search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    விலை ரூ. 5.91 கோடி தான் - இந்தியாவில் அறிமுகமான மெக்லாரென் சூப்பர் கார்
    X

    விலை ரூ. 5.91 கோடி தான் - இந்தியாவில் அறிமுகமான மெக்லாரென் சூப்பர் கார்

    • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • மெக்லாரென் 750S அந்நிறுவனத்தின் 720S மாடலின் மேம்பட்ட வெர்ஷன்.

    பிரிட்டனை சேர்ந்த சூப்பர் கார் உற்பத்தியாளர் மெக்லாரென் இந்திய சந்தையில் தனது சக்திவாய்ந்த சூப்பர் கார் 750S மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 5 கோடியே 91 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மெக்லாரென் 750S தற்போது இந்தியா வந்துள்ளது.

    புதிய மெக்லாரென் 750S அந்நிறுவனத்தின் 720S மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய மெக்லாரென் 750S மாடல் கூப் மற்றும் ஹார்டு-டாப் கன்வெர்டிபில் என இருவித பாடி ஸ்டைல்களில் கிடைக்கிறது. தோற்றத்தில் இந்த கார் 720S போன்றே காட்சியளிக்கிறது. புதிய 750S மாடலில் ரி-டிசைன் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப் மற்றும் டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன.


    இத்துடன் அளவில் பெரிய ஸ்ப்லிட்டர் கொண்ட ஏர் டேம்கள், புதிய வீல் ஆர்ச் வென்ட்கள், நீட்டிக்கப்பட்ட ரியர் டெக், அகலமான ஆக்டிவ் விங் வழங்கப்பட்டு இருக்கிறது. காரின் உள்புறம் ஃபுல் லப்பா லெதர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், செங்குத்தாக பொருத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ, போயர்ஸ் மற்றும் வில்கின்ஸ் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மெக்லாரென் 750S மாடலில் 4.0 லிட்டர், டுவின் டர்போ, வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 740 ஹெச்.பி. பவர், 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.8 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.

    மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 331 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மெக்லாரென் இதுவரை உற்பத்தி செய்ததிலேயே இது மிகவும் சக்திவாய்ந்த மாடல் ஆகும். புதிய 750S மாடல் முந்தைய 720S காரை விட 30 கிலோ குறைவாக இருக்கும் படி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×