என் மலர்
- இப்படத்தை பிரின்ஸ் பிக்சரஸ் நிறுவனம் தயாரித்தது.
- சர்தார் 2 படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ் மித்ரன் கூட்டணியில் வெளியாகிய படம் சர்தார். இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சரஸ் நிறுவனம் தயாரித்தது.
கார்த்தி இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார். கார்த்தியுடன் ராஷி கன்னா, லைலா, முனிஷ்காந்த், மற்றும் பலர் நடித்து இருந்தனர்.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சர்தார் 2 திரைப்பத்தின் பூஜையுடன் கடந்த மாதம் துவங்கியது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
தற்பொழுது படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர் தங்கலான் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார்.
- படத்தின் கதாநாயகியான கிருத்தி ஷெட்டி கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கிருத்தி செட்டி நடித்து உள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்படத்தை நயந்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.
படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. எஸ்.ஜே சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியாகி இணையத்தின் வைரலானது.
இதைத்தொடர்ந்து படத்தின் கதாநாயகியான கிருத்தி ஷெட்டி கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் ஒரு ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் போன்று ஒரு ரோபோ போன்று உள்ளார்.
இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது, தனது காதலை அடைவதற்காக எதிர் காலத்திற்கு டைம் டிரேவல் செய்யும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமூகம் அனுபவிக்கும் சீரழிவுகளும் இழப்புகளும் நெஞ்சைப் பிசைகின்றன.
- நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் நாம் ஒன்றுபட்டு நிற்போம்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டிற்கு நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், " பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நாம் ஒன்றுபட்டு நிற்போம்" என்று நயன்தாரா கூறினார்.
வயநாட்டில் ஏற்பட்ட சோகமான நிலச்சரிவு சம்பவத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்கங்களுடன் எங்கள் இதயம் இருக்கிறது.
சமூகம் அனுபவிக்கும் சீரழிவுகளும் இழப்புகளும் நெஞ்சைப் பிசைகின்றன. மிகவும் தேவைப்படும் இந்த நேரத்தில், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க ஒன்றிணைவதன் முக்கியத்துவத்தை நாங்கள் நினைவுபடுத்துகிறோம்.
ஒற்றுமையின் அடையாளமாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உடனடி உதவிகளை வழங்கவும், மறுசீரமைப்புச் செயல்பாட்டில் உதவி செய்யவும் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.20,00,000 (ரூபா இருபது லட்சம் மட்டும்) வழங்குகிறோம்.
நமது அரசாங்கம், தன்னார்வத் தொண்டர்கள், மீட்புக் குழுக்கள் மற்றும் பல அமைப்புகளின் ஒருங்கிணைந்த உதவியைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மீண்டும் கட்டியெழுப்பவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் நாம் ஒன்றுபட்டு நிற்போம்!
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 5 ஆம் தேதி நடக்கவுள்ளது.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, தற்பொழுது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
இந்த நிலையில், தங்கலான் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது.
திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலரும் படத்தின் முதல் பாடலான மேனா மினிக்கி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படம் வெளியாக இன்னும் சில வாரங்களே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் படக்குழுவினர்.
படத்தின் அடுத்த பாடலான தங்கலான் வார் சாங் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 5 ஆம் தேதி நடக்கவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரஜினிகாந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
- நித்திலன் சுவாமிநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கினார்.
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கினார்.
இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமான இந்த படத்தில், கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.
இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படம் இதுவரை 100 கோடி ரூபாய் மேல் உலகளவில் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திரைப்படம் சில வாரங்களுக்கு முன் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்சில் வெளியிடப்பட்டு இந்தியாவில் அதிகம் பார்த்த டாப் 10 திரைப்படங்களிலும் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
படத்தை திரைப்பிரபலங்கள் பார்த்து பாராட்டிய நிலையில், நடிகர் விஜய் சில வாரங்களுக்கு முன் பாராட்டினார். தற்பொழுது படத்தை பார்த்த ரஜினிகாந்த இயக்குனர் நிதிலன் சுவாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இதுக்குறித்து இயக்குனர் அவரது எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவை பகிர்ந்துள்ளார் அதில்
அன்புள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. உங்களை சந்தித்தது வாழ்க்கையின் நாவலையும், அனுபவத்தை, வாழும் வாழ்க்கை முறையை கோலிவுட்டின் மிகச்சிறந்த மனிதனிடம் இர்ந்து கேட்டு தெரிந்து கொண்டது மிகவும் ஆனந்தம்.
