என் மலர்
பைக்

விரைவில் இந்தியா வரும் ஹோண்டா 100சிசி பைக்
- ஹோண்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய 100சிசி பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- புதிய 100சிசி பைக் ஹீரோ ஸ்பிலெண்டர் மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக விற்பனைக்கு வருகிறது.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய புது பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை உருவாக்கி வருகிறது. இந்த வரிசையில் ஹோண்டாவின் புதிய கம்யுட்டர் ரக மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹோண்டாவின் புதிய 100சிசி பைக் பற்றிய தகவல்கள் நீண்ட காலமாக வெளியாகி வருகின்றன. இந்த மாடல் ஹீரோ ஸ்பிலெண்டருக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய ஹோண்டா 100சிசி பைக் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும் என்றும் இது மிக குறைந்த விலையில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் 100சிசி பைக் விலை ரூ. 75 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இது நம்பத்தகுந்த கம்யுட்டர் ரக மோட்டார்சைக்கிள் ஆக இருக்கும். இந்த பைக் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற டிசைன் மற்றும் குறைந்த எடை கொண்டிருக்கும்.
இதில் கன்வென்ஷனல் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் செட்டப், பின்புறம் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படும். பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிரம் பிரேக் மற்றும் கம்பைன்டு பிரேக்கிங் செட்டப் வழங்கப்படலாம். புது 100சிசி மோட்டார்சைக்கிள் வெளியீடு மட்டுமின்றி இந்திய சந்தையில் தனது விற்பனையகங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் ஹோண்டா திட்டமிட்டு வருகிறது.
ஊரக பகுதிகளில் 11 புதிய டச்பாயிண்ட்களை சமீபத்தில் துவங்கிய ஹோண்டா, நகர்ப்புறங்களில் 119 கூடுதல் விற்பனை டீலர்களை நியமனம் செய்துள்ளது. இது மட்டுமின்றி 10 பெஸ்ட் டீல் அவுட்லெட்கள், 239 அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களை ஹோண்டா திறந்து வைத்துள்ளது.