என் மலர்
கன்னி - வார பலன்கள்
கன்னி
இந்த வார ராசிப்பலன்
12.6.2023 முதல் 18.6.2023 வரை
புதிய அனுபவம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில் நிற்பது சிறப்பு. ஆனால் விரயாதிபதி சூரியன் தொழில் ஸ்தானத்தில் நிற்பதால் பிறரால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளது. 6-ம் அதிபதி சனி 6-ல் ஆட்சி பலம் பெற்று அஷ்டமாதிபதி செவ்வாயின் 8-ம் பார்வையில் இருப்பதால் சதா எதையாவது நினைத்து கவலைப்பட்டு நோயை வரவழைப்பீர்கள்.
நோய்க்கு வைத்தியம் செய்து கடன் உருவாகும். மனக் கட்டுப்பாடு குறையும். கடன் பிரச்சினை அதிகரிக்கலாம். இந்த காலகட்டத்தில் கடன் வாங்கவும் கூடாது கடன் கொடுக்கவும் கூடாது.கொடுத்த பணம் திரும்பி வராது போகுதல் போன்ற பிரச்சினை இருக்கும்.அதீத உடல் உழைப்பால், சோர்வு மிகுதியாகும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்டபிரச்சினைகள் தீரும். புதிய வீடு கட்டி குடியேறுவீர்கள். மறு திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும்.
13.6.2023 அன்று பகல் 1.32 முதல் 15.6.2023 இரவு 8.23 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் சோர்வால் சுறுசுறுப்பு குறையும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.நாளும் சுப பலன்களை அதிகரிக்க ஆஞ்சநேயரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
5.6.2023 முதல் 11.6.2023 வரை
பாக்கிய பலன்கள் மிளிரும் வாரம். ராசி அதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்திற்குச் செல்வதால் பாக்கிய ஸ்தானம் பலம் பெறுகிறது. இது வரை உங்கள் வாழ்வில் தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் உங்களை தேடிவரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும்.வாக்கு வன்மையால் நன்மை பெருகும்.
தொழில் முன்னேற்றம், நல்ல உத்தியோகம், வீடு, வாகனம், திருமணம், புத்திரப்பேறு, பொருளாதார முன்னேற்றம் என உங்கள் வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். போட்டி பொறாமை குறையும். கடன் பிரச்சினைகள் தீரும். அரசியல் வெற்றி, அதிகாரம், அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும்.
பிறருக்கு கட்டளையிடும் பெரிய பதவிகள் தேடி வரும். உயர் கல்வி பயில்பவர்கள் வெற்றி பெறுவார்கள். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். புனித யாத்திரைகள் செல்வீர்கள். முன்னோர்களின் நல்லாசிகள் உங்களை வழி நடத்தும். புதன்கிழமையில் துளசி அர்ச்சனை செய்து மகா விஷ்ணுவை வணங்க சுப பலன்கள் இரட்டிப்பாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
29.5.2023 முதல் 4.6.2023 வரை
மகிழ்ச்சியான வாரம். 2,9-ம் அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய வாழ்க்கைப்பாதையை நோக்கி முன்னேறுவீர்கள். பெண்களின் புத்தி சாதுர்யத்தால் குடும்பத்தில் அமைதி நிலவும்.ஒவ்வொரு விசயத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள். வங்கிபணி, ஆசிரியர், ஜோதிடம், புரோகிதம், அர்ச்சகர்கள், மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களின் தனித் திறமை மிளிரும்.
உபரி வருமானதால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.ராசி அதிபதி புதன் அஷ்டம ஸ்தானத்தில் 4,7-ம் அதிபதி குருவுடன் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணை அல்லது தாய் மூலம் அதிர்ஷ்ட பணம், பொருள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.வீடு, வாகனம், அலங்கார ஆடம்பர பொருட்கள், உயர் ரக ஆடைகள் நகைகள் என வாழ்க்கையை அனுபவிப்பீர்கள்.
