என் மலர்
கன்னி - வார பலன்கள்
கன்னி
இந்த வார ராசிப்பலன்
19.12.2022 முதல் 25.12.2022 வரை
கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் விரய அதிபதி சூரியன் மற்றும் 2,9ம் அதிபதி சுக்ரனுடன் ராசிக்கு நான்காமிடமான சுக ஸ்தானத்தில் இணைந்து நிற்பதால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும். வீடு, வாகனம் தொடர்பான முயற்சியில் ஈடுபட உகந்த நேரம். உண்ண, உறங்க முடியாமல் உழைக்க நேரும். அலைச்சல் மிகுதியாகும்.
உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது அல்லது ஆதாயம் குறையும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். திட்டமிட்டு செயல்பட்டால் விரயத்தை சுப செலவாக மாற்ற முடியும். தந்தை விருப்ப ஓய்வு பெற்று உங்களுடன் வந்து தங்குவார். ஆன்மீக பயணங்கள் அதிகமாக மேற்கொள்வீர்கள்.
நிரந்தரமற்ற வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரமாகும்.பெண்களுக்கு தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.திருமண முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆஞ்சநேயருக்கு அமாவாசையன்று துளசி சாற்றி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
12.12.2022 முதல் 18.12.2022 வரை
முன்னேற்றமான வாரம். ராசி பத்தாம் அதிபதி புதன், தன அதிபதி, பாக்கிய அதிபதி சுக்ரனுடன் சுக ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் அபரிமிதமான வாழ்வியல் முன்னேற்றம் உண்டாகப் போகிறது.உங்களுக்கே தெரியாமல் முடங்கி கிடந்த அனைத்து திறமைகளும் வெளிப்படும். சிலருக்கு புதிய தொழில் துவங்கும் யோகம் உள்ளது.
சிலர் குலத் தொழிலில் இருந்து விடுபட்டு புதியதாக சுய தொழில் ஆரம்பிக்கலாம். சிலருக்கு வாடகை வருமானத்தை அதிகரிக்கும் சொத்துக்கள் சேரலாம். தடை பட்ட வாடகை வருமானங்கள், சம்பள பாக்கிகள் கிடைக்கும்.கலை ஆர்வம், அரசுப் பணி, அரசியல் வெற்றி தரும்.
இழந்த வேலை, மீண்டும் கிடைக்கும்.தந்தையாலும், தந்தை வழி உறவுகள் மூலமும் முன்னேற்றத்திற்கான உதவிகள் கிடைக்கும். அடமானச் சொத்துக்கள், நகைகளை மீட்க வாய்ப்பு உள்ளது. தாய் வழி உறவுகள் மூலம் வரன் பற்றிய தகவல் கிடைத்து திருமணம் நடைபெறும். முரட்டு தைரியத்தை கைவிட்டு விவேகத்துடன் செயல்பட்டால் முத்தாய்ப்பான முன்னேற்றம் உண்டாகும். மகா விஷ்ணுவை துளசி சாற்றி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
5.12.2022 முதல் 11.12.2022 வரை
முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். ராசி அதிபதி புதனும் 2,9-ம் அதிபதி சுக்கிரனும் 4-ம் இடமான சுக ஸ்தானத்தில் நிற்பதால் தொல்லை கொடுத்த வாடகைதாரர் விலகுவார்.
புதிய வாடகைதாரர் கிடைப்பார்கள். தாய் வழி, வீடு, வண்டி, நிலங்கள், கட்டிட வாடகை, கால்நடைேசர்ந்த வருமானம் கிடைக்க பெறலாம். புதிய வீடு, மனை வாங்குவீர்கள். வரா கடன் என்று முடிவு செய்த பணம் உங்களைத் தேடி வரும். பாலிசி முதிர்வு தொகை, பூர்வீகச்சொத்து, பங்கு சந்தை முதலீடு என எதிர்பாராத பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி சூடு பிடிக்கும்.
