search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன்.
    • படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற 9-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.

    தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அந்தகன். படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்திருக்கிறார்.

    சிம்ரன், பிரியா ஆனந்த் ,மனோபாலா சமுத்திரகனி, ஊர்வசி யோகி பாபு ,வனிதா விஜயகுமார் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற 9-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது.

    இதையொட்டி படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

    விழாவில் தியாகராஜன் ,பிரசாந்த், சமுத்திரகனி, சிம்ரன், வனிதா விஜயகுமார், பெசன்ட் ரவி, சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் சமுத்திரகனி பேசியதாவது:-

    நான் தியாகராஜனின் தீவிர ரசிகன். நான் தியேட்டரில் ஆபரேட்டராக பணிபுரிந்து கொண்டிருந்த போதே மலையூர் மம்பட்டியான் படத்தை போட்டு பார்த்து ரசித்திருக்கிறேன்.

    அவர் மீது எனக்கு எப்போதும் ஒரு பயம் உண்டு. திடீரென நண்பர் ஒருவர் எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தியாகராஜன் உங்களிடம் பேச வேண்டுமாம் என்று கூறினார்.

    ஏன் எதற்கு என்று கேட்பதற்குள் தியாகராஜனிடம் போனை கொடுத்து விட்டார். அவர் எடுத்ததும் நான் தியாகராஜன் பேசுகிறேன் சார் என்று கூறினார். அதைக் கேட்டதும் நான் உடனடியாக நேரில் வரட்டுமா என்றேன்.

    பின்னர் விஷயத்தை கூறி படத்தில் நடிப்பதற்கு அழைத்தார். உடனடியாக சம்மதித்து படத்தில் நடித்தேன்.

    அன்று முதல் பிரசாந்துடன் எனக்கு நல்ல நட்பு இருந்து வருகிறது. இருவரும் ஐயா என்று தான் அழைத்துக் கொள்வோம்.

    படப்பிடிப்பில் ஒரு நாள் வனிதா விஜயகுமார் கெட்ட கெட்ட வார்த்தைகளால் என்னை சரமாரியாக திட்டினார். தாங்க முடியாமல் நான் தியாகராஜனிடம் வனிதா ஏன் என்னை இப்படி திட்டுகிறார்?என்று கூறினேன்.

    அவர் சிரித்துக் கொண்டே பதில் அளிக்கையில், நான் காட்சிக்காக கொஞ்சம் அவரை திட்டு என்றேன். அவர் வாய்க்கு வந்தபடி கெட்ட வார்த்தைகளால் எப்படியெல்லாம் பேச வேண்டுமோ அப்படி எல்லாம் பேசி முடித்து விட்டார் என்று கூறினார்.

    இவ்வாறு சமுத்திரக்கனி கூறியதும் தியாகராஜன் உள்பட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

    இதையடுத்து மேடையில் அமர்ந்திருந்த வனிதா விஜயகுமாரிடம் சமுத்திரக்கனியை திட்டும்போது யாரை மனதில் வைத்துக் கொண்டு திட்டினீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் அளித்த பதிலில், என் அப்பாவை மனதில் நினைத்துக் கொண்டேன். உடனடியாக என் மனதில் தோன்றியவற்றையெல்லாம் திட்டி தீர்த்து விட்டேன். என் தந்தையும் அந்த அளவுக்கு நடிப்போடு ஒன்றிப் போய் விடுவார். அவர்தான் என் முன்மாதிரி என்று கூறினார்.

    இந்த சம்பவத்தால் அந்தகன் பட விழா அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2016 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சௌதர் ராஜன் இயக்கத்தில் வெளியாகியது மிருதன் திரைப்படம் .
    • மிருதன் 2 படப்பிடிப்பு பணிகள் 2025 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2016 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சௌதர் ராஜன் இயக்கத்தில் வெளியாகியது மிருதன் திரைப்படம் . இப்படத்தில் ஜெயம் ரவியுடன் லட்சுமி மேனன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    இப்படம் சாம்பி அபோகாலிப்ஸ் கதைக்களத்தில் உருவாகிய முதல் திரைப்படமாகும், ஊரில் ஒரு விஷ திரவம் பரவியதால் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் சாம்பிகளாக மாற தொடங்குகின்றனர். படத்தின் இறுதியில் கதாநாயகனான ஜெயம் ரவியும் அந்த திரவத்தினால் பாதிக்கப்பட்டு சாம்பியாக மாறிடுவார்.

