என் மலர்
தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் திறமையான நடிகை ஒருவர், பட வாய்ப்பை பிடிக்க சம்பளத்தை குறைத்துள்ளாராம்.
திறமையான நடிகை என கோலிவுட்டில் பெயரெடுத்த நடிகை ஒருவர், குடும்பப் பிரச்சினை காரணமாக சில ஆண்டுகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தாராம். தற்போது அவர் டோலிவுட்டில் பிசியாக இருந்தாலும், மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். ஆனால் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் எதுவும் அவருக்கு அமையவில்லையாம்.
இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க அவரை படக்குழுவினர் அணுகினார்களாம். முதலில் தயங்கியவர், பின்னர் நம்பர் நடிகையே இது போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பதால் ஓகே சொல்லி விட்டாராம். ஆனால் சம்பளம் மட்டும் பெரிய தொகையாகக் கேட்டாராம்.
படத்தின் பட்ஜெட்டே கம்மி தான் என்று படக்குழு சொல்லி, நடிகையிடம் சம்பளத்தை குறைத்துக் கொள்ளச் சொல்லிக் கேட்டார்களாம். கிடைத்த வாய்ப்பை நழுவ விட மனமில்லாத அந்த நடிகை, வேறு வழியின்றி குறைந்த சம்பளத்திற்கு ஓகே சொல்லி விட்டாராம்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் வாழ் படத்தின் விமர்சனம்.
நாயகன் பிரதீப் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரை ஒரு பெண் துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஆனால் இவரோ அவர் மீது அதிக ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக திருமணமான நாயகி பாணுவை சந்திக்கிறார்.
பிரதீப்பும், பாணுவும் பழக ஆரம்பிக்கிறார்கள். இந்த பழக்கம் ஒரு நீண்ட தூர பயணத்தை ஏற்படுத்துகிறது. இறுதியில் இந்த பயணம் எங்கு? எப்படி முடிந்தது? என்பதே படத்தின் மீதி கதை.
பிரதீப்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பிரதீப் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சின்ன சின்ன அசைவுகளில் கூட கவனத்தை ஈர்த்திருக்கிறார். தன் கதாபாத்திரத்தை முழுமையாக உணர்ந்து நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
நாயகியாக வரும் பாணுவிற்கு நடிக்க அதிக வாய்ப்பு. கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். குட்டி பையன் யாத்ரா, தாத்தாவாக வருபவர் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.
பாணு
அருவி என்கிற யதார்த்த சினிமாவை நமக்கு வழங்கிய இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன், தற்போது வாழ் படம் மூலம் மனிதனின் யதார்த்த வாழ்க்கையை சொல்ல வந்திருக்கிறார். புரியாமல் ஆரம்பிக்கும் திரைக்கதை மெல்ல மெல்ல கதைக்குள் நம்மை ஒன்ற வைக்கிறது. இரண்டாம் பாதியில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
படத்திற்கு பெரிய பலம் ஷெல்லேவின் ஒளிப்பதிவு. மனதிற்கு நெருக்கமாகும் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியுள்ளார். அதேபோல் பிரதீப் குமாரின் இசை, பார்ப்பவர்களை கதையோடு ஒன்ற வைக்கிறது.
மொத்தத்தில் 'வாழ்' வாழலாம்.
தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்களிக்க கோரிய வழக்கில், நடிகர் விஜய் மேல் முறையீடு செய்துள்ளார்.
நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த சொகுசு காருக்கு வணிக வரிதுறை நுழைவு வரி விதித்தது. இதை எதிர்த்தும், வரி விதிக்கத் தடை கோரியும் விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர்கள் நிஜ வாழ்விலும் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி செலுத்துவது நன்கொடை போன்றது அல்ல, நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு. சமூக நீதிக்கு பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த அவர், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.
இந்நிலையில், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தை எதிர்த்து நடிகர் விஜய் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு, திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.
கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் சனம் ஷெட்டி. தற்போது சில படங்களில் நடித்து வரும் அவர், சமீபத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது சனம் ஷெட்டியிடம் ரசிகர் ஒருவர் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு நான் ஏற்கனவே ஒருவரை காதலித்தேன். அது திருமணம்வரை சென்று கடைசி நேரத்தில் நின்று விட்டது. நாம் ஒன்று நினைத்தால் இறைவன் ஒன்று நினைக்கிறான். எனது திருமணத்திற்கான காலம் நேரம் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன் சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
முன்னணி நடிகைகளான ஐந்து பேர், கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் 'கருங்காப்பியம்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.
'யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் டீகே இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'கருங்காப்பியம்'. இந்த படத்தில் நடிகைகள் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகியோர் கதையின் நாயகிகளாக நடிக்க, இவர்களுடன் நடிகர்கள் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், ஷா ரா, 'லொள்ளு சபா' மனோகர், விஜே பார்வதி, விஜே ஆஷிக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் ஈரான் நாட்டு நடிகையான நொய்ரிகா புதுமுக நாயகியாக அறிமுகமாகிறார். பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் 'கருங்காப்பியம்' படத்தை வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் (PAVE) என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ.பி.இன்டர்நேஷனல் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
கருங்காப்பியம்
இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 'கருங்காப்பியம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் அடுத்ததாக இயக்க உள்ள வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவாசல். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக உள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா தந்தை, மகன் என இருவேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் ஷூட்டிங் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இன்று மாலை வெளியிட இருப்பதாக அறிவித்தனர்.
