என் மலர்
- சினிமா பணிகள் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
- விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் திடீரென இம்முடிவை எடுத்துள்ளார்.
சினிமா பணிகள் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை" என்று கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டிருந்தார்..
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் அடுத்த தொகுப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முந்தைய சீசன்களில், கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவருக்கு பதில் நடிகர் சிம்புவும், மற்றொரு எபிசோடில் ரம்யா கிருஷ்ணனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
அதனால், கமல் பிக்பாஸில் இருந்து விலகியதை அடுத்து நடிகர் சிம்பு பிக்பாஸ் 8 சீசனை தொகுத்து வழங்குவார் என்று தகவல் பரவியது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பெரிய தொகையை வழங்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் மறுபடியும் தொலைக்காட்சிக்கு திரும்ப விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் விஜய் சேதுபதி ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. பெரும்தொகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நயன்தாராவும் ஆர்வம் காட்டுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், இருவரில் ஒருவரை இறுதி செய்து விரைவில் பிக்பாஸ் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
- இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகிறது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில்"முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
மறைந்த இந்திய ராணுவ வீரரான முகுந்தன் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
அமரன் திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் அமரன் படத்தின் மேக்கிங் வீடியோவை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், "போர்கள், போராட்டங்கள், தியாகங்களை நினைவு கூர்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.
இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் எந்த அளவிற்கு உழைத்துள்ளார் என்பதை இந்த மேக்கிங் வீடியோவை பார்க்கும்போது தெரிகிறது.
இந்த வீடியோவில், "போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான். நம்மில் யார் இறந்தாலும், ஒரு தாய் அழுவாள் பாரடா..." என்ற பாடலும் ஒலிக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Let's remember the battles, struggles, and sacrifices!#Amaran #AmaranDiwali #AmaranOctober31 pic.twitter.com/nkxoV6LrV5
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 14, 2024
- தங்கலான் திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 15) வெளியாக உள்ளது.
- தங்கலான் உலக அரங்கில் தமிழ்த் திரையுலகை தலைநிமிரச் செய்யும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள தங்கலான் திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 15) வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், தங்களின் படக்குழுவை வாழ்த்தி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "ஆதித்தமிழர்களின் வாழ்வியலையும், வலியையும் இரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தி, இயக்கம், இசை, நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, கலை, தொழில்நுட்பம் என அனைத்து பிரிவுகளிலும் ஆகச்சிறந்த படைப்பாக உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் உலக அரங்கில் தமிழ்த் திரையுலகை தலைநிமிரச் செய்யும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.
ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் எதிர்கொள்ளும் சமூக சிக்கல்களுக்கும், பறிக்கப்பட்ட அவர்களது உரிமை மீட்புக்கும், நல்வாழ்விற்கும் என தனது ஒப்பற்ற கலைத்திறனை அர்ப்பணித்துள்ள அன்புத்தம்பி பா.ரஞ்சித் அவர்களுக்கும்,
நடிப்புக்கலையில் தான் கொண்டுள்ள அளவற்ற காதலாலும், தனித்திறனாலும் தான் ஏற்ற பாத்திரத்திற்கும், கதைக்களத்திற்கும் ஏற்ப தனது உடலை வருத்தி, திருத்தி வெளிப்படுத்தியுள்ள அசாத்திய நடிப்பாற்றலால் காட்சிகளில் நம்மை ஒன்றச் செய்துள்ள பெருங்கலைஞன் அன்புத்தம்பி விக்ரம் அவர்களுக்கும்,
வரலாற்றுப்பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மண் மனம் மாறாத மக்களிசையாலும், வீரம் தெறிக்கும் போர்ப்பறையிசையாலும் காட்சிகளுக்கு வலிமைசேர்த்துள்ள என் ஆருயிர் இளவல் ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கும்,
குருதி தோய்ந்த தங்கச்சுரங்கங்களில் மறைக்கப்பட்ட வரலாற்றை உணர்வுச்சூடேற்றும் திரைக்கதை மற்றும் உரையாடல்களாக வார்த்துள்ள அன்பிற்கினிய எழுத்தாளர்கள் அழகிய பெரியவன், தமிழ் பிரபா ஆகியோருக்கும், வரலாற்றுக்காலத்தை அதன் விழுமியங்களோடு கண் முன்னே கொண்டு வந்துள்ள கலைஇயக்குநர் தம்பி மூர்த்தி அவர்களுக்கும், அதனை உலகத்தரத்தில் ஒளிஓவியமாக வடித்துள்ள ஒளிப்பதிவாளர் அன்புத்தம்பி கிஷோர்குமார் அவர்களுக்கும், படத்தொகுப்பாளர் தம்பி செல்வா அவர்களுக்கும், தங்கலான் திரைப்படத்திற்கு கடின உழைப்பையும், ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ள அனைத்து திரைக்கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும்எனது அன்பும், பாராட்டுகளும்.