இல்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் சேமிப்புகள் சுப விரயங்களாக மாறும். அரசியலில் சிலருக்குநல்லபொறுப்புகள் தேடி வரும்.சிலருக்கு மகான்களின் தரிசனம், குலதெய்வம், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.பவுர்ணமியன்று ஸ்ரீ லலிதா திரிசதி நாமாவளி படிக்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
22.5.2023 முதல் 28.5.2023 வரை
புதிய அரிய வாய்ப்புகள் பெறும் வாரம். ராசி அதிபதி புதன் அஷ்டம ஸ்தானத்தில் குரு, ராகுவுடன் சேர்க்கை பெறுவதால் புதிய அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எடுத்த காரியங்களை திறமையாக செய்து முடிப்பதால் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும்.
நெடுங்காலமாக விற்க முடியாமல் தடைபட்ட சொத்துக்களை இப்பொழுது விற்க முடியும். பட்டா இல்லாமல் இருந்த சொத்திற்கு பட்டா கிடைக்கும்.சிலருக்கு அரசின் இலவச வீட்டுமனை கிடைக்கும். பூர்வீகச் சொத்திற்காக தாத்தா, பாட்டி உறவில் ஏற்பட்ட விரிசல் சீராகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகள் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
செயற்கை முறை கருத்தரிப்பால் புத்திர பாக்கியம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். தம்பதிகளுக்கு வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். இடமாற்றம் உண்டாகலாம். புதன் கிழமை நெய் தீபம் ஏற்றி மகாவிஷ்ணுவை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
15.5.2023 முதல் 21.5.2023 வரை
விபரீத ராஜயோகமான வாரம்.2,9-ம் அதிபதி சுக்ரன் 10-ம்மிடமான தொழில் ஸ்தானம் செல்வதால் போதிய முதலீடு செய்து தொழிலை விரிவு செய்வீர்கள். வருமான பற்றாக்குறையை அகற்ற புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். சம்பளம், பதவி உயர்வு இடப்பெயர்ச்சிக்கு வாய்ப்புள்ளது.
கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நிறைவேறும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உள்ளது. 5,6-ம் அதிபதி சனிக்கு 3,8-ம் அதிபதி செவ்வாயின் பார்வை இருப்பதால் புதிய வீடு கட்டுவதற்கு வங்கிக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.
தம்பதிகள் பிணக்குகள் நீங்கும். மனைவி வழி உறவுகளால் மதிக்கப்படுவீர்கள். திருமணத் தடை அகலும். வைத்தியத்தால் ஆரோக்கியத் தொல்லை சீராகும். 17.5.2023 அன்று காலை 7.38 முதல் 19.5.2023 பகல் 1.35 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் இனம் புரியாத கவலை அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. அமாவா சையன்று மகாவிஷ்ணுவை வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
8.5.2023 முதல் 14.5.2023 வரை
நன்மையும், தீமையுமற்ற வாரம். ராசி அதிபதி புதன் அஷ்டம ஸ்தானத்தில் விரயஅதிபதி சூரியன் மற்றும் ராகுவுடன் சேர்க்கை பெறுவதால் மன தடுமாற்றம் அதிகரிக்கும். இது வரையில் உண்டான வெற்றிகள் எல்லாம் தடைபட்டது போன்ற உணர்வு மேம்படும்.பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்று வாங்கலாம். தேவையற்ற அலைச் சல்களைத் தவிர்க்கவும்.
பிள்ளைகளின் உணர்வு களை புரிந்து செயல்படுவீர்கள். குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். பிரார்த்தனைகளின் மூலம் மன நிம்மதி ஏற்படும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
நெருங்கிய சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். ஆரோக்கியத்தை காக்க யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சங்கடஹர சதுர்த்தியன்று கொழுக்கட்டை படைத்து விநாயகரை வழிபட்டால் சங்கடங்கள் விலகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
1.5.2023 முதல் 7.5.2023 வரை
கடமைகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் வக்ரம் பெற்று விரய அதிபதி சூரியனுடன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை, தைரியம் குறையும். வீண் செலவால் கடன் சுமை கூடும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதப்படும். பண விசயத்தில் யாரையும் நம்பக் கூடாது. அஷ்டம ஸ்தானம் வலுப்பெறுவதால் பெரிய தொழில் முயற்சியை தவிர்க்கவும்.
