என் மலர்
கன்னி - வார பலன்கள்
கன்னி
இந்தவார ராசிபலன்
4.9.2023 முதல் 10.9.2023 வரை
சாதகமான வாரம். 2, 9-ம் அதிபதி சுக்ரன் வக்ர நிவர்த்தி பெறுவதால் இதுவரை உங்களின் ஆலோசனைக்கு செவி சாய்க்காத குடும்பத்தினர் உங்களின் அருமை பெருமைகளை உணர்வார்கள். வரும் நாட்களில் குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் நல்ல முறையில் தீரும். காவல்துறை, ராணுவம் போன்றவைகளில் பணிபுரிபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் நடக்கும். 8-ல் நிற்கும் குரு வக்ரமடைவதால் திருமணமாகாதவர்களுக்கு இந்த வாரம் திருமணம் நடைபெறுவதற்கான உறுதி நிகழ்வுகள் நடைபெறும். சிலருக்கு பெற்றோர் வழியில் செலவுகள் வரும்.குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உருவாகும். ஒரு முக்கிய கோரிக்கைக்காக குலதெய்வத்திற்கு வேண்டுதல் வைப்பீர்கள்.5.9.2023 அன்று மாலை 3 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள், பணப்பற்றாக்குறை பற்றிய கவலைகள் வந்து செல்லும். புதிய வேலைக்கான முயற்சியில் சில தடங்கல் ஏற்படலாம். தினமும் விஷ்ணு சகஸ்ஹர நாமம் கேட்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிபலன்
28.8.2023 முதல் 3.9.2023 வரை
சாதகமான வாரம்.அஷ்டமாதிபதி செவ்வாய் ராசியில் சஞ்சரிப்பதால் பேச்சை மூலதனமாக கொண்ட தொழில், கமிஷன் அடிப்படையான தொழில் புரிபவர்களுக்கும் மிக மிக சாதகமான வாரம். நிலுவையில் உள்ள வாடகை வருமானம் வரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு சித்திக்கும். உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். சனி வக்ரமாக இருப்பதால் முதலீட்டாளர்கள் கவனமாக செயல்பட வேண்டும். மனைவி வழி சொத்தை உயில் மாற்றம் செய்வதில் மாமனாரிடம் இருந்த எதிர்ப்புகள் அகலும். வெளிநாட்டில் இருப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வதில் இருந்த நடைமுறை சிக்கல்கள் நீங்கும். திருமண முயற்சிகள் வெற்றி தரும்.சில தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக பிரிந்து வாழலாம். கன்னி ராசியினர் ராசிக்குள் கேது நுழையும் முன்பு திருமணத்தை நடத்துவது உத்தமம். 3.9.2023 அன்று காலை 10.38க்கு சந்திராஷ்டமம் துவங்கு வதால் வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். முக்கியமான பணிகளை பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்கக் கூடாது. பிரதோஷத்தன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிபலன்
21.8.2023 முதல் 27.8.2023 வரை
விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் விரய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற விரயாதிபதி சூரியனுடன் சேருவதால் சிலர் வேலைக்காக வெளிநாடு செல்லலாம். வீடு கட்டும் பணி துரிதமடையும்.திடீர் செலவுகள் ஏற்படலாம். அலைச்சல் மிகுந்த பயணத்தால் டென்ஷன் அதிகரிக்கும். 3,8-ம் அதிபதி செவ்வாய் ராசியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தின் மேல் கண் திருஷ்டி அதிகமாகும்.திடீர் செலவுகள் ஏற்படலாம். உங்களால் உயர்ந்த சகோதர, சகோதரிகள் உங்களைப் பற்றி புறம் பேசுவது உங்களின் கவனத்திற்கு வரும். இதனால் உங்கள் குடும்பத்தில் அமைதி குறைவது போன்ற இனம் புரியாத மன உணர்வு தோன்றும். அஷ்டம, விரய ஸ்தானம் வலுப்பதால் எச்சரிக்கையாக செயல்படும் காரியங்களில் கூட சறுக்கல் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் வேலைப் பளுவால் அலுவலகத்தில் அதிக நேரம் செலவிட நேரும். பெண்களுக்கு குடும்பச்சுமை அதிகரிக்கும். தம்பதிகள் வாக்குவாதத்தை தவிர்க்கவும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும்.கருட பஞ்சமியன்று கருடரை பஞ்சாமிர்த அபிசேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
14.08.2023 முதல் 20.8.2023 வரை
விரயத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் விரய அதிபதி சூரியனுடன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. உங்களின் பணிவான, நடத்தைகள், செயல்பாடுகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். வெளிநாட்டு தொடர்பு அல்லது வேற்று மதத்தினர் ஆதரவால் புதிய தொழில் வாய்ப்பு கிட்டும். மூத்த சகோதர சகோதரிகள் முன்னுக்கு பின் முரணாக பேசி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
வழக்குகளில் விசாரணை தள்ளிப்போகும் சிலர் பூர்வீக சொத்தை விற்கும் முயற்சியில் ஈடுபடலாம். பண வரவும் அதிகரிக்கும் அதற்கு இணையான செலவும் உண்டாகும் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். அரசியல் வாதிகளுக்கு எதிரி தொல்லைகள் சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். திருமணத்தடை அகலும். பெண்களுக்கு கணவரின் புரிதல் மகிழ்ச்சியை அதிகரிக்கும். உடல்வலி, அலுப்பு போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். பருவ வயதினர் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ஆடி அமாவாசையன்று முன்னோர்களை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
07.08.2023 முதல் 13.8.2023 வரை
விபரீத ராஜ யோகம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் 3, 8-ம் அதிபதி செவ்வாயுடன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு அதிர்ஷ்டப் பணம், அதிர்ஷ்ட சொத்து, பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். சிலர் வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம். தாயின் ஆரோக்கியக் குறைபாட்டில் இருந்த கவலைகள் அகலும். ஓய்வு நேரத்தை வீணடிக்காமல் உழைப்பீர்கள். சிலருக்கு இழப்பும் மிகுதியாக இருக்கும்.