கூட்டுக் குடும்பத்தை விட்டுப் பிரிந்த மூத்த சகோதரர் மீண்டும் குடும்பத்தில் இணைவார்.குடும்ப வாழ்க்கையில் சில சங்கடங்கள் வந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மனைவி, பிள்ளைகளுக்கு தங்க நகைகள் வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்.முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது. 6.12.2022 மதியம் 3.02 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது நல்லது. மகாலட்சுமியை நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
28.11.2022 முதல் 4.12.2022 வரை
விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும் வாரம். அஷ்டமாதிபதி செவ்வாய் ராசி அதிபதி புதனைப் பார்ப்பதால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.திட்டமிட்டு செய்த காரியங்களை இனி மெல்ல மெல்ல நிறைவேற்றுவீர்கள்.வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல வேலை கிடைக்கும்.
தொழில் வியாபரம் தொடர்பான அலைச்சல் இருந்தாலும் அதன் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு வீடு மாற்றம், வேலை மாற்றம் அல்லது ஊர் மாற்றம் ஏற்படலாம். மேலதிகாரிகள், சக ஊழியர்கள் உங்க ளுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெற்று. அமைதியாகச் செயலாற்றுவீர்கள்.
உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் சிறு மன பிணக்கு ஏற்படலாம்.
4.12.2022 காலை 6.36 க்கு சந்திராஷ்டமம் ஆரம்பித்து 6.12.2022 மதியம் 3.02 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தவறான போன் தகவலை நம்பி அக்கவுண்ட் நம்பரை யாருக்கும் தரக்கூடாது. சேமிப்பில் உள்ள பணத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. மரிக்கொழுந்து சாற்றி சிவனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
21.11.2022 முதல் 27.11.2022 வரை
சுப மங்கள வாரம். 7-ம் அதிபதி குரு வக்ர நிவர்த்தி பெற்று ராசியை பார்ப்பதால் புதிய தெளிவும், நம்பிக்கையும் உண்டாகும். திருமணம் மற்றும் சுப காரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தலாம். பெண்கள் இந்த கால கட்டத்தில் மாங்கல்ய சரடு மாற்றுவது, தாலி பெருக்கிப் போடுவது போன்றவற்றை செய்யலாம். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய குறைபாடு அகலும்.தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
வேலைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். சிலருக்கு தாய்வழிச் சொத்தில் தாய்மாவுடன் எல்லைத் தகறாறு உண்டாகும்.மத்தியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடக்கும். ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் கவுரவம் பங்கப்படாமல் எளிதாக சமாளித்து விடுவீர்கள். புதிதாக வாங்கிய சொத்தின் பத்திரப் பதிவு தள்ளிப்போகும்.
இரண்டாம் திருமண முயற்சி பலிதமாகும். பிள்ளைகளுக்கு சாதகமான நேரம் இருப்பதால் கவலையின்றி இருக்கவும்.பெண்கள் வேலை பார்க்கும் இடத்தை மாற்றலாம். குடும்பத்திற்கு பொன், பொருள் வாங்குவீர்கள். எதிர்காலம் குறித்த சிந்தனை அதிகரிக்கும். ஸ்ரீ சக்ரத்தாழ்வாரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
14.11.2022 முதல் 20.11.2022 வரை
தடை, தாமதங்கள் விலகும் வாரம் .ராசி அதிபதி புதன் சகாய ஸ்தானத்தில் இருப்பதால் மன சங்கடங்கள் அகலும்.ஞாபக சக்தி அதிகரிக்கும். தைரியமும் தெம்பும் குடிபுகும். நினைப்பது நடக்கும்.அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும்.கை மறதியாக வைத்த முக்கியமான ஆவணங்கள் நகைகள் கிடைக்கும்.
இடப் பெயர்ச்சி செய்ய நேரும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் ஏற்படலாம்.அரசின் உதவித் தொகை கிடைக்கும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி சாதகமாகும். உயர் கல்வி முயற்சி கைகூடும். குழந்தைகளின் மந்த தன்மை நீங்கும். பெண்கள் புதிய வாகனம் வாங்குதல், ஆடம்பரப் பொருட்கள் வாங்குதல், உல்லாசப் பயணம் செல்லுதல் என்று இனிமையாகப் பொழுதை கழிப்பார்கள்.
