search icon
என் மலர்tooltip icon

    கன்னி - வார பலன்கள்

    கன்னி

    12.01.2025 முதல் 18.01.2025 வரை

    காரிய சித்தி உண்டாகும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் குரு மற்றும் செவ்வாயின் பார்வையில் உள்ளார். ராசி அதிபதி புதன் சுக ஸ்தானத்தில் சஞ்சாரம். கேந்திரமும், திரிகோணமும் பலம் பெறுவதால் கன்னி ராசியினர் நிம்மதி பெருமூச்சு விடலாம். கிணற்றில் விழுந்த கல்லாக இருந்த அனைத்து முயற்சிகளும் பலிதமாகும். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாமல் தவித்தவர்கள் கடனில் இருந்து மீளக் கூடிய மார்க்கம் தென்படும்.

    பூர்வீகச் சொத்துக்களை பிரிப்பதில் ஏதாவது கருத்து வேறுபாடு இருந்தால் இப்பொழுது சரியாகிவிடும். தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு குறையும். பல தலைமுறையாக பித்ரு தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஜாதகத்தை சரிபார்த்து தில ஹோமம் செய்ய ஏற்ற காலம். பொங்கல் விடுமுறைக்கு புனித நீராடல், புனித தல யாத்திரை சென்று வர வாய்ப்பு கிடைக்கும். முதல் திருமணம் தோல்வியில் முடிந்த சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் முன்னோர் வழி கர்ம வினை தாக்க நோய் ஆரம்பமாகும் அல்லது அதிகமாகும். உடல் அசதி உருவாகும்.

    பவுர்ணமியன்று சப்த மாதர்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் 5.1.2025 முதல் 11.1.2025 வரை

    5.1.2025 முதல் 11.1.2025 வரை

    விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் விரய அதிபதி சூரியனுடன் சுக ஸ்தானத்தில் சேர்க்கை பெறுகிறார். வளர்த்த கடா மார்பில் பாயும் என்பது போல் உங்களின் சகோதரர் அல்லது உங்கள் உதவியைப் பெற்றவர்களே போட்டியாக, எதிரியாக மாறுவார்கள். குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதால் பொறுமையாக நடந்து கொள்வது நல்லது. கண்டகச்சனி தொடங்க உள்ளதால் தொழில், வேலையில் மாற்றம் ஏற்படலாம். விரும்பிய வேலைக்கு நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றாலும் சிபாரிசுக்கு அலைய நேரும்.

    தொழில் வாழ்க்கை முறையில் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் சனிக்கு ராகு சம்பந்தம் ஏற்பட போவதால் இனம் புரியாத மனக்குறை, கவலை தோன்றலாம். வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும். சிலர் கடன் பெற்று வசதி, வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வார்கள். 7.1.2025 மாலை 5.50 முதல் 9.1.2025 அன்று இரவு 8.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது அல்லது ஆதாயம் குறையும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். ஸ்ரீ ரங்கநாதரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் 29.12.2024 முதல் 4.1.2025 வரை

    29.12.2024 முதல் 4.1.2025 வரை

    நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். 2,9-ம் அதிபதி சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சனியுடன் ராசிக்கு 6-ல் செவ்வாயின் பார்வையில் சஞ்சாரம். பிறவிக் கடன் மற்றும் பொருள் கடன் அகற்ற உகந்த நேரம். தாய், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும். பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களின் நல்லாசிகளை பெற்றால் சுய ஜாதக ரீதியான பாதிப்புகள் அகலும். பெரிய மனிதர்களின் தொடர்பால் சமுதாய அங்கீகாரம் கூடும். தாய் வழிச் சொத்து விஷயத்தில் உடன் பிறந்தவர்களுடன் சிறு சலசலப்பு ஏற்படும். பாகப்பிரிவினை பேச்சுவார்த்தை பஞ்சாயத்து வரை சென்று சாதகமாகும்.

    வார இறுதியில் வேலைப்பளு அதிகரிக்கும். வேலை, தொழிலில் மறைமுக தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக் கூடும். சில மறைமுக எதிர்ப்புகள், போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் வெற்றி உங்களுக்கே. விவசாயிகளுக்கு வெள்ள நிவாரண நிதி கிடைக்கும். பிள்ளைகளால் மேன்மை உண்டாகும். ஆரோக்கிய குறைபாட்டிற்கு மாற்று முறை வைத்தியத்தை நாடுவீர்கள். அமாவாசையன்று பறவைகளுக்கு தானியங்களை இரையிட துன்பங்கள் விட்டு விலகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் 22.12.2024 முதல் 28.12.2024 வரை

