search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
    • இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

    இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் , துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள பகத் பாசில் தனது டப்பிங் பணிகளை ஏற்கனவே முடித்துவிட்டார். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ஃபகத் ஃபாசிலிற்கு வாழ்த்து தெரிவித்து படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

    துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் இப்படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். துஷாரா அவரது டப்பிங் பணிகளை சில நாட்களுக்கு முன் முடித்தார். அடுத்ததாக ரித்திகா சிங் அவரது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.

    அவர் டப்பிங் செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
    • படப்பிடிப்பு ஜூலை 26 ஆம் தேதி முதல் ஊட்டியில் நடைப்பெற்று வருகிறது.

    சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இயக்கி வருகிறார்.

    இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கி முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது.

    சில நாட்களுக்கு முன் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜூலை 26 ஆம் தேதி முதல் ஊட்டியில் நடைப்பெற்று வருகிறது. இதில் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

    உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அவருக்கு ஏற்பட்டது சிறிதளவான காயம் தான் என மருத்துவர்கள் கூறீயுள்ளனர். அவர் இப்பொழுது நலமாக உள்ளார் என தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன்.
    • படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்திருக்கிறார்.

    தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன். படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்திருக்கிறார்.

    சிம்ரன், பிரியா ஆனந்த் ,மனோபாலா சமுத்திரகனி, ஊர்வசி யோகி பாபு ,வனிதா விஜயகுமார் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் இன்று வெளியாகியது. பார்த்த மக்கள் அனைவரும் நல்ல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் பிரசாந்திற்கு நல்ல கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. சிம்ரன் மற்றும் ஊர்வசியின் நடிப்பு அபாரம்.

    அந்தாதூன் என்ற இந்தி திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தை சிறப்பாக அந்த உண்மை கதையின் சாயலை இழக்காமல் ரீமேக் செய்ததிற்கு படக்குழுவிற்கு பாராட்டுகள். படக்குழு இன்று காலை ரோகினி தியேட்டரில் ரசிகர்களுடன் படத்தை பார்த்தனர்.

    அதன் பிறகு பிரசாந்த், சிம்ரன் மற்றும் படக்குழுவினர் கமலா திரையரங்கில் இயக்குனர் மற்றும் எழுத்தாளர் சங்கத்திற்காக திரையிடப்பட்ட சிறப்பு காட்சியில் கலந்துக் கொண்டனர். அதில் பேசிய பிரசாந்த் படத்தை காண வந்த அனைவருக்கும் நன்றி எனவும், படக்குழு மற்றும் நடிகை நடிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். தன் அப்பாவும் படத்தின் இயக்குனரான தியாகராஜாவுக்கு நன்றி தெரிவித்தார்..

    எழுத்தாளர் மற்றும் இயக்குனர் சங்கத்தில் இருக்கும் நபர்களை அவரது குடும்பம் என்று சுட்டிக்காட்டினார். வரும் நாட்களில் திரைப்படம் வெகு மக்கள் வந்து பார்க்கும் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • கடந்த மே 20 ஆம் தேதி என்.டி.ஆர் பிறந்தநாள் அன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது.
    • இந்நிலையில் 'NTR-31' படம் இன்று பூஜையுடன் துவங்க உள்ளது

    கே.ஜி.எப் படங்கள் மூலம் இந்திய திரைத்துறையை கர்நாடகாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பிரசாந்த் நீல் அடுத்தடுத்த படங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கே.ஜி.எப் படத்தின் 3 ஆம் பாகத்தில் அஜித் குமார் இணையலாம் என்று வைரலாக பேசப்பட்டது.

    இதற்கிடையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதநாயகன் ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாக கடந்த மே 20 ஆம் தேதி என்.டி.ஆர் பிறந்தநாள் அன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது.

    இந்நிலையில் 'NTR-31' படம் இன்று பூஜையுடன் துவங்க உள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமானது 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்களை விரைவில் படக்குழு முடிவு செய்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதற்கிடையில், கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர்.என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள 'தேவரா', படம் வரும் அக்டோபர் 10 அன்று வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இன்று மதியம் 12.07 மணிக்கு புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது
    • அஜித் நடிக்கும் 62 - வது படமாக இது உருவாகி வருகிறது.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித் நடிக்கும் 62 - வது படமாக இது உருவாகி வருகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர் இவர்களுடன் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இதுதவிர பல்வேறு பகுதிகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் 12.07 மணிக்கு புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் முக்கிய  கதாபத்திரத்தில் நடிக்கும் பிக் பாஸ் புகழ் ஆரவின் புதிய போஸ்டரை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அர்ஜெய் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கின்றார்.
    • இந்த படத்திற்கு அஸ்வத் இசையமைக்கிறார்.