நீங்கள் என்னை உபசரித்த பண்பும், பணிவும் பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது. நீங்கள் மகாராஜா திரைப்படத்தை எவ்வளவு நேசித்தீர்கள் என்பதை தெரிந்தப்பின் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும் மிக்க நன்றி சார் , லாங் லிவ் தலைவர். என்று நெகிழ்ச்சியுடம் பதிவிட்டுள்ளார்.
இப்பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் தனுஷ் மீது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த வித புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.
- தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த பிரச்சினை சம்பந்தமாக தயாரிப்பாளர்களுக்கு எந்தவிதமான தீர்வும் ஏற்படுத்தி தரவில்லை.
நடிகர் தனுஷ் மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எந்தவித புகாரும் அளிக்கவில்லை என்று கூறியது உண்மைக்கு புறம்பானது என்று நடிகர் சங்கத்தின் குற்றச்சாட்டுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 29.7.2024 அன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகர் தனுஷ் மீது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த வித புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள். அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
கடந்த ஓராண்டுக்கு முன்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவில் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினை மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுத்தும் முக்கிய 5 நடிகர்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தகவல் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் தெரியப்படுத்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.
மேலும், கடந்த ஓராண்டு காலமாக தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது அவர்களுக்கு மேற்படி விஷயம் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. ஆனால், தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த பிரச்சினை சம்பந்தமாக தயாரிப்பாளர்களுக்கு எந்தவிதமான தீர்வும் ஏற்படுத்தி தரவில்லை.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் நலனை காக்கவே இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல கடந்த 1.11.2024 முதல் படப்பிடிப்புகள் முழுமையாக நிறுத்தி திருத்தி அமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் தொடர தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அடங்கிய கூட்டமைப்பு சேர்ந்து எடுத்த தீர்மானத்திற்கு தாங்கள் கண்டனம் தெரிவித்துள்ளீர்கள்.
இன்றைய சூழ்நிலையில் முதல் போடும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள், தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரை பெரும் பொருளாதார இழப்பில் இருந்து பாதுகாத்து திரைத் துறையையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு உள்ளது. ஆகையால்தான் கூட்டமைப்பு கூட்டத்தினை கூட்டி இந்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.
தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு, அந்த வரிசைப்படித்தான் நடித்துக் கொடுத்து வருவது காலம் காலமாக இருந்து வருவதும் மரபு.
அவ்வாறு இல்லாமல் புதிதாக திரைப்படம் எடுக்க வருபவர்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு ஏற்கனவே பணம் கொடுத்தவர்களுக்கு நடித்து கொடுக்காமல் மற்றவர்களுக்கு நடித்துக் கொடுப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?
இப்படி இக்கட்டான சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் கூட்டமைப்பின் மூலம் அறிவிக்கப்பட்ட அறிக்கையை தவறானது கண்டனத்துக் குரியது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கூறி இருப்பது வாபஸ் பெற வேண்டும்.
எப்படி தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களை பாதுகாக்கிறார்களோ, அதே போல் எங்களது சங்க உறுப்பினர்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கும் உள்ளது.
நடிகர்களின் சம்பளம் மற்றும் படப்பிடிப்பு செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்ற காரணத்தினால் மேலும் மேலும் நஷ்டத்தை எதிர்கொள்ள தயாரிப்பாளர்களால் இயலவில்லை.
