என் மலர்
கன்னி - வார பலன்கள்
கன்னி
வார ராசிபலன் (5.8.2024 முதல் 11.8.2024 வரை)
5.8.2024 முதல் 11.8.2024 வரை
இழுபறிகள் சீராகும் வாரம். ராசிக்கு ஒன்பதாமிடத்தில் குரு மங்கள யோகம் உள்ளது. பிரிந்து சென்ற தந்தை வழி உறவுகள் திரும்ப வருவார்கள். பெண்களுக்கு வாழ்க்கைத் துணைவர் மூலமாக விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்கும். செலவுகள் கூடும். நீண்ட நாட்களாக சந்தான பாக்கியம் இல்லாதவர்களுக்கு குலதெய்வ அனுகூலத்தால் குழந்தைகள் பிறக்கும். முன்னோர்களின் நல்லாசிகள் உண்டு. இழந்த பொருட்கள் மீண்டும் திரும்ப உங்களிடமே வந்து சேரும்.
வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பார். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். அரசுப் பணிக்கான தேர்வுகளில் வெற்றி பெற்று பதவிக்கான பணி நியமன ஆணை கிடைக்கப் பெறுவீர்கள். கடன் பிரச்சனை உண்டாகலாம் அல்லது சிலருக்கு விண்ணப்பித்த கடன் கிடைக்கும். பணம் விசயத்தில் கவனம் தேவை. சிலருக்கு ஆரோக்கிய கேடு உண்டாகும். புதிய எதிரிகள் தலை தூக்கினாலும் அவர்களை சமாளிக்கும் தைரியமும், மனோபலமும் உண்டு. ஆடிப்பூரத்தன்று சுமங்கலியிடம் நல்லாசி பெறவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
29.7.2024 முதல் 4.8.2024 வரை
விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி புதனும் 2, 9-ம் அதிபதி சுக்ரனும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வீண் விரயம் ஏற்படும். வீண்செலவுகளை குறைத்து சேமித்து வைப்பது நல்லது. அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி பதவி கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க கடினமாக உழைத்தால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். சிலரின் மனைவிக்கு அரசு வேலை கிடைக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு கட்சி மாறும் எண்ணம் மேலோங்கும்.ராசிக்கு குருப்பார்வை இருப்பதால் பெரிய விரயங்கள் ஏற்படாது. தாயாரின் சொத்துக்களை பிரிப்பதில் சகோதர சகோதரிகளால் இடையூறு, மன உளைச்சல் உண்டாகும்.
வெளிநாட்டு வேலைக்கான முயற்சி வெற்றி தரும். சிலர் தொழில் நிமித்தமாக குறுகிய காலம் குடும்பத்தை பிரிந்து வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம் 29.7.2024 அன்று மாலை 4.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எவரிடமும் வெளிப்படையான எதிர்ப்பைக் காட்ட வேண்டாம். அண்டை அயலாருடன் சிறுசிறு மனபேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆடிப்பெருக்கு அன்று மீனாட்சி அம்மனை வழிபட சங்கடங்கள் விலகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
22.7.2024 முதல் 28.7.2024 வரை
அனைத்து இடையூறுகளும் விலகி, காரிய சித்தி உண்டாகும் வாரம். ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சூரியன் சுக்ரன் சேர்க்கை இருப்பதால் இது கன்னி ராசிக்கு ஏற்றத்தை, சுபத்துவத்தை மிகைப்படுத்தும் அமைப்பாகும். அரசாங்க உதவி கண்டிப்பாக கிடைக்கும். பெண்களுக்கு உயர் ரக ஆடை ஆபரண சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும்.வீடு கட்ட கடன் உதவி கிடைக்கும். திருமண முயற்சியில் திருப்பம் உண்டாகும். குழந்தைகளால் ஏற்பட்ட கவலை குறையும். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