சாட்சி கையெழுத்து, ஜாமீன் கையெழுத்து, கேரண்டி கையெழுத்து போடுவதை தவிர்க்கவும்.சில பாதகங்கள் இருந்தாலும் பல திருப்பு முனையான சம்பவங்கள் உங்களை மகிழ்விக்கும். பாகப்பிரிவினை பேச்சு வார்த்தையை ஒத்தி வைக்கவும். 9.8.2023 அன்று காலை 7.42 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆடி வெள்ளிக்கிழமை குல,குடும்ப தெய்வத்தை வழிபட உடலும் உள்ளமும் குளிரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
31.7.2023 முதல் 6.8.2023 வரை
சுபவிரயம் உண்டாகும் வாரம். விரய ஸ்தானத்தில் சனி பார்வையில் மூன்று கிரகச் சேர்க்கை. நான்காம் அதிபதி குரு தன் வீட்டைத் தானே பார்ப்பதால் பலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்கும் பாக்கியம் உண்டாகும். வலது பக்கத்து வீட்டுக்காரருடன் நிலவிய எல்லைத் தகராறு சுமூகமாகும். தடைபட்ட வீடுகட்டும் பணி துரிதமாகும். தாயின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தாய்வழிச் சொத்திற்காக தாய் மாமாவுடன் ஏற்பட்ட வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். பலருக்கு திருமணத் தடை அகலும். சிலர் பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்வார்கள். சிலருக்கு இரண்டாம் திருமணம் நடக்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். மூத்த சகோதரத்தால் ஆதாயம் உண்டாகும். பெண் நண்பிகளிடம் விலை உயர்ந்த நகைகளை இரவல் கொடுப்பது வாங்குவதை தவிர்க்கவும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். உபரி வருமானத்தை அரசுடைமை வங்கிகளில் சேமிக்க வேண்டும்.
ஆடம்பரச் செலவையும் கடன் வாங்குவதையும் தவிர்த்தால் இந்த வாரம் அனைத்து நாட்களும் இன்பமாகவே இருக்கும். ஆடிப் பெருக்கு அன்று நீர் நிலைகளுக்கு சென்று நீராடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
24.7.2023 முதல் 30.7.2023 வரை
விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். கன்னி ராசிக்கு விரய பாவகமான 12-ம்மிடம் செவ்வாய், சுக்ரன், புதன் சேர்க்கையால் வலுப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும்.சிலருக்கு தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும்.விண்ணப்பித்த வெளிநாடு, அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளது.
சிலர் வாரிசுகளை தங்களின் தொழில், வியாபாரத்தில் ஈடுபடுத்தி ஆனந்தம் அடைவார்கள். குழந்தை பாக்கியம் உன்டாகும்.வாழ்க்கைத் துணையும், தொழில் பங்குதாரரும் நிறையச் செலவை இழுத்து விடுவார்கள். தன ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் இயல்பான பணியில் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் பெரிய இழப்புகள் ஏற்படாது. ஆடித் தள்ளுபடியில் ஆடை ஆபரணம் வாங்க வாய்ப்பு உள்ளது.
சிலருக்கு கடன் உதவியால் புதிய சொத்து, வாகன வசதி மேம்படும்.விருப்ப விவாகத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். பெண்களுக்கு ஆன்லைன் மோகம் அதிகரிக்கும். எதிர் பாலினத்தவருடன் எச்சரிக்கையாக இருக்கவும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தென்படும். ஆடி வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பச்சைப் புடவை சாற்றி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
17.7.2023 முதல் 23.7.2023 வரை
சிந்தனைகளில் புதுமை பிறக்கும் வாரம். ராசி அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். லட்சியங்களும் திட்டங்களும் நிறைவேறும். தடைகள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தெளிவு ஏற்படும்.
கடன் சார்ந்த உதவிகள் சிலருக்கு சாதகமாகும். நீண்ட காலமாக தடைப்பட்ட பணிகள் துரிதமாக நடக்கும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் பாராட்டு கிடைக்கும் விதத்தில் இருக்கும், அன்றாட பணியில் உள்ள சில சிக்க லான வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அஷ்டம குருவால் குடும்பத்தின் சில சிறிய விஷயங்களால் வாழ்க்கை துணையுடன் விரிசல் ஏற்படலாம்.
வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடித்தால் பெரிய பாதிப்பு ஏற்படாது. செலவுகள் அதிகரித்தாலும் சில புத்திசா லித்தனமான செயல்பாட்டால் செலவை கட்டுப்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். மறு திருமணத்திற்கு வரன் அமையும்.அம்மன் கோவில் திருப்பணி நடக்கும் ஆலயங்க ளுக்கு செங்கல் தானம் தரவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
10.7.2023 முதல் 16.7.2023
மீண்டும், மீண்டும் வெற்றி வாய்ப்புகள் குவியும் வாரம். ராசி மற்றும் 10-ம் அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதியதொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும்.நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். கடன், வட்டி தொல்லையில் இருந்துஇடைக்கால நிவாரணம் கிடைக்கும். எதிரிகள் தொல்லை குறையும்.
வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விபரீத ராஜ யோகத்தால் உயில் சொத்து, பணம், பங்குச் சந்தை ஆதாயம் போன்ற மறைமுக வகையில் பொருளாதாரம் கிடைக்கும். இல்லத்தரசிகளுக்கு இது ரொம்ப நல்ல வாரம். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.
10.7.2023 அன்று மாலை 6.59 முதல் 13.7.2023அன்று 1.58 காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உழைத்த கூலி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். யார் வம்பு தும்பும் வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பது நல்லது. ஆடி வெள்ளிக்கிழமை சப்த மாதர்களை வழிபட வேண்டும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
3.7.2023 முதல் 9.7.2023 வரை
தடைபட்ட பணிகள் துரிதமாகும் வாரம். அஷ்டமாதிபதி செவ்வாய்க்கு குரு, சனி சம்பந்தம் இருப்பதால் சட்டச் சிக்கல்கள் முழுமையாக விலகும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவு கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு பாதகம் விலகி சாதகம் நடக்கும். உத்தியோக ரீதியான மனக் கவலை அகலும்.
உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வீடு தேடி வரும்.வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். தாய், தந்தையாகும் பாக்கியம் உண்டாகும். வீடு, வாகன முயற்சி ஜெயமாகும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். தங்கம் வாங்குவீர்கள். வீண் அலைச்சல், தூக்கமின்மை விலகும். திருமணம் கை கூடும்.
மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கை கூடி வரும். மனைவியின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் கூடும்.கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து மோதல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
உங்கள் இஷ்ட,குல தெய்வத்தின் மேல் நம்பிக்கை வைத்து வழிபடுவது சிறப்பு.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
26.6.2023 முதல் 2.7.2023 வரை
லாபம் அதிகரிக்கும் வாரம். ராசி மற்றும் தொழில் ஸ்தான அதிபதி புதன் ஆட்சி. 2, 9-ம் அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம். என முக்கிய கிரகங்களின் நிலைப்பாடுகள் அனைத்தும் சாதகமாக உள்ளது. முயற்சி செய்யும் அனைத்து செயல்களுக்கும் பரிபூரண வெற்றி கிடைத்து மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் மேல் ஏற்பட்ட வெறுப்பு மாறும். வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களிடம் இருந்த வேற்றுமை மறையும். வெளிநாட்டு வேலை, தொழில் முயற்சி வெற்றி தரும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆயுள் பலப்படும். ஆரோக்கியக் குறைபாடு அகலும்.வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும்.
சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டு இருப்பவர்கள் நன்நடத்தை காரணமாக விடுவிக்கப்படுவார்கள். மாங்கல்ய தோஷத்தால் தடைபட்ட திருமணம் குருவருளாலும் பெரியோர்களின் நல்லாசி யாலும் இனிதே நடைபெறும். தடைக் கற்களை படிக்கற்க ளாக மாற்றிக் கொள்ள மகாவிஷ்ணுவை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
19.6.2023 முதல் 25.6.2023 வரை
தடை பட்ட அனைத்து சுப பலன்களும் தேடி வரும் வாரம். குருபகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் வருமானமும், குடும்ப சந்தோஷமும் அதிகரிக்கும். ராசி அதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வாழ்க்கையில் போராடி எப்படி வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனை அதிகரிக்கும்.
விரய ஸ்தான அதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்றவர்களின் விருப்பம் நிறைவேறும். மனைவி வழிச் சொத்தை மாற்றி எழுதுவதில் மாமனாரிடம் இருந்த எதிர்ப்புகள் அகலும்.
வெளிநாட்டில் இருப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வதில் இருந்த நடைமுறை சிக்கல்கள் நீங்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நிலவிய நெருக்கடிகள் விலகி நிம்மதியுடன் பணிபுரிய முடியும். திருமணத் தடை அகலும். புதிய மருமகன், மருமகள் வருவார்கள். சிலருக்கு பேரன் பேத்தி பிறப்பார்கள். புதிய சொத்துக்கள் சேரும்.வைத்தியம் பலன் தரும். பங்குச் சந்தையில் கவனம் தேவை. உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406