என் மலர்
கன்னி - வார பலன்கள்
கன்னி
இந்த வார ராசிப்பலன்
3.10.2022 முதல் 9.10.2022 வரை
அதிர்ஷ்டமான வாரம். ராசி அதிபதி புதன் வக்ர நிவர்த்தி பெற்று 2,9-ம் அதிபதி சுக்ரன் மற்றும் விரய அதிபதி சூரியனுடன் இணைந்து குரு பார்வை பெறுவதால் சுகம், மற்றும் அதிர்ஷ்டத்தின் மேல் நாட்டம் அதிகரிக்கும். அழகு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும் 5-ம் இடத்தில் சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பிள்ளைகளின் மனதை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கும்.
விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு சிறு தடைக்குப் பிறகு சாதகமாகும். சொத்துக்களை விற்று கடன் அடைக்க ஏற்ற நேரம். சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். தொழிலாளிகளின் குறைகளைக் கேட்டறிந்து அதனை தீர்க்க முயல்வது நிறுவனத்தை வளரச் செய்யும். பெண்கள் தோழிகளுக்கு நகையை கடன் கொடுக்க கூடாது. திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். குழந்ைத இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும்.
சொத்துக்கள் சேர வாய்ப்புள்ளது. எல்லாம் முறையாக நடந்தாலும் எதிர்காலம் பற்றிய பயமும் அவ்வப்போது வந்து மறையும். ஒரு முக்கிய கோரிக்கைக்காக குல தெய்வத்திற்கு வேண்டுதல் வைப்பீர்கள். முப்பெரும் தேவிகளை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
26.9.2022 முதல் 2.10.2022 வரை
சுப விரயங்களால் மனம் மகிழும் வாரம். ராசி அதிபதி புதன், தன அதிபதி சுக்ரன் மற்றும் விரய அதிபதி சூரியனுடன் குருப் பார்வையில் இருப்பதால் அழகு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும்.பிள்ளைகளின் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும். மனதிற்குப் பிடித்ததை பிடித்தபடி செய்வீர்கள்.
அதனால் சில செலவுகளும் வரும். வரவும் செலவும் சமமாக இருக்கும். தொழில் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பாதிப்பு இருக்காது. கருத்து வேறுபாட்டால் இழந்த பழைய வேலை மீண்டும் கிடைக்கும். குடும்ப நலனுக்காக ஆன்மீக தலங்களுக்கு சென்று வர திட்டமிடுவீர்கள்.
திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடி வரும். அரசிடமிருந்து வீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும்.சில ஆர்வலர்களுக்கு அரச கவுரவம் கிடைக்கும். வயது முதிர்ந்தவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும். சிலர் இது வரை ஒத்தி வைத்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல நேரும். செயற்கை கருத்தரிப்பிற்கான முயற்சியை சிறிது காலம் ஒத்தி வைக்கவும். புதன் கிழமை நரசிம்மரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
19.9.2022 முதல் 25.9.2022 வரை
சிறப்பான வாரம். ராசி அதிபதி புதன் ராசியில் உச்சம் பெற்று குருவின் பார்வையில் இருப்பதால் வேகத்தடையின்றி அனைத்து முயற்சிகள், செயல்கள், பணிகள் துரிதமாகும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் உயர்வாக இருக்கும். தொழிலில் ஒரு வேலை முடிவதற்குள் அடுத்த புதிய வேலை கிடைக்கும். போட்டி, பொறாமைகள் அகலும். நம்பிக்கையான தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள்.
கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலை மறையும். அசையும், அசையாச் சொத்துக்கள் மூலம் வாடகை வருமானம் பெறுபவர்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிர்பாராத லாபம் உண்டு. வீடு,மனை வாங்க முன்பணம் கொடுப்பீர்கள். ராசி அதிபதி புதனும் 4ம் அதிபதி குருவும் வக்ரமாக இருப்பதால் சொத்தில் ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்பதை சரிபார்த்து விட்டு முன்பணம் கொடுக்கவும்.
