத்தில் தள்ளாடிய குடும்பம் நிலையான வருமானத்தில் தலை நிமிர்ந்து நிற்கும். ராசி அதிபதி சுக்ரன் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. நாணயம் நீடிக்கும். மாணவர்களுக்கு உயர் கல்வி யோகம் உண்டாகும். சிலர் அடுக்கு மாடி வீடு கட்டுவீர்கள்.

    7-ம்மிடத் திற்கு சனி பார்வை இருப்பதால் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் சிறு சுணக்கம் உண்டாகும். திருமணத் தடை நீங்கும்.அக்கம் பக்கத்தினருடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மாறும். வாராகி அம்மனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×