    இவ்வாறு படத்தின் கதைக்களம் அமைந்து இருக்கும்.

    இப்படத்தின் அடுத்த பாகம் எடுக்கபோவதாக 2016 ஆம் ஆண்டு தெரிவித்து இருந்தாலும். இப்பொழுது தான் அதற்கான ப்ரி ப்ரொடக்ஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். படப்பிடிப்பு பணிகள் 2025 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் நடிக்கப் போகும் மற்ற நடிகர்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எதிர் பார்க்கப்படுகிறது.

    சக்தி சௌந்தர் ராஜன் இயக்குனருடன் ஜெயம் ரவி இணையும் மூன்றாவது திரைப்படமாகும். ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஹேமந்த் ராவ் இயக்கத்தில் ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் கன்னட திரைப்படமான சப்த சாகரதாச்சே எல்லோ.
    • பிலிம் ஃபேர் சவுத் விருதுகளில் இப்படம் 6 விருதுகளை வென்றது குறிப்பிடதக்கது.

    ஹேமந்த் ராவ் இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் கன்னட திரைப்படமான சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் ஏ மற்றும் பி கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

    படத்தில் ரக்ஷித் ஷெட்டியுடன் ருக்மணி வசந்த மற்றும் சைத்ரா நடித்து இருந்தனர். கன்னடத்தில் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றதால் படத்தின் இரண்டாம் பாகத்தை தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட்டனர், தமிழில் ஏழு கடல் தாண்டி என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

    காதலுக்காக ஒருவன் எந்தளவு தியாகம் செய்ய முடியும், காதலிக்காக தன் வாழ்க்கையை அற்பணிக்கும் நாயகனின் கதையாக இது அமைந்தது. திரைப்படம் தற்பொழுது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.

    சமீபத்தில் நடந்த பிலில் ஃபேர் சவுத் விருதுகளில் இப்படம் 6 விருதுகளை வென்றது குறிப்பிடதக்கது.

    சப்த சாகரதாச்சே எல்லோ படம் வென்ற விருதுகள்

    சிறந்த நடிகர் - ரக்ஷித் ஷெட்டி, சிறந்த இயக்குனர் - ஹேமந்த் ராவ், சிறந்த நடிகர் - ருக்மணி வசந்த், சிறந்த பின்னணி பாடகர் - கபில் கபிலன், சிறந்த பின்னணி பாடகி - ஸ்ரீலட்சுமி பெல்மன்னு , சிறந்த இசையமைப்பாளர் - சரண் ராஜ் .

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

    ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியுடன் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்." இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

    இந்நிலையில் படத்தை குறித்து இயக்குனர் விஜய் மில்டன் ஒரு புகாரை வைத்தார். படத்தின் தொடக்கத்தில் வரும் இரண்டு நிமிட காட்சி எனக்கே தெரியாமல் தயாரிப்பாளர் சேர்த்துள்ளார். இது என் படத்தின் கதையை கெடுத்துள்ளது. தயவு செய்து படம் பார்ப்பவர்கள் அந்த 1 நிமிட காட்சியை மறந்துவிட்டு பார்க்கும் படி கேட்டுக் கொண்டார்.

    இந்த பிரச்சனை தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது, அதாவது தயாரிப்பாளரும், இயக்குனரும் சமரசம்  பேசி படத்தின் தொடக்கத்தில் வந்த 1 நிமிட காட்சியை நீக்கியுள்ளனர். இது குறித்து விஜய் மில்டன் வீடியோ பதிவிட்டுள்ளார், அதில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளாது. அனைவருக்கும் நன்றி. இந்த பிரச்சனையை சமரசம் செய்து வைத்த சரத்குமார் சாருக்கு ரொம்ப நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் விஜய் ஆண்டனி இதனை ஆதரிக்கும் வகையில் அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மழை பிடிக்காத மனிதன் துவக்கத்தில் வரும் இரண்டு நிமிடக்காட்சியை, தனது ஒப்புதல் இல்லாமல் யாரோ இணைத்து உள்ளதாக என் நண்பர் , படத்தின் இயக்குனர் திரு. விஜய் மில்டன் வருத்தம் தெரிவிருந்தார். அது நான் இல்லை. இது சலீம் 2 இல்லை. என்று அப்பதிவில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ் மித்ரன் கூட்டணியில் வெளியாகிய படம் சர்தார்.
    • சர்தார் 2 படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ் மித்ரன் கூட்டணியில் வெளியாகிய படம் சர்தார். இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சரஸ் நிறுவனம் தயாரித்தது.