இருப்பதை விட்டுப் பறப்பதை பிடிக்க முயலக்கூடாது. முக்கிய வழக்குகள் பேச்சு வார்த்தைகளை ஒத்தி வைக்கவும். வெகு சிலருக்கு விபரீத ராஜயோகமாக உயில் சொத்து, அதிர்ஷ்ட பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தாய், தந்தை, குடும்ப உறவுகளின் ஆசைகளை, தேவை களை, விருப்பங்களை நிறைவு செய்து உங்கள் கடமையை பூர்த்தி செய்வீர்கள். வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றிதரும். எதிர் பாலினத்தவரிடம் விலகி இருப்பது நல்லது.
அலைச்சலும், அசதியுமான உள்ளுர், வெளியூர், வெளிநாட்டு தொழில் பயணங்கள் உண்டாகும்.மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வமும், அக்கறையும் ஏற்படும். பெண்கள் வீண் செலவை குறைத்து சேமிப்பை உயர்த்த வேண்டும். பவுர்ணமி விரதமிருந்து மகா விஷ்ணுவை வழிபட சிறப்பான பலன் உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
24.4.2023 முதல் 30.4.2023 வரை
மறைமுக பிரச்சினைகள் ஏற்படும் வாரம். ராசிக்கு 8-ம்மிடத்தில் அதிக கிரக சேர்க்கை இருப்பதால் மறைவு ஸ்தானம் வலிமை அடைகிறது. முன் கோபத்தில் பகைமை உருவாகும்.இது வரை நீங்கள் கட்டி காப்பாற்றிய வீரம், விவேகம் மட்டுப்படும். பேசும் வார்த்தையில் கவனமும் நிதானமும் தேவை. வழக்குகள் ஒத்திப்போகும். திருமண முயற்சிகள் காலதாமதமாகும். தம்பதிகளிடம் மன பேதம் ஏற்படும்.
நண்பர்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது. தொழில் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். பணம், நகை, விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்திருக்கவும். பணத்தை யாருக்கும் கடனாக தரவும், வாங்கவும் வேண்டாம்.
ஜாமீன் கையெழுத்து போட்டு கடனாக பெற்றுத்தரும் பணம் திரும்ப வர வாய்ப்பு இல்லை. கடுமையாக உழைக்க நேரும். முக்கிய பணிகள் தேங்கும். தொழில் நிமித்தமான அலைச்சலான பயணங்கள் அதிகரிக்கும். சுய வைத்தியத்தை தவிர்க்க வேண்டும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட பண வரவு உண்டாகலாம். சீரடி ஸ்ரீ சாய்பாபாவை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
17.4.2023 முதல் 23.4.2023 வரை
விழிப்புடன் செயல்பட வேண்டிய காலம். 4,7ம் அதிபதி குரு அஷ்டம ஸ்தானம் செல்வதால் பழைய கூட்டாளிகள் விலகலாம். அல்லது பங்காளிகளுடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கலாம். புதிய தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. தம்பதிகள் தொழில் உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம்.என்றைக்கோ வாங்கிப் போட்ட சொத்தை அவசிய தேவைக்காக விற்கலாம்.
ராசிக்கு குருப் பார்வை இல்லை என்பதால் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எதுவும் செய்யாமல் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.சில பெண்களுக்கு வரன் அமைவதில் தடைகள் உருவாகலாம். பிள்ளைகளுக்காக தங்கம் போன்ற சுப மங்களப் பொருட்கள் வாங்குவீர்கள். மருமகள், மருமகன் பூர்வீகச் சொத்து பிரிவினையில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மீண்டும் கல்வியை தொடரும் வாய்ப்பு உண்டாகும்.சில பெண்கள் கருத்தரிப்பார்கள். ஆரோக்கிய குறைபாடு வைத்தியத்தில் சீராகும்.
19.4.2023 இரவு 11.53 மணி முதல் 22.4.2023 அதிகாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலையில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு கூடும். கிரகணத்தன்று மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
வார ராசிப்பலன்
10.4.2023 முதல் 16.4.2023 வரை
எண்ணங்களும் திட்டங்களும் வெற்றியடையும் வாரம். 2,9-ம் அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் தனித்த அடையாளத்துடன் பிறருக்கு முன் மாதிரியாக செயல்படுவீர்கள். வாக்கு வன்மை பெருகும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் சமயோசித புத்தியால் சீராகும்.
