என் மலர்
ஆட்டோ டிப்ஸ்

ஜனவரி முதல் கார் மாடல்கள் விலையை உயர்த்தும் ஆடி
- ஆடி நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மூன்று முறை தனது கார்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.
- இதன் மூலம் ஆடி கார்களின் புதிய விலை அடுத்த ஆண்டின் முதல் நாளில் இருந்து அமலுக்கு வருகிறது.
ஆடி இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை 1.7 சதவீதம் வரை உயர்த்துகிறது. உற்பத்தி மற்றும் உபகரணங்களின் செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதையே ஆடி இம்முறை விலை உயர்வுக்கும் காரணமாக தெரிவித்து இருக்கிறது. விலை உயர்வு 2023 ஜனவரி 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் ஆடி நிறுவனம் மூன்று முறை தனது கார்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.
2022 ஜனழரி மற்றும் ஏப்ரல் 2022 மாதங்களில் ஆடி கார்களின் விலை அதிகபட்சம் 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. பின் பண்டிகை காலத்தை ஒட்டி செப்டம்பர் மாத வாக்கில் கார்களின் விலை 2.4 சதவீதம் உயர்த்தப்பட்டது.
"ஆடி இந்தியாவின் வியாபார நுனுக்கம் ஒரு மாடலின் லாபம் மற்றும் தரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதே ஆகும். உற்பத்தி மற்றும் நிர்வாக செலவீனங்கள் அதிகரிப்பதாலேயே விலை மாற்றம் செய்யப்படுகிறது." என ஆடி இந்தியா தலைவர் பல்பிர் சிங் திலான் தெரிவித்து இருக்கிறார்.
இந்திய சந்தையில் ஆடி நிறுவனம் தற்போது ஆடி A4, ஆடி A6, ஆடி A8L, ஆடி Q3, ஆடி Q5, ஆடி Q7, ஆடி S5 ஸ்போர்ட்பேக், ஆடி RS 5 ஸ்போர்ட்பேக், ஆடி RS Q8 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் ஆடி இ டிரான் 50, இ டிரான் 55, இ டிரான் ஸ்போர்ட்பேக் 55 மாடல்களை கொண்டிருக்கிறது. இதுதவிர இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் சூப்பர்கார்கள், ஆடி இ டிரான் GT மற்றும் ஆடி RS இ டிரான் GT மாடல்களை விற்பனை செய்து வருகிறது.