என் மலர்
கன்னி - வார பலன்கள்
கன்னி
இந்தவார ராசிபலன்
26.11.2023 முதல் 3.12.2023 வரை
சங்கடங்கள் விலகும் வாரம். ராசி மற்றும் 10-ம் அதிபதி புதன் 4-ம்மிடத்தில் நின்று தொழில் ஸ்தானமான 10-ம்மிடத்தை தானே பார்ப்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். வேலையில் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். பங்கு வர்த்தகர்களுக்கு மிகச் சாதகமான காலம். பணவரவு சிறப்பாக இருப்பதால் கடன் நெருக்கடிகள் சற்று குறையும். துக்கம், துயரம், சங்கடங்கள் விலகும். வாக்கு வன்மையால், பண பலத்தால் விரும்பியதை சாதித்துக் கொள்வீர்கள்.
குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். விருப்ப திருமணத்திற்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்து கிடைப்பதில் சட்டச் சிக்கல் ஏற்படலாம். வீடு, வாகன யோகம் சிறப்பாகவுள்ளது. பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு சமூக அந்தஸ்த்தை நிலைப்படுத்தும் கவுரவப் பதவிகள் கிடைக்கும். தியாக மனப்பான்மை மிகுதியாகும். தொழில், பணி அல்லது குடும்ப சூழல் காரணமாக தம்பதிகள் சிறிது காலம் பிரிந்து வாழலாம். சிலருக்கு கண் சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகும். புதன்கிழமை விஷ்ணு சகஸ்ஹர நாமம் படிப்பது நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
20.11.2023 முதல் 26.11.2023 வரை
ஒவ்வொரு செயலிலும் நிதானம் தேவைப்படும் வாரம்.5,6-ம் அதிபதி சனியும் 3,8-ம் அதிபதி செவ்வாயும் ஒன்றையொன்று பார்க்கிறது. இந்த கிரக சம்பந்தம் கன்னி ராசிக்கு இடையூறுகளை மிகைப்படுத்தும். தேவையற்ற மனக்குழப்பம், டென்ஷன், நோய், செலவு, வம்பு, வழக்குகள் போன்ற இடையூறுகள் உருவாகும். பூர்வீகம் தொடர்பான விஷயங்களை ஒத்தி வைப்பது நல்லது. சிலரின் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. பங்குச்சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும். திடீர் லாபம் கிடைக்கும்.தொழில் சிறப்பாக நடக்கும். வருமானம் வந்து கொண்டே இருக்கும்.தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம். பழைய பங்குதாரர்கள் வெளியேறலாம். எதிர்பாராத மருத்துவ செலவில் விரயம் ஏற்படும். நீண்ட தூர பயணம் செய்ய நேரும்.தந்தைவழி உறவினர்கள் வெளிப்பேச்சில் நல்லவர்களாகவும் மனதிற்குள் வஞ்சகம் வைத்தும் பேசுவார்கள்.
அரசுவழி ஆதாயம் உண்டு. அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். ராசியில் கேது ஏழில் ராகு இருப்பதால் சிலருக்கு கோட்சார ரீதியான திருமணத்தடை ஏற்படலாம்.24.11.2023 மாலை 4 முதல் 26.11.2023 இரவு 7.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். ஞாபக மறதி அதிகரிக்கும். பவுர்ணமியன்று குல தெய்வத்தை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
13.11.2023 முதல் 19.11.2023 வரை
இடையூறுகள் அகலும் வாரம் .5ம் அதிபதி சனிக்கு 2,9ம் அதிபதி செவ்வாயின் பார்வை பதிவது கன்னி ராசிக்கு மிக நல்லது.புகழ் கொடிகட்டிப் பறக்கும்.சிலரின் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. பங்குச் சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும். சனி, செவ்வாய் சம்பந்தத்தால் மிகுதியான சுபமும் குறைவான அசுபமும் நடக்கும். திடீர் லாபம் கிடைக்கும். தொழில் சிறப்பாக நடக்கும்.வருமானம் வந்து கொண்டே இருக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம். பழைய பங்குதாரர்கள் வெளியேறலாம். எதிர்பாராத செலவினால் விரயம் ஏற்படும். நீண்ட தூர பயணம் செய்ய நேரும்.
