என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
ஒலா வாகனங்களில் ஹெல்மெட் டிடெக்ஷன் சிஸ்டம்.. இணையத்தில் லீக் ஆன தகவல்!
- ஒலா வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் போது, வாகனம் பார்க் மோடிலேயே இருக்கும்.
- இந்த அம்சம் எதிர்கால வாகனங்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் முற்றிலும் புதிய ஹெல்மெட் டிடெக்ஷன் தொழில்நுட்பத்திற்காக காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. காப்புரிமை நிலையில் இருக்கும் புதிய தொழில்நுட்பம் ஒலா நிறுவனத்தின் எதிர்கால வாகனங்களில் வழங்கப்படும் என்று தெரிகிறது.
ரைடர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் ஒலா நிறுவனம் புதிய சிஸ்டத்தை உருவாக்கி வருகிறது. இது ரைடர் ஹெல்மெட் அணியாத சூழலில், வாகனத்தை இயக்க அனுமதிக்காது. அதாவது ஹெல்மட் அணியாமல் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியும். ஆனால், ஸ்கூட்டரை ரைட் மோடிற்கு மாற்ற அனுமதிக்காது.
ஒலா வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் போது, வாகனம் பார்க் மோடிலேயே இருக்கும். பிறகு, ஸ்கூட்டரை இயக்குவதற்கு ரைடு மோடிற்கு மாற்ற வேண்டும். ஒலா உருவாக்கி வரும் புதிய சிஸ்டம், ரைடர் ஹெல்மெட் அணியாமல் இருக்கும் போது வாகனத்தை ரைடு மோடில் மாற்ற அனுமதிக்காது. இதனை உறுதிப்படுத்த வாகனத்தில் கேமரா மற்றும் சென்சார்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கான காப்புரிமை வழங்கப்படும் பட்சத்தில், இந்த அம்சம் எதிர்கால வாகனங்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக மார்ச் மாத வாக்கில் ஒலா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ADAS சிஸ்டம் வழங்குதாக டீசர் வெளியிட்டு இருந்தது. இந்த அம்சம் கொண்ட புதிய ஸ்கூட்டர் வரும் மாதங்களில் வெளியாகும் என்று தெரிகிறது.