search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது.
    • 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

    கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

    படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் படக்குழு மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். மேலும் இவ்விழாவில் இயக்குனர் மிஷ்கின், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி கலந்துக் கொண்டனர்.

    விழாவில் பேசிய மிஷ்கின் மிகவும் அழகாக , இலக்கிய நயத்தோடு படத்தையும் , படக்குழுவையும், இயக்குனரையும் பாராட்டி பேசினார். அதில் அவர் சொன்ன முக்கியமான விஷயங்கள் சிலவற்றை பார்ப்போம். அதில் அவர்

    "இப்படத்தை ஓட வைப்பதற்காக நான் இந்த மேடையில் அம்மணமாக கூட ஆட தயார் . இந்த படத்தை எடுத்த இயக்குனர் வினோத் ராஜ் மிகப் பெரிய நன்றி. இந்த படத்தை எடுத்ததற்காக அவனுடைய காலை கூட முத்தம் இடுவேன். நான் இளையராஜாவிற்கு பிறகு ஒருவனின் காலை முத்தமிடுவேன் என்றால் அது வினோத் ராஜின் காலை தான், சூரி அந்த கதாப்பாத்திரமாவே வாழ்ந்து இருக்கிறான். தமிழ் நடிகைகள் இந்த மாதிரி நல்ல படங்களில் நடிக்க சம்மதிக்க மாட்டார்கள், அன்னா பென்னிற்கு கண்டிப்பாக இந்த வருடம் தேசிய விருது கிடைக்கும் என வாழ்த்துகிறேன். படத்திற்கு பின்னணி இசையே இல்லாமல் படத்தை இயக்கி என்னை செருப்பால் அடித்து விட்டான் இயக்குனர் வினோத்ராஜ். இப்படத்தை தயவு செய்து அனைவரும் சென்று பாருங்கள். எதெற்கோ பணம் செலவு செய்கிறோம் இப்படத்தையும் சென்று பார்க்க வேண்டும் என மக்களிடம் அன்போடு கேட்டுக்கொண்டார்."

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • புதிய சொகுசு கார் மாடல் விஜயின் வீட்டில் இருந்து வெளியே வந்தது.
    • விஜய் வீட்டில் இருந்து வந்த சொகுசு கார் எம்பிவி ரக மாடல் ஆகும்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் தற்போது தி கோட் (தி கிடேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தி கோட் படத்திற்கான பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த படத்தின் டிரைலர் அப்டேட்டுக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், நடிகர் விஜயின் புதிய ஆடம்பர சொகுசு கார் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இது தொடர்பான வீடியோவில் ஆடம்பர சொகுசு கார் மாடல் விஜயின் வீட்டில் இருந்து வெளியே வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விஜய் பயன்படுத்தி வரும் வாகனங்கள் பட்டியலில் இந்த காரும் தற்போது இணைந்து இருப்பதாக சமூக வலைத்தள பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    வைரல் வீடியோவில் இடம்பெற்று இருக்கும் கார் லெக்சஸ் LM சீரிஸ் மாடல் ஆகும். இந்திய சந்தையில் இந்த காரின் விலை ரூ. 2 கோடி (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்குகிறது. எம்பிவி ரக கார் என்ற வகையில், இந்த கார் ஏராளமான ஆடம்பர வசதிகளை கொண்டிருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விடுதலை, கருடன் படங்களைத் தொடர்ந்து சூரி கொட்டுக்காளி படத்தில் நடித்துள்ளார்.
    • கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • படக்குழு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, தற்பொழுது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

    இந்த நிலையில், தங்கலான் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது.

    திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலரும் படத்தின் பாடலான மேனா மினிக்கி மற்றும் தங்கலான் வார் சாங் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    திரைப்படம் வெளியாக இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் படக்குழு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    தற்பொழுது படத்தின் அடுத்த பாடலான அறுவடை என்ற பாடலின் வீடியோ பாடல் வெளியாகியது. இப்பாடலில் விக்ரமும் பாடியுள்ளார். பண்னையாரின் நிலத்தில் அறுவடை செய்துக் கொண்டே அவரவர் காதலியைப் பார்த்து பாடக்கூடிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    படத்தை குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    படத்தின் சவுண்ட் மிக்ஸிங்கும், இறுதி பதிப்பும் முடிவெடுக்கப்பட்டதாகவும் படத்தில் ஒளிப்பதிவாளர் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இயக்குனர், உதவி இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர் இடம் பெற்றுள்ளனர். அனைவரும் இப்படத்திற்காக ஆகஸ்ட் 15 தேதிற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கட்டிங் கேஸ் என்ற மலையாள படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
    • மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் உறுப்பினர்களுடன் சேர்ந்து 240 மரக்கன்று நட்டார்.

