search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம் - வார பலன்கள்

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    5.6.2023 முதல் 11.6.2023 வரை

    மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி சுக்ரன் 7,12-ம் அதிபதி செவ்வாயுடன் 3-ம்மிடமான முயற்சி ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் இதுவரை சாதிக்க துடித்த விசயங்களை சாதிக்கும் துணிவும், சந்தர்ப்பமும் உருவாகும். எதிரில் பார்த்தாலும் பார்க்காமல் விலகிச் சென்ற சகோதரர் நலம் விசாரிப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது.

    நல்ல தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். வியாபார பங்காளிகளிடம் நிலவிய மனக்கசப்பு மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிக ரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிருப்தியைத் தரும். திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். சொத்துகள் சேரும். உயர்ரக வாகனங்கள் கிடைக்கும்.

    5.6.2023 அன்று 3.28 காலை முதல் 7.6.2023 அன்று 4.40 காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல்களைப்பும், சோர்வும் உண்டா கலாம். கவனமாக இருப்பது நல்லது. கற்பக விநாய கரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    29.5.2023 முதல் 4.6.2023 வரை

    எதிர்மறை பிரச்சினைகள் விலகும் வாரம். ராசி மற்றும் 6-ம் அதிபதி சுக்ரன் 7,12 அதிபதி செவ்வாயுடன் ராசிக்கு 3ம்மிடத்தில் சேருவதால் மன சஞ்சலம், பய உணர்வு அகலும். புதிய தெம்பு, தெளிவு பிறக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகளை பேச்சுவார்த்தையில் சேர்த்து வைக்க உகந்த காலம். இடப்பெயர்ச்சியாக வாய்ப்புள்ளது.

    அலைச்சல் நிறைந்த பயணங்கள் அதிகரிக்கும்.சகோதர, சகோதரிகளுடன் ஒற்றுமை நிலவும். காணாமல் போன பொருள்கள் திரும்ப கிடைக்கும்.இதுவரை உங்கள் மேல் இருந்த தவறான குற்றச்சாட்டு மறையும். உங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த நோய்கள் அகலும். ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உடலின் ஐம்புலன்களும் மகிழ்ச்சியடையும்.

    சொத்து, வீடு,வாகனம் என உங்கள் ஆழ்மன எண்ணம், ஆசைகள் நிறைவேறும். வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும்.இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினை குறையும். உயர்கல்வி தொடர் பான முயற்சியில் வெற்றி உண்டு. பவுர்ண மியன்று மகாலட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    22.5.2023 முதல் 28.5.2023 வரை

    புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கடின உழைப்பால், வெற்றிகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்.வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலைகள் மாறி புதிய வேகம் பிறக்கும்.சிறு தொழில் புரிபவர்களுக்கு வங்கிக் கடன் உதவிகள் கிடைக்கும்.

    வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள நிலுவைத் தொகை தற்போது கிடைத்து விடும். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். திருமணமாகாத வர்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் எடுக்கப்படும். பூர்வீகச் சொத்து பிரச்சினை சாதகமாகும்.புதிய வீடு, பூமி வாங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகலாம். பயணங்கள் அதிகரிக்கும்.

    மாமியார், நாத்தனாரிடம் ஏற்பட்ட மனக் கசப்பு மறையும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். வெள்ளிக்கிழமை நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    சகல நன்மைகளும் அடையக் கூடிய காலம். ராசி அதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் திறமை, செல்வாக்கு, புகழ் ஆகியவை கூடும். பணவரவு உயரும். முகப் பொலிவு, ஆரோக்கியம் கூடும். 2,5-ம் அதிபதி புதன் வக்ர நிவர்த்தி பெறுவதால் கடந்த கால சிந்தனைகளை விட எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் அதிகமாகும்.