தந்தைவழி உறவினர்கள் வெளிப்பேச்சில் நல்லவர்களாகவும் மனதிற்குள் வஞ்சகம் வைத்தும் பேசுவார்கள். அரசுவழி ஆதாயம் உண்டு.அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். சில வயதான பெற்றோர்கள் தங்கள் வாரிசுகள் மரியாதை குறைவாக நடத்துவதாக வருந்துவார்கள். ராசியில் கேது ஏழில் ராகு இருப்பதால் சிலருக்கு கோட்சார ரீதியான திருமணத் தடை ஏற்படலாம். சஷ்டியன்று பால் அபிசேகம் செய்து முருகனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
6.11.2023 முதல் 12.11.2023 வரை
நிம்மதியான வாரம். தனம், வாக்கு குடும்பஸ்தான அதிபதி சுக்ரன் ராசியில் நீச்சம் பெறுகிறார். எனினும் 2-ம்மிடத்திற்கு குருப்பார்வை பதிவதால் உங்கள் முயற்சிகளுக்கு நற்பலன் தேடி வரும். கடந்த கால நெருக்கடிகள் குறையும்.பிறரை எளிதில் வசீகரிக்கும் ஆற்றல் கூடும். தீபாவளி உற்சாகத்தில் மன உளைச்சல் குறைந்து நிம்மதி அதிகரிக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை திட்டமிட்டு முறையாக பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.சமுதாய அந்தஸ்த்தை உயர்த்தக் கூடிய சங்கங்களில் முக்கிய நிர்வாகப் பதவிகள் தேடி வரும்.
இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். கைவிட்டுப் போன பூர்வீகச் சொத்து திரும்பி வரும். வாழ்வில் நடைபெற வேண்டிய அனைத்து சுப நிகழ்வுகளும் நடக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபம் பெற்றுத் தரும். பக்கத்து வீட்டுக்காரரின் தொல்லை குறையும். உயர் கல்வி முயற்சி வெற்றி தரும். தந்தை வழி பூர்வீகச் சொத்து சில மனஸ்தாபங்களுக்கு பின் கிடைக்கும். புனித தலங்களுக்கு சென்று புனித நீராடுவார்கள். உயர் கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்லலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தீபாவளியன்று விஜய லட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
30.10.2023 முதல் 5.11.2023 வரை
விரயங்களை கட்டுப்படுத்த வேண்டிய வாரம்.ராசி அதிபதி புதன் விரய அதிபதி சூரியனுடன் தனம் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவிற்கு மீறிய தீபாவளி செலவுகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை ஆன்லைனில் வாங்கி ஏமாறலாம். பண்டிகை கால சீசன் வியாபாரிகளுக்கு வருமானம் இரட்டிப்பாகும்.வெளியூர் வேலைக்கு சென்ற சிலர் வேலை பிடிக்காமல் சொந்த ஊருக்கே திரும்புவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நிலுவையில் உள்ள பழைய சம்பள பாக்கிகள் வசூலாகும். சிலர் கண்களில் அறுவை சிகிச்சை செய்யலாம்.
ராசி, 7-ல் நுழைந்த ராகு கேதுக்கள் எதிரிகளையும், நம்பிக்கை துரோகிகளையும் அடையாளம் காண்பிப்பார்கள். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். அரசின் நலத்திட்டத்தில் வீடு, மனை கிடைக்கும். திருமண முயற்சிகள் காலதா மதாகும். 30.10.2023 காலை 10.28 முதல் 1.11.2023 மாலை 4.10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் விரயங்களால், கொடுக்கல், வாங்கல் தகராறு போன்றவற்றால் மன சஞ்சலம் உண்டாகும். மகா விஷ்ணுவை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
23.10.2023 முதல் 29.10.2023 வரை
புத்தியை தீட்ட வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் விரய அதிபதி சூரியனுடன் தனம், வாக்கு. குடும்ப ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி செவ்வாயுடன் சேர்ந்து இருப்பதால் கவனமாக செயல்பட வேண்டும். வெளிநாட்டு வேலை மற்றும் பயணம் திட்டமிட்ட படி நடக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மூத்த சகோதர வகையில் சில சாதகங்களும் பல பாதகங்களும் உண்டாகும். சொத்துக்கள் விற்பனையால் ஆதாயம் உண்டு.கணவன்-மனைவி இடையை சின்னச் சின்ன சலசலப்புகள் வரலாம். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.
பெண்களுக்கு இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும். தீபாவளி பட்ஜெட் கூடும். அதற்குக் தகுந்த வரவும் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். ராசிக்குள் கேதுவும் 7-ல் ராகுவும் நுழைவதால் திருமண விசயத்தில் கவனம் தேவை. உடல் உபாதைகளால் மன சஞ்சலம் அதிக மாகும். 28.10.2023 காலை 7.30 முதல் 30.10.2023 அன்று காலை 10.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைப்பளு கூடும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். உணவு விசயத்தில் கவனம் தேவை.கிரகணம் முடிந்த பிறகு சப்த கன்னிகளை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
16.10.2023 முதல் 22.10.2023 வரை
சுமாரான வாரம். தன ஸ்தானத்தில் ராசி அதிபதி புதன் அஷ்டமாதிபதி செவ்வாய் மற்றும் விரய அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெறுகிறார். ராசியை கேதுவும் ஏழாமிடத்தை ராகுவும் நெருங்குகிறார்கள். இது கன்னி ராசிக்கு சாதகமில்லாத கிரக அமைப்பு. தொழில் நிலை ஏற்ற இறக்கத்துடன் நிலவும். அரசுப் பணியாளர்கள் பேச்சை மூலதனமாகக் கொண்டவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.
அரசியல்வாதிகள் பொதுக் கூட்டத்தில் எந்த வாக்கும் கொடுக்கக் கூடாது. குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடு நிலவும். லாட்டரி, பங்குச் சந்தை, உயில் சொத்து, பாலிசி முதிர்வு தொகை மூலம் பெரும் பணம் கிடைக்கும். மூத்த சகோதர வழியில் சில பொருள் இழப்புகள் ஏற்படலாம். ஆண்களுக்கு மாமனார் மூலம் அசையும், அசையாச் சொத்துக்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் மனஸ்தாபம் நீதிமன்றம் வரை செல்லும். உறவுகளுக்காக சூழ்நிலைக் கைதியாக வாழலாம். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையின் அன்புடன் அழகு ஆடம்பர துணி, நகைகள் கிடைக்கும். பிள்ளைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும் கல்யாண கனவு நினைவாகும். குல இஷ்ட தெய்வ வழிபாடு நன்மைகளை மிகைப்படுத்தும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிபலன்
9.10.2023 முதல் 15.10.2023 வரை
நெருக்கடிகள் விலகும் வாரம்.ராசி மற்றும் பத்தாம் அதிபதி புதன் ராசியில் உச்சம் பெற்று விரயாதிபதி சூரியனுடன் ராசியில் சஞ்சாரம் செய்கிறார். இதுவரை சாதிக்க துடித்த விசயங்களை சாதிக்கும் துணிவும், சந்தர்ப்பமும் உருவாகும்.எதிரில் பார்த்தாலும் பார்க்காமல் விலகிச் சென்ற சகோதரர் நலம் விசாரிப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சி யான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது.ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுதியாகும்.நல்ல தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். வியா பார பங்காளிகளிடம் நிலவிய மனக்கசப்பு மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள்.
கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிருப்தியைத் தரும். திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். சொத்துகள் சேரும். குடும்ப பராமரிப்பு செலவு மற்றும் விரயம் அதிகமாகும். கண் பாதிப்பு இருக்கும். மகாளய அமாவாசையன்று பசுக்களுக்கு அகத்திக்கீரை வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
2.10.2023 முதல் 8.10.2023 வரை
எதிர்மறை எண்ணங்கள் அகலும் வாரம். ராசி,10-ம் அதிபதி புதன் உச்சம் பெற்று ராசியை விட்டு அஷ்டமாதி பதி செவ்வாய் நகர்வதால். ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை, கண் திருஷ்டி போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபடுவீர்கள். உறவினர்களின் வருகையால் பகைமை மறையும். குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை சீராக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் மற்றும் வாழ்க்கைத்துணை மூலம் கிடைக்கும் வருமானம் குடும்ப வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். வாரிசுகளின் பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். ஆரோக்கிய குறைபாடு அகலும். தந்தை வழி உறவுகளுக்காக அல்லது பூர்வீகச் சொத்திற்காக சிலர் கடன்படலாம். தொழிலில் நிலவிய தடை, தாமதங்கள் அகன்று நல்ல வருமானம் வரும். தேங்கி கிடந்த சரக்குகள் விற்கும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். வாழ்க்கைப் பாதையில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய சில புதிய நட்புகள் கிடைக்கும்.பொது வாழ்வில் இருப்பவர்கள் மேல் ஏற்பட்ட களங்கம் அகலும். உடல் நலம் தேறும்.மகாளய பட்ச காலத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உதவுவது நல்லது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிபலன்
