search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்யும் இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி வெளியான டிமான்டி காலனி 2

    இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி வெளியான டிமான்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகம் தற்பொழுது உருவாகியுள்ளது.

    இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

    தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்யும் இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை வழங்கியுள்ள நிலையில் படத்தின் முதல் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் படத்தின் மூன்றாம் பாடலான why are we wandering என்ற பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்பாடலிற்கு ஸ்பார்க் என தலைப்பிட்டுள்ளனர்.
    • இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடலுக்கான ப்ரோமோ விடியோ நேற்று மாலை வெளியானது.

    இப்பாடலிற்கு ஸ்பார்க் என தலைப்பிட்டுள்ளனர். பாடலின் லிரிக் வீடியோவை தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விருஷா பாலி இணைந்து பாடியுள்ளனர். பாடலிற்கு கங்கை அமரன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

    பாடலில் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி இணைந்து நடனமாடியுள்ளனர். இதில் விஜய் மிகவும் இளம் தோற்றத்தில் ஸ்டைலிஷாகவுள்ளார். பாடலில் விஜயின் தோற்றத்தை டி ஏஜிங் தொழில் நுட்பத்தை உபயோகித்து இளம் தோற்றத்தில் காட்சி படுத்தியுள்ளனர்.

    பாடலின் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார்.
    • 32 வருட திரை பயணத்தை தொடர்ந்து வருவதால் அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    நடிகர் அஜித் குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். குட் பேட் அக்லி திரைப்படத்தை மார்க் ஆண்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது.

    இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார். இதுவரை நாம் பாத்திராத கதாப்பாத்திரத்தில் லுக்கில் படத்தின் போஸ்டரில் காட்சியளிக்கிறார்.

    அஜித் குமார் அவரது 32 வருட திரை பயணத்தை தொடர்ந்து வருவதால் அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    அதில் 32 வருட தைரியம் ஒழுக்கம் மற்றும் கண்ணியம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இதே பெருமையுடன் இருக்க வாழ்த்துகிறோம் என்று பதிவிட்டுள்ளனர். இப்போஸ்டர் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார்.
    • VD 12' திரைப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது.

    விஜய் தேவரகொண்டா தனது அசத்தலான நடிப்புத் திறமையால் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இவர் தற்போது 'VD 12' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.

    கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸ்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களை இயற்றியும், அதற்கு தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

     'VD 12' திரைப்படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு 'VD 12' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது.

    தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 60% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த திரைப்படத்தை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என பட குழு தீர்மானித்திருக்கின்றது. இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் இந்த மாதமே அறிவிக்கப்படுமெனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

    இதுக்குறித்து படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் விஜய் தேவரகொண்டா மிகவும் கோபத்துடன் முகத்தில் ரத்தத்துடன் கத்திக் கொண்டு இருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அஜித் குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார்.

    நடிகர் அஜித் குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். குட் பேட் அக்லி திரைப்படத்தை மார்க் ஆண்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது.

    இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார். இதுவரை நாம் பாத்திராத கதாப்பாத்திரத்தில் லுக்கில் படத்தின் போஸ்டரில் காட்சியளிக்கிறார்.

    படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை 5.32 மணிக்கு வெளியாகும் என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார். விடாமுயற்சி படக்குழு அவரது 32 வருட திரைப்பணிக் குறித்து ஸ்பெஷல் போஸ்டர் விட்ட நிலையில். இன்று அடுத்து அஜித் படத்தின் மற்றொரு அப்டேட் வருவதால் அஜித் ரசிகர்கள் மிகவும் கொண்டாடத்துடன் இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

    கடந்த சில மாதங்களாக ஜெயம் ரவி நாயகனாக நடித்த எந்த திரைப்படமும் மக்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை. அவர் கடைசியாக சைரன் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. ஜெயம் ரவி அதற்கடுத்து பல சுவாரசியமான படங்களில் கமிட் ஆகியுள்ளார் இதனால் இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

    சில வாரங்களுக்கு முன் படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது . ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.

    பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதுக் குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    அதில் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகனும் திருமண கோலத்தில் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் மோகன்லால் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை கிராமத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
    • சவால்களை எதிர்கொண்டாலும், நாங்கள் எப்போதும் வலுவாக இருந்து வருகிறோம்.

    டெரிடோரியல் ஆர்மியில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் நடிகர் மோகன்லால் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை கிராமத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். ராணுவ வீரர்களிடம் மீட்பு பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் கூறுகையில், "சவால்களை எதிர்கொண்டாலும், நாங்கள் எப்போதும் வலுவாக இருந்து வருகிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் ஒற்றுமையாக இருந்து நமது பலத்தை காட்டுவோம், ஜெய்ஹிந்த்" என்று கூறினார்.

    நிலச்சரிவை நேரில் ஆய்வு செய்த பின்னர் நடிகர் மோகன்லால், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.3 கோடி ரூபாய் அளித்துள்ளார்.

    ஏற்கனவே ஒரு சில தமிழ் நடிகர்கள் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி அளித்துள்ள நிலையில் நடிகர் மோகன்லால் இன்று 3 கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரபல யூடியூபர் இர்பான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
    • ஹெல்மெட் அணியாமல் இர்பான் பைக் ஓட்டிய வீடியோன் வைரலானது.