    கார்த்தி இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார். கார்த்தியுடன் ராஷி கன்னா, லைலா, முனிஷ்காந்த், மற்றும் பலர் நடித்து இருந்தனர்.

    இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சர்தார் 2 திரைப்பத்தின் பூஜையுடன் கடந்த மாதம் துவங்கியது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இடையே படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சி கலைஞர் ஒருவர் விபத்துக்குள்ளாகி காலமானார். இதனால் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்திவைக்கப்பட்டது.

    சமீபத்தில் படக்குழு கொடுத்த தகவல்படி இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.

    தற்பொழுது நடிகை ஆஷிகா ரங்கநாத் படத்தில் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    ஆஷிகா ரங்கநாத் கன்னட திரைப்படமான க்ரேசி பாய் திரைப்படத்தில் நடித்து சினிமாவில் நடிகையாக  அறிமுகமாகினார். பின் பல கன்னட திரைப்படங்களில் நடித்து. 2022 ஆம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான பட்டத்து அரசன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். சித்தார்த் நடிப்பில் வெளிவர இருக்கும் மிஸ் யூ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நாணி நடிப்பில் வெளிவந்த தசாரா திரைப்படம் 6 பிலிம் ஃபேர் விருதுகளை வென்றது.
    • 69வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

    69வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட சினிமாவில் உள்ள சிறந்த நடிகர், நடிகை, இசையமைப்பாளர், இயக்குனர் உள்ளிட்ட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில், நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த தசாரா திரைப்படம் 6 விருதுகளை வென்றது. சிறந்த முன்னணி நடிகர் விருதை இந்த படத்திற்காக நானி பெற்றார்.

    அப்போது நானி விருதை வாங்கிக்கொண்டு சில விஷயங்களை பகிர்ந்தார் அதில் " என்னை தசரா படத்திற்கு சிறந்த நடிகராக தேர்வு செய்த நடுவர்களுக்கு மிகவும் நன்றிகள். படத்தின் இயக்குனருக்கும், கடலென் அன்பை பொழியும் மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்" என்று கூறினார்.

    மேலும் " 2023 ஆம் ஆண்டு தசாராவில் ஆரம்பித்து ஹை நானா திரைப்படத்தில் முடிந்தது. இந்த இரண்டு படமும் மிக முக்கியமான திரைப்படம் . இரண்டு படமுமே ரெண்டு எதிர்வினையான கதாப்பாத்திரங்கள். எனக்கு இந்த விழா ஒரு நண்பர்களின் ரீயூனியன் போல் தோன்றுகிறது, இரண்டு படத்தில் நடித்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் இங்கு இருக்கிறார்கள். இந்த விருது இவர்களின் கூட்டு முயற்சியால் கிடைத்தது".

    தசரா படத்தின் இயக்குனரான ஸ்ரீகாந்துடன் மீண்டும் மற்றொரு படத்ட்தில் கமிட் ஆகியுள்ளார் நானி. அந்தப் படம் இன்னும் பிரம்மாண்டமாகவும் , பல விருதுகளை வெல்லும்" என்று கூறினார்.

    " நான் அறிமுகம் செய்த இயக்குனர் மற்றும் டெக்னிஷியன்ஸ் விருது வெல்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் நிறைய என சக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இதுப்போல விருதுகளை வெல்ல வேண்டும்" என்று கூறினார்.

    தசரா திரைப்படத்திற்கு கிடைத்த விருதுகள்

    *சிறந்த முன்னணி நடிகர் - நானி (தசரா)

    *சிறந்த முன்னணி நடிகை - கீர்த்தி சுரேஷ் (தசரா)

    *சிறந்த அறிமுக இயக்குனர் - ஸ்ரீகாந்த் ஒடேலா (தசரா)

    மேலும், இப்படத்திற்காக கோலா அவினாஷ், சத்யன் சூரியன் மற்றும் பிரேம் ரக்ஷித் ஆகியோரும் விருது பெற்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷ் இயக்கி மற்றும் நடித்து கடந்த வாரம் வெளியாகியது ராயன் திரைப்படம்.
    • வெளியாகி ஒரு வாரத்திலேயே 116 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தனுஷ் இயக்கி மற்றும் நடித்து கடந்த வாரம் வெளியாகியது ராயன் திரைப்படம். படம் வெளியானதில் இருந்து மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

    தனுஷுடன் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தில் தனுஷுக்கு தங்கையாக நடித்து இருந்தார் துஷாரா விஜயன்.