வாடிவாசல் டைட்டில் லுக் போஸ்டர்
எதிர்பார்த்த படி இன்று மாலை வெளியான வாடிவாசல் டைட்டில் லுக் போஸ்டர், ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
உறியடி, உறியடி 2 படங்களை எழுதி, இயக்கி, நடித்த விஜய் குமார், தன்னுடைய உதவி இயக்குனர் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
உறியடி, உறியடி 2 படங்களை எழுதி, இயக்கி, நடித்தவரும், சூரரை போற்று படத்திற்கு வசனம் எழுதியவருமான விஜய் குமார், நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்குகிறது.
அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்கவிருக்கும் இத்திரைப்படத்தை 'ரீல் குட் பிலிம்ஸ்' சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிக்கிறார். அறிமுக இயக்குனரான அப்பாஸ், உறியடி படத்தின் இரு பாகங்களிலும் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் ஆவார்.
படக்குழுவினருடன் விஜய் குமார்
விஜய் குமாருக்கு ஜோடியாக அர்ஷா எனும் நடிகை அறிமுகமாகிறார். இவர்களுடன் நடிகர்கள் சங்கர் தாஸ், அவினாஷ் , கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
லைஃப்ஸ்டைல் ஆக்சன் டிராமா வகையில் தயாராகும் இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கி தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு நடை பெற இருக்கின்றது.
நடிகர் கருணாஸ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'ஆதார்' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பி.எஸ்.ராம்நாத் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஆதார்'. இதில் நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'பிக்பாஸ்' புகழ் நடிகை ரித்விகா நடிக்கிறார்.
இவர்களுடன் நடிகர் அருண்பாண்டியன், வத்திக்குச்சி திலீப், பிரபாகர், மனிஷா யாதவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஸ்ரீ காந்த் தேவா இசை அமைக்கிறார்.
படக்குழுவினருடன் கருணாஸ்
'ஆதார்' படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் அழகம்மை மகன் சசிக்குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நட்டி நட்ராஜ் அடுத்ததாக சைக்கோ திரில்லர் படத்தில் நடிக்கிறார்.
ட்ரீம் ஹவுஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரிக்கும் புதிய படத்தை ஹாரூன் இயக்குகிறார். சைக்கோ திரில்லர் கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தில் நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள். நாயகிகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், முக்கிய வேடங்களில் 'பிளாக் ஷீப்' நந்தினி, சாஷ்வி பாலா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.
படக்குழுவினருடன் நட்டி நட்ராஜ்
கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.
விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், அபி ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் முன்னோட்டம்.
ஏ.ஆர்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. அசோக் செல்வன், அபிஹாசன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அஞ்சு குரியன், ரித்விகா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இப்படத்தை விஷால் வெங்கட் இயக்குகிறார்.
மேலும் இப்படத்தில் நாசர், அனுபமா குமார், இளவரசு, கே.எஸ்.ரவிக்குமார், பானுப்பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராதன் இசையமைக்கும் இப்படத்திற்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
அசோக் செல்வன், அபி ஹாசன்
மணிகண்டன் வசனம் எழுதி உள்ளார். பெலிக்ஸ்ராஜா, மனோஜ் குமார் ஆகியோர் கலை இயக்குனர்களாக பணியாற்ற உள்ளனர். தினேஷ் மற்றும் ஸ்ரீகிரிஷ் நடனம் அமைக்கின்றனர். பாடல்களை சினேகன் மற்றும் மிர்ச்சி விஜய் எழுதுகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் அதர்வா, அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தை சற்குணம் இயக்க உள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மூத்த மகன் அதர்வா. பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் கைவசம் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ் போன்ற படங்கள் உள்ளன. இதில் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம் போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இதையடுத்து நடிகர் அதர்வா நடிக்க உள்ள புதிய படத்தை வாகை சூடவா, களவாணி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணம் இயக்க உள்ளார். கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், அஜித்தின் விஸ்வாசம் போன்ற பட பாணியில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சற்குணம், அதர்வா
இப்படத்தில் நடிகர் ராஜ்கிரணும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நடிகர் அதர்வா, ராஜ்கிரணுக்கு பேரனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜிப்ரான் இசையமைக்க உள்ள இப்படத்திற்கு லோகநாதன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமான நடிகை சுரேகா சிக்ரி, 3 முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.
பாலிவுட்டில் கடந்த 1978ம் ஆண்டு வெளியான ‘கிசா குர்சி கா’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுரேகா சிக்ரி. இதையடுத்து ஏராளமான இந்தி மற்றும் மலையாள படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த இவர், 3 முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.
1988ம் ஆண்டு வெளியான 'தமஸ்', 1995ம் ஆண்டு வெளியான 'மம்மூ', 2018-ம் ஆண்டு வெளியான ‘பதாய் ஹோ’ ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
சுரேகா சிக்ரி
இந்நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேகா சிக்ரி, இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 74. நடிகை சுரேகா சிக்ரியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
×
X