என் மலர்tooltip icon

    கார்

    ரூ.1,354 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக கியா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இந்திய அரசு நோட்டீஸ்
    X

    ரூ.1,354 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக கியா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இந்திய அரசு நோட்டீஸ்

    • ஹூண்டாய் மற்றும் மாருதி சுசுகியுடன் கியா மோட்டார்ஸ் போட்டியிட்டு வருகிறது.
    • கியா நிறுவனத்தின் செல்டோஸ் மற்றும் சோனெட் எஸ்யூவிகள் அதிக அளவில் இந்தியாவில் விற்பனை

    தென் கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் 155 மில்லியன் டாலர் (ரூ.1,354 கோடி) அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக இந்திய அரசு குற்றம் சாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கியா மோட்டார்ஸ் இந்தியா சொகுசு கார்னிவல் மினிவேனின் அசெம்பிளிக்கான உதிரிப்பாகங்களின் இறக்குமதியில் தவறான தகவல்களை தெரிவித்ததாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது .

    கியா கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியா இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு இந்திய அரசு அதிகமான இறக்குமதி வரி விதிப்பதாக டெஸ்லா நிறுவனம் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தது.

    இந்தியாவின் வாகன சந்தையில் ஹூண்டாய் மற்றும் மாருதி சுசுகியுடன் கியா மோட்டார்ஸ் போட்டியிட்டு வருகிறது. கியா நிறுவனத்தின் செல்டோஸ் மற்றும் சோனெட் எஸ்யூவிகள் அதிக அளவில் இந்தியாவில் விற்பனை ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×