புதிய எதிர்பாலின நட்பால் ஏற்பட்ட சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். வீண்பழிகள் அகலும். வரவை விட செலவு அதிகமாகும். மாணவர்களுக்கு பெற்றோர்கள், ஆசிரியர்களின் ஆதரவு, அனுசரனை கூடும்.சிலரின் வாழ்க்கைத் துணை விரும்பத்தகாத இடமாற்றங்களை சந்திக்க நேரிடும். வைத்தியம் பலன் தரும். 27.7.2024 அன்று பகல் 12.59-மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அடுத்தவர் பிரச்சனையில் தலையிடாதீர்கள். பெண்களுக்கு தேவையற்ற மனக்கவலையால் முக்கிய வேலைகளில் மனம் லயிக்காது. ஆடி வெள்ளிக்கிழமை புற்று வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
15.7.2024 முதல் 21.7.2024 வரை
திருப்புமுனையான வாரம். ராசியில் குருபார்வை பதிவதால் செயல்களில் வெற்றியும் முன்னேற்றமும் உறுதி. நீங்கள் பல வருடங்களாக எதிர்பார்த்த நல்ல மாற்றம் கிடைக்கும். இனம் புரியாத சில சிந்தனைகளால் ஏற்பட்ட குழப்பங்கள் சீராகும். பூமி, வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும். சொத்துக்கள் மூலம் வாடகை வருமானம் வந்து கொண்டே இருக்கும். தாய்வழிச் சொத்துப் பிரச்சனையில் எதிர்பாராத திருப்புமுனை உண்டாகும். கொடுத்த கடன்கள் வசூலாகும். கடன் சுமை குறையும்..மருத்துவச் செலவுகள் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு தொடர்ந்து பணிபுரிய நிர்வாகம் அனுமதி வழங்கும். வியாபாரிகள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி புதிய முதலீடு செய்வது அவசியம். உங்களை மனதை புண்படுத்திய சகோதரி மன்னிப்பு கேட்பார். தவறு செய்வது மனித இயல்பு என்பதால் நீங்களும் மன்னித்து விடுவீர்கள். வாழ்க்கைத் துணை மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். கோட்டை மாரியம்மனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
8.7.2024 முதல் 14.7.2024 வரை
வெற்றிகள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் 2, 9-ம் அதிபதி சுக்ரனுடன் சேருவது கன்னி ராசிக்கு வெற்றியினை உண்டாக்கும் அமைப்பாகும். தீய பழக்கத்தில் இருந்து விடுபடுவீர்கள்.உங்கள் கனவுகளும் திட்டங்களும் லட்சியங்களும் நிறைவேறும். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். உங்களது ஆலோசனையை குடும்பத்தினர் ஏற்பார்கள்.
செய்தொழில் விருத்தியாகும். புதுபுது திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த உகந்த நேரம். அதில் பரிபூரண வெற்றி கிடைக்கும்.பொருளாதார பாதிப்பு என்ற பேச்சிற்கே இடமில்லை. வரவு, செலவு வழக்கம் போல் இயல்பாக இருக்கும். வராக்கடன்கள் வசூலாகும் திருமணத் தடை அகலும்.நெருங்கிய உறவில் மகள், மகனுக்கு வரன் அமையும். உடல் நிலை சீராகும். 9.7.2024 அன்று காலை 7.52 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சை குறைத்து அமைதி காப்பது நல்லது. பண உதவி செய்வது, பண உதவி பெறுவது ஆகியவற்றை தவிர்க்கவும். ஆக பொறுப்புடன் நடந்து கொண்டால் சிரமங்கள் குறையும். ஆஞ்சநேயரை வழிபாட்டால் சுகமாக வாழ முடியும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
1.7.2024 முதல் 7.7.2024 வரை
தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடி வரும் வாரம் . ராசி அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புகழ், அந்தஸ்து கவுரவம் அதிகரிக்கும். நம்பிக்கை, நாணயம் உயரும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். சந்தோஷமும், மனமகிழ்ச்சியும் நிலைத்து இருக்கும். பிள்ளைகளுக்கு நடைபெற வேண்டிய சுப விசேஷங்கள் நடக்கும்.சிலருக்கு மறு திருமணம் நடக்கும். புத்திர பாக்கியம் இல்லாதவருக்கு கருவுறுதல் நடைபெறும். தேவையற்ற இழப்புகள், மருத்துவச் செலவுகள், வீண் விரயங்கள் குறையும். ஒரு சிலர் வீடு, வேலை மாற்றம் செய்ய நேரும்.
அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதுரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். மாணவர்கள் தனித்திறமையால் ஆசிரியர்கள் பாராட்டை பெறுவீர்கள். 2.7.2024 அன்று காலை 11.14 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தந்தை, தந்தை வழி உறவுகளுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் இருந்து வந்த சர்ச்சைகள் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கவனமாக பேச வேண்டும். சனிக்கிழமை ஸ்ரீ வீரபத்திரரை வணங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
24.6.2024 முதல் 30.6.2024 வரை
சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். வார இறுதியில் 5,6-ம் அதிபதி சனி பகவான் வக்ரமடைகிறார். ராசி அதிபதி புதன் லாப ஸ்தானம் செல்கிறார். எதற்கும் முடிவு காண முடியாமல் தவித்த நிலை மறையும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். சிலருக்கு வேற்று மொழி கற்கும் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டு தொழில் மூலம் அபாரமான பண வரவு கிடைக்கும். பொருளாதார சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். புதிய சொத்துக்கள் கிடைக்கும். அடமான சொத்துக்கள் மீளும். உத்தியோக ரீதியான நெருக்கடிகள், சங்கடங்கள் விலகும்.புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும்.
திருமணத்திற்கு வெளியூர் வரன் அமையும் வாய்ப்புகளே அதிகம் உள்ளது. வேலைக்காக தனித்தனி ஊரில் வசித்த தம்பதிகள் சேர்ந்து வாழ்வார்கள்.பெண்களுக்கு பிள்ளைகளால் ஏற்பட்ட மன வருத்தம் குறையும். உயர் கல்வி வாய்ப்பு சித்திக்கும். 30.6.2024 காலை 7.34 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பமாகிறது. சிலருக்கு கண் திருஷ்டி அதிகரித்து சிறு சிறு உடல் உபாதைகள் உண்டாகும். தம்பதிகளிடம் ஈகோ தலை தூக்கும். மோதல் உருவாகும்.புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை யாக பழக வேண்டும். குல தெய்வத்தை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
17.6.2024 முதல் 23.6.2024 வரை
லட்சியங்களும், எண்ணங்களும் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் மற்றும் சூரியனுடன் ஆட்சி பலம் பெறுகிறார்.தடைகள் தகர்ந்து முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் கூடி வரும்.மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்புகள் அதிகரிக்கும். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் திறமைக்கு தகுந்த நல்ல வேலை கிடைக்கும். தொழில் விருத்திக்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும்.
வீடு, மனை வாகன எண்ணங்களை நிறைவு செய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் உருவாகும். பெண்களுக்கு தாய், வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. தந்தையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். சிந்தித்து நிதானமாக திட்டமிட்டால் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும். சித்தப்பா மற்றும் மூத்த சகோதரர்களுடன் ஏற்பட்ட மன பேதம் சீராகும். தம்பதிகள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவார்கள். திருமணத் தடை அகலும். பவுர்ணமியன்று கன்னிமார்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
10.6.2024 முதல் 16.6.2024 வரை
தடைகள், தாமதங்கள் விலகும் வாரம். வார இறுதியில் ராசி அதிபதி புதன், சூரியன் சுக்ரனுடன் ஆட்சி. சுக்ரனுடன் இணைவு பெற்றதால் தம்பதிகள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவார்கள்.வியாபாரிகள் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையை அதிகரிப்பீர்கள். 2, 9-ம் அதிபதி சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடன் பிரச்சினைகள் நெருக்கடிகள் குறைந்து தாராள தன வரவு உண்டாகி நல்லது நடக்கும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள், வங்கி பணி, ஆடிட்டிங், ஆசிரியர் தொழில் ஜோதிடம் போன்ற துறையில் உள்ளவர்களின் தனித்திறமை மிளிரும்.
தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்கள் கூட எளிமையான உணவு சாப்பிடவும் எளிய உடை உடுத்தவும் துவங்குவார்கள். வழக்குகளின் வெற்றி செய்தி கிட்டும். நீண்ட நாள் மனக்குறைகள் ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பயம் விலகும். சிலருக்கு பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக் கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலையே காணப்படும். வெளிநாட்டு வேலை முயற்சி சித்திக்கும். சக்ரத்தாழ்வார் வழிபாடு உங்களை புகழடையச் செய்யும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
3.6.2024 முதல் 9.6.2024 வரை
புதிய முயற்சியில் வெற்றி உண்டாகும் வாரம். ராசி அதிபதி ராசிக்கு 9-ல் ஆட்சி பலம் பெற்ற பாக்கியாதிபதி சுக்ரன் மற்றும் குரு,சூரியனுடன் சேர்க்கை பெறுவதால் பாக்கிய ஸ்தானம் பலம் பெறுகிறது. இது கன்னி ராசிக்கு மிகப் பெரிய வாழ்வியல் மாற்றம் ஏற்படுத்தும் அமைப்பாகும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கோபத்தில் குடும்பத்தை விட்டுப் பிரிந்த பெற்றோர்கள் வீடு வந்து சேருவார்கள். புதிய தொழில் ஒப்பந்தங்கள் தேடி வரும். பணி புரிபவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.
