search icon
என் மலர்tooltip icon

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு குறித்து கவிஞர்... ... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்- லைவ் அப்டேட்ஸ்
    X

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு குறித்து கவிஞர்... ... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்- லைவ் அப்டேட்ஸ்

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவு

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு

    சட்டென்று கடந்துபோகும் ஒன்றல்ல

    இதயத்தில் நின்று குத்துகிறது.

    பெரியார் குடும்பத்திலிருந்து வந்த

    ஒரு துணிச்சலான அரசியல் தலைவர்

    முகமூடி போடாத கருத்துக்களை

    முகம் பார்த்துச் சொல்கிறவர்

    பார்த்தால் வேங்கை;

    பழகினால் பசு

    நல்ல நண்பர்

    அவர் மறைவுச் செய்தி

    என் மனதில்

    ஒரு கறுப்பு நிழலாகப் படிகிறது

    அவர் குடும்பமும்

    காங்கிரஸ் பேரியக்கமும் மட்டுமல்ல -

    பொதுவாழ்க்கையும்

    தன் பொதுவெளியில்

    ஒரு ராஜகம்பீரனை இழந்திருக்கிறது

    ஈரோட்டுத் தொகுதியின்

    வெற்றிடம் நிரப்பப்படலாம்;

    இதயத்தின் வெற்றிடம்…?

    வருந்துகிறேன்;

    இரங்குகிறேன்.

    Next Story
    ×