என் மலர்
கன்னி - வார பலன்கள்
கன்னி
இந்தவார ராசிபலன்
13.5.2024 முதல் 19.5.2024 வரை
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தை குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரன் ராசி அதிபதி புதனுடன் இணைந்து பார்ப்பதால் குடும்ப உறவுகள் உங்கள் மேல் அன்பை பொழிவார்கள். குடும்ப ஒற்றுமையை சிதைத்த எதிரிகள் இருந்த இடம் தெரியாது. உங்களின் முயற்சி, எண்ணங்கள் நிறைவேறும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும்.
பிள்ளைகளின் உயர்கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும். சிலருக்கு குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பெண்களுக்கு கணவன் மற்றும் புகுந்த வீட்டினரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். ராசியில் உள்ள கேது மற்றும் 7-ல் உள்ள செவ்வாய் ராகுவால் திருமண முயற்சி முன்னுக்குப் பின் முரணாக இருக்கும். வேலைப்பளு கூடும். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். சில எதிர்மறையான பலன்கள் நடைபெற்றாலும் பாக்கிய ஸ்தானத்தில் நின்று ராசியைப் பார்க்கும் குரு எல்லாவற்றையும் எதிர் கொள்ளும் தைரியத்தை தருவார். மகா விஷ்ணுவை வழிபட மன பலமும் வளமும் கூடும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிபலன்
6.5.2024 முதல் 12.5.2024 வரை
பாக்கிய ஸ்தானம் பலம் பெறும் வாரம். பாக்கிய ஸ்தான குருவால் ராசிக்கு குரு பார்வையும் தனம் வாக்கு ஸ்தானத்திற்கு சூரியன் சுக்ரன், புதன் பார்வையும் உள்ளதால் ரத்த பந்த உறவுகளிடம் மதிப்பு, மரியாதை உயரும்,தொட்டது துலங்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சுபகாரியத் தடைகள் நீங்கும். அலுவலகத்தில் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். பதவி உயர்வு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். தந்தையின் மூலம் பெரும் பணம், பொருள், சொத்து கிடைக்கலாம். கடன், வட்டி தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். எதிரிகள் தொல்லை குறையும். குடும்ப பெரியோர்களின் அன்பும் நல் ஆசியும் கிடைக்கும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்புள்ளது. தம்பதிகளிடையே இணக்கமான சூழல் நிலவும் 6.5.2024 அன்று மாலை 5.43 முதல் 8.5.2024 மாலை 7.06 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்தச் செயலையும் நினைத்தவுடன் அவசரமாக செய்யாமல் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். அமாவாசையன்று பெற்றோர்கள், பெரியோர்களின் நல்லாசி பெறவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிபலன்
29.04.2024 முதல் 05.05.2024 வரை
பாக்கிய பலன்கள் மிளிரும் வாரம். 4,7-ம் அதிபதியான குரு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம். ராசி மற்றும் 7ல் உள்ள ராகு, கேதுவால் ஏற்படும் அவயோகத்தை பாக்கிய ஸ்தான குரு ஈடு செய்வார். இந்த ஓராண்டு காலம் வாழ்க்கையில் தடைபட்ட அனைத்து சுப நிகழ்வுகளையும் நடத்திக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.
அதே போல் தசா புக்திகள் சாதகமாக இருந்தால் அனைத்தும் தாமாகவே நடந்து முடியும். இது விட்டதை, இழந்ததை மீட்கும் நேரம். இந்த வருடத்தில் திருமணம் நிச்சயிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. சொத்து தொடர்பான முக்கிய நிகழ்வுகள் நடக்கும். சிலருக்கு தொழிலை விரிவுபடுத்த தேவையான தொழில் கடன் கிடைக்கும். முதலாளிகளுக்கு ஊழியர்களின் ஒத்துழைப்பால் நன்மைகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும்.
எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தடைபட்ட உயர்கல்வி, வெளிநாட்டு வாய்ப்பு நிறைவேறும். ஆரோக்கிய கேடுகள் சீராகும். சுய ஜாதகரீதியான அனைத்து தோஷங்களும் விலகும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும். வெள்ளிக்கிழமை ஸ்ரீ தனலட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
22.4.2024 முதல் 28.4.2024 வரை
எதிர்மறை எண்ணங்கள் தடை, தாமதங்கள் அகலும் வாரம். வார இறுதியில் ராசி அதிபதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார்.ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபடுவீர்கள். சில முக்கிய முடிவுகளை எடுப்பதில் இருந்த மன தடுமாற்றம் அகலும். ராசிக்கு குருப் பார்வை கிடைக்கப் போவதால் சில கெட்டவைகள் கூட நல்லதாக அமையும்.உறவினர்களின் வருகையால் பகைமை மறையும். குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை சீராக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் மற்றும் வாழ்க்கைத்துணை மூலம் கிடைக்கும் வருமானம் குடும்ப வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.வாரிசுகளின் பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் வரும்.
