என் மலர்
கன்னி - இன்றைய ராசி பலன்கள்
கன்னி
இன்றைய ராசிபலன் - 11 அக்டோபர் 2024
கலகலப்பான செய்தி காலை நேரத்திலேயே வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். வளர்ச்சிப்பாதைக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் -10 அக்டோபர் 2024
உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். தாய்வழி ஆதரவு உண்டு. உறவினர் பகை அகலும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். சொத்துகளால் ஆதாயம் ஏற்படும்.
கன்னி
இன்றைய ராசிபலன் -9 அக்டோபர் 2024
வரவு திருப்தி தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். உத்தியோகத்திற்காக எடுத்த புதுமுயற்சி பலன் தரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் -8 அக்டோபர் 2024
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாக முடியும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
கன்னி
இன்றைய ராசிபலன் -7 அக்டோபர் 2024
சந்தோஷமான நாள். கல்யாண முயற்சி கைகூடும். நண்பர்களிடம் கலகலப்பாகப் பேசி காரியங்களைச் சாதிப்பீர்கள். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் -6 அக்டோபர் 2024
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். கூட்டுத் தொழிலை தனித்தொழிலாக மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பூர்வீக சொத்துகள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளில் நல்ல முடிவு கிடைக்கும்.
கன்னி
இன்றைய ராசிபலன் -5 அக்டோபர் 2024
தொலைபேசி வழித்தகவல்களால் மகிழ்ச்சி கூடும் நாள். அத்தியாவசியப் பொருட்கள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறலாம். இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறி தோன்றும்.
கன்னி
இன்றைய ராசிபலன் -4 அக்டோபர் 2024
வீண்பழிகள் அகலும் நாள். வியாபார விருத்தி உண்டு. கொடுக்கல், வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள் குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
கன்னி
இன்றைய ராசிபலன் -3 அக்டோபர் 2024
அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். பழைய கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 2 அக்டோபர் 2024
பிறரை விமர்ச்சிப்பதால் பிரச்சனைகள் ஏற்படும் நாள். வரன்கள் முடிவடைவதில் தாமதங்கள் உருவாகலாம். மறதியால் அவதிகளுக்கு ஆட்பட நேரிடும். உடல்நலனில் கவனம் தேவை.
கன்னி
இன்றைய ராசிபலன் - 1 அக்டோபர் 2024
தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றிக்கொள்ள வேண்டிய நாள். வாங்கல், கொடுக்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும்.
கன்னி
இன்றைய ராசிபலன் - 30 செப்டம்பர் 2024
தெய்வவழிபாட்டில் நம்பிக்கை கூடும் நாள். சொத்துப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும்.