    22.12.2024 முதல் 28.12.2024 வரை

    உழைப்பும், அதிர்ஷ்டமும் பலன் தரும் வாரம். ராசிக்கு குருப் பார்வை. சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி புதனுக்கு குரு மற்றும் சனி பார்வை. புத்தி சார்ந்த, கற்ற கலை சார்ந்த வருமானம் உண்டு, ஏதாவது புதிதாக விஷயம் கற்று அதை சார்ந்த தொழில் ஆரம்பிக்கலாம். தன வரவில் தன்னிறைவு உண்டாகும். வராக் கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த கடன்தொகை கிடைக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் நோய்த் தொல்லை குறையும். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப காரியங்கள் அனுகூலமாகும். வீடு கட்ட வாகனம் வாங்க உகந்த நேரம். புதிய சேமிப்பு திட்டங்கள் பற்றிய எண்ணம் உண்டாகும்.

    தொழில், உத்தியோக நிமித்தமாக குறுகிய காலத்திற்கு தந்தை வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வரலாம். மாணவர்களுக்கு விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கும். பொறுப்புடன் வேலை செய்து அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்ப உறவுகளுடன் எல்லா விசயங்களையும் மனம் விட்டுப் பேசும் படியான சூழல் உருவாகும். இதுவரை வேலை கிடைக்காத மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் 15.12.2024 முதல் 21.12.2024 வரை

    15.12.2024 முதல் 21.12.2024 வரை

    இல்லறம் நல்லறமாகும் வாரம். ராசி அதிபதி புதன் சகாய ஸ்தானத்தில் குரு மற்றும் சனி பார்வையில் வக்ர நிவர்த்தியாகிறார். முயற்சிகள் பலிதமாகும். புதிய சிந்தனைகள், எண்ணங்கள் உதயமாகும்.தொழிலில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். தந்தை வழி சுற்றத்தால் நற்பயன் மற்றும் உதவி கிடைக்கும். தொழிலைப் பொறுத்தவரை சிறப்பான நிலையில் இருக்கும். சொத்து வாங்குவது அல்லது விற்பனையால் லாபம் உண்டு. புதிய வாகனம் வாங்குதில் ஆர்வம் அதிகரிக்கும். கை மறதியாக வைத்த முக்கிய ஆவணங்கள் பத்திரங்கள் கிடைக்கும்.

    புத்திர பாக்கியம் ஏற்படும். சிலருக்கு இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை, பிறந்த வீட்டு சீர் என மகிழ்சியான விசயங்கள் நடந்து மனதை மகிழ்விக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பூமி சகாய விலையில் கிடைக்கும். பெண்கள் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் ஆனந்தமாக பள்ளி விடுமுறையை கழிப்பீர்கள். பித்ருக்களின் நல்லாசிகள் கிடைக்கும். முருகனை வழிபட நலம் உண்டாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் 8.12.2024 முதல் 14.12.2024 வரை

    8.12.2024 முதல் 14.12.2024 வரை

    சுமாரான வாரம். வக்ரம் பெற்ற ராசி அதிபதி புதன் விரயாதிபதி சூரியனுடன் 3ம்மிடத்தில் சேர்க்கை . எண்ணங்களை செயலாக மாற்ற முடியாது. மனதில் இனம் புரியாத பய உணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். பெண்களின் ஆன்லைனில் பொருள் வாங்கும் மோகம் வங்கி சேமிப்பை கரைத்து விடும். வீண் விரயம் அல்லது வைத்தியச் செலவு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். வருமானத்தில் பெரும் பகுதி கடனுக்கு செல்லும். வீடு கட்ட போட்ட பட்ஜெட் எகிறும்.

    புதிய கடன் தொகைக்காக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை அணுகுவீர்கள். தொழில் முன்னேற்றம், உத்தி யோகத்தில் உயர்வு போன்றவற்றை எதிர்பார்க்கலாம். 11.12.2024 அன்று காலை 11.47 முதல் 13.12.2024 அன்று பகல் 1.19 வரை சந்திராஷ்டமம் உள்ளது. சற்று சுமாரான காலமாக இருப்பதால் கவனமாக செயல்பட வேண்டும். விரயமும் இழப்பும் எந்த விதத்தில் வேண்டுமானலும் இருக்கலாம் என்பதால் விழிப்புடன் செயல்பட வேண்டும். குடும்ப உறவுகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. சிவனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் 1.12.2024 முதல் 7.12.2024 வரை