புதிய தொழில் வாய்ப்புகள், தொழில் முயற்சிகள் மன நிறைவு தரும். நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் பண உதவி கிடைக்கும். வார இறுதியில் விரயாதிபதி சூரியன் உச்சம் பெற்று ராசி அதிபதி புதன் மற்றும் ராகுவுடன் சேர்க்கை பெறுவதால் கடன் பிரச்சினை அதிகரிக்கலாம். அடுத்தவர்களுக்காக கடன் படுதல், கொடுத்த பணம் திரும்பி வராது போகுதல் போன்ற பிரச்சினை ஏற்படலாம். முக்கியமான செயல்களைத் தெளிவாக செய்வதன் மூலம் வாழ்வாதாரம் உயரும்.
இன்னும் சில நாட்களே ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் திருமண முயற்சியை துரிதப்படுத்த வேண்டும். வாழ்க்கை துணையின் வேலை நிரந்தரமாகும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான உடல் உபாதைகள் சீராகும். தினமும் மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபட வேண்டும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
3.4.2023 முதல் 9.4.2023 வரை
நன்மைகள் நடக்கும் வாரம். ராசி, பத்தாம் அதிபதி புதன் மூன்று, எட்டாம் அதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனை பெறுவதால் புத்திக் கூர்மை பளிச்சிடும். உடலும், மனமும் பொழிவு பெறும். தடைபட்ட மகிழ்ச்சியும் சந்தோஷமும், நம்பிக்கையும் துளிர் விடும். எதிர்காலம் பற்றிய பயம் விலகும் பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கள் அகலும்.
உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் நிலவிய மனக்கசப்பு மறைந்து ஒத்துழைப்பு, ஆதரவு உண்டாகும். இடம் வாங்கி வீடு கட்டுவீர்கள். வழக்குகளில் வெற்றி ஏற்படும். பருவ வயதினருக்கு திருமண யோகம் உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கர்மம் செய்ய புத்திரன் கிடைப்பான்.
சிலருக்கு தத்து புத்திர யோகம் உண்டாகும். சிலருக்கு செயற்கை கருத்தரிப்பு மூலம் கரு உருவாகும். உடன் பணிபுரிந்த வர்களுடன் உண்டான கருத்து வேறுபாடு அகன்று நட்பு நிலை நீடிக்கும். தொழிலில் ஏற்பட்ட தளர்வுகள் அகலும். . குரு எட்டாமிடத்தை நோக்கி நகர்வதால் முக்கிய பணிகளை விரைந்து முடிக்கவும். படுக்கையில் இருப்பவர்களுக்கு கூட நோய் தாக்கம் குறையும். பங்குனி உத்திரத்தன்று சிவனை வில்வ மாலை சாற்றி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கன்னி
இந்த வார ராசிப்பலன்
27.3.2023 முதல் 2.4.2023 வரை
லாபகரமான வாரம். 2,9-ம் அதிபதி சுக்ரன் ராகுவுடன் அஷ்டம ஸ்தானத்தில் நின்று தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் தாய், தந்தையின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களை மகிழ்விக்கும்.குடும்பத்தினரின் தேவைகளை நிறைவு செய்வீர்கள். சொந்த வீடு,வாகன கனவு நிறைவேறும். ஆடம்பர பொருட்கள், ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த மன உளைச்சல் நீங்கும். வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தரமான நிம்மதியான வேலை கிடைக்கும்.
அரசு உத்தியோக வாய்ப்பு உள்ளது. பேச்சாற்றலால் தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பீர்கள். மறைமுக லாபங்கள், வருமானங்கள் அதிகரிக்கும். வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பீர்கள்.வேற்று மொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினரால் உபரி லாபம் கிடைக்கும்.
சுக்ரன் ராகு சேர்க்கை தேவையற்ற பேச்சுக்கள், வாக்கு வாதத்தால் குடும்ப உறவுகளிடம் கசப்பை ஏற்படுத்தும் என்பதால் வாக்கில் நிதானம் தேவை. குரு பலத்தால் திருமணம் சிறப்பாக நடக்கும். முக்கிய முடிவுகளை குடும்பப் பெரியோர்களின் ஆலோசனை கேட்டு எடுக்கவும். தினமும் கருடாழ்வாரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406