    தமிழில் சுந்தரபாண்டியன், பிகில், ஜிகர்தண்டா, தர்மதுரை, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என பல படங்களில் நடித்திருப்பவர் சௌந்தரராஜா. கட்டிங் கேஸ் என்ற மலையாள படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும், சாயாவனம் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    சினிமா மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலரான சௌந்தரராஜா இயற்கை வளத்தை மேம்படுத்தும் வகையில் ஏராளமான மரங்களை நட்டு வருகிறார். அந்த வகையில், சௌந்தரராஜா தனது பிறந்தநாள் மற்றும் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் 8 ஆம் ஆண்டு விழாவை நேற்று கொண்டாடினார்.

    இதையொட்டி காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் அருகே உள்ள தன்னூர் கிராமத்தில் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் உறுப்பினர்களுடன் சேர்ந்து 240  மரக்கன்று நட்டார். நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் 500 மரக்கன்றுகள் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பாக நடப்பட்டது. 6 மாதம் தொடர்ச்சியாக 5000 மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளார். நடுவது மட்டுமில்லாமல் அதை பராமரிக்கவும் முடிவு செய்துள்ளார்.

    இதுதவிர மரங்களை நடுவதற்கும் தனது அறக்கட்டளை உதவி செய்யும் என்று சௌந்தரராஜா அறிவித்துள்ளார். மக்கள் தங்களது ஊரில் மரங்களை நடுவதற்கு முன்கூட்டியே தகவல் கொடுத்தால், அவரது குழுவினர் குறிப்பிட்ட ஊரில் மரக்கன்று நடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

    நடிகர் சௌந்தரராஜா மீது கொண்ட அன்பிற்கும், சமூக அக்கறைக்கும் அவரது நண்பர் ஜேப்பியார் பேரன் ஜெய்குமார் (சத்தியபாமா பல்கலைக்கழகம்) மற்றும் அவரது மனைவி Dr சரண்யா ஜெய்குமார் ( Educational Psychologist ) விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தின் இந்தி மொழி ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது,
    • கல்கி திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

    மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்கு பிறகு நடக்கும் கதையாக அமைந்துள்ளது கல்கி. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டது.

    கல்கி திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இரண்டாம் பாகத்தை நோக்கி மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் இந்தி மொழி ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது, தென் இந்திய மொழி உரிமையை அமேசான் பிரைம் ஓடிடி தளம் வாங்கியுள்ளது.

    திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வரும் ஆகஸ்ட் 23 வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • திரைப்பட, ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது.

    நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி  வெளியாகவுள்ளது.

    கோட் திரைப்படம் குறித்து தினமும் ஒரு ஒரு அப்டேடுகளாக வந்த வண்ணம் உள்ளது. திரைப்பட, ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில் நுட்பத்திலும் வெளியாக இருக்கிறது. தற்பொழுது படத்தின் டிரைலரை குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

    அதில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா, படத்தின் மிக பிரமாண்டமான டிரைலர் தயார் ஆகிக்கொண்டு இருக்கிறது. எங்களுக்கு இன்னும் சில நாட்கள் கால அவகாசம் கொடுங்கள். படத்தின் டிரைலர் குறித்து நாளை அப்டேட் வரும் என தெரிவித்துள்ளார்.

    இதனால் ரசிகர்கள் டிரைலர் எப்பொழுது வெளியாகும் என எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • அறுவடை என்ற பாடலின் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

    இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, தற்பொழுது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

    இந்த நிலையில், தங்கலான் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது.

    திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலரும் படத்தின் பாடலான மேனா மினிக்கி மற்றும் தங்கலான் வார் சாங் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    திரைப்படம் வெளியாக இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் படக்குழு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    தற்பொழுது படத்தின் அடுத்த பாடலான அறுவடை என்ற பாடலின் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. பண்னையாரின் நிலத்தில் அறுவடை செய்துக் கொண்டே அவரவர் காதலியைப் பார்த்து பாடக்கூடிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    படத்தை குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சீனு ராமசாமி அடுத்ததாக கோழி பண்னை செல்ல துரை திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இசையை என்.ஆர் ரகுனாதன் மேற்கொள்ள படத்தை விஷன் சினிமா ஹவுஸ் ப்ரொடக்‌ஷன் தயாரித்துள்ளது.