    தமிழ் திரையுலகில் புதிய முயற்சியாக உருவாகும் GANGSTER-FANTASY படத்தை ஸ்மால் ஃபாக்ஸ் ஸ்டூடியோ (Small Fox Studio) நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்த படத்தில் அர்ஜெய் - லிங்கா இணைந்து கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர். முன்னதாக தெறி, சுல்தான், அண்ணாத்த, சண்டக்கோழி - 2, எமன், அன்பறிவு, தேள்,  போன்ற படங்களில் மிரட்டிய அர்ஜெய் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கின்றார்.

    அதுபோல் "சேதுபதி" படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த லிங்கா அதன்பிறகு அதே கண்கள், ஹர ஹர மஹாதேவகி, கருப்பன், கஜினிகாந்த், சிந்துபாத், மிக மிக அவசரம், வி1, பெங்குயின், அனபெல் சேதுபதி, பரோல், டிஎஸ்பி, உடன்பால் என பல்வேறு படங்களில் மிரட்டிய லிங்கா இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கின்றார்.

    தமிழ் சினிமாவில் பெரும் வெற்றி பெற்ற பல படங்களில் நடித்த அர்ஜெய் மற்றும் லிங்கா கூட்டணி தற்போது புதிய படத்தில் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் உள்ளிட்ட பணிகளை அறிமுக இயக்குநர் கௌதம் செல்வராஜ் மேற்கொள்கிறார். F.I.R, இன்ஸ்பெக்டர் ரிஷி, படத்தின் புகழ் அஸ்வத் அவர்கள் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

    ஒளிப்பதிவு பிரேண்டன் ஷசாந்த். கேங்ஸ்டர் ஃபேண்டஸி படத்தில் ஜெயக்குமார், சரத் ரவி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
    • தி கோட் படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

    தி கோட் படத்தின் டிரைலர் ஆக்ஸ்ட் மாதத்தின மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தி கோட் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. அதில் தி கோட் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கோட் படத்தின் புதிய அப்டேட் உடன் படத்திற்கான போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் எப்போது வெளியாகும் என்று காத்துக் கொண்டுள்ளனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
    • கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

    தென்னிந்திய திரை உலகில், அனைவராலும் அறியப்பட்ட ஹீரோயினாக மாறி உள்ளவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர்

    இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான அட்டகத்தி திரைப்படம் ஒரு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது.

    இதன் பின்னர் புத்தகம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்மி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் பண்ணையாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ், போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு.. 'காக்கா முட்டை' திரைப்படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.


    தற்போது தமிழ் படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.


    அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான ஃபர்ஹானா திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதை பெற்றார். தற்போது கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் கொலைகள் நடுங்க, போன்ற தமிழ் படங்களிலும் இரண்டு மலையாள படங்கள் மற்றும் ஒரு கன்னட திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.


    சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வபோது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். பெரிதும் கவர்ச்சியில் ஆர்வம் காட்டாத இவர் தற்போது கிளாமர் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    • நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன்.
    • முதல் பதிப்பை விட இரண்டாம் பதிப்பில் கூடுதல் கிராபிக்ஸ் காட்சிகள் வைத்திருக்கிறார்கள்.

    திரைப்பட துறையில் யாரும் எதிர்பாராமல் வெற்றி பெற்ற படங்கள் ஏராளம் உண்டு. அத்தகைய படங்கள் பெரும்பாலும் நம்பிக்கை என்ற ஒற்றை அடிப்படையில் தான் உருவாக்கப்படுகின்றன.

    இதைத் தொடர்ந்து சிறப்பான கதை மற்றும் தொழில்நுட்ப குழுவின் நேர்த்தியான படைப்பு தான் அதை வெற்றி படமாக மாற்றும்.

    அந்த வரிசையில் "மாயன்" திரைப்படம் நிச்சயம் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன். இந்த படம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் வெளியிடப்பட உள்ளது. 

    ஃபேண்டஸி, திரில்லர் மற்றும் வரலாறு என மூன்றுவித ஜானரில் நகரும் வகையில், இந்த படத்தின் கதை எழுதப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.

    இந்த படத்தின் 50 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டு உள்ளன.

    2 பதிப்புகளாக மாயன் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஒன்று, மாயன் காலண்டர் மற்றும் உலகின் முடிவு பற்றியும், இரண்டு, உலகம் அழிந்ததா இல்லையா? மாயனுக்கும் கடவுளுக்கும் என்ன சம்மந்தம் என்பது பற்றி உருவாக்கி இருக்கிறார்கள்.