தேங்கி கிடந்த சரக்குகள் விற்கும். மகன், மகளின் திருமண முயற்சி கைகூடும். வாழ்க்கை துணை இணக்கமாக இருப்பார். ஆரோக்கிய குறைபாடு அகலும். தொலை தூர ஆலய வழிபாடு, முன்னோர்கள் வழிபாடு மன அமைதியைத் தரும். ராசியில் கேது 7ல் ராகு இருப்பதால் எதிர்பாலின நட்பால் குடும்பத்தில் அசவுகரியங்கள் ஏற்படலாம். சித்ரா பெளர்ணமியன்று வெண்பொங்கல் படைத்து மகா விஷ்ணுவை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
15.4.2024 முதல் 21.4.2024 வரை
விபரீத ராஜ யோகமான வாரம். விரயாதிபதி மறைவு ஸ்தான அதிபதி சூரியன் ராசிக்கு 8-ல் உச்சம். ஒரு மறைவு ஸ்தான அதிபதி மற்றொரு மறைவு ஸ்தானத்தில் அமர்வது கன்னி ராசிக்கு விபரீத ராஜ யோகத்தை ஏற்படுத்தும்.கடந்த 1 வருடமாக அஷ்டம குருவால் ஏற்பட்ட இன்னல்கள் முடிவிற்கு வரப்போகிறது. இது நாள் வரை பட்ட கடன் மற்றும் அவமானங்களில் இருந்து மீள்வீர்கள். இழுத்தடித்த வம்பு, வழக்குகள் முடிவுக்கு வரும். வாழ்க்கைத்துணை உங்களை புரிந்து கொள்வார்.
பிள்ளைகளின் படிப்பு, திருமணம் என சுப செலவுகள் அதிகரிக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தொழில் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிரிகள் தொல்லை நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
சிலர் கடன் பெற்று தொழிலை விரிவு படுத்தலாம் அல்லது புதிய தொழில் துவங்கலாம். சிலருக்கு வீடு கட்ட அரசின் மானியம் கிடைக்கும். பெண்களுக்கு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகமாகும். பயணங்களால் அயர்ச்சியும், சோர்வும் உண்டாகும். காது, மூக்கு தொடர்பான அறுவை சிகிச்சை நடக்கலாம். சிலருக்கு கூட்டுக் குடும்பத்தில் பிரிவினை ஏற்படலாம். ராகு காலத்தில் பிரத்யங்கரா தேவியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
8.4.2024 முதல் 14.4.2024 வரை
வீண் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். 2, 9-ம் அதிபதி சுக்ரன் உச்சம் பெற்று ராசியை பார்க்கிறார். குடும்பத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய குறைபாடு சீராகும். பெண்கள் முன்னேற்றப் பாதையை நோக்கி வெற்றி நடை போடுவார்கள். விவசாயிகள் சிலர் புதிய நிலங்களை குத்தகைக்கு எடுப்பார்கள். சிலர் தொழில், உத்தியோக நிமித்தமாக இடம் பெயர நேரலாம். மன நிம்மதி தரும் இடப்பெயர்ச்சி ஏற்படும். தொழிலில் நிலவிய மந்தநிலை மாறும். ஆரோக்கிய குறைபாடு, கடன் தொல்லை கட்டுக்குள் வரும். ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு நீங்கும். ராசி அதிபதி புதன் வக்ர கதியில் விரய அதிபதி சூரியன் மற்றும் ராகுவுடன் சேருகிறார். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சிலர் அரசு வேலைக்கு தவறான நபரிடம் பணம் கொடுத்து ஏமாறலாம்.