    1.12.2024 முதல் 7.12.2024 வரை

    சுப மங்கள வாரம். 2, 9-ம் அதிபதி சுக்ரன் செவ்வாய் மற்றும் குருவின் பார்வையில் சஞ்சரிக்கிறார். புதிய தெளிவும், நம்பிக்கையும் உண்டாகும். சவாலான செயல்களைக் கூட நேர்த்தியாக செய்து முடித்து வெற்றி வாகை சூடுவீர்கள். பட்டம், பதவி போன்ற அதிகார அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகொடுக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கால, நேரத்தை வீணடிக்காமல் உழைப்பீர்கள்.பேச்சை மூலதனமாக கொண்டவர்கள், முதலீடு இல்லாத தொழில், ஆலோசனை தொழில் புத்தியைத் தீட்டி சம்பாதிப்பவர்களின் வருமானம் இரட்டிப்பாகும்.புத்திர பாக்கியம், வீடு, வாகன யோகம் போன்ற தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களும் தேடி வரும்.

    திருமணம் மற்றும் சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தலாம். பெண்கள் இந்த கால கட்டத்தில் மாங்கல்யம் மாற்றுவது, தாலி பெருக்கிப் போடுவது போன்றவற்றை செய்யலாம். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய குறைபாடு அகலும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஜென்ம கேதுவின் காலம் என்பதால் மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது நல்லது. தாய்மாமன் உறவுகளால் அனுகூலம் கிடைக்கும். விநாயகர் வழிபாடு சிறப்பான பலன் தரும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் 24.11.2024 முதல் 30.11.2024 வரை

    24.11.2024 முதல் 30.11.2024 வரை

    நல்ல மாற்றங்களும், வாய்ப்புகளும் தேடி வரும் வாரம். ராசி அதிபதி புதன் முயற்சி ஸ்தானத்தில் குரு பார்வையில் சஞ்சரிக்கிறார். நல்ல வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் கூடி வரும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் நிலவிய மனக்கசப்பு மாறும். உங்கள் வாக்கிற்கு மதிப்பும், மரியாதையும் உண்டாகும். பேச்சை தொழிலாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். பல வழிகளில் வருமானம் வந்து மனதை மகிழ்விக்கும். தாய் வழி உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை செலுத்துவீர்கள். அதே நேரத்தில் குறுக்கு வழியில் அதிர்ஷ்டத்தை தேடி அலையக்கூடாது.

    தீர்க்கமாக யோசிக்காமல் எடுக்கும் முடிவு எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும். சட்ட சிக்கல் காரணமாக மன அமைதி குறையும் என்பதால் எந்த விதமான சட்ட சிக்கலாக இருந்தாலும் நீதிமன்றப்படி ஏறுவதை தவிர்த்து பேசி தீர்க்க முயல வேண்டும். பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்களை கவனமாக கையாள வேண்டும். நீண்ட காலமாக நிலவிய சில பிரச்சனைகள் தீரப் போவதற்கான வழி பிறக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும். கருட வழிபாடு செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் 17.11.2024 முதல் 23.11.2024 வரை

    17.11.2024 முதல் 23.11.2024 வரை

    சுப விரயங்கள் கூடும் வாரம். ராசி அதிபதி புதன் விரய அதிபதி சூரியனுடன் சகாய ஸ்தானத்தில் சேர்க்கை செய்வதால் வீண் விரயங்கள், நஷ்டங்கள், இழப்புகள் குறையும். சுப செலவுகள் கூடும். மன அழுத்தம் நீங்கும். நிலையான வருமானம் இல்லாதவர்களுக்கு நிரந்தர வருமானத்திற்கான வழி கிடைக்கும். நிதி, நிர்வாகத்தை நன்கு திடப்படுத்திக் கொள்வீர்கள். புதிய வெளிநாட்டு தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். பங்குதாரர் மூலம் தொழில் முதலீட்டை அதிகரிப்பீர்கள். நீங்கள் நினைத்த இடத்திற்கு எல்லாம் சுற்றுலா பயணம் சென்று வர வாய்ப்புகள் இருக்கிறது.

    வேலை வேலை என்று அலைந்தாலும் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். இரவு சரியான நேரத்திற்கு தூங்க வேண்டும். உழைப்புக்கு ஏற்ற மரியாதை, பணம் பதவி எல்லாம் வந்தாலும், உடம்பு சரி இல்லாமல் போய்விட்டால் எந்த பிரயோஜனமும் இல்லை. அரசுப் பணியாளர்களுக்குத் தங்கள் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். திருமணம், புத்திர பிராப்த்தத்தில் நிலவிய தடைகள் அகலும். சிலர் பழைய நகைகளை கொடுத்து புதிய ஆபரணம் வாங்கலாம். தேய்பிறை அஷ்டமியில் சரபேஸ்வரரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிப்பலன் 10.11.2024 முதல் 16.11.2024 வரை