    தமிழ் சினிமாவில் எதார்த்தமான வாழ்க்கை கதைகளை மிகவும் அழகாக எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. இவர் இதற்கு முன் இயக்கிய நீர் பறவை, தர்மதுரை, மாமனிதன் ஆகிய திரைப்படங்கள் மிகப் பெரியளவில் வெற்றிப் பெற்ற திரைப்படங்களாகும்.

    தர்மதுரை திரைப்படம் விஜய் சேதுபதி, ஐஷ்வர்யா ராஜேஷ் இருவருக்கும் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது.

    மாமனிதன் திரைப்படத்தை தொடர்ந்து சீனுராமசாமி அடுத்ததாக கோழி பண்னை செல்ல துரை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரிகிடா சகா மற்றும் ஏகன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

     பிரிகிடா சகா இதற்கு முன் இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன் ரியோராஜ் நடிப்பில் வெளிவந்த ஜோ படத்தில் ஏகன் நண்பன் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். படத்தின் இசையை என்.ஆர் ரகுனாதன் மேற்கொள்ள படத்தை விஷன் சினிமா ஹவுஸ் ப்ரொடக்ஷன் தயாரித்துள்ளது.

    படத்தின் ரிலீஸ் தேதியும் டீசரும் வரும் ஆக்ஸ்ட் 14 தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சித்தா படத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் நடிகை நிமிஷா சஜயன்.
    • சமீபத்தில் நடந்து முடிந்த சைமா விருது வழங்கும் விழாவில். சித்தா படத்திற்காக சிறந்த நடிகை விருதை வென்றார்

    சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் நடிகை நிமிஷா சஜயன்.

    தொடர்ந்து தமிழ், மலையாள படங்களில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நிறைமாத கர்ப்பிணியாக பழங்குடி பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .

    சமீபத்தில் நடந்து முடிந்த சைமா விருது வழங்கும் விழாவில் சித்தா படத்திற்காக சிறந்த நடிகை விருதை வென்றார். அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்கலங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

    இந்நிலையில் நிமிஷா சஜயன் தேசிய விருது வென்ற திரைக்கதை எழுத்தாளரான சஞ்சீவ் பழூர் இயக்கும் தமிழ்  படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு என்ன விலை என தலைப்பிட்டுள்ளனர். சஞ்சீவ் இயக்கும் முதல் திரைப்படம் இதுவே.

    இதற்குமுன் சஞ்சீவ் ஃபஹ்த் ஃபாசில் நடிப்பில் வெளிவந்து மாநில அரசு விருதை வென்ற திரைப்படமான தொண்டி முத்தாலும் திரிக்சாக்ஷியும் படத்திற்கு திரைக்கதை எழுதியவராவர்.

    என்ன விலை திரைப்படம் தமிழில் உருவாகவுள்ளது. திரில்லர் திரைப்படமாக உருவாகவுள்ளது. நிமிஷா சஜயனுடன் கருணாஸ், ஒய்.ஜி மகேந்திரன், ரஜேந்திரன், விஜயலட்சுமி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை கமலாலய பிலிம்ஸ் தயாரிக்க, சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடந்த நிலையில். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
    • சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

    கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றது. இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.

    இந்நிலையில், சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது. திரைப்படத்தில் இவர்கள் நடித்த கதாப்பாத்திரமான பாண்டி மற்றும் மீனா பற்றிய பதிவுகளை சில நாட்களுக்கு முன் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கலீடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    கொட்டுக்காளி திரைப்படம் சூரி நடிப்பில் வெளிவந்த விடுதலை மற்றும் கருடன் திரைப்படத்திற்கு முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும் என சூரி கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • திரைப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது.

    தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் பொதினேனி. தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் இவர் சமீபத்தில் வாரியர், ஸ்கந்தா போன்ற படங்களில் நடித்திருந்தார்.

    அதைத் தொடர்ந்து டபுள் ஐஸ்மார்ட் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது 2019ல் வெளியான ஐஸ்மார்ட் சங்கர் எனும் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது.

    இந்த படத்தை விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படம் இதுவே.

    இந்த படத்தை பூரி ஜெகன்நாத் தயாரிக்க மணி ஷர்மா படத்திற்கு இசையமைக்கிறார். இதில், காவியா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

    இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் ஒரு அராத்து ரவுடியாக நடித்துள்ளார் ராம் பொதினேனி. சஞ்சய் தத் மூளையை எடுத்து ராம் பொதினேனி மூளையையும் இடம் மாற்றுகின்றனர். இதற்கடுத்து என்ன ஆனது என்பதே படத்தின் கதை. திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    திரைப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் நேர அளவு 2 மணி நேரம் 42 நிமிடமாக உள்ளது. திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷனாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×