வருகின்ற 15-08-2024 அன்று வெளியாகவிருக்கும் தங்கலான் திரைப்படத்தை உலகெங்கும் பரவி வாழும் என் உயிர்க்கினிய அன்னைத்தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் திரையரங்கங்களுக்குச் சென்று கண்டு களித்து, மாபெரும் வெற்றியடையச் செய்து, மேலும் இதுபோன்ற ஆகச்சிறந்த படைப்புகள் தமிழில் உருவாகத் துணை நிற்குமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" ஏன்னு சீமான் தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தேவரா வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- தேவராவின் படத்தின் படப்படிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் '' இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்து வருகிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.
இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் சமீபத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து, இப்படத்தில் இரண்டாவது பாடலான 'சுத்தமல்லி' வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடலை காவாலா பாடலை பாடிய சில்பா ராவ் பாடியுள்ளார்.
இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தேவராவின் படத்தின் படப்படிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர் தனது படப்பிடிப்பு பகுதியை முடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Just wrapped my final shot for Devara Part 1. What a wonderful journey it has been. I will miss the ocean of love and the incredible team. Can't wait for everyone to sail into the world crafted by Siva on the 27th of September. pic.twitter.com/RzOZt3VCEB
— Jr NTR (@tarak9999) August 13, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- கோட் படம் மங்காத்தா மாதிரி 100 மடங்கு இருக்கணும்னு அஜித் சார் சொன்னாரு.
- விஜய் சாரின் சினிமா பயணத்திற்கு பேர்வெல் மாதிரி கோட் படம் இருக்கும் என் வெங்கட்பிரபு தெரிவித்தார்.
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், நடிகர்கள் அஜித், விஜய் நட்பு குறித்து சமீபத்திய நேர்காணலில் இயக்குநர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
அந்த நேர்காணலில், "மங்காத்தா படம் பண்ணும்போதே அடுத்து விஜய வச்சு படம் பண்ணு நல்லா இருக்கும்'னு அஜித் சார் சொன்னாரு. கோட் படம் பத்தி சொன்னதும், என்னய்யா எத்தனை வருஷமா நான் சொல்லிட்டு இருக்கேன். சூப்பர் அருமையா பண்ணுனு சொன்னாரு. படம் ஆரம்பிக்கும் போதே மங்காத்தா மாதிரி 100 மடங்கு இருக்கணும்டா, அப்படி பண்ணுனு சொன்னார். அஜித் சார் சொன்ன மாதிரியே செய்துள்ளேன். மக்கள்தான் எத்தனை மடங்குன்னு சொல்லனும். நிச்சயமாக விஜய் சாரின் சினிமா பயணத்திற்கு பேர்வெல் மாதிரி இந்த படம் இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "அஜித் சார் மருத்துவமனையில் இருந்தபோது, நான் அவரை சந்திக்கச் சென்றேன். அப்போது விஜய் சார் போன் செய்து அஜித் சாரிடம் கொடுக்க சொன்னார். அப்போது அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள். அப்போது அவர்களுக்கு இடையே இருந்த அன்பை நான் பார்த்தேன்" என்று தெரிவித்தார்.
விரைவில் வெளியாகவுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளதால் நடிகர் விஜய் மகிழ்ச்சியாக உள்ளார் என்றும், தனது படம் ரிலீசாவதற்கு முன்பு விஜய் அப்படத்தை பற்றி பெரிதாக பேசி நான் பார்த்தது இல்லை என்று விஜயின் நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளது படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலக்கட்டத்திலேயே தயாரிப்பாளர் ஆனார் சிவகார்த்திகேயன்.
- தனுஷ் தயாரிப்பில் உருவான எதிர்நீச்சல் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு வெற்றி படமாக அமைந்தது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து, நடிகராக மாறி இன்று முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த நடிகர் சிவகார்த்திகேயனை இயக்குநர் பாண்டிராஜ் "மெரினா" படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.
இந்த படத்தில் ஒப்பந்தமாகும் முன்பே தனுஷ் உடன் "3" படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "மனம் கொத்தி பறவை", "கேடி பில்லா கில்லாடி ரங்கா" போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து தனுஷ் தயாரித்த "எதிர்நீச்சல்" படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்தார். இந்த படம் சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் மறக்க முடியாத அளவுக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தை இயக்குநர் வெற்றி மாறனிடம் துணை இயக்குநராக இருந்த துரை செந்தில்குமார் இயக்கினார்.
