என் மலர்
ஆட்டோமொபைல்
- எட்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டி பெற முடியும்.
- ரூ. 10 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது 450 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளன. இந்த சலுகைகளின் படி ஏத்தர் 450X ப்ரோ பேக் வாங்கும் போது ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் எட்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டி பெற முடியும்.
இத்துடன் ஒரு வருடத்திற்கு ஏத்தர் சார்ஜிங் க்ரிட் பயன்படுத்தும் வசதியை பெறலாம். தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 10 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஏத்தர் 450 அபெக்ஸ் மாடலுக்கும் இந்த சலுகைகள் பொருந்தும்.
இந்திய சந்தையில் ஏத்தர் நிறுவனம் தற்போது- 450S, 450X, 450 அபெக்ஸ் மற்றும் ரிஸ்டா என நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில் ரிஸ்டா மாடலை ஏத்தர் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலான டிசைன் கொண்டுள்ளது.
- கார் விற்பனை சரிய காரணங்களாக கூறப்படுகின்றன.
- விற்பனை மையங்கள் நிதி சார்ந்த சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.
இந்திய ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு நாட்டில் அதிகரித்து வரும் விற்பனையாகாத பயணிகள் வாகன எண்ணிக்கை குறித்து கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட தகவல்களின் படி இந்தியாவில் சுமார் 7.9 லட்சம் கார்கள் விற்பனையாகாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது இந்தியாவில் உள்ள விற்பனையாகாத கார்களின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ. 79 ஆயிரம் கோடி ஆகும். நாட்டில் விற்பனையாகாத கார் யூனிட்களால் விற்பனை மையங்கள் நிதி சார்ந்த சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. கார் உற்பத்தியாளர்கள் அதிக யூனிட்களை உற்பத்தி செய்தது, நுகர்வோர் கார் வாங்க ஆர்வம் செலுத்தாதது மற்றும் கடுமையான கனமழை உள்ளிட்டவை கார் விற்பனை சரிய காரணங்களாக கூறப்படுகின்றன.
கார்கள் விற்பனையின்றி தேக்கம் அடைவதால், பல்வேறு விற்பனை மையங்களில் நிதி பற்றாக்குறை சூழல் உருவாகி இருப்பதாக ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சி.எஸ். விக்னேஷ்வர் தெரிவித்தார்.
- புதிய அலாய் வீல் டிசைன் வழங்கப்படுகிறது.
- இந்த கார் இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
நிசான் நிறுவனத்தின் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை காரை வாங்கும் முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும்.
புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆறு வேரியண்ட்கள், இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. வெளிப்புறம் இந்த கார் புதிய தோற்றம் கொண்டுள்ளது. இதே போன்று புதிய அலாய் வீல் டிசைன் வழங்கப்படுகிறது. இதன் டெயில் லேம்ப் தோற்றம் மாற்றப்படவில்லை.
கேபின் பகுதியிலும் பெருமளவு மாற்றங்கள் இல்லை. புதிய ஸ்டீரிங் வீல், புதிய நிறங்கள் வழங்கப்படுகிறது. இந்த காரில் 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் போன் மிரரிங் வசதி, ஓட்டுநர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
இந்த கார் 1.0 லிட்டர் NA பெட்ரோல் அல்லது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 71 ஹெச்பி பவர், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இதன் டர்போ பெட்ரோல் எஞ்சின் 99 ஹெச்பி பவர், 160 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 5 ஸ்பீடு AMT, 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT யூனிட் வழங்கப்படுகிறது.
- விலை குறைப்பு ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படும்.