சிலர் பணிச்சுமை அல்லது ஆரோக்கிய குறைபாடு காரணமாக விருப்ப ஓய்வு பெறலாம்.தம்பதிகள் அமைதி கடைபிடித்தால் ஓரிரு வாரங்களில் நிலைமை சீராகும். பணவரவில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறவுகளின் அனுசரனையால் அனைத்து பிரச்சினைகளும் கானல் நீராக மறையும். விஷ்ணு சகஸ்கர நாமம் கேட்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிப்பலன்
7.11.2022 முதல் 13.11.2022 வரை
முன்னேற்றமான வாரம். 5, 6-ம் அதிபதி சனி 5-ம் இடத்தை விட்டு நகர்ந்து 6 -ம்மிடம் செல்ல இருப்பதால் பூர்வீகத்தை விட்டு தொழில், உத்தியோகத்திற்கு சென்றவர்கள் நல்ல பொருளாதாரத்துடன் பூர்வீகத்தில் வந்து செட்டிலாவார்கள். திருமணமாகாத ஆண், பெண்களுக்கு திருமண வாய்ப்பு தேடி வரும். தொழில் நிமித்தமாக பிரிந்த வாழ்க்கைத் துணை இல்லம் திரும்புவார்.
வாழ்க்கை துணைக்கு அரசு வேலை கிடைக்கும். ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கப்போகிறது. சிலருக்கு எதிர்மறை சிந்தனை மிகுதியாகும். குடும்பத்தினரின் அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். வெளியூர் பயணத்தை தவிர்க்கவும். மிகப் பெரிய பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும். முக்கிய வழக்குகளை ஒத்தி வைக்கவும். 9.11.2022 காலை 7.58 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் ஈடுபாட்டுடன் இருக்க முடியாது. பண விசயத்தில் கவனமாக இருப்பது நல்லது. கிரகணம் முடிந்த பின்னர் சிவ தரிசனம் செய்வது நல்லது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிப்பலன்
31.10.2022 முதல் 06.11.2022 வரை
விரயத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் தன அதிபதி சுக்ரனுடன் சேருவது தர்மகர்மாதிபதி யோகம். இதனால் வருமானம் அதிகரிக்கும். குடும்ப உறவுகளிடம் இணக்கம் உண்டாகும். ஆனால் விரய அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெறுவதால் வரவிற்கு மீறிய செலவுகளால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். சிலருக்கு கண், பல் சிகிச்சைக்கு அதிக செலவு செய்ய நேரும். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் விரயத்தை சுபமாக்க முயல வேண்டும்.
கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் எதையும் தகர்க்க முடியும். புதிய தொழில் முயற்சிக்காக வெளியூர், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள நேரும். கூலித் தொழிலாளிகளுக்கும் அரசின் நலத்திட்டத்தில் வீடு, மனை கிடைக்கும். தாய்மாமன் உதவியால் தாய் வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் சுமூகமாகும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். 6.11.2022 அன்று காலை 12.03 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிக்கிறது. ஆத்திரமும் அவசரமும் அறிவுக்கு சத்துரு எனவே பிறரின் காரியங்களில் அவசரப்பட்டு மூக்கை நுழைப்பதை தவிர்க்கவும். மகா விஷ்ணுவை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
24.10.2022 முதல் 30.10.2022 வரை
தன்னம்பிக்கையால் காரியம் சாதிக்கும் நேரமிது. உச்சம் பெற்ற ராசி அதிபதி புதனுக்கு குருப் பார்வை கிடைப்பதால் வாழ்க்கைத் துணையால் செல்வ நிலை உயரும், செல்வாக்கு மேலோங்கும். நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். விரய அதிபதி சூரியன் தன அதிபதி சுக்ரனுடன் தன ஸ்தானத்தில் இணைவதால் குடும்ப உறவுகளுக்காக வீண் விரயத்தை சந்திக்க நேரும் அல்லது கொடுக்கல், வாங்கல்களில் ஏமாற்றங்க ளைச் சந்திக்க நேரும். சிலர் வியாபார உதவிக்கு நம்பகமான வேலை யாட்கள் தேடு வார்கள்.
