search icon
என் மலர்tooltip icon

    கன்னி - வார பலன்கள்

    கன்னி

    இந்த வார ராசிப்பலன்

    20.3.2023 முதல் 26.3.2023 வரை

    தொழிலில் மேன்மை உண்டாகும் வாரம். ராசி மற்றும் பத்தாம் அதிபதி புதன் ராசியைப் பார்ப்பதால் தொழில் வளர்ச்சியால் பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். அதிக நேரம் உழைத்து வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். வேலையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உள்ளது.

    அரசாங்க உதவிகள் தடையின்றி கிடைக்கும். வீடு கட்டும் பணி விறுவிறுப்பாக நடை பெறும். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்ப உறவுகளின் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும். திருமண முயற்சி கைகூடும். குரு அஷ்டம ஸ்தானத்தை நோக்கி நகர்வதால் முக்கியப் பணிகளை விரைந்து முடிப்பது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.

    23.3.2023 மதியம் 2.08 முதல் 25.3.2023 இரவு 7.25 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் தொடர்பான தடாலடியான முக்கிய முடிவுகளை தவிர்க்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களின் நட்பை தவிர்க்க வேண்டும். புதன்கிழமை சயன கோலத்தில் உள்ள மகாவிஷ்ணு மற்றும் தாயாரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    இந்த வார ராசிப்பலன்

    13.3.2023 முதல் 19.3.2023வரை

    கன்னி ராசிக்கு ராசி மற்றும் தொழில் ஸ்தான அதிபதியான புதன் நீச பங்க ராஜயோகம் பெறுகிறது. புதன் பலம் பெறுவதால் தொழில் தந்திரம் மிகும். மதி நுட்பத்தால் தொழிலில் சாதனை படைப்பீர்கள்.பல தொழில் துறை பற்றிய அறிவு உண்டாகும். கற்ற கல்விக்கு தகுந்த வேலை உண்டு. ஜாதகர் பார்க்கும் தொழில் மூலம் புகழ், அந்தஸ்து, கவுரவம் கிடைக்கும். தடைபட்ட வேலை மாற்றம், இடப்பெயர்ச்சி வெகு விரைவில் கிடைத்துவிடும்.

    மாணவர்கள் பல அறிய புதிய விசயங்களை கண்டுபிடிப்பார்கள். உடல் நிலை யில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். புதன் விரயாதி பதி சூரியனுடன் சேர்வதால் சிலருக்கு தாய்மா மனால் தாய் வழிச் சொத்து விரயமாகும். சிலர் கூட்டுக் குடும்பத்தில் இருந்து விலகி தனிக்கு டித்தனம் செல்வார்கள். சிலர் கொடுக்கல்-வாங்கல், வரவு செலவில் ஏமாற்றம் அல்லது இழப்பை சந்திக்க லாம். திருமணத் தடை அகலும்.

    கன்னி ராசியினர் ஏழாம் இடத்தை விட்டு குரு அகலும் முன்பு ஏப்ரலுக் குள் திருமணத்தை உறுதி செய்வது நல்லது. நல்ல மக்கட்பேறும், விசுவாசமான வேலையாட்களும் கிடைப்பார்கள். தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் நிலையான முன்னேற்றம் உண்டாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    இந்த வார ராசிப்பலன்

    6.3.2023 முதல் 12.3.2023 வரை

    சிறப்பான பலன்கள் தேடி வரும் வாரம். சுக ஸ்தான அதிபதி மற்றும் களத்திர ஸ்தான அதிபதி குரு உச்சம் பெற்ற தனம் வாக்கு குடும்ப ஸ்தானாதிபதி மற்றும் பாக்கிய அதிபதி சுக்ரனுடன் இணைந்து பலம் பெறுவதால் சுகபோக வாழ்க்கை உண்டாகும். தாய், தந்தை வழி உறவுகளின் அன்பும், அரவணைப்பும் கூடும். பதினாறு வகைச் செல்வங்களும் நிரம்பும். ஆடம்பரமான சொத்துக்கள் சேரும்.