- இந்த ஸ்கூட்டரின் உண்மை விலை ரூ. 70 ஆயிரம் ஆகும்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது S1 X எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு சிறப்பு விலை குறைப்பு அறிவித்து இருக்கிறது. இந்த விலை குறைப்பு ஸ்டாக் இருக்கும் வரை மட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை குறைப்பின் படி ஓலா S1 X மாடல் ரூ. 49 ஆயிரத்து 999, எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். விலை குறைப்பு ஓலா S1 X 2 கிலோவாட் ஹவர் மாடலுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 70 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
ஸ்டாக் கிளியரன்ஸ் விற்பனையின் கீழ் இந்த ஸ்கூட்டருக்கு ரூ. 20 ஆயிரம் விலை குறைப்பு வழங்கப்படுகிறது. இந்த மாடல் முழு சார்ஜ் செய்தால் 95 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும் திறன் கொண்டுள்ளது. மேலும் மணிக்கு அதிகபட்சம் 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
- முந்தைய வெர்ஷனில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
- புதிய மேக்னைட் மாடல் இருவித எஞ்சின் ஆப்ஷன்களை கொண்டிருக்கும்.
நிசான் இந்தியா நிறுவனம் இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் தனது அதிகம் விற்பனையாகும் மேக்னைட் மாடலின் புது வெர்ஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது. நாளை மறுநாள் (அக்டோபர் 4) புதிய மேக்னைட் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், வினியோகம் அக்டோபர் 5 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
இந்த நிலையில், முற்றிலும் புதிய நிசான் மேக்னைட் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். இதோடு நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான டீசர்களும் வெளியிடப்பட்டு உள்ளன.
டீசர்களின் படி மேக்னைட் மாடலின் பெரும்பாலான அம்சங்கள் அதன் முந்தைய வெர்ஷனில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது.
இதுதவிர, புஷ் ஸ்டார்ட், ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங்கில் கார் அம்சங்களை இயக்கும் கண்ட்ரோல்கள், பின்புற ஏ.சி. வென்ட்கள், மத்தியில் கைவைத்துக் கொள்ளும் ஆர்ம்-ரெஸ்ட் போன்ற வசதிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
பவர்டிரெயினை பொருத்தவரை புதிய மேக்னைட் மாடலிலும் 1.0 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் CVT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
- விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் ஒன்றாக இருக்கிறது.
- பி.எம்.டபிள்யூ. எலெக்ட்ரிக் 2-வீலர் 3.92 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டுள்ளது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் தனது CE 02 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விலை ரூ. 4.5 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இந்திய சந்தையில் கிடைக்கும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் ஒன்றாக இது இருக்கிறது.
இதுதவிர, பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கும் இரண்டாவது ஆல்-எலெக்ட்ரிக் இருசக்கர வாகனம் இது ஆகும். முன்னதாக பி.எம்.டபிள்யூ. CE 04 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் பி.எம்.டபிள்யூ. CE 02 மாடல் ஓசூரில் உள்ள டி.வி.எஸ். ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் 11 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 3.92 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டுள்ளது.
இந்த ஸ்கூட்டரில் உள்ள மோட்டார் 11/15 கிலோவாட்/ஹெச்பி பவர் மற்றும் 55 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த வாகனம் முழு சார்ஜ் செய்தால் 95 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
- புதிய டிவிஎஸ் ரேடியான் பைக் ஏழுவித நிறங்களில் கிடைக்கிறது.
- இந்த பைக் 109.77சிசி ஏர்-கூல்டு எஞ்சின் கொண்டுள்ளது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ரேடியான் மோட்டார்சைக்கிளின் ஆல்-பிளாக் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது ரேடியான் மாடலின் என்ட்ரி லெவல் மாடல் ஆகும். அந்த வகையில், இந்த வேரியண்ட் விலை ரூ. 59 ஆயிரத்து 880, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், டிவிஎஸ் ரேடியான் மாடல் தற்போது மூன்று (பேஸ், டிஜி டிரம் மற்றும் டிஜி டிஸ்க்) வெவ்வேறு வேரியண்ட்கள் மற்றும் ஏழுவித நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறம் கொண்ட வேரியண்ட் கிளாஸ் பிளாக் ஃபினிஷ், வைட் இன்சர்ட்களை கொண்டிருக்கிறது.