    முதல் பதிப்பை விட இரண்டாம் பதிப்பில் கூடுதல் கிராபிக்ஸ் காட்சிகள் வைத்திருக்கிறார்கள்.

    ஜெ.ராஜேஷ் கன்னா எழுதி, இயக்கி இருக்கும் "மாயன்" படத்தை ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ஜி.வி.கே.எம். எலிபன்ட் பிக்சர்ஸ் டாட்டோ கணேஷ் மோகன சுந்தரம் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளார். 

    இந்த படத்தில் வினோத் மோகன் மற்றும் பிந்து மாதவி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆங்கில பதிப்பில் பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

    இவர்கள் தவிர பியா பாஜ்பாய், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், சாய் தீனா, கஞ்சா கருப்பு, ராஜ சிம்மன், ஶ்ரீ ரஞ்சனி, ரஞ்சனா நாச்சியார், கே.கே. மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு எம்.எஸ். ஜோன்ஸ் ரூபெர்ட் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கே. அருண் பிரசாத், படத்தொகுப்பு பணிகளை எம்.ஆர். ராஜேஷ் மேற்கொண்டுள்ளனர். கலை இயக்க பணிகளை ஏ. வனராஜ் மேற்கொண்டுள்ளார்.

    இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

    • தங்கலான் திரைப்படத்தில் ஆரத்தி என்கிற கேரக்டரில் மாளவிகா நடித்துள்ளார்.
    • தங்கலான் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

    கேரளாவில் இருந்து கோலிவுட் வந்து பேமஸ் ஆன நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்தின் வெற்றிக்கு பின்னர் மாளவிகாவுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.


    மாஸ்டர் படமும் ஹிட்டானதால் கோலிவுட்டில் நட்சத்திர நாயகியாக வலம் வந்தார் மாளவிகா. தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.

    தங்கலான் திரைப்படத்தில் ஆரத்தி என்கிற கேரக்டரில் மாளவிகா நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.


    இந்நிலையில் தங்கலான் புரமோஷனின் போது டார்க் ரெட் கலர் சேலையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் அள்ளுகிறது.

    • வினேஷ் போகத் உடல் எடை 100 கிராம்கள் வரை கூடி இருந்ததாக தகுதி நீக்கம்.
    • கடினமான நேரங்களே வலிமையான மனிதர்களை உருவாக்குகின்றன.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில், மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில் வென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதியில் வென்று, இறுதிப்போட்டிக்கு நுழைந்தார்.

    ஆனால், வினேஷ் போகத் உடல் எடை 100 கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    மேலும், மல்யுத்தம் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவித்தார்.

    இதனால், வினேஷ் போகத்திற்கு இந்தியாவில் ஆதரவு பெருகி வருகிறது.

    இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வினேஷ் போகத் வென்றார். ஆம், மில்லியன் கணக்கான இதயங்களை வென்றுள்ளார். கடினமான நேரங்களே வலிமையான மனிதர்களை உருவாக்குகின்றன. நீங்கள் தனியாக இல்லை.. எது வந்தாலும் நாங்கள் அனைவரும் உங்களுடன் நிற்கிறோம். உறுதியாக இருங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ்.ஜே சூர்யா மற்றும் பலர் நடித்து வெளியாகியது இந்தியன் 2 திரைப்படம்.
    • பிரியா பவானி சங்கர் அடுத்ததாக டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ்.ஜே சூர்யா மற்றும் பலர் நடித்து வெளியாகியது இந்தியன் 2 திரைப்படம். வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இப்படத்தின் தோல்விக்கு காரணம் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்தது தான் என்றும், அவரது துரதிஷ்டம் தான் காரணம், என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர். பிரியா பவானி சங்கர் நடித்த பொம்மை, அகிலன், ருத்ரன், ரத்னம், இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை.

    நெட்டிசங்களின் கமெண்டை குறித்து பிரியா சமீபத்தில் நடந்த நேர்காணலில் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில் " திரைப்படம் நன்றாக ஓடாதத்துக்கு காரணம் முழுக்க, முழுக்க என்னை காரணம் சொல்வது நியாயம் இல்லை, என்னை துரதிஷ்டசாலி என்று கூறும் பொழுது மிகவும் மனக்கஷ்டத்துக்கு ஆளானேன். இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்ததற்கு நான் எந்த விதத்திலும் வருத்தப்படமாட்டேன். " என்று கூறியுள்ளார். கூடுதலாக அடுத்தாண்டு அவருக்கு அவருடைய காதலரான ராஜ வேலை திருமணம் செய்யப்போவதாக கூறியுள்ளார்.

    பிரியா பவானி சங்கர் அடுத்ததாக டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×