சகோதர சகோதரிகளின் ஆதரவு நிம்மதி தரும். சிலர் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லலாம்.கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடத்திக் கொண்டு இருக்கும் தம்பதிகளுக்கு தீர்ப்பு தள்ளிப்போகும். அமாவாசையன்று பச்சைப் பயறு தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
12.9.2022 முதல் 18.9.2022 வரை
சங்கடங்கள் நீங்கும் வாரம். ராசி அதிபதி புதனை 4,7ம் அதிபதி குரு பார்ப்பதால் தாய் மற்றும் நண்பர்கள் உதவியால் தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமடையும்.
சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி நிறைவேறும்.மூன்றாம் அதிபதி செவ்வாய் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் சகோதர, சகோதரிகளுக்காக பணம் செலவு செய்ய நேரும்.
தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மறையும். ஊடகங்களில் பணி புரிபவர்களின் தனித்திறமை வெளிப்படும். சிலர் உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தை நோக்கி பயணிப்பார்கள். வியாபாரத்தில் நிலவியஎதிர்ப்புகள் சீராகும்.
ஏற்றுமதி, இறக்குமதி வணிகர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். ராசிக்கு குருப்பார்வை இருப்பதால் தொழில் மந்த நிலை மாறி சூடு பிடிக்கும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சுப நிகழ்விற்கான அறிகுறி தென்படும்.பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள்.
13.9.2022 காலை 6.35 முதல் 15.9.2022 மதியம் 2.28 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சலால் மன சஞ்சலம் ஏற்படும். புதிய முயற்சிகள், பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதன் கிழமை சக்ரத்தாழ்வாருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
5.8.2022 முதல் 11.9.2022 வரை
தொட்டது துலங்கும் வாரம். ராசி அதிபதி புதன் ராசியில் குருப் பார்வையில் உச்சம். 5-ம் அதிபதி சனி 5-ல் ஆட்சி என முக்கிய கிரகங்கள் சாதகமாகஇருப்பதால் நினைப்பதெல்லாம் உடனே நடக்கும். ஆத்ம ஞானம் கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடந்த காலங்களில் வேதனைகள் அவமானங்களைச் சந்தித்தவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டு.
ஜோதிடம்,நீதிபோதனை, உபதேசம் செய்பவர்கள், நீதி ஆலோசகர்கள்,வங்கி தொழில் இன்சூரன்ஸ், வட்டி கடை, சீட்டு நடத்துபவர்கள் ஏற்றம் பெறுவார்கள். சுய தொழில் புரிபவர்கள்,அரசு வேலையில் இருப்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் உண்டு. சிலருக்கு தந்தையின் குலத்தொழில் அமையும். உயர் கல்லூரி நுழைவுத் தேர்வில் வெற்றி உண்டாகும்.
பொழுது போக்கில் விருப்பம் குறைந்து கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு அரசியல் ஆர்வம் துளிர் விடும். வீடு, வாகனம், திருமணம் போன்ற வகையில் சுப விரயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு பெற்றோர் வழிச் சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது.பெண்களுக்கு பணிச்சுமை குறையும். தினமும் விஷ்ணு சகஸ்ர நாமம் கேட்க குடும்பத்தில் உள்ள இன்னல்கள் தீரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
29.8.2022 முதல் 4.9.2022 வரை
ஏற்றமும், இறக்கமும் கலந்த வாரம். ராசி மற்றும் பத்தாம் அதிபதி புதன் உச்சம் பெற்றதால் அனைத்து தொழில் சார்ந்தோரும் ஏதாவது ஒரு வகையில் லாபமும் மனநிறைவும் பெறுவர். தொழிலில் நல்ல விருத்தி உண்டாகும். சிலருக்கு அரசின் மானியம் கிடைக்கும். சிலர் புதிய தொழில் துவங்க வாய்ப்பு உள்ளது. கடன், நோய். எதிரிகளிடம் இருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத வகையில் உறவினர்களின் சொத்தில் உங்களுக்கு ஒரு பகுதி கிடைக்கும்.
கணவன்-மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.போட்டி பந்தயங்களைத் தவிர்ப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் புகழும் கவுரவமும் பாராட்டும் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்புகள் உள்ளது. மன ரீதியான சங்கடங்கள் விலகும். ஆடம்பர, அத்தியாவசிய தேவைகள் நிறைவேறும். தம்பதிகளிடையே நல்ல ஒற்றுமை நிலவும். விரய அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் மருத்துவ செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்பதால் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
ஆன்மீக சம்பந்தப்பட்ட பயணங்கள் உண்டு. வெளிநாடு செல்ல விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வரும். பிள்ளைகள் தீய பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள். ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
22.8.2022 முதல் 28.8.2022 வரை
உடல் மற்றும் உள்ளத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். ராசி அதிபதி புதன் உச்சம் பெற்று குரு பார்வை பெறுவதால் சரியான முடிவிற்கு வர முடியாமல் சங்கடத்தில் ஆழ்த்திய விஷயங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கி குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும்.
லாபம் பல வழிகளில் வர ஆரம்பிக்கும். தாராளமாக செலவு செய்து மகிழ்வீர்கள்.நேரத்திற்கு சாப்பிட்டு நிம்மதியாக உறங்கி ஆரோக்கியத்தை காப்பீர்கள். சிந்தனைகள் முழுவதையும் தொழிலில் செலுத்தி வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சிறு இடர்கள் வந்தாலும் சமாளிக்க கூடிய பக்குவம் உண்டாகும்.
உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் பலமிழப்பார்கள். விவசாயிகளுக்கு பருவ மாற்றத்தினால் ஏற்பட்ட நஷ்டங்கள், இழப்பீடுகள் குறையும். நீங்கள் நினைத்ததை சாதிக்கக் கூடிய சந்தர்பங்கள் கூடி வரும். ஸ்திர சொத்துக்கள் வாங்குவீர்கள்.
திருமணத்திற்கு நாள் குறிக்கும் நேரம் வந்துவிட்டது. பெண்கள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் வீட்டுச் சத்தம் வெளியே கேட்காமல் அமைதியாக வழி நடத்துவீர்கள். தினமும் பிரத்யங்கரா தேவியை தீபம் ஏற்றி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
15.8.2022 முதல் 21.8.2022 வரை
திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும் வாரம்.பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். கையிருப்பு கணிசமாக உயரும். வியாபாரிகள் கவர்ச்சிகரமான பொருட்களைப் பரிசாக அறிவித்துலாபத்தை அதிகரித்துக் கொள்வர். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வியா பாரம் அமோகமாக நடக்கும்.
அசையாச் சொத்துகளில் முதலீடு செய்வீர்கள். விவசாயிகளுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருந்து மானியத்துடன் கடன் கிடைக்கும். உத்தியோ கஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். கணவன்-மனைவிக்கிடையே நிலவிய இறுக்கமான மனநிலை நீங்கும். மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்வீர்கள்.
எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். ராசி அதிபதி புதன் விரயத்தில் விரயாதிபதி சூரியனுடன் சஞ்சரிப்பதால்வீண் செலவால்மனச் சஞ்சலம் மனக் குழப்பம் உருவாகும். 16.8.2022 இரவு 9.05 முதல் 19.8.2022 காலை 6.06 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்தப் பொருளையும் அலட்சியமாக கண்ட இடத்தில் வைக்காதீர்கள். தினமும் விஷ்ணு சகஸ்ர நாமம் கேட்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
8.8.2022 முதல் 14.8.2022 வரை
வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு, உயரிய கவுரவத்தை அடையும் வாரம். குருவின் பார்வை ராசியில் பதிவதால் மனக்குழப்பம் விலகும். மலை போல வந்த துயரம் பனி போல் விலகும். தொழில், வியாபார நெருக்கடிநிலை மாறும். வேற்று மொழி கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். வேற்று மொழி பேசும் நண்பர்கள் கிடைப்பார்கள்.சகோதர சகோதரிகளின் திருமணம்ஆடம்பரமாக நடந்து முடியும். தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது நிற்பதால் பெரிய முதலீடுகளை குடும்ப உறுப்பினர்களின் பெயரில் செய்வதை தவிர்க்கவும்.
வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்தி, லாபம் எனும் வெற்றிக் கனியைப் பறிப்பீர்கள்.புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான ஆதாயம் ஏற்படும். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சுற்றத்தார் மூலமாக எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்ககும். கண் அறுவை சிகிச்சை பலன் தரும்.
பெண்கள் குடும்ப பிரச்சினையை வெளி நபர்களுடன் பகிரக் கூடாது. குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதூகலமாய் இருப்பர். பணப் பற்றாக் குறையால் பள்ளி, கல்லூரிப் படிப்பை நிறுத்தியவர்களுக்கு கல்வியைத் தொடர தேவையான உதவிகளை வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
1.8.2022 முதல் 7.8.2022 வரை
சுமாரான வாரம். ராசி மற்றும் 10-ம் அதிபதி புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலிலும் வருமானத்திலும் குறையில்லை என்றாலும் நிறைவு ஏற்படாது. எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பீர்கள். இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு சாப்பிட முடியாது. 2,9-ம் அதிபதி சுக்ரன் 10ல் சஞ்சாரம் செய்வதால் பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் உழைப்புக்கு தகுந்த ஊதியம் உண்டு.
அரசாங்க வேலைக்கு அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். சிலருக்குப் பயணங்களிலும், அரசுவகையிலும் தொல்லைகள் ஏற்படலாம். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்புக் குறைவால், உற்பத்தித்திறன் குறையவும் வாய்ப்பு உள்ளது. 7-ம் அதிபதி குரு வக்ரம் பெறுவதால் தம்பதிகளுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சமாதானமாகப் பேசுவது நல்லது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. திருமண வயதினருக்கு ஆவணியில் திருமணம் நிச்சயிக்கப்படும்.
ஆரோக்கிய குறைபாடு அகலும். கண் அறுவை சிகிச்சை பலன் தரும். இரக்க குணத்தால் தான தர்மங்களில் ஆர்வம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் லாபம் தரும். கன்னி ராசியினர் புதன் கிழமை சக்கரத்தாழ்வாரை வழிபட காரிய சித்தி உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசி பலன்கள்
25.7.2022 முதல் 31.7.2022 வரை
தன வரவில் தன்னிறைவு உண்டாகும் வாரம். ராசி மற்றும் பத்தாம் அதிபதி புதன் லாப ஸ்தானத்தில்சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் நிலவியமந்த நிலைகள் மாறி சூடு பிடிக்கும். லாபமும் அதிகரிக்கும்.ஆனால் புதன் விரய அதிபதி சூரியனுடன் சேர்ந்து நிற்பதால் சுப விரயங்கள் அதிகரிக்கும். சிலர் வாகனத்தை மாற்றுவார்கள்.
சிலர் புதிய வீடு, நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம். தாய், தந்தை உங்களை புரிந்து கொண்டு உதவுவார்கள். கடன் தொல்லை குறையும். எதிர்பாராத தனச் சேர்க்கையால் கடந்த கால இழப்புகள் இருந்த இடம் தெரியாது. மனம் நிம்மதியாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம்நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் ஏற்பட்ட பிரச்சினைகள்முடிவுக்கு வரும்.
தகாத நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் ஓரிரு வாரங்களில் முடிவுக்கு வந்து விடும்.பிரதோசத்தன்று சிவனுக்கு கரும்புச்சாறு அபிசேகம் செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
18-7-2022 முதல் 24-7-2022 வரை
ஆதாயமான வாரம். ராசி அதிபதி புதன் விரய அதிபதி சூரியனுடன்லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரப் பாக்கிகள் அனைத்தும் வசூலாகும்.வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்தனலாபம் அதிகரிக்கும். விரயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் வீண்செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது நல்லது.தாயாரின் சொத்துக்களைப் பிரிப்பதில் சகோதர சகோதரிகளால் இடையூறு மன உளைச்சல் உண்டாகும். சிலரின் மனைவிக்கு அரசு வேலை கிடைக்கும்.
அரசியல் பிரமுகர்களுக்கு கட்சி மாறும் எண்ணம் மேலோங்கும். 5ல் சனி ஆட்சி பலம் பெற்று சூரியன் பார்வை பெறுவதால்பிள்ளைகளுக்கு பெற்றோர்களால் மன உளைச்சல் உண்டாகும். எனவே பெற்றோர்கள் தங்கள் பிரச்சினையை பிள்ளைகள் முன் விவாதிப்பதை தவிர்க்கவும்.
20.7.2022 பகல் 12.50 முதல் வரை 22.7.2022 இரவு 11.01மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால்பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெருமாள் கோவிலில் உலவாரப் பணி செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406