இத்துடன் டிவிஎஸ் மற்றும் ரேடியான் பேட்ஜிங் கான்டிராஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் ஒட்டுமொத்தோற்றம் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் எஞ்சின் கவர் மட்டும் பிரான்ஸிஷ் கோல்டு நிறம் கொண்டிருக்கிறது.
மற்ற ரேடியான் மாடல்களில் உள்ளதை போன்ற 109.77சிசி ஏர்-கூல்டு எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 8 ஹெச்பி பவர், 9.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் டுவின் ஷாக் அப்சார்பர் வழங்கப்படுகிறது.
- சிட்ரோயன் C3 ஆட்டோமேடிக் அம்சங்கள் அதன் மேனுவல் வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது.
- இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.
சிட்ரோயன் நிறுவனம் தனது சிட்ரோயன் C3 ஆட்டோமேடிக் வெர்ஷனின் விலை விவரங்களை அறிவித்து விட்டது. டாப் என்ட் ஷைன் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும் சிட்ரோயன் C3 ஆட்டோமேடிக் மாடலின் விலை ரூ. 10 லட்சம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 10 லட்சத்து 27 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை இந்த காரிலும் அதன் மேனுவல் வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த வெர்ஷனில் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட விங் மிரர்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.2 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன், ஆறு ஏர் பேக் வழங்கப்படுகிறது.
சிட்ரோயன் C3 மாடலிலும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே எஞ்சின் சிட்ரோயன் பசால்ட் மற்றும் C3 ஏர்கிராஸ் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 110 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
விலை விவரங்கள்:
சிட்ரோயன் C3 டர்போ ஆட்டோமேடிக் ஷைன் ரூ. 10 லட்சம்
சிட்ரோயன் C3 டர்போ ஆட்டோமேடிக் ஷைன் வைப் பேக் ரூ. 10.12 லட்சம்
சிட்ரோயன் C3 டர்போ ஆட்டோமேடிக் ஷைன் டூயல் டோன் வைப் பேக் ரூ. 10.27 லட்சம்
- மேம்பட்ட எஸ்யுவி மாடல் கலினன் சீரிஸ் II என அழைக்கப்படுகிறது.
- இந்த காரில் 6.75 லிட்டர் டுவின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி12 எஞ்சின் வழங்கப்படுகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கலினன் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய கலினன் பேஸ்லிப்ட் மாடலின் விலை ரூ. 10 கோடியே 50 லட்சம் என துவங்குகிறது. இதே காரின் பிளாக் பேட்ஜ் வெர்ஷனின் விலை ரூ. 12 கோடியே 25 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய மேம்பட்ட எஸ்யுவி மாடல் கலினன் சீரிஸ் II என அழைக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு மே மாதத்தில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரில் புதிய ஸ்டைலிங், ரிவைஸ்டு இன்டீரியர் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.
கலினன் சீரிஸ் II மாடலில் மெல்லிய ஹெட்லேம்ப்கள், L வடிவ எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள், ரிடிசைன் செய்யப்பட்ட கிரில் வழங்கப்படுகிறது. காரின் பின்புறம் புதிய தோற்றம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்கிட் பிளேட் வழங்கப்படுகிறது. இந்த காரின் சக்கரங்களும் புதிதாக வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய கலினன் பேஸ்லிப்ட் மாடலில் 6.75 இன்ச் டுவின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி12 எஞ்சின் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 571 ஹெச்பி பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
இதே எஞ்சின் பிளாக் பேட்ஜ் வெர்ஷனில் 600 ஹெச்பி பவர், 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- விலை குறைப்பு பேஸ் வேரியண்டிற்கு வழங்கப்படுகிறது.
- இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ரோனின் மோட்டார்சைக்கிள் விலையை இந்திய சந்தையில் குறைத்துள்ளது. பண்டிகை காலத்தை ஒட்டி விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.