"எதிர்நீச்சல்" வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் கொடுத்த பல்வேறு பேட்டிகளில் தனுஷ் பற்றி கருத்து தெரிவித்து வந்தார். அவ்வாறு பேசிய போது தனுஷ் எந்த நம்பிக்கையில் என் மீது இவ்வளவு முதலீடு செய்தார் என்று தெரியவில்லை. இப்படி முதலீடு செய்வதற்கு தைரியம் அதிகம் வேண்டும் என்று கூறியிருந்தார்.
தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் வெற்றி பெற்று வந்தன. அதே அளவுக்கு அவர் படங்கள் தொடர்பான சர்ச்சைகளும் அவ்வப்போது எழுவதும் தொடர்கதையாக இருந்தது. ஒருபக்கம் சர்ச்சைகள் எழுந்த போதிலும், தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதை சிவகார்த்திகேயன் வழக்கமாக கொண்டிருந்தார். இப்படி இவர் நடித்த படங்களில் சில படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.
இடையில், நடிகர் தனுஷ் உடன் ஏற்பட்ட கருத்து மோதலால் இருவரும் பேசிக் கொள்வதில்லை என்று தகவல்கள் வெளியாகின. எதிர்நீச்சல் படத்தைத் தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்க இருந்ததாகவும், கடைசியில் அந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
தனுஷ் கொடுத்த வாய்ப்பு காரணமாகவே சிவகார்த்திகேயன் இத்தகைய வளர்ச்சி அடைந்துள்ளார் என்ற பேச்சுக்கள் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருந்தன. எனினும், இது குறித்து தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இருதரப்பும் மௌனம் காக்க, தனுஷ் சிவகார்த்திகேயன் பற்றிய பேச்சு இடையில் கொஞ்ச காலம் இல்லாமல் இருந்தது.
மேலும் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் தமிழில் முன்னணி நடிகராக உயர்ந்தார். இதோடு, திரையுலகில் அறிமுகமான குறுகிய காலக்கட்டத்திலேயே தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார் சிவகார்த்திகேயன். இவர் தயாரிப்பில் வெளியான கனா படம் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்-ஐ சினிமாவில் அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து நடிப்பு மற்றும் படத்தயாரிப்பு என சிவகார்த்திகேயன் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், இவர் தயாரித்துள்ள புதிய படமான "கொட்டுக்காளி" ரிலீசுக்கு தயாராகி உள்ளது. நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்துள்ளது.
இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசியது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் கொட்டுக்காளி படத்தை தயாரித்ததன் மூலம், சிவகார்த்திகேயன் தனக்கு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து இருப்பதாக தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய சிவகார்த்திகேயன், "நான் யாரையும் கண்டுபிடித்து நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கிட்டார்கள்," என்று தெரிவித்தார். இவரது இந்த கருத்து நடிகர் தனுஷை நேரடியாக சாடுவது போல் இருக்கிறது என பலத்தரப்பினரும் கூறுகின்றனர்.
சினிமாவில் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் தனுஷ் உதவியும், அதைப் பேற்றி சிவகார்த்திகேயன் பேசியவை பொதுவெளியில் உள்ளன. தற்போது காலமும், நேரமும் மாறியதால் பொதுவெளியில் இருப்பதை மறந்து சிவகார்த்திகேயன் பேசினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் இருதரப்பும் கருத்து தெரிவிப்பதை நீண்ட காலம் மறுத்து வந்துள்ளன.
இத்தனை காலம் பேசப்படாமல் இருந்த விவகாரம், திடீரென பூதாகாரமாய் வெடிக்க யார் காரணம்? பின்னணியில் இருதரப்புக்கும் இடையில் என்ன நடக்கிறது? என பல கேள்விகளை எழுப்பத் தான் செய்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தங்கலன் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
- தங்கலான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள தங்கலான் திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 15) வெளியாக இருக்கிறது.
உலகம் முழுக்க வெளியாக இருக்கும் தங்கலான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள தங்கலான் திரைப்படம் பண்டையக்கால கதையம்சம் கொண்டுள்ளது. இந்த திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தங்கலான், இந்த வெற்றி மிகப்பெரியதாக இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், கங்குவா படத்தில் நடித்த சூர்யா தங்கலான் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
#Thangalaan…! THIS WIN WILL BE HUGE!! @chiyaan @beemji @parvatweets @MalavikaM_ @gvprakash @NehaGnanavel @GnanavelrajaKe @OfficialNeelam@StudioGreen2 @SakthiFilmFctry pic.twitter.com/nNij8gwqqb
— Suriya Sivakumar (@Suriya_offl) August 14, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தி கோட் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
- தி கோட் திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கோட் திரைப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த படத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டிரைலர் குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆகஸ்ட் -15 சுதந்திர தினத்தன்று "தங்கலான்" திரைப்படம் திரையரங்கிற்கு வரவிருக்கிறது.
