search icon
என் மலர்tooltip icon

    கன்னி

    வார ராசி பலன்கள்

    இந்த வாரம் எப்படி 20-6-2022 முதல் 26-6-2022 வரை

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் வாரம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் தனித்திறமையால் எளிதில் செய்ய முடியாத செயல்களைக் கூட செய்து சாதனை படைப்பீர்கள். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து அனுகூலமான பதில் வரும். பெண்களுக்கு மாமியார் மாமனாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உற்றார் உறவுகளுக்கு உதவுவீர்கள்.சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் மனைவி மூலம் அதிர்ஷ்ட பணம், சொத்து கிடைக்கும். சிலருக்கு வட்டி வருமானம், பினாமி சொத்து யோகம், அரசியல் யோகம் உண்டு.

    அரசியல் மற்றும் பொது ஜன தொடர்பில் இருப்பவர்களுக்கு நன்மைகள் சேரும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது அவசியம். ராசியை குரு அஷ்டமாதிபதி செவ்வாயுடன் இணைந்து பார்ப்பதால் முன் யோசனை இல்லாத செயல்களால்கிடைக்க வேண்டிய நல்ல சந்தர்ப்பங்கள் தவறலாம்.

    23.6.2022 காலை 6.15 முதல் 25.6.2021 மாலை 5.02வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொள்கை பிடிப்பை தளர்த்திக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிரதோஷத்தன்று பிரதோஷ வேளையில் லட்சுமி நரசிம்மருக்குகதம்ப மாலை சாற்றி வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×