விலை குறைப்பின் படி டிவிஎஸ் ரோனின் எஸ்எஸ் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் என மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 14 ஆயிரம் வரை குறைவு ஆகும். இந்த விலை குறைப்பு பேஸ் வேரியண்டிற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
திடீர் விலை குறைப்பு தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், ரோனின் எஸ்எஸ் மாடலில் எல்இடி ஹெட்லைட், இன்செட் டிஆர்எல், எல்இடி டெயில் லைட், எல்சிடி மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த பைக்கின் ஃபிரேமில் யுஎஸ்டி ஃபோர்க் மற்றும் மோனேஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த பைக் மோனோடேன் நிற ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. இந்த பைக்கின் டாப் எண்ட் வேரியண்ட்கள் டூயல் டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.
டிவிஎஸ் ரோனின் மாடலில் 225.9சிசி ஏர் மற்றும் ஆயில் கூல்டு சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 20.1 ஹெச்பி பவர், 19.93 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- உலகம் முழுக்க மொத்தத்தில் 1974 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன.
- இந்த மாடலில் 3.7 லிட்டர் டுவின் டர்போ ஃபிலாட் 6 பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.
போர்ஷே நிறுவனத்தின் முற்றிலும் புதிய 911 டர்போ 50 ஆண்டுகளை கொண்டாடும் மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடலின் இந்திய விற்பனை துவங்கியுள்ளது. இந்திய சந்தையில் புதிய போர்ஷே 911 (50 Years) மாடலின் விலை ரூ. 4.05 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பெயருக்கு ஏற்றார் போல் இந்த மாடல் போர்ஷேவின் முதன்முதல் 911 டர்போ மாடல் வெளியாகி 50 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் உலகம் முழுக்க மொத்தத்தில் 1974 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன.
இந்திய சந்தையில் போர்ஷே 911 டர்போ எஸ் மாடலின் விலையை விட புதிய மாடல் விலை ரூ. 7 லட்சம் வரை அதிகம் ஆகும். இதே போன்று 911 கரெரா மாடலை விட ரூ. 2 கோடியும், கரெரா 4 GTS மாடலை விட ரூ. 1.26 கோடியும் அதிகம் ஆகும். முந்தய 911 டர்போ எஸ் மாடலை போன்றே புதிய 911 டர்போ (போ 911 ) மாடலிலும் 3.7 லிட்டர் டுவின் டர்போ ஃபிலாட் 6 பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.
இந்த யூனிட் 650 ஹெச்பி பவர், 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.7 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 330 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
- கரென்ஸ் EV மாடல் அதன் ஐசி எஞ்சின் வெர்ஷனை விட வித்தியாசமாக இருக்கும்.
- கியா நிறுவனம் தனது EV9 பிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
கியா நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் கரென்ஸ் எம்பிவி மாடலை அடுத்த ஆண்டு அப்டேட் செய்ய இருக்கிறது. காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்ட புதிய கரென்ஸ் மாடலுடன், கியா இந்தியா நிறுவனம் கரென்ஸ் EV மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே கியா கரென்ஸ் EV மாடல் டெஸ்டிங் செய்யப்படும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இதில் கரென்ஸ் EV மாடல் அதன் ஐசி எஞ்சின் வெர்ஷனை விட வித்தியாசமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
கரென்ஸ் EV மாடலின் பிளாட்பார்ம், பாடி மற்றும் பெரும்பாலான இன்டீரியர் அதன் ஸ்டான்டர்டு மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படும். எனினும், ஸ்டைலிங் அடிப்படையில் காரின் முன்புறம் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த மாடல் வெளியீட்டுக்கு முன் கியா நிறுவனம் தனது EV9 பிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி கியா நிறுவனம் தனது EV9 ஃபிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்கிறது. புதிய கரென்ஸ் EV மாடலின் பவர்டிரெயின் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கிரெட்டா EV மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது.