search icon
என் மலர்tooltip icon

    கன்னி - வார பலன்கள்

    கன்னி

    வார ராசிபலன் 20.10.2024 முதல் 26.10.2024 வரை

    20.10.2024 முதல் 26.10.2024 வரை

    புத்தி சாதுர்யத்துடன் செயல்பட வேண்டிய காலம். ராசி அதிபதி புதன் தன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார்.எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். நல்ல வாய்ப்புகள் வாசல் கதவை தட்டும். சிரத்தையும், கடின உழைப்பும் தொழிலில், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றங்களை பெற்றுத் தரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.செவ்வாய், சனியை பார்ப்பதால் பூமி, மனையின் மதிப்பு கூடும். தந்தை வழி சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும்.

    வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். சொந்த வீடு, வாகனம் என வாழ்க்கைத் தரம் உயரும். பண விஷயத்தைப் பொறுத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். வீட்டில் திருமணம் மற்றும் சுப வைபவங்களை எதிர்பார்க்கலாம். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். தீபாவளிச் செலவை சமாளிக்க தேவையான பணம் வேலை பார்க்கும் இடத்தின் மூலம் கிடைக்கும். சிலருக்கு காது, மூக்கு, தொண்டை சற்று பிரச்சனை தரும். ராசியை குரு பார்ப்பதால் மழை போல் வந்த துயர்கள் பனி போல் விலகும். நவகிரக புதனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிப்பலன் 13.10.2024 முதல் 19.10.2024 வரை

    முயற்சிகள், எண்ணங்கள் நிறைவேறும் வாரம். ராசி மற்றும் 10-ம் அதிபதி புதன் தன ஸ்தானத்தில் நீச்ச சூரியனுடன் சஞ்சரிக்கிறார். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். தொழிலில் பிரமாண்ட வளர்ச்சி உண்டாகும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் தனித்திறமை மிளிரும். நம்பிக்கையான, விசுவாசமான வேலை ஆட்கள் கிடைப்பார்கள். பாகப்பிரிவினையால் ஏற்பட்ட மன பேதம் சீராகும். ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். சிலர் எழுதிய உயில், ஆவணங்களில் திருத்தம் செய்வார்கள்.

    கடன் தொகையை சமாளிக்க தேவையான பொருள் உதவி கிடைக்கும். இளைய சகோதரருக்கு திருமணம் நடக்கும். முன்னோர்களின் பரம்பரை வியாதியான கை, கால் வலி, சுகர், பிரஷர் போன்றவைகள் தலை தூக்கும். சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக்குடித்தனம் செல்லலாம். சிலர் பழைய வேலையை விட்டு தீபாவளி போனஸ் வாங்கியவுடன் புதிய வேலைக்கு செல்லலாம். 17.10.2024 அன்று மாலை 4.20 முதல் 19.10.2024 அன்று மாலை 4.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தீபாவளி ஷாப்பிங்கில் கிரடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை கவனமாக கையாள வேண்டும். அஷ்ட லட்சுமிகளையும் வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் 6.10.2024 முதல் 12.10.2024 வரை

    6.10.2024 முதல் 12.10.2024 வரை

    சுப விரயம் உண்டாகும் வாரம் அதிபதி. புதன் தனஸ்தானததில் 2, 9-ம் அதிபதி இருப்பதால் சுக்ரனுடன் சேர்க்கை இருப்பதால் கன்னி ராசியினருக்கு இது ஒரு பொற்காலம் என்றால் அது மிகையாது.எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிறவிக் கடன் மற்றும், பொருள் கடனிலிருந்து விடுபடுவீர்கள். தந்தையின் கடனாலும், வைத்தியச் செலவாலும் கலங்கியவர்களுக்கு கடன் தீர்க்கும் மார்க்கம் தென்படும். பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். சர்வ லாபம், வெற்றிகள், மேன்மையும் உண்டாகும்.

    உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரியின் தொல்லைகள் அகலும். சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும்.ஆன்லைன் மூலம் தொழில் வளரும். அடமான நகைகள் மீண்டு வரும். தந்தையிடம் நிலவிய சச்சரவுகள் விலகி நன் மதிப்பும் பாசமும் உண்டாகும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். கணவன்-மனைவி உறவில் பாசமும், நேசமும் அதிகரிக்கும். திருமண வயது ஆண், பெண்களுக்கு திருமண வாய்ப்புகள் கூடிவரும். நோய் தாக்கம் குறையும். கன்னிகா பூஜையில் கலந்து கொள்ளவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் (29.9.2024 முதல் 5.10.2024 வரை)

    29.9.2024 முதல் 5.10.2024 வரை

    சுப விரயங்களால் மனம் மகிழும் வாரம். தன ஸ்தானத்தில் 2,9-ம் அதிபதி சுக்ரன் ஆட்சி செய்வதால் குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியுமான சூழ்நிலை காணப்படும். அழகு ஆடம்பரப் பொருட்கள், உணவுத் தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் தொடரும். திரைப்பட கலைஞர்களுக்கு தடைகளைத் தாண்டிய வெற்றி உண்டு. சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் செய்ய நேரும். வாழ்க்கைத் துணையின் வேலை நிரந்தரமாகும். எதிர்காலத் தேவைக்கான இன்சூரன்ஸ் பாலிசி அல்லது நலத்திட்டங்களில் சேமிப்பு போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும்.

    திருமணக் கனவு நனவாகும். குழந்தை பாக்கியம் கிட்டும். அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் சேரும்.வீடு, மனை, வாகன யோகம் உண்டு.புதிய வீடு கட்டலாம்.பழைய வீட்டை பழுது பார்க்கலாம். அதற்கு தேவையான கடன் உதவி கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சீதனம் மகிழ்ச்சியைத் தரும்.சிலருக்கு சொத்துக்கள் விற்பனையில் நல்ல ஆதாயம் கிடைக்கும். அமாவாசையன்று முன்னோர்களை வழிபட முத்தாய்ப்பான மாற்றங்கள் உண்டு.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் (22.9.2024 முதல் 28.9.2024 வரை)

    22.9.2024 முதல் 28.9.2024 வரை

    பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும் வாரம். செவ்வாய் மற்றும் குருவின் பார்வையில் ராசியில் சூரியன், புதன், கேது சேர்க்கை 2, 9ம் அதிபதி சுக்ரன் ஆட்சி என முக்கிய கிரகங்கள் வலிமையாக உள்ளது. தடையின்றி அனைத்து முயற்சிகள், செயல்கள், பணிகள் துரிதமாகும். தசா புத்தி சாதகமாக உள்ளவர்களுக்கு இமாலய வளர்ச்சி உண்டு. நிலையான நிரந்தரமான வருமானம் உண்டு. நிலுவையில் உள்ள வாடகை வருமானம் வந்து சேரும். வீடு, மனை வாங்க முன்பணம் கொடுப்பீர்கள். சகோதர சகோதரிகளின் ஆதரவு நிம்மதி தரும். சிலர் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லலாம்.

    விவாகரத்து வழக்கு தீர்ப்பு தள்ளிப்போகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதிப்பார்கள். அரசு உத்தியோக வாய்ப்புகள் உள்ளது. நம்பிக்கையான தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். கொடுத்த வாக்கை, சத்தியத்தை காப்பாற்றுவீர்கள். நல்ல ஆன்மீகக குரு கிடைக்கப் பெற்று ஆன்மீக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும். ஆரோக்கியம் சீராகும். பள்ளி குழந்தைகளின் தேவையறிந்து உதவவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் (15.9.2024 முதல் 21.9.2024 வரை)

    15.9.2024 முதல் 21.9.2024 வரை

    குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் வாரம். ராசியில் சூரியன். 2, 9-ம் அதிபதி சுக்ரன் ஆட்சி.வசீகரமான தோற்றப் பொழிவு உண்டாகும்.தடைக் கற்கள் படிக்கற்களாக மாறும். இழுபறியாக கிடந்த அனைத்து விசயங்களும் சாதகமாகும். சொல்வாக்கு அதிகரிக்கும். பழைய சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பணப்புழக்கம் அதிகரிப்பதால் ஆடம்பரச் செலவு செய்யும் வகையில் வாழ்வாதாரம் உயரும். உணவுப் பொருள் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களுக்கும் ஏற்ற காலம். சிலருக்கு குலத் தொழிலில் இருந்து விடுபட்டு வேறு தொழில் செய்யும் ஆர்வம் அதிகமாகும்.

    தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். குரு தீட்சை, ஆன்மீகப் பெரியோர்களின் ஆசி கிட்டும். தந்தையின் வாரிசு அரசு வேலை முயற்சி கைகூடும். தாய்மை அடைந்த பெண்களுக்கு இந்த வாரம் குழந்தை பிறக்கும். உடலில் இருந்த பிணிகள் ஓடி ஒழியும். 20.9.2024 அன்று காலை 5.15க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் மனதில் தோன்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் சற்று கால தாமதம் உண்டாகும். சனிக்கிழமை கால பைரவரை மிளகு தீபம் ஏற்றி வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிப்பலன் 8.9.2024 முதல் 14.9.2024 வரை

    விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் விரய ஸ்தானத்தில் விரய அதிபதி சூரியனுடன் சேர்க்கை. மற்றவர்களை நம்பி ஏமாறுதல், வீண் விரயம் ஏற்படும். இரட்டிப்பு செலவுகள் ஏற்படும். புகழ் மட்டும் மிச்சம் உண்டாகும். ஒரு கடன் பெற்று மற்றொரு கடனை அடைப்பீர்கள். புதிய முதலீடு செய்ய வேண்டாம். கடன் வாங்குவதை தவிர்க்கவும். தொழிலில் கவனம் தேவை. விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் ஏற்படும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். சுப காரியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும்.

    அரசியலில் ஈடுபட்டோருக்கு விபரீத ராஜ யோகம் தரும் காலமாகும். சிலர் பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரும். வெளிநாட்டு வேலை மற்றும் பயணம் திட்டமிட்டபடி நடக்கும். சிலருக்கு செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும். உடல் நிலையில் தெளிவு இருக்கும். குரு பார்வை ராசிக்கு இருப்பதால் பெரிய பாதிப்பு ஏற்படாது.ஆன்மீக பயணம் நல்லது. மகிழ்ச்சியை அதிகரிக்க வில்வ அர்ச்சனை செய்து சிவனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிப்பலன் 8.9.2024 முதல் 14.9.2024 வரை

    விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் விரய ஸ்தானத்தில் விரய அதிபதி சூரியனுடன் சேர்க்கை. மற்றவர்களை நம்பி ஏமாறுதல், வீண் விரயம் ஏற்படும். இரட்டிப்பு செலவுகள் ஏற்படும். புகழ் மட்டும் மிச்சம் உண்டாகும். ஒரு கடன் பெற்று மற்றொரு கடனை அடைப்பீர்கள். புதிய முதலீடு செய்ய வேண்டாம். கடன் வாங்குவதை தவிர்க்கவும். தொழிலில் கவனம் தேவை. விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் ஏற்படும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். சுப காரியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும்.

    அரசியலில் ஈடுபட்டோருக்கு விபரீத ராஜ யோகம் தரும் காலமாகும். சிலர் பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரும். வெளிநாட்டு வேலை மற்றும் பயணம் திட்டமிட்டபடி நடக்கும். சிலருக்கு செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும். உடல் நிலையில் தெளிவு இருக்கும். குரு பார்வை ராசிக்கு இருப்பதால் பெரிய பாதிப்பு ஏற்படாது.ஆன்மீக பயணம் நல்லது. மகிழ்ச்சியை அதிகரிக்க வில்வ அர்ச்சனை செய்து சிவனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் (1.9.2024 முதல் 7.9.2024 வரை)

    1.9.2024 முதல் 7.9.2024 வரை

    பாக்கிய பலன்கள் மிகுதியாகும் வாரம். ராசி அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். ராசியில் குரு பார்வை பதிவதால் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பாக்கிய பலன் மிகுதியாகும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் முற்றுப் புள்ளியாகும். உயர் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என அனைத்தும் சாதமாக உள்ளது. தொழில் அபி விருத்தி மூலம் வளர்ச்சி உண்டாகும். மறு திருமண முயற்சி நிறைவேறும். சுய விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வதில் நிலவிய நடைமுறை சிக்கல்கள் நீங்கும். கை, கால் வலி, அலைச்சல் போன்ற சிறுசிறு அசவுகரியங்கள் இருக்கும்.

    தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் வெறுப்பு மறையும். சிலர் சகோதர, சகோதரிகளுக்காக பணம் செலவு செய்ய நேரும். வாழ்க்கை துணைக்கு விரும்பிய உத்தியோக உயர்வு உண்டு. பெண்களுக்கு தாய் வழி சீதனம் கிடைக்கும். அடகு வைத்த நகைகள், சொத்துக்கள் மீண்டு வரும். திருமணத் தடை விரைவில் அகலும். புத்திர பிராப்தம் சித்திக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வெள்ளெருக்கு மாலை அணிவித்து விநாயகரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் (25.8.2024 முதல் 31.8.2024 வரை)

    25.8.2024 முதல் 31.8.2024 வரை

    சுமாரான வாரம். ராசி அதிபதி புதன் வக்ர நிவர்த்தி பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் ராசியில் 2,9-ம் அதிபதி சுக்ரன் நீசம் பெற்று தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சமூக அந்தஸ்து அதிகரிக்கும். சுய தொழில், கூட்டு தொழிலில் லாபம் கூடும். சிலரது வாழ்க்கை துணைக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும்.மனதளவில் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். உறவுகள் வழியில் இருந்து வேறுபாடுகள் மறையும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். திருமணத்திற்கு வரன் மிக அருகாமையிலேயே அமையும். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு சீராகும்.

    உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்து குழப்பங்கள் விலகும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். விபத்துக் காப்பீட்டு தொகை கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். புத்திர விருத்தி உண்டு. வஞ்சனையான சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பால் பாயாசம் படைத்து கிருஷ்ணரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் (19.8.2024 முதல் 25.8.2024 வரை)

    19.8.2024 முதல் 25.8.2024 வரை

    ஆதாயமான வாரம். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். எதிர்பாராத பணவரவுகள் ஏற்படும். பணியில் உள்ளவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டால் பதவி உயர்வுகள் தேடி வரும். இடம் விட்டு இடம் மாறி வேறு இடத்தில் வாழ நேரலாம். தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம், வெற்றி அடைவீர்கள். தொழில் போட்டியாளர்களைக் காட்டிலும் அரிய சாதனைகளைப் புரிவீர்கள். சிலருக்கு புதிய வாகன யோகம் ஏற்படும். அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய தனிவீடு அமையும்.

    இடைவிடாத தெய்வ பிரார்த்தனையால், தாமதமான திருமணங்கள் தடபுடலாக நடத்தப்படும். குழந்தைகளின் வளர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். விவசாயிகளுக்கு அரசின் உதவிகள் எளிதில் கிடைக்கும். அரசியல்வாதிகள் மக்களால் பாராட்டப்படுவார்கள். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழும், மனதில் அமைதி நிலவும். 23.8.2024 இரவு 7.55 முதல் 25.8.2024 இரவு 10.29 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இரவு நேர பிரயாணங்களை தவிர்க்கவும். ஆஞ்சநேயரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    வார ராசிபலன் (12.8.2024 முதல் 18.8.2024 வரை)

    12.8.2024 முதல் 18.8.2024 வரை

    விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் வக்ரம் பெற்று விரயாதிபதி சூரியன் மற்றும் தனாதிபதி சுக்ரனுடன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வெளிநாட்டு தொழில், வேலை வாய்ப்பு சித்திக்கும். பொருளாதார நிலையில் சற்று ஏற்றத்தாழ்வு இருக்கும். ஏற்றத் தாழ்வை சமாளிக்க கடன் பெறும் சூழல் உருவாகும். வங்கியில் கடன் உதவி பெறுவதற்கு ஏற்ற காலம். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். உடல் சோர்வால் எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். கண், பல் தொடர்பான பிரச்சனைக்கு வைத்தியம் செய்ய நேரும்.

    சம்பந்தம் இல்லாத அறிமுகம் இல்லாத நபர்களிடம் கொடுக்கல், வாங்கல் செய்வதை தவிர்க்கவும். எதிர் பாலினத்தவரால் நிம்மதி குறையும். வழக்கு வெற்றிகள் சாதகமாகும் அல்லது தீர்ப்பு தள்ளிப்போகும். திருமண முயற்சிகள் தடை, தாமதம் தரும். தந்தை வழி சொத்தில் நிலவிய மாற்றுக் கருத்து சாதகமாகும். புத்திர பாக்கியத்தில் நிலவிய தடை, தாமதங்கள் விலகும். தம்பதிகள் மிகவும் இன்பமாக பொழுதை செலவிடுவார்கள். வரலட்சுமி நோன்பு அன்று வில்வ அர்ச்சனை செய்து மகாலட்சுமியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×