- "தங்கலான்" திரைப்படத்தில் ஆர்த்தி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்தார். மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் பிரபல நடிகைகளில் ஒருவராக மாளவிகா மோகனன் உருவெடுத்தார். அந்த வரிசையில், இவர் தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் "தங்கலான்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் -15 சுதந்திர தினத்தன்று "தங்கலான்" திரைப்படம் திரையரங்கிற்கு வரவிருக்கிறது. இந்த படத்தின் விளம்பர பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
"தங்கலான்" திரைப்படத்தில் ஆர்த்தி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் சவாலானது என்பதால் மிகவும் மெனக்கட்டுள்ளார். இந்த கதாப்பாத்திரத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு மெனெக்கட்டுள்ளார் மாளவிகா. இதற்காக சிலம்பம் பயிற்சி முதல் உடல் எடை குறைவது வரை இப்படத்திற்காக செய்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் படம் முழுக்க மேலாடை இல்லாமல் நடித்துள்ளார். திரையில் அவர் காட்சியளிக்கும் அனைத்து காட்சிகளையும் சிகப்பு நிறமாகவே காட்டப்பட்டுள்ளது.
அந்த சிகப்பு நிறத்தை பிரதிபலிக்கும் வகையில், தங்கலான் படம் சார்ந்த அனைத்து புரமோஷன் நிகழ்ச்சிக்கும் சிவப்பு நிற புடவையில் தங்கமாய் ஜொலித்திருந்தார். மொத்தத்தில் இதுவரை பார்க்காத மாளவிகாவை தங்கலான் படத்தில் பார்க்கலாம்.
பொதுவாக படத்தின் கதாபாத்திரத்தில் பயன்படுத்தப்பட்ட வண்ண ஆடைகள் மற்றும் தோற்றத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்தும் வகையிலான ஆடைகளை புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்லும் வழக்கம் பாலிவுட் திரையுலகில் பின்பற்றப்படுவதுண்டு. அந்த வகையில், மாளவிகா மோகனன் பாலிவுட் பாணியை தற்போது தங்கலான் புரமோஷனில் கொண்டுவந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிவகார்த்திகேயன் பேசிய வரிகள் தற்பொழுது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
- எதிர் நீச்சல் திரைப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்தார்.
கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் சிவகார்த்திகேயன் " நான் யாருக்கும் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்ல மாட்டேன், ஏன்னென்றால் என்னை அப்படி பழக்கிவிட்டார்கள்" என பேசிய வரிகள் தற்பொழுது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சிவகார்த்திகேயன் இதன்மூலம் நடிகர் தனுஷை குறி வைத்து கூறுகிறாரா என பேச்சுகளும், கமெண்டுகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மெரினா திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் சிவகார்த்திகேயன். அதற்கடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படங்களில் நடித்தாலும். திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றும் வணிக ரீதியாகவும் பெரும் வசூல் செய்யவில்லை.
தனுஷ் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். அதில் சிவகார்த்திகேயன், அனிருத், செண்ட்ராயன், ரோபோ சங்கர் முக்கியமானவர்கள்.
2013 ஆம் ஆண்டு வெளியான எதிர் நீச்சல் திரைப்படம் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்தை தனுஷ் தயாரித்தார். அதையடுத்து நடந்த பல நிகழ்ச்சிகளிலும், விருது வழங்கும் விழாக்களில் , சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக செல்வதும், பல நேர்காணல்களில் ஒன்றாக கலந்து கொண்டனர்.
சில வருடங்களுக்கு திரையுலகில் நல்ல நண்பர்களாக இருந்து வந்த இருவரும் சில மன கசப்புகளால் பிரிந்தனர். அதற்கு பிறகு இருவரும் எந்த நிகழ்விலும் ஒன்றாக கலந்துக் கொள்வதில்லை . இருவரும் பொதுவெளியில் அவர்களை பற்றி பேசுவதையும் நிறுத்திக் கொண்டனர்.
இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்த இந்த பிரச்சனை, தேவையில்லாமல் சிவகார்த்திகேயன் சர்ச்சை பேச்சால் மீண்டும் அனைந்திருந்த தீ மீண்டும் எரிய தொடங்கியுள்ளது.