ராசியில் கேதுவும் 7-ல் ராகுவும் இருப்பதால் வாழ்க்கைத்துணை மற்றும் நண்பர்களை தேர்வு செய்வதில் கவனம் தேவை. 9.4.2024 அன்று காலை 7.32 முதல் 11.4.2024 அன்று காலை 8.40 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்மறை எண்ணங்கள் உண்டாகும். காரியத்தடை ஏற்படலாம். தடைகளை தகர்க்க வெட்காளி அம்மனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
1.4.2024 முதல் 7.4.2024 வரை
அனைத்து செயலிலும் நிதானம் மற்றும் பொறுமை மிக முக்கியம். ராசி மற்றும் தொழில் ஸ்தான அதிபதி புதன் வக்ரம் பெற்றாலும் 2,9-ம் அதிபதி தனாதிபதி மற்றும் பாக்கிய அதிபதி சுக்ரன் ராசிக்கு 7-ல் பெறுகிறார். புகழ் பெறுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் மிகுதியாகும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். வெற்றியை அடைவீர்கள். சிக்கனமாக இருக்க முயற்சி செய்வீர்கள். வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். சமூக நலச் சங்கங்களில் பதவி கிடைக்கும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் திருமணம், குழந்தை பேறு போன்ற கடமைகளை முன் நின்று நடத்துவீர்கள்.
வங்கி கடன் மூலம் புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற அமைப்பு உருவாகும். உடன் பிறந்தவர்களுடன் பாகப்பிரிவினை பேச்சுவார்த்தை, முயற்சி நடக்கும். ஞாபக சக்தி குறைவு சீராகும். பெண்கள் புதிய அணிகலன்கள், அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள். வாழ்க்கை துணைக்கு வட்டியில்லா கடன் கிடைக்கும். கன்னி ராசியினருக்கு பேரன், பேத்தி பிறப்பார்கள்.தாத்தா பாட்டியாகும் யோகம் உள்ளது. உயர் கல்விக்கு விரும்பிய பாடத்திட்டத்தில் சேர்ந்து படிப்பீர்கள். ஆன்மீக நாட்டம் மேலோங்கும். சக்ரத்தாழ்வாரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
25.3.2024 முதல் 31.3.2024 வரை
மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும் வாரம். ராசி மற்றும் தொழில் ஸ்தான அதிபதி புதன் அஷ்டம ஸ்தானத்தில் 4,7-ம் அதிபதி குருவுடன் சேர்க்கை. ஆனால் 2,9-ம் அதிபதி சுக்ரன் 7-ல் உச்சம் பெறுவதால் சாதகமும், பாதகமும் சேர்ந்தே நடக்கும்..பேராசை, ஈகோ, பொறாமை போன்றவற்றில் இருந்து விடுபடுவீர்கள். அரசு காரியங்களில் வெற்றி ஏற்படும். தந்தை, மகன் உறவில் ஏற்பட்ட பேதம் சீராகும். சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். புதிய தெளிவான சிந்தனைகளின் மூலம் முடிவுகளை எடுப்பீர்கள். இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். லட்சியத்தை அடைய அதிகம் உழைக்க நேரும்.
செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். சிலருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும். உயர் கல்வி முயற்சி வெற்றிதரும். யாருடைய உதவியையும் எதிர்பார்க்கா மல் உங்கள் சொந்த முயற்சியில் வீடு, வாசல், வாகனம் அமையும். கடன் கொடுக்கக் கூடாது. சிலரின் பிள்ளைகள் எதிர்கால முன்னேற்றத்திற்கு வெளியூர் செல்லலாம். சிலர் காதல் வயப்படுவார்கள்.புதிய முடிவுகளை எடுக்கும் முன்பு பெரியோர்களின் ஆலோச னைகளை கேட்கவும். உடல் அசதி, அசவுகரியம் மற்றும் பொருள் விரயத்தில் இருந்து விடுபட தினமும் ஸ்ரீருத்ரம் கேட்பது நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
18.3.2024 முதல் 24.3.2024 வரை
விரயங்களை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் நீசம் பெற்றாலும் தன் வீட்டை தானே பார்ப்பதால் உங்கள் வேலை செயல்பாடு ஆகியவற்றில் மாற்றம் ஏற்படாது. ஆனால் விரய அதிபதி சூரியன் மற்றும் ராகுவுடன் ராசிக்கு 7-ல் இணைந்து இருப்பதால் நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால், வாழ்க்கைத் துணையால் விரயங்களை சந்திக்க நேரும். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது.சிலருக்கு புதிய தொழில் சிந்தனைகள் மேலோங்கும். அதற்கான ஆயத்த முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிரிகள் தொல்லை நீங்கும்.
