search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • கே.ஜி.எஃப் திரைப்படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.
    • கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தை தொடர்ந்து டாக்ஸிக் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

    யாஷ் கன்னட சினிமாவின் முன்னணி நடிகராவார். ராக்கி என்ற கன்னட திரைப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகினார். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

    கே.ஜி.எஃப் திரைப்படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ். அப்படத்திற்கு பிறகு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

    கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தை தொடர்ந்து டாக்ஸிக் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்கவுள்ளார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நட்க்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

    படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜை விழாவுடன் தொடங்கப்பட்டது. இதுக்குறித்து பூஜை விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் அவர்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

    இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த பூஜை விழாவில் நடிகர் யாஷ் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கலந்துக்கொண்டார். இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது என குறிப்பிடத்தக்கது.

    படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்து விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் எடுக்கப்பட்ட யாஷின் புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'போகும் இடம் வெகுதூரமில்லை'
    • ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'போகும் இடம் வெகுதூரமில்லை' படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் விமல் ஆம்புலன்ஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெருக்கூத்து கலைஞராக கருணாஸ் நடித்துள்ளார். அரசியல் புள்ளி ஒருவர் இறந்துவிட அவரது உடலை ஏற்றிக்கொண்டு அவர் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் களக்காடை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் விமல்.

    ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் நிலையில் விமல் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மன அழுதத்தில் அரசியல் பிரமுகர் உடலை ஏற்றி சென்று கொண்டிருக்கும் விமல் ஆம்புலன்சை வழிமறித்து கருணாஸ் ஏறுகிறார்.

    மன அழுத்தத்தில் சென்று கொண்டிருக்கும் விமலின் அருகில் அமர்ந்து கொண்ட கருணாஸ் வள வளவென பேசிக் கொண்டே வருகிறார். இது ஒருபுறமிருக்க மரணமடைந்த அரசியல் புள்ளிக்கு இரண்டு மனைவிகள். இருவருக்கும் ஆளுக்கொரு ஆண் பிள்ளைகள். இவர்களால் யார் தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்வது என்பது பற்றி குடும்பத்தில் தகராறு ஏற்படுகிறது.

    இதையொட்டி நடந்தது என்ன? என்பது தான் படத்தின் கதை. சில மாதங்களுக்கு முன் படத்தின் டிரெய்லர் வெளியாகி வலைதளங்களில் வரவேற்பை பெற்றது.

    தற்பொழுது படத்தில் ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இன்று பிறந்த நாள் கொண்டாடும் பகத் பாசிலுக்கு வேட்டையன் படக்குழு வாழ்த்து
    • பகத் பாசில் புகைப்படத்தை வேட்டையன் படக்குழு பகிர்ந்துள்ளது.

    'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

    இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள பகத் பாசில் தனது டப்பிங் பணிகளை ஏற்கனவே முடித்துவிட்டார். இந்த அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

    இந்நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் பகத் பாசிலுக்கு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வேட்டையன் படக்குழு வாழ்த்து தெரிவித்திருந்தது.

    தற்போது ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் என்ற இரு சூப்பர் ஸ்டார்களுக்கு மத்தியில் பகத் பாசில் இருக்கும் புகைப்படத்தை வேட்டையன் படக்குழு பகிர்ந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நாக சைதன்யா அடுத்த திருமணத்திற்கு தயாராகி இருக்கிறார்.
    • நாக சைதன்யா, சமந்தா கடந்த 2021 ஆண்டு பிரிந்தனர்.

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் ஆவார். தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள நாக சைதன்யா நடிகை சமந்தாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

    எனினும், தவிர்க்க முடியாத காரணங்களில் திருமண வாழ்வில் பிரிவிதாக நாக சைதன்யா மற்றும் சமந்தா முறையே அறிவித்தனர். இந்த ஜோடி கடந்த 2021 ஆம் ஆண்டு பிரிந்த நிலையில், நாக சைதன்யா அடுத்த திருமணத்திற்கு தயாராகி உள்ளார்.