3,8-ம் அதிபதி செவ்வாய் ராசியையும் 5-ம் அதிபதி சனியையும் பார்ப்பதால் சித்தப்பா மற்றும் உடன் பிறப்புகளால் மன சஞ்சலம் அதிகரிக்கும். அயல்நாடு செல்ல எதிர்பார்த்த விசா கிடைக்கும். கணவருடன் இருந்த ஈகோ மாறும். இல்லத்தரசிகளுக்கு இது ரொம்ப நல்ல வாரம் . கிரகணத்தன்று பச்சைப் பயிறு தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
24.10.2022 முதல் 30.10.2022 வரை
தன்னம்பிக்கையால் காரியம் சாதிக்கும் நேரமிது. உச்சம் பெற்ற ராசி அதிபதி புதனுக்கு குருப் பார்வை கிடைப்பதால் வாழ்க்கைத் துணையால் செல்வ நிலை உயரும், செல்வாக்கு மேலோங்கும். நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். விரய அதிபதி சூரியன் தன அதிபதி சுக்ரனுடன் தன ஸ்தானத்தில் இணைவதால் குடும்ப உறவுகளுக்காக வீண் விரயத்தை சந்திக்க நேரும் அல்லது கொடுக்கல், வாங்கல்களில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரும்.
சிலர் வியாபார உதவிக்கு நம்பகமான வேலையாட்கள் தேடுவார்கள். 3,8-ம் அதிபதி செவ்வாய் ராசியையும் 5-ம் அதிபதி சனியையும் பார்ப்பதால் சித்தப்பா மற்றும் உடன் பிறப்புகளால் மன சஞ்சலம் அதிகரிக்கும். அயல்நாடு செல்ல எதிர்பார்த்த விசா கிடைக்கும். கணவருடன் இருந்த ஈகோ மாறும். இல்லத்தரசிகளுக்கு இது ரொம்ப நல்ல வாரம். கிரகணத்தன்று பச்சைப் பயிறு தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிபலன்
17.10.2022 முதல் 23.10.2022 வரை
சிக்கல்கள் மற்றும் சிரமங்களில் இருந்து விடுபடும் காலம். ராசி அதிபதி புதனை செவ்வாயும், குருவும் பார்ப்பதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.பொருளா தாரத்தில் நிலவிய ஏற்ற இறக்க மந்த நிலை மாறும். பூமி, மனை வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும்.
பத்திரப்பதிவில் நிலவிய தடை தாமதங்கள் விலகும்.5ம் அதிபதி சனி வக்ர நிவர்த்தி பெறுவதால் பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் தங்கம், வெள்ளி, அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமல் வருந்தியவர்களுக்கு ஊதிய உயர்வு உண்டாகும்.பெண்கள் ருசியான தீபாவளி பலகாரம் செய்து குடும்பத்தினரின் பாராட்டைப்பெறுவார்கள்.
சிலருக்கு சுய தொழில் பற்றிய ஆர்வம், எண்ணம் அதிகரிக்கும். திருமண முயற்சி சாதகமாகும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும்.வயோதிகர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும். சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பால் அசவுகரியங்கள் ஏற்படும். நவகிரகங்களில் புதனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
10.10.2022 முதல் 16.10.2022 வரை
சுமாரான வாரம். விரய அதிபதி சூரியன் ராசி அதிபதி புதனுடன் இணைவதால் உழைப்பவர் நீங்களாக இருந்தால் ஊதியம் பெறுபவர் வேறொருவராக இருப்பார். நிறைய அலைச்சலும், விரயச் செலவும் உண்டாகும். பூர்வீக குலத் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமான பலன் உண்டு. வழக்கத்தைவிட உபரி வருமானம் அதிகளவில் உண்டாகும்.
கூட்டுத் தொழில் நல்ல வளர்ச்சி அடையும். புதியதாக தொழில் தொடங்குபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். புதிய பொறுப்புகளால் அலுவலகப் பணி அதிகரிக்கும், பதவிகள் கிடைக்கும். ஒப்பந்த பணிக்கு வெளியூர் சென்ற கூலித் தொழிலாளிகளுக்கு கணிசமான தொகை கிடைக்கும். வீடு கட்டும் பணி துரிதப்படுத்தப்படும். சிலர் வீட்டு மனை அல்லது புதிய வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த தொகை ஓரிரு நாட்களில் கிடைக்கும்.பெண்கள் தீபாவளி ஆபரில் புதிய பொருட்கள் வாங்குவார்கள்.
10.10.2022 மாலை 4.01 முதல் 12.10.2022 இரவு 11.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்ப உறவுகளிடம் பழைய கதையைப் பேசி வம்பை வளர்க்காமல் இருந்தால் மன நிம்மதி நிலைக்கும். சிவ வழிபாடு செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406