search icon
என் மலர்tooltip icon

    கார்

    இந்தியாவில் பொலிரோ விலையை திடீரென மாற்றிய மஹிந்திரா
    X

    இந்தியாவில் பொலிரோ விலையை திடீரென மாற்றிய மஹிந்திரா

    • மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ மாடல்கள் விலை இந்தியாவில் மாற்றப்படுகிறது.
    • பொலிரோ மற்றும் பொலிரோ நியோ என இரு எஸ்யுவி மாடல்களின் புதிய விலை அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது.

    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் பொலிரோ மற்றும் பொலிரோ நியோ மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. இரு எஸ்யுவி-க்கள் புதிய RDE விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படுவதால் இவற்றின் விலை ஏப்ரல் 1, 2023 முதல் உயர்த்தப்படுகிறது. பொலிரோ மாடலின் விலை ரூ. 31 ஆயிரம் வரை உயர்ந்திருக்கிறது. பொலிரோ நியோ மாடலின் விலை ரூ. 15 ஆயிரம் வரை உயர்கிறது.

    புதிய விலை விவரங்கள்:

    பொலிரோ நியோ ரூ. 9 லட்சத்து 63 ஆயிரத்தில் துவங்கி ரூ. 12 லட்சத்து 14 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. பொலிரோ மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 78 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 10 லட்சத்து 79 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    பொலிரோ நியோ மாடலின் N10 லிமிடெட் எடிஷன் வேரியண்ட் தவிர அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 15 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. பொலிரோ B4 வேரியண்ட் விலை ரூ. 25 ஆயிரம் உயர்த்தப்படுகிறது. இதன் டாப் எண்ட் B6 (O) விலை ரூ. 31 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பொலிரோ B6 விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 10 லட்சம் என்றே விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மஹிந்திரா பொலிரோ நியோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 100 பிஎஸ் பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. பொலிரோ மாடலில் 75பிஎஸ் பவர், 210 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு எஸ்யுவி-க்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    Next Story
    ×