    சுமாரான வாரம். கன்னி ராசிக்கு 5,6-ம் அதிபதியான சனி பகவான் ராசிக்கு 6ல் வக்ர நிவர்த்தியாகிறார். வெற்றியின் திசையை நோக்கி பயணிக்க துணிவீர்கள். சகோதர, சகோதரிகளுடன் நிலவிய கருத்து வேறுபாடு குறையும். சிலர் மன நிம்மதிக்காக வீடு மாறுவார்கள். நோய் தாக்கம் குறையும்.வாழ்க்கைத் துணையும், தொழில் பங்குதாரரும் நிறையச் செலவை இழுத்து விடுவார்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு எதிர்பார்க்கலாம். சேவை மனப்பான்மையுடன் சமூக சேவை செய்வீர்கள்.

    பிள்ளைகள் உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாடு செல்வார்கள். வாழ்க்கை துணையின் பூர்வீகச் சொத்தில் மைத்துனரால் ஏற்பட்ட தடைகள் அகலும். இளம்பெண்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும். இரண்டாம் திருமண முயற்சி நிறைவேறும். வருமானத்தில் பெரும் பகுதி கடனுக்கு செல்லும். அதே நேரத்தில் பிள்ளைகளால் ஆதாயம் உண்டு என்பதால் கவலையின்றி இருக்கவும். 14.11.2024 அன்று காலை 3.11 மணி முதல் 16.11.2024 அன்று காலை 3.16 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. தவறான போன் தகவலை நம்பி அக்கவுண்டில் உள்ள பணத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. பவுர்ணமியன்று சத்தியநாராயணரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் 3.11.2024 முதல் 9.11.2024 வரை

    3.11.2024 முதல் 9.11.2024 வரை

    திட்டமிட்டு செயல்படும் வாரம். ராசி மற்றும் பத்தாம் அதிபதி புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய நம்பிக்கை பிறக்கும். ஆன்ம பலம் பெருகும். குடும்ப விசேஷங்களில் முதல் மரியாதை கவுரவப் பதவிகள் கிடைக்கும்.தடைபட்ட பணிகள் துரிதமாக நடைபெறும். காணாமல் போன பொருள்கள், முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். ஞாபக சக்தி கூடும்.எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.தொழில், வியாபாரத்தில் முன் நின்று போட்டிகளை சமாளிப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். சுய சம்பாத்தியம் பெருகும். ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைத்த நிலை மாறும்.

    தாராளமான தன வரவால் ஆடம்பரச் செலவில் ஆர்வம் அதிகரிக்கும்.பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். தந்தை வழி சுற்றத்தால் நற்பயன் மற்றும் உதவி கிடைக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு கட்சியால் ஆதாயம் உண்டாகும். பார்த்துச் சென்ற வரனிடம் சாதகமான பதில் வரும். எதிர்பாலினத்திடம் கவனமாக இருக்கவும். குல, இஷ்ட தெய்வ தெய்வ வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் 27.10.2024 முதல் 3.11.2024 வரை

    27.10.2024 முதல் 3.11.2024 வரை

    அனுகூலமான வாரம். ராசி அதிபதி புதன் உப ஜெய ஸ்தானமான 3ம்மிடத்தில் தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரனுடன் சேர்க்கை. குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் குறையும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். புது மனிதர்களை ரொம்பவும் தெரிந்த மனிதர்களை நம்பவே நம்பாதீங்க. காலை வாரி விட வாய்ப்புகள் உள்ளது. தொழில் வேலை எல்லாம் சுமூகமாகத்தான் செல்லும். அசையாச் சொத்து தொடர்பான முயற்சிகள் கைகூடும். அதற்கு தேவையான கடன் தொகை கிடைக்கும். சித்தப்பா மற்றும் உடன் பிறப்புகளால் மன சஞ்சலம் அதிகரிக்கும்.

    அயல்நாடு செல்ல எதிர்பார்த்த விசா கிடைக்கும். கணவருடன் இருந்த ஈகோ மாறும். இல்லத்தரசிகளுக்கு இது ரொம்ப நல்ல வாரம். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வரலாம். அடுத்தவர்களுக்கு வாக்குக் கொடுக்க கூடாது. தடைபட்ட உயர் கல்வி வாய்ப்பு கூடி வரும். பிள்ளைகளால் மகிழ்சியும் பெருமையும் உண்டாகும். அடமான நகைகள், நிலபுலன்களை மீட்கக் கூடிய சந்தர்ப்ப சூழ்நிலை கூடி வரும். இரண்டாம் திருமண முயற்சி சாதகமான பலன் தரும். ஸ்ரீ மகா விஷ்ணு காயத்திரி மந்திரம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×