search icon
என் மலர்tooltip icon

    பைக்

    2023 கவாசகி Z H2 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்!
    X

    2023 கவாசகி Z H2 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்!

    • கவாசகி நிறுவனத்தின் புதிய Z H2 சீரிஸ் மாடல்கள் ஒற்றை நிற ஆப்ஷனில் கிடைக்கிறது.
    • இரு மாடல்களிலும் 197ஹெச்பி திறன் வெளிப்படுத்தும் 998சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கவாசகி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் தர நேக்கட் 2023 கவாசகி Z H2 மற்றும் Z H2 SE மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கவாசகி Z H2 விலை ரூ. 23 லட்சத்து 02 ஆயிரம் என்றும், கவாசகி Z H2 SE விலை ரூ. 27 லட்சத்து 22 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இரு ஸ்டிரீட் ஃபைட்டர் மாடல்களிலும் மெட்டாலிக் மேட் கிராஃபைன் ஸ்டீல் கிரே எனும் ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. புதிய நிறம் மட்டுமே 2023 மாடல்களில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் ஒற்றை மாற்றமாக உள்ளது. இரு மாடல்களிலும் அதன் ஒரிஜினல் அம்சங்கள் அப்படியே வழங்கப்பட்டுள்ளன.

    2023 கவாசகி Z H2 மற்றும் Z H2 SE மாடல்களில் 998சிசி, இன்-லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 197 ஹெச்பி பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் Z H2 மாடலில் M4.32 முன்புற பிரேக் கேலிப்பர்கள், Z H2 SE மாடலில் பிரெம்போ ஸ்டைல்மா முன்புற பிரேக் கேலிப்பர்களை கொண்டிருக்கின்றன.

    புதிய கவாசகி Z H2 சீரிசின் இரு வேரியண்ட்களிலும் எலெக்டிரானிக் குரூயிஸ் கண்ட்ரோல், பவர் மோட்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ரைடிங் மோட்கள், ஃபுல் எல்இடி லைட்டிங், புளூடூத் டிஎப்டி டிஸ்ப்ளே, பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர், ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இரு மாடல்களின் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் டுவின் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்டீல் டிரெலிஸ் ஃபிரேம், அலுமினியம் ஸ்விங்ஆர்ம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. Z H2 மற்றும் Z H2 SE மாடல்களில் கவாசகி நிறுவனத்தின் "ரிவர்-மார்க்" கொண்டுள்ளன. சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட புதிய நேக்கட் மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன.

    Next Story
    ×