கடந்த ஆறு மாத காலத்தில் தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களை வியாபாரம் செய்ய ஒ.டி.டி. தளம் மற்றும் சாட்டிலைட் என அனைத்து வியாபார தளங்களிலும் பொருளாதார ரீதியாக மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவதை கருத்தில் கொண்டு அவர் களை காப்பாற்றிடவும் எதிர்கால தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்றும் என்பதற்காகவும் மேற்கண்ட தீர்மானங்கள் கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கனவே கூட்டமைப்பின் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மூன்று சங்கங்களும் உறுதியாக உள்ளது. இதனை புரிந்து கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கமும் தகுந்த ஒத்துழைப்பு வழங்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
- படத்தின் ரிலீஸ் அப்டேட் விரைவில் எதிர்பார்க்கலாம்.
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் திரு மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை ஜிபி ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பரபர காட்சிகளை கொண்ட டீசரில் படத்தின் வசனம் கவனம் ஈர்க்கும் வகையில் உள்ளது. டீசரின் முடிவில் வரும் தவறெனின் வலியதும் வீழும்.. சரியெனின் எளியதும் வாழும் என்ற வசனம் இடம்பெற்று இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸ் அப்டேட் விரைவில் எதிர்பார்க்கலாம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
- கோட் படத்தின் மூன்றாவது பாடல் புது அப்டேட்.
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடலுக்கான அப்டேட் நேற்று மாலை வெளியானது.
இதைத் தொடர்ந்து வெளியான புது தகவலின் படி கோட் படத்தின் அடுத்த பாடலுக்கான ப்ரோமோ இன்று (ஆகஸ்ட் 2) மாலை 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாடல் நாளை வெளியாக இருக்கும் நிலையில், முதற்கட்டமாக ப்ரோமோ வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வீடியோ வைரலான அளவுக்கு, பிரசாந்த் ‘ஹெல்மெட்' அணியவில்லையே... என்ற பேச்சும் வைரலானது.
- கடந்த ஒரு வருட காலமாக ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேன்.
தமிழ் சினிமாவில் 90 களில் 'சாக்லேட் பாய்' ஆக வலம் வந்த நடிகர் பிரசாந்த், 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு 'அந்தகன்' என்ற படம் மூலமாக 2-வது இன்னிங்சில் நுழையவுள்ளார். விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இந்தநிலையில் சமீபத்தில் ஒரு யூ-டியூப் சேனலுக்கு, நடிகர் பிரசாந்த் பேட்டியளித்தார். 'யூ-டியூப்'பை சேர்ந்த இளம்பெண் பின்னால் அமர, பிரசாந்த் தனது மோட்டார் சைக்கிளில் சென்னை தியாகராயநகர் சவுத் போக் சாலையை சுற்றி சுற்றி வந்து பேட்டியளித்தார். இந்த பேட்டி, சம்பந்தப்பட்ட யூ-டியூப்பில் வெளியாகி வைரலானது. அதேவேளை பிரசாந்துக்கு வினையாகவும் அமைந்தது.
காரணம், மோட்டார் சைக்கிளில் சுற்றியபடி பேட்டியளித்த நடிகர் பிரசாந்த், 'ஹெல்மெட்' அணியாதது தான். மேலும், பேட்டி கண்ட அந்த யூ-டியூப் சேனல் இளம்பெண்ணும் 'ஹெல்மெட்' அணியவில்லை. இதனால் வீடியோ வைரலான அளவுக்கு, பிரசாந்த் 'ஹெல்மெட்' அணியவில்லையே... என்ற பேச்சும் வைரலானது.
இந்த வீடியோவை வைரலாக்கிய விவகாரம் பிடித்த இளைஞர்கள், ''நாங்களெல்லாம் ஹெல்மெட் போடாம போனா, துரத்தி பிடிக்கும் போலீசார், இதனை மட்டும் ஏன் கண்டுகொள்ளவில்லை. இதை கேட்பார் இல்லையா...'' என்று கொந்தளித்தனர்.