இதனால் இணையத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் தனுஷ் ரசிகர்களுக்கும் இடையே யார் சரி என்ற வாக்குவாதம் நடைப்பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் பேசும்போது யார் பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும். இந்த பிரச்சனை தற்பொழுது பெரிதாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் மேடையில் இதைப்பற்றி பேசாமல் இருந்து இருந்தாலே எந்தவித பிரச்சனையையும் வந்திருக்காது என பலரும் அவர்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கான தீர்வு என்னவென்று பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திரைப்படம் இதுவரை உலகளவில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- திரைப்படத்தில் நடித்த துஷாரா விஜயனுக்கும் மிகப்பெரிய வரவேற்பை மக்கள் கொடுத்துள்ளார்கள்.
தனுஷ் இயக்கி மற்றும் நடித்து சில வாரங்களுக்கு முன் வெளியாகியது ராயன் திரைப்படம். படம் வெளியானதில் இருந்து மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தில் தனுஷுக்கு தங்கையாக நடித்து இருந்தார் துஷாரா விஜயன்.
இதுவரை தனுஷ் நடித்து வெளியான படங்களில் இப்படத்தின் வசூல் முதலிடத்தை பெற்றுள்ளது. திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்திலேயே 116 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திரைப்படம் இதுவரை உலகளவில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படங்களில் முதல் இடத்தில் உள்ளது ராயன்.
படத்தில் இடம்பெற்றுள்ள வாட்டர் பாக்கெட் மற்றும் அடங்காத அசுரன் பாடல்கள் மிகப் பெரிய ஹிட்டாகி உள்ளது. திரைப்படத்தில் நடித்த துஷாரா விஜயனுக்கும் மிகப்பெரிய வரவேற்பை மக்கள் கொடுத்துள்ளார்கள்.
திரைப்படத்தை குறித்து ஓடிடி தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. திரைப்படம் ஆக்ஸ்ட் 30 தேதி ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படம் சன் நெக்ஸ்ட் செயலிலயும் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது.
- எஸ்.கே ப்ரொடக்ஷன் நிறுவனத்தில் இருந்து இன்னும் இம்மாதிரியான படைப்புகள் வரும்.
கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் படக்குழு மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். மேலும் இவ்விழாவில் இயக்குனர் மிஷ்கின், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி கலந்துக் கொண்டனர்.
விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது " கூழாங்கல் திரைப்படம் பார்த்துவிட்டு, எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை பின அதை பற்றி பேசி புரிந்துக்கொண்டேன். இப்படத்தின் கதையை கேட்காமல் நான் இப்படம் தயாரிக்க சம்மதித்தேன் காரணம் இயக்குனர் வினோத்ராஜ். இப்படம் எடுத்ததற்கான காரணம் முதலில் வினோத் ராஜை கொண்டாடத்தான். இப்படம் லாபம் சம்பாதித்தால் அதை மீண்டும் வினோத்ராஜ் இயக்கும் அடுத்த திரைப்படத்திற்கு முன்பணமாக கொடுப்பேன். மிகப்பெரிய லாபம் கிடைத்தால் வினோத்ராஜ் போல் இன்னும் சில இயக்குனர்களை சினிமாவிற்கு அறிமுகப் படுத்துவேன்.
என் வாழ்க்கையை அமைத்து கொடுத்த இந்த சினிமாவிற்கு நான் செய்யும் சேவைகளாக இதுப்போன்ற படங்களை தயாரிக்க நான் நினைக்கிறேன். சூரி அண்ணனுக்கு இந்தாண்டு மிகப்பெரிய ஆண்டாக அமைந்துள்ளது. கொட்டுக்காளி திரைப்படத்திற்காக சிறந்த நடிகன் விருதை வாங்குவார் என நம்பிக்கை இருக்கிறது.
இப்படத்திற்கு ஆதரவு கொடுத்து வெற்றி படமாக அமைந்தால். எஸ்.கே ப்ரொடக்ஷன் நிறுவனத்தில் இருந்து இன்னும் இம்மாதிரியான படைப்புகள் வரும். நான் யாரையும் கண்டு பிடிச்சு இவங்களுக்கு நான் தான் வாழ்க்கை கொடுத்தேன், வாழ்க்கை கொடுத்தேன் என நான் சொல்ல மாட்டேன். ஏனா என்னை அப்ப்டி சொல்லி சொல்லி பழக்கிவிட்டார்கள். விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றி" என தெரிவித்தார்.
இவர் கூறிய இந்த வாக்கியம் நடிகர் தனுஷை மறைமுகமாக சாடினாரா? இல்லை விஜய் டிவியை கூறுகிறாரா? என்ற கேள்வி நெட்டிசன்கள் மத்தியில் எழுந்து இணையத்தில் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.