    விவசாயம், ரியல் எஸ்டேட், கால்நடை வளர்ப்பவர்களுக்கு சிறிய முயற்சியில் அதிக வருமானம் கிடைக்கும். உழைக்காத வருமானம் உண்டு.பயன்படுத்த முடியாமல் கிடந்த முன்னோர்களின் சொத்துகளால் ஆதாயம் உண்டாகும். தடைபட்ட வாடகை வருமானம் வரத்துவங்கும் . அரச பதவி, அரசு உத்தியோகம், அரசு வகை ஆதரவு உண்டு.புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய் பெருகும். சொத்து இல்லாதவர்களுக்கு புதிய வீடு, வாகன யோகம் உண்டாகும்.

    கூட்டுக் குடும்பத்தில் நிலவிய சலசலப்பு குறைந்து கலகலப்பு நிலவும்.சிலருக்கு மறுமணம் நடக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களின் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப பேசி காரியம் சாதிப்பீர்கள். மாசிமகத்தன்று பால் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    இந்த வார ராசிப்பலன்

    27.2.2023 முதல் 5.3.2023 வரை

    கடனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வாரம். ராசியை 4,7-ம் அதிபதி குரு, மற்றும் உச்சம் பெற்ற 2,9-ம் அதிபதி சுக்ரன் பார்ப்பதால் சுணங்கிக் கிடந்த காரியங்களில் இருந்து வந்த தடை தாமதம் நீங்கி எதிலும் வெற்றி உண்டாகும். குலத்தொழில், கூட்டுத் தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள்.

    1,10-ம் அதிபதி புதன் 5, 6-ம் அதிபதி சனி மற்றும் விரய அதிபதி சூரியனுடன் ராசிக்கு ஆறாமிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் பொறுப்புகள் அதிகரிக்கும்.வேலையில்லா மல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு அரசு பணியில் அமர்கின்ற வாய்ப்பு உண்டாகும்.பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். இட மாற்றம் ஏற்படும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும்.

    வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு கடன் அல்லது பொருள் இழப்பு அல்லது சிறு நோய் தாக்கம் உண்டாகலாம். வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள். அனைத்தும் வெற்றி பெறும் நல்ல காலமாக இந்த வாரம் அமையும். தினமும் சிவபுராணம் படிக்க காரிய வெற்றி உண்டாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    இந்த வார ராசிப்பலன்

    20.2.2023 முதல் 26.2.2023 வரை

    புண்ணியபலன்கள் அதிகரிக்கும் வாரம். ராசி மற்றும் 10-ம் அதிபதி புதன் 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்வதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமை பெறுகிறது. பொருளாதார நிலைமை மேம்படும். கொடுக்கும் வாக்குறுதி பலிக்கும். அரசியல்வாதிகளுக்கு பெருமை மிக்க உயர்பதவியில் அமரும் பாக்கியமுண்டு.

    தொழிலில் புகழ்மிக்க நிகழ்வு நடக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனச்சங்கடம் அகலும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடப் பெயர்ச்சி பதவி, ஊதிய உயர்வுடன் கிடைக்கும். சிலருக்கு பூர்வீகம் சென்று வரும் வாய்ப்பு உள்ளது. காதல் திருமண முயற்சி சித்திக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். கடன் பிரச்சினை யில் இருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கப் பெறுவீர்கள்.

    24.2.2023 அன்று காலை 3.43 முதல் 26.2.2023 காலை 10.15 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கை, கால், மூட்டு வலியால் அசதி உண்டாகும். முக்கிய பேச்சு வார்த்தைகளை ஒத்தி வைக்கவும். அமாவாசை யன்று சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    இந்த வார ராசிப்பலன்

    13.2.2023 முதல் 19.2.2023 வரை

    நிறைந்த மனதோடு நிம்மதியாக செயல்படும் வாரம். 2,9-ம் அதிபதி சுக்ரன் ராசிக்கு ஏழில் உச்சம் பெறுவதால் பாக்கிய அதிபதி பலம் பெறுகிறார். அதிர்ஷ்டமும் கவுரவப் பதவிகளும் தேடி வரும். திடீர் அதிர்ஷ்டத்தால் ஏற்றம் உண்டாகும். ஆடம்பரச் செலவை குறைத்து சேமிப்பை அதிகரிக்க திட்டமி டுவீர்கள்.

    பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். முன்னோர்களின் நல்லாசியும், ஆஸ்தியும் கிடைக்கும். ஆயுள் ஆரோக்கியம் முன்னேற்றம் தரும். தடைபட்ட அனைத்து முயற்சிகளும் துரிதமாகும். தொழிலை விரிவுபடுத்த தேவையான பொருளாதார உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும்.உயர் கல்வி முயற்சி சித்திக்கும். நல்ல நம்பிக்கையான வேலையாட்கள் கிடைப்பார்கள். சிலருக்கு அந்தஸ்தான சொகுசு கார் வாங்கும் அமைப்பு உண்டாகும்.

    வாழ்க்கைத் துணைக்கு கவுரவமான வேலை கிடைக்கும். ஆன்மீகச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்புகள் உள்ளது. திருமண முயற்சிகள் வெற்றி தரும். எதிர் பாலினத்தவரால் ஏற்பட்ட பிரச்சினைகள் சீராகும். மேலும் நன்மையை அதிக ரிக்க சிவராத்திரியன்று சிவனுக்கு கரும்புச்சாறு அபிசேகம் செய்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    இந்த வார ராசிப்பலன்

    நிம்மதியான வாரம். ராசியை குரு பார்ப்பதால் உங்களுடைய பணிகளை விரைவாகவும் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். மிக மிக சிறப்பான நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொட்டது எல்லாம் துலங்கும். ஜனவசியம் ஏற்படும். தெளிவான மன நிலையோடு செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தன வரவு மகழ்ச்சி தரும். ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்வதால் குல தெய்வ அனுகிரகம் உண்டாகும்.

    பிள்ளைகளால் ஏற்பட்ட மனக் கவலை அகலும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு சிறு பதவி உயர்வு கிடைக்கும். வீடு, நிலம், தோட்டம், வாகன யோகமும் உண்டாகும். சிலர் வீட்டை புதுப்பிப்பார்கள். தாய் வழிச் சொத்து, உயில் ஆதாயம் உண்டு. எதிரிகளின் பலம் குறையும். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோக நற்பலன் தரும்.பிள்ளைகளின் கடமைகளை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம், வாங்கும் யோகம் உண்டாகும். திருமணத்திற்கான வரன்கள் தேடி வரும். லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    இந்த வார ராசிப்பலன்

    தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் வக்ரம் பெற்று விரயாதிபதி சூரியனுடன் சுக ஸ்தானத்தில் செவ்வாயின் எட்டாம் பார்வையில் இருப்பதால் விரக்தி மனப்பான்மை உருவாகும். ஆனால் குருவின் பார்வை பட்ட இடங்கள் பல மாற்றத்தையும் ஏற்றத்தையும் தரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. எந்தக் கை உங்களை விட்டாலும் நம்பிக்கையை விடாமல் இருப்பது முக்கியம். புதிய முதலீடுகளை தவிர்த்தல் நலம். பார்க்கும் வேலையை மாற்றக்கூடாது.

    சிலருக்கு அசையாச் சொத்து, பிள்ளைகளின் திருமணம், கல்வி போன்ற சுப விரயம் உண்டாகும். வாழ்க்கை துணையால் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டு.புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் சாதகமான பலன் உண்டாகும். 2.1 .2023 இரவு 8.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பதுடன் ஓய்வு நேரம் குறையும். அலைச்சல் மிகுந்த பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. ஏகாதசியன்று துளசி மாலை அணிவித்து பெருமாளை வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    இந்த வார ராசிப்பலன்

    23.1.2023 முதல் 29.1.2023 வரை

    தடைகள் தகரும் வாரம். ராசி அதிபதி புதன் ராசிக்கு நான்கில் நின்று பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தை தன் வீட்டைத்தானே பார்ப்பதால் தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணிபுரிபவர்களின் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாகவே வந்து சேரும். வெளிநாடு சென்றவர்கள் பூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் சிலருக்கு அரசியல் ஆசை துளிர் விடும். திருமணத் தடை அகலும்.பார்த்துச் சென்ற வரனிடமிருந்து நல்ல தகவல் கிடைக்கும். கன்னி ராசியினர் தாத்தா பாட்டியாகும் யோகம் உள்ளது.