    பிரபல யூடியூபரான இர்பான் 'இர்பான் வியூஸ்' எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவியூ செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.

    பிரபல யூடியூபர் இர்பான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். வகையில், அண்மையில் ஹெல்மெட் அணியாமல் பிரபல யூடியூபர் இர்பான் பைக் ஓட்டிய வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானது.

    அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், "நடிகர் பிரஷாந்த் விட சக்தி வாய்ந்த youtuber இர்பான் தான். இதுவே TTF வாசனா இருந்தா உடனடி கைது தான்" என்று விமர்சித்தனர்.

    இதனையடுத்து, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது முறையான நம்பர் ப்ளேட் இல்லாதது உள்ளிட்டவைக்காக யூடியூபர் இர்ஃபானுக்கு ரூ.1,500 அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்தநிலையில் சமீபத்தில் ஒரு யூ-டியூப் சேனலுக்கு, நடிகர் பிரசாந்த் பேட்டியளித்தார். 'யூ-டியூப்'பை சேர்ந்த இளம்பெண் பின்னால் அமர, பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் சென்னை தியாகராயநகர் சவுத் போக் சாலையை சுற்றி சுற்றி வந்து பேட்டியளித்தார். இந்த பேட்டி, சம்பந்தப்பட்ட யூ-டியூப்பில் வெளியாகி வைரலானது.

    இதனையடுத்து போக்குவரத்து போலீசார் நடிகர் பிரசாந்துக்கு ரூ.1,000, உடன் சென்ற பெண்ணுக்கு ரூ.1,000 என மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விருஷா பாலி இணைந்து பாடியுள்ளனர்.
    • பாடலிற்கு கங்கை அமரன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

    நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடலுக்கான ப்ரோமோ விடியோ நேற்று மாலை வெளியானது.

    இப்பாடலிற்கு ஸ்பார்க் என தலைப்பிட்டுள்ளனர். பாடலின் லிரிக் வீடியோவை இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விருஷா பாலி இணைந்து பாடியுள்ளனர். பாடலிற்கு கங்கை அமரன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

    பாடலில் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி இணைந்து நடனமாடியுள்ளனர். இந்நிலையில் இந்த பாடலுக்கான 2 ஆவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் விஜய் மிகவும் இளம் தோற்றத்தில் ஸ்டைலிஷாகவுள்ளார். இதனால் இப்பாடலின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர்.
    • நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

    நடிகர் அஜித்குமார் திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் திரைத்துறைக்கு வந்து படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகரான அஜித்குமாருக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

    1993-ஆண்டு 'அமராவதி' படத்தின் மூலம் கதாநாயகனான அறிமுகமான அஜித், 'ஆசை', 'காதல் கோட்டை' படங்கள் மூலம் பிரபலமானார். 'அவள் வருவாளா', 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்', 'வாலி', 'சிட்டிசன்', 'வில்லன்', 'பில்லா', 'மங்காத்தா', 'விஸ்வாசம்' என பல படங்கள் சாதனை படைத்தது.

    இந்த நிலையில், அஜித்குமார் திரைத்துறையில் 32 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து சிறப்பு போஸ்டர் வெளியிட்டு 'விடாமுயற்சி' படக்குழு வாழ்த்து தெரிவித்து உள்ளது.

    அந்த போஸ்டரில் 32 ஆண்டுகள் தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும்... யாவையும் எதிர்கொண்டு வெல்லும் 'விடாமுயற்சி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    லைகா தயாரிப்பில் மகிழ்திருமேனி எழுத்து இயக்கத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்து வருகிறார்
    • இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் '' இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்து வருகிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.

    இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் சமீபத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் இப்படத்தில் இரண்டாவது பாடல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகும் என இசையமைப்பாளர் அனிருத் அப்டேட் கொடுத்துள்ளார்.

    இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிருந்தா தொடர் ஓடிடி தளமான சோனி லைவில் வெளியாகியுள்ளது.
    • இந்த தொடரில் பெண் எஸ் ஐ காவலர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நட்சத்திர கதாநாயகியாக இருப்பவர் நடிகை திரிஷா. தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கடந்த 22 வருடங்களாக தக்க வைத்துள்ளார் என்பது பெருமைக்குறியது.

    கடந்தாண்டு வெளியான லியோ மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் திரிஷா, இந்த இரண்டு திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றது.

    தற்பொழுது தக் லைஃப் , விடா முயற்சி , கோட் ஆகிய டாப் ஹீரோ திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் திரிஷா நடித்து இருக்கும் பிருந்தா எனும் வெப் தொடர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    திரிஷா ஓடிடி தொடரில் நடிப்பது இதுவே முதல்முறை, இது ஓடிடி தளமான சோனி லைவில் வெளியாகியுள்ளது.

    சஸ்பன்ஸ் திரில்லர் கதைக்களத்துடன் அமைந்திருக்கும் இக்கதையில் இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், ஆமானி, ரவிந்திர விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷக்திகாந்த் கார்த்திக் இசை அமைத்துள்ளார். இத்தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் வெளியாகியுள்ளது.

    இந்த தொடரில் பெண் எஸ் ஐ காவலர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.  இத்தொடர் பத்திக்கையாளர் மற்றும் விமர்சர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி வருகிறது. இந்த வீக்கெண்டை சிறப்பாக தொடங்க ஓடிடியில் பிருந்தாவை காணத்தவறாதீர்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×