    இதுவரை தனுஷ் நடித்து வெளியான படங்களில் இப்படத்தின் வசூல் முதலிடத்தை பெற்றுள்ளது. திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்திலேயே 116 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் அபர்ணா முரளி இடையே உள்ள காதல் மிக அழகாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளில் இவர்கள் வரும் காட்சிகளுக்கு விசில் பறக்கிறது. முக்கியமாக இவர்கள் இடையே இடம் பெற்ற வாட்டெர் பாக்கெட் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இப்பாடலின் வீடியோ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்க உள்ளார்.
    • இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு, பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர்.

    இப்படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்தில் சிம்பு இரண்டு கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். படம் பீரியாடிக் டிராமாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன்பின் சில மாதங்களுக்கு அந்த படத்தைக் குறித்து எந்த தகவல்களும் வெளிவரவில்லை. தற்பொழுது இப்படத்தை குறித்து கலை இயக்குனரான எஸ்.எஸ் மூர்த்தி ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார்.

    எஸ்டிஆர் 48 படத்தின் செட் போடுவதற்கான மினியேச்சர் வடிவத்திற்கான வேலைப்பாடுகள் முழு தீவிரமாக செய்து வருகிறோம். இதன் 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதம் இருக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என கூறியுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க வரலாற்று ஃபேண்டசி திரைப்படமாக உருவாகவுள்ளது என்றும் இப்படம் இந்திய சினிமாவின் ஒரு மைல் கல்லாக அமையும் என கூறியுள்ளார்.

    படத்தின் அடுத்த அதிகாரப்பூர்வ அப்டேட் விரைவில் வெளியிடப்படுல் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இது ஒரு அரசியல் அதிரடி திரைப்படமாக அமையவுள்ளது.
    • இசையை அனிருத் மேற் கொள்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

     விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகியது, படத்தின் டிரைலர் இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து விஜயின் கடைசி திரைப்படமான தளபதி 69 படத்தில் நடிக்கவுள்ளார்.

    இப்படத்தை தீரன், துணிவு போன்ற அட்டகாசமான படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை உறுதி படுத்தும் வகையில் எச். வினோத் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருவதாகவும் சென்னையில் ஆபிஸ் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இது ஒரு அரசியல் அதிரடி திரைப்படமாக அமையவுள்ளது.

    மேலும் இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார். இசையை அனிருத் மேற் கொள்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவை மேற் கொள்கிறார். படப்பிடிப்பு பணிகள் வரும் நவம்பர் மாதம் தொடங்கப்படும் என்ற தகவல் வெளியாகியது.

    படத்தின் அடுத்த அப்டேட் ஆக பிரேமலு புகழ் மமிதா பைஜூ இப்படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் லுக் டெஸ்ட் பணிகள் தற்பொழுது நடந்துக் கொண்டு இருப்பதாகவும், அது முடிவடைந்த பின் படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் அதிகாரப் பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
    • சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கொட்டுக்காளி

    கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மட்டும் வெளியாகியுள்ளது. திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றது.