குறிப்பாக சென்னை போக்குவரத்து போலீசாரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில், இந்த வீடியோவை 'டேக்' செய்து, நடவடிக்கை எடுக்குமாறு ஆதங்கப்பட்டனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தே அபராத வேட்டையில் இறங்கும் போலீசாருக்கு, லட்டு போல ஆதாரத்தை தந்தால் சும்மா விடுவார்களா... உடனடியாக மோட்டார் சைக்கிளில் 'ஹெல்மெட்' போடாமல் பயணித்த குற்றத்துக்காக நடிகர் பிரசாந்துக்கு ரூ.1,000, உடன் சென்ற பெண்ணுக்கு ரூ.1,000 என மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
மேலும் தங்களை நோக்கி கேள்வி எழுப்பியோருக்கு பதில் அளிக்கும் விதமாக, பிரசாந்த் 'ஹெல்மெட்' போடாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிய புகைப்படத்தையும், அபராதம் விதிக்கப்பட்ட ரசீதையும் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டனர்.
வைரலாகும் என நினைத்த வீடியோ வினையாகி விட்டது, பிரசாந்த் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் பிரசாந்த் கூறியதாவது:
கடந்த ஒரு வருட காலமாக ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேன். தமிழ்நாடு முழுக்க இலவசமாக ஹெல்மெட் வழங்கி இருக்கிறேன். நீங்களும் அந்த செய்தியை போட்டு இருக்கிறீர்கள்.
நாகர்கோவில், திருச்சி, மதுரையில் ஹெல்மெட் வழங்கி, ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்க என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேன். பாதுகாப்பாக ஓட்டுங்க, நிதானமாக ஓட்டுங்க என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
இப்போது இந்த நிகழ்வு மூலமாக எனக்கு ஒன்மோர் பிளாட்பார்ம் கிடைத்து இருக்கிறது.
தயவுசெய்து ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்க. அது எனக்கில்லை உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் முக்கியம்.
நீங்கள் வெளியே செல்லும்போது 5 நிமிடம் முன்பே கிளம்புங்கள். அவசரமாக வண்டி ஓட்டாதீர்கள்.
உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. ஹெல்மெட் போடு ஓட்டுங்க. பாதுகாப்பாக இருங்க என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படம்.
- இயக்குநர் சுசீந்திரன் மற்றும் டி.இமான் இணையும் 10 வது திரைப்படம் இது.
City light pictures தயாரிப்பில் தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தின் இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படம் "2K லவ்ஸ்டோரி".
2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார்.
வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் டி.இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
- நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
நிலச்சரிவின் மீட்பு பணிகள் மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் காண்போர் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த பெருந்துயரில் மீள முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.
இந்த நிலையில், கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக நடிகை நிகிலா விமல் ஈடுபட்டார். தொடர்ந்து, நடிகை சூர்யா, நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி ஆகியோர் ரூ. 50 லட்சம் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள். முன்னதாக, நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
இந்நிலையில், தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.
- ஜெய் பீம் படத்திற்குப் பிறகு டிஜே ஞானவேல் இயக்கி வரும் திரைப்படம் வேட்டையன்
ஜெய் பீம் படத்திற்குப் பிறகு டிஜே ஞானவேல் இயக்கி வரும் திரைப்படம் வேட்டையன். இந்த படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.
இதில் ரஜினியை தவிர அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா தகுபதி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், சென்னை,மும்பை, ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக நடந்து வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில வாரங்களுக்கு முன் முடிந்தது.
தற்பொழுது படத்தை குறித்த அப்டேட்டை மஞ்சு வாரியர் சமீபத்தில் நடந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். படத்தில் மஞ்சு வாரியர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், ரஜினிக்கு மனைவியாக இப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் முழுக்க முழுக்க ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகந்திற்கான திரைப்படமாக இது இருக்கும், சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடிப்பது மற்றும் ஜெய் பீம் எடுத்த இயக்குனருடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தது.
படம் வெளியாகும் தேதி குறித்த தகவல் எனக்கு தெரியாது, இன்னும் நான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பணிகளை மேற்கொள்ளவில்லை. என்று கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.