    சில பிள்ளைகள் கல்விக்காக விடுதிக்கு செல்வார்கள். பெண்களுக்கு தந்தையின் பூர்வீக வீடு, பங்களா கிடைக்கும். தம்பதிகளிடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கும். சிலருக்கு கண், காது சார்ந்த பிரச்சினைக்கு மருத்துவம் செய்ய நேரும். 27.1.2023 மாலை 6.35க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அனைத்து செயலிலும் நிதானம் மற்றும் பொறுமை மிக முக்கியம். நேர் மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். கருமாரியம்மன் வழிபாடு மேலும் சிறப்பை தரும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    இந்த வார ராசிப்பலன்

    16.1.2023 முதல் 22.1.2023 வரை

    லட்சியங்களும் கனவுகளும் நிறை வேறும் வாரம். 5,6-ம் அதிபதி சனி 6ம்மிடம் சென்று 2,9-ம் அதிபதி சுக்ரனுடன் சேர்க்கை பெறுவதால் சொந்தங்களாலும், சொத்துக்களாலும் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். விலகிச் சென்ற உறவுகள் நட்பு பாராட்டுவார்கள். உறவினர் பகை அகலும். தைரியம், தெம்பு அதிகமாகும்.

    பூர்வீகம் சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். உறவினர் பகை அகலும். தற்காலிப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரமாகும். சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. படித்து முடித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.வங்கிக் கடன் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும்.

    கடன் பிரச்சினைகள் தீரும். பூர்வீகச் சொத்தை கொடுத்து விட்டு புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பொன், பொருள் வாங்கும் பாக்கியம் உண்டாகும். கலைத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தம்பதிகளின் இல்லறம் நல்லறமாகும். திருமணத் தடை அகலும்.புத்திர பிராப்தம் உண்டாகும். உடல் நிலை தேறும். திருப்தி ஏழுமலையானை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    இந்த வார ராசிப்பலன்

    9.1.2023 முதல் 15.1.2023 வரை

    உற்சாகமான வாரம். 3,8-ம் அதிபதி செவ்வாய் வக்ர நிவர்த்தி பெற்றதால் இதுவரை சந்தித்த பிரச்சினைகள் பனிபோல் விலகும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.சகோதர, சகோதரிகள் உங்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.புதிய முயற்சிகளில் முழுமையான வெற்றிகள் உண்டாகும். தொழிலில் நிலவிய சங்கடங்கள் விலகும். வருமானம் அதிகரிக்கும். என்றோ வாங்கிய பங்குகள் இப்பொ ழுது நல்ல லாபத்தை பெற்றுத்தரும். 

    ஊழியர்களுக்கு உயர் அதிகரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளின் விசாரணை தாமதமாகும்.  

    வாழ்க்கைத் துணைக்கு தாயின் பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். சுபச் செலவிற்காக கடன் பெற நேரலாம். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் ஏற்பட்ட மன சங்கடம் தீரும். பணியில் கவுரவம் நிலைத்திருக்கும். திருமண முயற்சிகள் சித்திக்கும். சிலர் எதிர்பாராத இடமாற்றத்தால் குடும்பத்துடன் இணைவார்கள்.

    புதன் கிழமை சக்கரத்தாழ்வாரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    கன்னி

    இந்த வார ராசிப்பலன்

    2.1.2023 முதல் 8.1.2023 வரை

    தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் வக்ரம் பெற்று விரயாதிபதி சூரியனுடன் சுக ஸ்தானத்தில் செவ்வாயின் எட்டாம் பார்வையில் இருப்பதால் விரக்தி மனப்பான்மை உருவாகும். ஆனால் குருவின் பார்வை பட்ட இடங்கள் பல மாற்றத்தையும் ஏற்றத்தையும் தரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

    எந்தக் கை உங்களை விட்டாலும் நம்பிக்கையை விடாமல் இருப்பது முக்கியம். புதிய முதலீடுகளை தவிர்த்தல் நலம். பார்க்கும் வேலையை மாற்றக்கூடாது. சிலருக்கு அசையாச் சொத்து, பிள்ளைகளின் திருமணம், கல்வி போன்ற சுப விரயம் உண்டாகும். வாழ்க்கை துணை யால் நல்ல மாற்ற மும் ஏற்றமும் உண்டு.புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் சாதக மான பலன் உண்டாகும்.

    2.1 .2023 இரவு 8.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடு தலாக இருப்பதுடன் ஓய்வு நேரம் குறையும். அலைச்சல் மிகுந்த பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. ஏகாதசியன்று துளசி மாலை அணிவித்து பெருமாளை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×