    பொன்னையும், பொருளையும் விட புகழ், பதவி மீது அதிக ஆசை இருக்கும். சிலருக்கு ராணுவம், போலீஸ், சட்டம், அரசியல் போன்றவற்றில் உயர் பதவிகள் கிடைக்கும்.சமூகத்தில் தனி மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். எதிரிகளின் பலம், பலவீனம் அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

    வியாபாரம் தொழில் வெற்றி நடைபோடும். சிலர் கடல் கடந்து சென்று பொருளீட்டலாம். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திரப் பேறு கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். மன இறுக்கம் குறையும். அமாவாசையன்று பசுவிற்கு இயன்ற தானம் தரவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    8.5.2023 முதல் 14.5.2023 வரை

    மகிழ்ச்சியும்,சந்தோஷமும் தொடரும் வாரம்.ராசி மற்றும் 6-ம் அதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் நிற்பதால் ஏமாந்த தொகை கைக்கு வரும். தொட்டது துலங்கும். அனுபவப் பூர்வமாக பேசுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். 2, 5-ம் அதிபதி புதன் விரயத்தில் சஞ்சரிப்பதால் பூர்வீகச் சொத்தை விற்பனை செய்து, புதிய மனை வாங்குவீர்கள்.

    இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சக வியாபாரிகளின் ஒத்துழைப்பு ஆறுதலாக இருக்கும்.பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பால்ய வயது நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீடு வாங்குவீர்கள். ஆடம்பரச் செலவு களை குறைத்து வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள். நீச செவ்வாயின் 8-ம் பார்வை சனியின் மேல் பதிவதால் ஜாமீன் கையெழுத்திடு வதைத் தவிர்க்க வேண்டும்.

    8.5.2023 இரவு 7.30 முதல் 10.5.2023 இரவு 9.50 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் மிகுந்த பிரயாணத்தால் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு ஏமாறாதீர்கள். சங்கடஹர சதுர்த்தியன்று தேன் அபிசேகம் செய்து விநாயகரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    1.5.2023 முதல் 7.5.2023 வரை

    சுப விரயங்கள் அதிகரிக்கும் வாரம். தன அதிபதி புதன் வக்ரம் பெற்று 7, 12-ம் அதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனை பெறுவதால் கூட்டுத் தொழில் இருந்து விடுபட்டு தனித்து செயல்படும் ஆர்வம் உண்டாகும். நண்பர்களை எதற்கும் துணைக்கு அழைக்காதீர்கள. சுய முயற்சியே உங்களுக்கு நல்லது. உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் நிலவும். பணம் வரும் வழிகள் தடைபடும்.

    விரயத்தை வீடு வாகனம், பிள்ளைகளுக்கான சுப செலவாக மாற்றுவது நல்லது. உத்தியோகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்லவும். முக்கிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டாலும் அவற்றை செயல்படுத்த முடியாது. குடியிருக்கும் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். வீடு மாற்றம், வேலை மாற்றம், உத்தியோக மாற்றம் திருப்தியாக இருக்கும். சிலருக்கு பணி நிமித்தமான வெளிநாட்டு பயணங்கள் செல்ல நேரிடும்.

    பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள். சந்ததி விருத்தியாகும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். பவுர்ணமியன்று மகாலட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    24.4.2023 முதல் 30.4.2023 வரை

    எதையும் சமாளிக்கும் ஆற்றலும் நம்பிக்கையும் பெருகும் வாரம். ராசிக்கு 12-ம்மிடமான விரய ஸ்தானத்தில் 4 கிரக சேர்க்கை இருப்பதால் எதிர்பாராத திடீர் செலவுகள் உருவாகும். ஆனால் ராசி அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் மன தைரியம் அதிகரிக்கும். எதையும் இலகுவாக சமாளித்து வெற்றி நடை போடுவீர்கள். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் பேச்சாற்றலால் காரியத்தை சாதித்து கொள்வீர்கள்.