    இந்நிலையில், சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

    இதுக்குறித்து சூரி அவரது எக்ஸ் தளத்தில் பதிவு இன்றை பதிவிட்டுள்ளார். அதில்

    "என்னுடைய முந்தைய படங்களான விடுதலை, கருடனிலிருந்து முற்றிலும் வேறுப்பட்ட திரைப்படமாக #கொட்டுக்காளி இருக்கும். இது ஒரு Mainstream Content Oriented திரைப்படம். உண்மைக்கு மிக நெருக்கமான படம். இதில் வரும் என்னுடைய #பாண்டி என்கிற கதாபாத்திரம் எல்லா குடும்பங்ளிலும் இருக்கும் ஒருவன் தான். இந்த சமூகம் சொல்லிக்கொடுத்த உறவு முறைகளையும், நம்பிக்கைகளையும் பெரிதும் நம்புகிற ஒரு கதாபாத்திரம் தான் பாண்டி. இந்த படத்தில் வரும் பயணத்தில், இந்த சமூகம் உருவாக்குன பாண்டிக்கும், பாண்டி என்கிற தனிப்பட்ட ஒருவனுக்கும் நடக்குற மன போராட்டத்த சரியா பிரதிபலிக்கனும்னு ரொம்ப கவனமா இருந்தேன். அதை சரியாவும் பண்ணி இருக்கேன்னு நம்புறேன். நீங்க அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படமாக கொட்டுக்காளி நிச்சயம் இருக்கும்." என்று பதிவிட்டுள்ளார்.

    இதனால் ரசிகர்களிடையே இப்படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

    கடந்த மாதம் சூரி நடிப்பில் வெளியான கருடன் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக சூரி நடிப்பில் விடுதலை 2 மற்றும் ஏழு கடல் ஏழு மழை போன்ற படங்கள் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சத்யராஜ் ஓடிடி சீரிஸ் ஆன மை பெர்ஃபக்ட் ஹஸ்பண்ட் என்ற தொடரில் நடித்துள்ளார்.
    • முகமத் ரசித் தயாரித்த இத்தொடரை வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் வெர்சடைல் நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதுக்கேற்றார் போல திறமையான நடிப்பை வெளிப்படுத்தும் நபர். இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது வெப்பன் திரைப்படம்.

    வெப்பன் திரைப்படத்தின் ஒரு சூப்பர் ஹுயுமன் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அண்மையில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்திலும் ஒரு மாறுப்பட்ட கெட்டப்பில் நடித்து இருந்தார்.

    அடுத்ததாக சத்யராஜ் ஓடிடி சீரிஸ் ஆன மை பெர்ஃபக்ட் ஹஸ்பண்ட் என்ற தொடரில் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்பொழுது வெளியாகியுள்ளது. சத்யராஜுடன் சீதா, ரேகா மற்றும் ரேஷ்மா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இத்தொடரில் வர்ஷா பொல்லமா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்தொடரை தமிரா இயக்கியுள்ளார். விரைவில் இத்தொடரானது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. முகமத் ரசித் தயாரித்த இத்தொடரை வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தின் அடுத்த பாடலான ஸ்பார்க் நேற்று வெளியானது.
    • இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடலான ஸ்பார்க் பாடல் நேற்று வெளியானது.

    பாடலில் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி இணைந்து நடனமாடியுள்ளனர். இதில் விஜய் மிகவும் இளம் தோற்றத்தில் ஸ்டைலிஷாகவுள்ளார். பாடலில் விஜயின் தோற்றத்தை டி ஏஜிங் தொழில் நுட்பத்தை உபயோகித்து இளம் தோற்றத்தில் காட்சி படுத்தியுள்ளனர்.

    பாடல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டிரைலர் வரும் ஆக்ஸ்ட் 3 வது வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் திரைப்படம் என்றாலே அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் அந்த விழாவில் விஜய் பேசும் பேச்சும், குட்டி ஸ்டோரி மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் உண்டு.

    அதேப்போல கோட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இசை வெளியீட்டு விழா சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் நடக்கும் என தகவல் சில நாட்களுக்கு முன்  வெளியானது.

    ஆனால் தற்பொழுது வந்த தகவலில் அடிப்படையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் வாய்ப்பு மிக குறைவு என கூறப்படுகிறது. படத்தின் முதல் பாடலான விசில் போடு மற்றும் நேற்று வெளியான ஸ்பார்க் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பு கிடைக்காதலால் படக்குழு வருத்தமடைந்து இசை வெளியீட்டு விழாவை பெரியளவுக்கு நடத்த விருப்பமில்லை எனவும் கூறப்படுகிறது.

    வெங்கட் பிரபுவின் தங்கையான பவதாரணி சமீபத்தில் காலமானார். இதனாலும் விழா வைக்க வேண்டாம் என நினைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இசை வெளியீட்டு விழா வைப்பதும் வைக்காததும் முழுக்க முழுக்க நடிகர் விஜயின் முடிவு என சமீபத்தில் நடந்த நேர் காணலில் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடனும் வருத்தத்துடன் இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×