    அதன்படி நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபலா திருமண நிச்சயதார்த்தம் இன்று காலை நடைபெற்றது. இருவருக்கும் நடிகர் நாகர்ஜூனாவின் வீட்டில் வைத்து எளிய முறையில் நிச்சியதார்த்த விழா நடைபெற இருப்பதாக தெரிகிறது. இதில் இருவீட்டாருக்கு நெருக்கமானவர்கள் மட்டும் கலந்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கனா காணும் காலங்கள் சீரியல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
    • கனா காணும் காலங்கள் வெப் தொடராக வெளியாகி வருகிறது.

    'கனா காணும் காலங்கள்' முதலில் தனியார் தொலைக்காட்சியில் ஒரு சீரியலாக ஒளிபரப்பப்பட்டது. பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பள்ளி வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் கதைக்களம், மக்கள் மத்தியில் உடனடி ஈர்ப்பை ஏற்படுத்தியதுடன், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

    இதைத் தொடர்ந்து உருவான கனா காணும் காலங்கள் வெப் சீரிஸின் முதல் சீசனுக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது. இதனால் அடுத்தடுத்த எபிசோடுகளுக்காக ரசிகர்களிடமிருந்து பெருமளவிலான கோரிக்கைகள் குவிந்தது. இதையடுத்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், கடந்த ஆண்டு ஏப்ரல் 21 அன்று, இந்த சீரிஸின், இரண்டாவது சீசனை வெளியிட்டது.

    இரண்டாம் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம், பள்ளி மாணவர்களை மையமாக வைத்து உருவாகும், இந்த சீரிஸின் மூன்றாவது சீசனை வெளியிட முடிவு செய்துள்ளது.

    முதல் மற்றும் இரண்டாவது சீசன்களைப் போலவே, இந்த சீசனும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன், இன்றைய மாணவர்களின் வாழ்வின் மகிழ்ச்சிகள், கண்ணீர், அச்சங்கள், ஆச்சரியங்கள், வலிகள் மற்றும் சிலிர்ப்புகள் என அனைத்தையும் படம்பிடித்துக் காட்டும்படி உருவாகவுள்ளது.

    இந்த சீரிஸில் நடிக்கவுள்ள நடிகர்கள், குழுவினர் மற்றும் இந்த சீரிஸ் பற்றிய விவரங்களை, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணிகளை பகத் பாசில் முடித்துவிட்டார்.
    • இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

    இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள பகத் பாசில் தனது டப்பிங் பணிகளை ஏற்கனவே முடித்துவிட்டார். இந்த அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

    இந்நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் பகத் பாசிலுக்கு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வேட்டையன் படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நம்ப வேண்டாம் என்று லைகா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
    • அறிவிப்புகள் லைகா அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியாகும்.

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனம் லைகா. பல்வேறு பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிலையில், லைகா நிறுவனத்தின் புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வழங்குவதாக கூறும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று லைகா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லைகா புரொடக்ஷன்ஸில் நடிக்க வாய்ப்பு தருவதாக பலர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அழைப்புகளை விடுப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. லைகா தயாரிக்கும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அல்லது ஆடிஷன் பற்றிய அறிவிப்புகள் எங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியாகும்."

    "நாங்கள் அறிவிக்காத ஆடிஷன் மற்றும் வாய்ப்பு வழங்குவதாக கூறும் தகவல்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் மேற்கொள்ளப்படும் கேஸ்டிங் அழைப்புகள் மற்றும் ஆடிஷன்களுக்கு அழைப்பு விடுக்கும் மூன்றாம் தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாக இருங்கள்," என்று தெரிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம்.
    • மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு நடிகை நயன்தாரா ஆறுதல் தெரிவித்துள்ளார்.

    ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இறுதிப்போட்டி இன்று இரவு நடைபெறவுள்ள நிலையில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    ஆனால், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்நிலையில், ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு நடிகை நயன்தாரா ஆறுதல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "தலை நிமிர்ந்து நடங்கள் போராளியே. நீங்கள் பலரை ஊக்குவித்திருக்கிறீர்கள். உங்கள் மதிப்பு வெற்றிகளால் அளக்கப்படுவதல்ல. சாதனைகளை முறியடிக்கும் வகையிலான அன்பை நீங்கள் சேகரித்திருக்கிறீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஆர்யா நடிக்கவுள்ளார்.
    • மார்க் ஆண்டனி படத்தை தயாரித்த வினோத குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

    நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படத்திற்கான தகவல் வெளிவந்துள்ளது. ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் 'ரன் பேபி ரன்' திரைப்படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஆர்யா நடிக்கவுள்ளார்,

    மலையாளத்தின் பிரபல கதை ஆசிரியரான முரளி கோபி இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இவர் கதையில் உருவான லூசிபர் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

    மார்க் ஆண்டனி படத்தை தயாரித்த வினோத குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

    மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது,

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஐ.பி. முருகேஷ் இயக்கியுள்ளார்.
    • இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர், 'மண்டேலா' படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக யோகி பாபு நடிப்பில் 'போட்' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், 'மண்ணாங்கட்டி, வானவன் மற்றும் ஜோரா கைய தட்டுங்க' போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    இதற்கிடையில், 2022-ம் ஆண்டு யோகி பாபு மற்றும் லட்சுமி மேனன் ஆகியோர் இணைந்து மனிதநேயம் மற்றும் இயற்கையை பற்றி கூறும் ஒரு கிராமப்புற படத்தில் நடித்துள்ளனர். லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு 'மலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் காளி வெங்கட், சிங்கம்புலி, ராமச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தில் லட்சுமி மேனன் நகரத்திலிருந்து கிராமத்துக்குச் செல்லும் மருத்துவராக நடித்துள்ளார். யோகி பாபு வேட்டைக்காரனாகவும், நடிகர் காளி வெங்கட் வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தினை இயக்குனர்கள் சுசீந்திரன் மற்றும் சீனு ராமசாமி ஆகியோரின் உதவியாளரான அறிமுக இயக்குனர் ஐ.பி. முருகேஷ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

    தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, படக்குழுவினர் இது குறித்த அப்டேட்டை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு.
    • பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் அடுத்த தொகுப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

    கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் திடீரென இம்முடிவை எடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், " 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சினிமா பணிகள் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் அடுத்த தொகுப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    முந்தைய சீசன்களில், கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவருக்கு பதில் நடிகர் சிம்புவும், மற்றொரு எப்பிசோடில் ரம்யா கிருஷ்ணனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். 

    அதனால், கமல் பிக்பாஸில் இருந்து விலகியதை அடுத்து நடிகர் சிம்பு பிக்பாஸ் 8 சீசனை தொகுத்து வழங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    இதேபோல், நடிகர் விஜய் சேதுபதியும் பிக்பாஸ் சீசன் 8 தொகுத்து வழங்க அதிகளவில் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    7 சீசனுக்கு பிறகு, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகும் புதிய தொகுப்பாளர் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    • உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் 23 'சாலா' வெளியாகிறது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, 'சாலா' எனும் நேரடி தமிழ் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

    டி.ஜி.விஷ்வபிரசாத் தயாரிப்பில், விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ்.டி. மணிபால் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்திற்காக இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் போராட்டத்தை விறுவிறுப்பு குறையாமல் விவரிக்க உள்ளது.

    சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பார்வை பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து 'சாலா' டிரைலரை ஆகஸ்ட் 3 அன்று அல்லு அர்ஜுன் வெளியிட்டார்.

    இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் 23 'சாலா' வெளியாகிறது.

    'சாலா' படத்தில் தீரன் (அறிமுகம்), ரேஷ்மா வெங்கடேசன் (அறிமுகம்), 'மெட்ராஸ்' புகழ் சார்லஸ் வினோத், அருள்தாஸ், ஸ்ரீநாத், சம்பத் ராம், மற்றும் ஐடி அரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    'சாலா' படப்பிடிப்பு நிறைவடைந்து சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வாங்கி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்கு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

    இந்நிலையில், திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் மணிபால், "வட சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள ஒரு மதுபானக் கூடம் தான் 'சாலா' படத்தின் மையக்கரு.

    இந்த பாரை கைப்பற்ற சக்தி வாய்ந்த இரு குழுக்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே, மதுக்கடையே இருக்கக் கூடாது என்று பெண் ஆசிரியர் ஒருவர் கடும் போராட்டத்தை முன்னெடுக்கிறார். இந்த மூன்று தரப்புக்கு இடையே நடக்கும் மோதல்களை காரம் சாரம் குறையாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறோம்," என்றார்.

    ×