    உற்றார், உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலம் ஏற்படலாம். வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறையத் துவங்கும். அரசுத் துறையில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் வாய்ப்பு உருவாகும். சிலர் புதிய தொழில் துவங்கலாம் அல்லது தொழிலில் அதிக முதலீடு செய்யலாம்.

    விண்ணப்பித்த வீடு, வாகனக் கடன், தொழில் கடன் கிடைக்கும்.வழக்குகளில் திருப்பம் உண்டாகும். திருமண முயற்சிகள் வெற்றி தரும்.சிலர் ஆன்மீகச் சுற்றுலா அல்லது ஓய்விற்கு வெளியூர், வெளிநாடு சென்று வரலாம். சிலருக்கு குடும்பத்தில் பாகப் பிரிவினை நடக்கும் வாய்ப்பு உள்ளது. ஸ்ரீ ராகவேந்திரரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    17.4.2023 முதல் 23.4.2023 வரை

    சாதகமான வாரம்.ராசி மற்றும் ஆறாம் அதிபதி சுக்ரன் ராசியில் ஆட்சி பலம் பெறுவதால் தொழில், உத்தியோகத்தில் போட்டி அதிகரிக்கும். உத்தியோ கஸ்தர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். புத்திர பிராப்தம் இல்லாதவர்களுக்கு மருத்துவ உதவியில் குழந்தை பிறக்கும். திருமண முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

    கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் உண்டாகும். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி புதன் 7, 12-ம் அதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனை பெறுவதால் கடுமையான வாக்கு பிரயோகத்தால் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படலாம். பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும். மாணவர்களுக்கு மறைந்து கிடந்த அனைத்து திறமைகளையும் வெளிகாட்ட நல்ல சந்தர்ப்பம் அமையும்.

    பிள்ளைகள் உயர் கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்லலாம். பெண்கள் புது தங்கம், வெள்ளி வாங்கி அணியும் யோகம் உள்ளது. கிரகணத்தன்று வயது முதிர்ந்த பெண்களுக்கு ஆடை, இனிப்பான உணவு தானம் தரவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிப்பலன்

    10.4.2023 முதல் 16.4.2023 வரை

    குதூகலமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் ராசியில் ஆட்சி பலம் பெற்று 7-ம்மிடத்தைப் பார்ப்பதால் சிந்தனைகள் பெருகும். இதுவரை சாதிக்க முடியாத பல காரியங்களை சாதித்து முடிப்பீர்கள். காரியத் தடை நீங்கி வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். சிலருக்கு அரசு உத்தியோக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்திற்கு தேவையான வங்கிக் கடன் அல்லது வீடு வாகனக் கடன் கிடைக்கும்.

    தொழில், வியாபாரத்தில் விருத்தி, வழக்குகளில் வெற்றி ஆகியவை ஏற்படும். தன வரவுகள் அதிகரிக்கும். குடும்ப விழாக்கள் மற்றும் விருந்துகளில் கலந்து கொள்வதால் மனம் சந்தோஷமும் நிம்மதியும் அடையும். கடந்த காலம் பட்ட கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது.திருமணத் தடை அகலும். புத்திரப் பேறு கிடைக்கும். புதிய எதிர்பாலின நட்பு மனதில் குதூகலத்தை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான புதிய ஆடம்பர பொருட்கள் சேரும். 11.4.2023 பகல் 12.58 முதல் 13.4.2023 மாலை 4.22 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நேரம் காலம் பார்த்துச் செய்வது நல்லது. பனிச்சுமை காரணமாக ஓய்வு நேரம் குறையும். அதிர்ஷ்ட லட்சுமியை வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    3.4.2023 முதல் 9.4.2023 வரை

    முயற்சியில் முனைப்புடன் செயல்படும் வாரம். ராசி மற்றும் 6-ம் அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுவதால் உங்கள் தகுதிக்கு கிடைக்கும் வருமானத்தை விட உங்கள் திறமையின் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். 2, 5-ம் அதிபதி புதனும் 7,12-ம் அதிபதி செவ்வாயும் பரிவர்த்தனை பெறுவதால் நாளை என்ன நடக்கும் என்ற பின் விளைவுகளை யோசித்து, உணர்ந்து செயல்படுவீர்கள்.

    நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். திருமண முயற்சியில் முன்னுக்கு பின் முரணான பதில் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட நெருடல், மன வேதனை மாறும். வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற அனைத்து அவசிய தேவைகளுக்கும் கடன் கிடைக்கும். வெளிநாட்டு வேலை, அரசு வேலை முயற்சி வெற்றி தரும்.

    இதுவரை எந்த வேலைக்கும் போகாமல் இருந்தவர்கள் கூட கிடைத்த வேலைக்குச் செல்வார்கள்.தொழில் எதிரிகள் உங்களை கண்டு விலகுவார்கள். பங்குனி உத்திர நாளில் சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    27.3.2023 முதல் 2.4.2023 வரை

    சாதகமான வாரம். 2,5-ம் அதிபதி புதன் நீச பங்க ராஜ யோகம் பெற்று இருப்பதால் வாரத்தின் முற்பகுதியில் பல வருடங்களாக நீங்கள் எதிர்பார்த்த ஒரு அற்புத சந்தர்ப்பம் உங்களை தேடி வரும். அந்த வாய்ப்பு உங்களுக்கு பெரிய வாழ்வியல் மாற்றத்தை தரப் போகிறது. சிலர் காலத்தால் அழியாத படைப்புகளைப் படைத்து சாதனை படைப்பீர்கள்.

    அதிக அலைச்சல் இருக்கும். போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். குரு விரய ஸ்தானத்தை நெருங்குவதால் வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி தரும். தொழில் ஸ்தான சனியால் தொழில் நன்றாக நடக்கும். ராசி அதிபதி சுக்ரன் ராசிக்கு 12-ல் மறைந்து விரயாதிபதி செவ்வாய் தன ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு உண்டாகும்.

    வேலை பார்ப்பவர்கள் முதலாளியின் அன்பைப் பெறுவதற்கு கடுமையாக உழைக்க நேரும். வீடு கட்டும் பணி துரிதமடையும். திருமணப் பேச்சு வார்த்தை திருப்பு முனையாக இருக்கும். குழந்தை பேறு கிடைக்கும்.தினமும் காலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    20.3.2023 முதல் 26.3.2023 வரை

    கூட்டுத் தொழிலால் ஆதாயம் கூடும் வாரம். 7,12-ம் அதிபதி செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் பங்காளிகளுடன் ஏற்பட்ட ஈகோ தணியும். மன வலிமை அதிகரிக்கும். எதிர் நீச்சல் போட்டு உழைத்து ஆதாயத்தை அதிகரிப்பீர்கள். கடந்த 6 மாத காலமாக செவ்வாய் ராசியில் நின்ற காலத்தில் விவாகரத்து வரை சென்ற தம்பதிகள் கூடி மகிழ்வார்கள்.

    திருமணத் தடை அகலும். 2, 5-ம் அதிபதி புதன் ஸ்தானத்தில் நீச்ச பங்க ராஜ யோகம் பெற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். கவுரவப் பதவிகள், இழந்த பதவிகள், வேலை கிடைக்கும். முன்னேற்றம் அதிரிக்கும். மாணவர்களுக்கு வினாத்தாள் எளிமையாக இருக்கும். பிள்ளைகளின் அனுசரணை உண்டு. புத்திர பிராப்தம் உண்டாகும்.

    பங்குச்சந்தை, பந்தய வெற்றி. ஆரோக்கிய குறைபாடு சீராகும். அழகு, ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வீடு, வாகனம் போன்றவைகள் மூலம் சுப விரயம் உண்டாகும். வெள்ளிக்கிழமை மகா விஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபட லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×