25.9.2023 முதல் 1.10.2023 வரை
மன ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டிய வாரம். 6-ம் அதிபதி சனியின் உதவியால் சில வேலையற்றோர்கள் நல்ல வேலைகளைப் பெறலாம்.இது உங்களின் நிதி நிலையை மேம்படுத்தும். நேசம் காட்டுபவரிடம் ஏற்பட்ட தவறான புரிதல் சரியாகிவிடும். மனம்தான் வாழ்வின் நுழைவாயில் ஏனெனில் நல்லது, கெட்டது அனைத்தும் மனதின் மூலமே வருகிறது. ராசி அதிபதி புதன் விரயாதிபதி சூரியனுடன் பரிவர்த்தனை பெற்று ராசிக்கு 12-ல் சஞ்சாரம். அஷ்டமாதிபதி செவ்வாய் ராசியில் என மறைவு ஸ்தானம் வலுப்பெறுவதால் சதா எதையாவது நினைத்து கவலைப்பட்டு நோயை வரவழைப்பார்கள். நோய்க்கு வைத்தியம் செய்து கடன் உருவாகும். உங்கள் நடத்தை, வாழ்வியல் முறை எளிமையாக இருக்கும் போதுதான் வாழ்க்கையில் இன்பம் பெருகும். மன சஞ்சலத்தைக் குறைக்க வாழ்க்கை முறையை எளிமைப்படுத்த யோகா மற்றும் ஆன்மீக நாட்டத்தை அதிகரிக்க வேண்டும்.அரசின் இலவச வீட்டுமனை பட்டா கிடைக்கும். 30.9.2023 இரவு 9.10 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அதீத உடல் உழைப்பால், சோர்வு மிகுதியாகும். பித்ருக்களை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
18.9.2023 முதல் 24.9.2023 வரை
மன நிறைவான வாரம். ராசி அதிபதி புதன் விரய அதிபதி சூரியனுடன் பரிவர்த்தனை பெறுகிறார். வேதனைகளை விரட்டி சாதனை களாக மாற்றும் சிந்தனைகள் உதயமாகும். தேடிச் செல்லும் அன்பு நிலையற்றது. தேடி வரும் அன்பே நிலையானது என்பதை உணர்வீர்கள் சில ருக்கு உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும். புதிய தொழில் கூட்டாளி மற்றும் ஒப்பந்தத்தில் கவனம் தேவை. இல்லத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய பேச்சு நடைபெறும். தாய் வீட்டுச் சீதனத்தால் பெண்களுக்கு உற்சாகமும், தெம்பும் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் இழு பறியான சூழல் உண்டாகும். கூட்டுக் குடும்பத்தில் பிரிவினை ஏற்படலாம். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் மற்றவர்கள் பெயரில் சொத்து வாங்குவதை தவிர்க்கவும். வெளிநாட்டு வேலை மற்றும் பயணம் திட்டமிட்டபடி நடக்கும். சிலருக்கு செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும். தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியில் ஆர்வம் பிறக்கும். மகிழ்ச்சியை அதிகரிக்க கால பைரவருக்கு முந்திரி மாலை சாற்றி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்தவார ராசிபலன்
11.9.2023 முதல் 17.9.2023 வரை
நினைப்பதும், நடப்பதும் முரண்பாடாக இருக்கும் வாரம். ராசியில் 3,8-ம் அதிபதி செவ்வாய் சஞ்சாரம். ராசி அதிபதி புதன் 12-ல் மறைவு. ராசியை கேது நெருங்கிக்கொண்டு இருக்கிறார். முக்கிய கிரகங்களின் சஞ்சாரம் மறைவு ஸ்தானங்களை வலிமைப் படுத்துகிறது. நினைப்பதற்கு மாறான பலன்களை நடத்தும். ஆனால் 2,9-ம் அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் நிற்பதால் பாக்கிய பலத்தால் நடப்பதை எதிர்கொள்ள முடியும். தனவரவில் சாதகமான நிலை உண்டு. நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் பண உதவி கிடைக்கும். கூட்டுத்தொழிலில் சற்று விட்டுக் கொடுத்து செல்லவும். திருமண வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். வீட்டில் சிறுசிறு சுப மங்கல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல் தீரும். கோபத்தை குறைத்து ஆரோக்கியத்தை கடைபிடிக்க வேண்டும். வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் என சுயஜாதக தசாபுக்திக்கு ஏற்ற மாற்றம் உண்டாகும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால் கிரகங்களின் இயக்கம் பாதிப்பை தராது. பிரதோஷத்தன்று விபூதி அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406