உடல் உபாதைகள் விலகி ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகி அமைதி நிலவும். மலைபோல் வந்த துன்பம் பனி போல விலகி காரியசித்தி உண்டாகும். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். நெடுந்தூரத்தில் உள்ள வழிபாட்டு தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். முக்கிய கடமைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். தம்பதிகள் தங்கள் பிரச்சினைகளை 3-ம் நபரிடம் கொண்டு செல்லாமல் தாங்களே தீர்த்துக் கொள்ளுவதால் ஊடல் கூடலாகும். பறவைகளுக்கு தானியங்களை இரையிட துன்பங்கள் விட்டு விலகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
11.3.2024 முதல் 17.3.2024 வரை
சுமாரான வாரம். ராசியில் கேது 7-ல் ராசி அதிபதி புதன் நீசமடைந்து விரய அதிபதி சூரியன் மற்றும் ராகுவுடன் இணைவதும் ராசிக்கு 6-ல் சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பதும் சற்று சுமாரான கிரக நிலவரம். பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், தேவையற்ற வாக்கு வாதங்கள் வீண் பேச்சுக்களைத் தவிர்க்கவும். விவாகரத்து வழக்கில் எதிர்பார்த்த தீர்ப்பு தாமதமாகும். வழக்குகளை ஒத்தி வைப்பது நல்லது. தாய், தந்தை வழி பூர்வீகச் சொத்துக்கள் மத்தியஸ்தர்கள் முன்னிலையில் பேச முயற்சி எடுக்கப்படும்.
சிலருக்கு வாரிசு அடிப்படையிலான தந்தையின் அரசு வேலை கிடைக்கும். முக்கிய ஆவணங்களை பத்திரமாக பாதுகாக்கவும். ஒரு சிலருக்கு இழந்த பதவிகள் கிடைக்கும். வெளிநாட்டு பயணம் உறுதியாகும். புதன்ஆதித்ய யோகம் உள்ளதால் கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். 12.3.2024 இரவு 8.29 முதல் 14.3.2024 இரவு 10.39 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் தொழில் சார்ந்த விசயங்களில் கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை தேவை. விநாயகருக்கு சந்தன காப்பு, அணிவித்து வழிபட நிம்மதி அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
4.3.2024 முதல் 10.3.2024 வரை
விருப்பங்கள் நிறைவேறும் வாரம். 4, 7-ம் அதிபதி குரு 4-ம்மிடத்தைப் பார்ப்பதால் தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்களது பெயர், புகழ், சமுதாய அந்தஸ்து உயரும். பல பெரிய மனிதர்களின் நட்பால் நற்பலன்கள் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் ஆசியுடன் திருமணம் நடைபெறும். இழுபறியாக இருந்த வம்பு வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.பூர்வீகச் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். சொந்தமனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் முன்னேற்றமும் லாபமும் பெருகும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
பணம் கொடுக்கல், வாங்கலில் நிலவிய நெருக்கடிகள் விலகும். கடன்கள் படிப்படியாக குறையும். அழகு, ஆடம்பர அந்தஸ்தான பொருட்கள் சேரும். குடும்பத் தேவைகள் நிறைவேறும். பெண்களுக்கு மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் கூடும். உண்ண, உறங்க முடியாமல் உழைக்க நேரும். சிறு சிறு நோய் தாக்கம் வைத்திய செலவு உருவாகலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். சிவராத்திரியன்று மஞ்சள் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
26.2.2024 முதல் 3.3.2024 வரை
சுபவிரயம் ஏற்படும் வாரம். ராசி அதிபதி புதன் ராசிக்கு 6-ல் 6-ம் அதிபதி சனி மற்றும் விரயாதிபதி சூரியனுடன் இணைவதால் தேவைக்கு பணப்புழக்கம் இருக்கும். இல்லை என்ற நிலை இருக்காது. பிள்ளைகளின் திருமணம், வளைகாப்பு, பிள்ளைப் பேறு, உயர்கல்வி, வீடு, வாகனம் போன்ற சுப விரயங்கள் ஏற்படும்.அரசு வேலை கிடைக்கும். வேலை மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அலுவலக டென்ஷன் குறையும்.உங்கள் மீது போடப்பட்ட வழக்கில் தீர்ப்பு சாதகமாகும் தாய்மாமனுடன் இருந்த மனஸ்தாபம் குறையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். திருமணம், புத்திர பிராப்தம் போன்ற பாக்கிய பலன்கள் நடக்கும்.
தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவர். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதியினர் சேர்ந்து வாழ்வார்கள். புதிய சொத்து வாங்கும் போது முக்கிய ஆவணங்களை சரிபார்க்கவும். விண்ணப்பித்த கடன், நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் இந்த வாரம் கிடைக்கக்கூடும். அரசியல் பிரமுகர்கள் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று புதிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். புதன்கிழமை மகாவிஷ்ணுவை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406