தொழிலுக்கு அரசின் மானியம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை, தொழில் முயற்சி சாதகமாகும். அரசு உத்தியோகம், அரச பதவி கிடைக்கும். குடும்ப ஸ்தான அதிபதி ஆட்சி பலம் பெறுவதால் குடும்பத்தில் உங்கள் பேச்சு எடுபடும். புத்திர பிராப்தம் கிடைக்கும். உயர் கல்விக்கு விரும்பிய கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். 3.6.2024 அன்று நள்ளிரவு 1.40 மணி முதல் 5.6.2024 அன்று நள்ளிரவு 2.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் செலவுகள் ஏற்படலாம். அலைச்சல் மிகுந்த பயணத்தால் டென்ஷன் அதிகரிக்கும். அமாவாசையன்று பித்ருக்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசி பலன்
27.05.2024 முதல் 02.06.2024 வரை
பாக்கிய பலன்கள் நடைபெறும் வாரம். பாக்கியாதிபதி சுக்ரன் ஆட்சி. நேர்மையும், உழைப்பும் உங்களை உயர்த்தி விடும். வேலைப்பளு குறையும். இதுவரை நிலையான வேலை, தொழில் இல்லாதவர்களுக்கு நிரந்தர வருமானம் வரக்கூடிய வியாபாரம், உத்தியோகம் கிடைக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபம் பெற்றுத் தரும். வெற்றிக் கொண்டாட்டங்கள் அளவு கடந்த ஆனந்தத்தைத் தரும். ஆரோக்கியக் குறைபாடு அகலும். சிலர் பிள்ளைகளின் நலத்திற்காக பூர்வீகச் சொத்துக்களை விற்கும் நிர்பந்தம் உண்டாகும். பங்குச் சந்தை உத்வேகம் பெறும். தகவல் தொடர்பு மற்றும் ஊடகத்தில் பணிபுரிபவர்களுக்கு அலைச்சலும் வளர்ச்சியும் உண்டு. குழந்தை பேறு உருவாகும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் குடிபுகும். கணவன், மனைவி பிணக்குகள் விரைவில் சீராகும். பல மொழி கற்கும் ஆர்வம் உண்டாகும். வீடு, வாகன யோகம். திருமண பிராப்தம் உண்டாகும். மாமனார் மூலம் பெரிய பணம், அதிர்ஷ்ட சொத்துக்கள் கிடைக்கும். தொலைந்து போன, திருடு போன கைமறதியாக வைத்த பொருள் கிடைக்கும். உடல்நிலை மனநிலை தேறும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
20.5.2024 முதல் 26.5.2024 வரை
மேன்மை உண்டாகும் வாரம். ராசிக்கு 8ம்மிடமான அஷ்டம ஸ்தானத்தில் ராசி அதிபதி புதன் மறைவது விபரீத ராஜயோகம். மறைந்த புதனால் நிறைந்த பலன் உண்டு.பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் ஆட்சி. திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். குணநலன்களில் நல்ல புதிய மாற்றங்கள் ஏற்படும். தந்தை வழி உறவுகளால் ஏற்பட்ட அசவுகரியங்கள் சீராகும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் குதுகலம் கூடும்.அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும்.அனுபவப் பூர்வமான பேச்சுக்களால் நன்மதிப்பு உண்டாகும். தீராத பல வருட பிரச்சினைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும். நிதி நிலையில் சாதகமான மாற்றம் உண்டு. சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட பொருள் வரவு உண்டு. விருப்ப விவாகம் சித்திக்கும். விவாகரத்து வழக்குகள் சாதகமாகும். உங்களை களங்கப்படுத்திய வீண் பழியில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கிய கேடுகள் சீராகும். காரியத் தடைகள் மற்றும் துரதிர்ஷ்டங்கள் விலகும். வீடு கட்டும் பணி துரிதமடையும். புதன் பகவானை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406