என் மலர்
- இயக்குநர் மணி ரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தக் லைஃப்.
- தக் லைஃப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
இயக்குநர் மணி ரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் தக் லைஃப். இந்த படத்தின் மூலம் கமல்ஹாசன் மற்றும் மணி ரத்னம் சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர்.
முன்னதாக இருவர் கூட்டணியில் உருவாகி வெளியான "நாயகன்" திரைப்படம் தமிழ் திரையுலகில் பெரும் பாராட்டை பெற்றிருக்கிறது. தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளன.
சில நாட்களுக்கு முன் சிம்பு இப்படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியதாக அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். நேற்று கமல்ஹாசன் அவரது டப்பிங் பணிகளை தொடங்கினார், அதற்கான ஒரு சின்ன ப்ரோமோ வீடியோவும் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.
தற்பொழுது படத்தில் நாசர் மற்றும் அபிராமி நடிப்பதை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஷாருக்கானுக்கு மீண்டும் ஒரு உடல்நிலை குறைப்பாடு ஏற்பட்டுள்ளது.
- இதன் சிகிச்சையிற்காக அமெரிக்கா செல்ல உள்ளார்.
நடிகர் ஷாருக்கான் பாலிவுட்டின் பாட்சா என செல்லமாக அழைக்கப்படுவர், அவர் கடைசியாக நடித்த ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபில் கிரிக்கெட் அணிக்கு உரிமையாளரும் ஆவார்.
கடந்த மே மாதம் 21 ஆம் தேதி கொல்கத்தா அணி போட்டியை பார்த்து விட்டு ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக அஹமதாபாத்தில் உள்ள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அடுத்த நாளே குணமாகி வீடு திரும்பினார்.
தற்பொழுது ஷாருக்கானுக்கு மீண்டும் ஒரு உடல்நிலை குறைப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஷாருக்கான் தற்பொழுது கண் சிகிச்சைக்காக நேற்று மும்பையில் உள்ள மருத்துவமனையில் சென்றுள்ளார். அவர்கள் நினைத்து போல் சிகிச்சை நடக்காவிட்டதால், ஷாருக்கான் இன்று அல்லது நாளை இதன் சிகிச்சையிற்காக அமெரிக்கா செல்ல உள்ளார்.
ஷாருக்கான் மற்றும் அவரது மகளான சுஹானா கான் மற்றும் அபிஷேக் பச்சன் நடிக்கும் கிங் படத்தில் நடித்துள்ளார். பதான் படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஷாருக்கான் நடிக்கவுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருப்பவர் ரவீந்தர் சந்திரசேகரன்.
- ரவீந்தர் சந்திரசேகரன் பண மோசடிக்காக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருப்பவர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் லிப்ரா ப்ரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவர் சுட்ட கதை, நளனும் நந்தினியும் மற்றும் முருங்கக்கா சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
இவர் தயாரிப்பு பணிகள் மட்டுமல்லாலல் யூடியூபில் படங்களை விமர்சித்தும் வீடியோக்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு சின்னதிரை பிரபலமான மகாலட்சுமியை திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த தம்பதிகள் மீது நெட்டிசன்கள் வன்மத்தையும், மகாலட்சுமி பணத்திற்காகத்தான் இவரை திருமணம் செய்துக் கொண்டார் என கமெண்டுகளை பதிவு செய்து வந்தார்கள். ஆனாலும் இது எந்த விதத்திலும் ரவிந்தர் மற்றும் மகாலட்சுமி வாழ்க்கையை பாதிக்கவில்லை.
இந்நிலையில் ரவீந்தர் சந்திரசேகரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது . சென்னை அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ரவீந்தர் சந்திரசேகரன் பண மோசடிக்காக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜெயிலர் 2 திரைக்கதை தயார் செய்யும் பணிகளில் நெல்சன் ஈடுப்பட்டு வருகிறார்.
- படத்தில் யோகி பாபு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் வெளியாகி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இப்படத்தில் ரஜினிகாந்த் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். யோகி பாபுவின் நகைச்சுவை காட்சிகள் மக்களால் ரசிக்கப்பட்டது. இவருடன் இந்திய சினிமா பிரபலங்களான ஜாக்கி செராஃப், மோகன் லால், சிவராஜ் குமார் கவுரவ தோற்றத்தில் நடித்து இருந்தது படத்திற்கு கூடுதல் பலம்.
ஜெயிலர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து ஜெயிலர் 2-ம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான திரைக்கதை தயார் செய்யும் பணிகளில் நெல்சன் ஈடுப்பட்டு வருகிறார்.
இன்னொரு புறம் ஜெயிலர் 2-ல் நடிக்கும் இதர நடிகர், நடிகை தேர்வும் நடக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்து அவரோடு பேசி வருவதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியாகியது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராக இருக்கிறது.
தற்பொழுது ஜெயிலர்-2 படத்தின் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் 2 படத்தில் யோகி பாபு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் நடந்த நேர்காணலில் யோகி பாபு கூறியுள்ளார். இந்த பாகத்திலும் அவருடைய நகைச்சுவை காட்சிகள் ரசிக்க கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வெளியாகி மூன்று நாட்களில் ராயன் 70 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- மகேஷ் பாபு அவரது எக்ஸ் தளத்தில் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக அடங்காத அசுரன் என்ற பாடல் மிகப் பெரிய வைரல் பாடலாக மாறியுள்ளது.
அதில் வரும் உசுரே நீ தானே என்ற வரிகள் சமூக வலைத்தளங்களில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.
ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியாகி மூன்று நாட்களில் 70 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அவரது எக்ஸ் தளத்தில் படக்குழுவினரை பாராட்டி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் தனுஷ் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார், மிகவும் புத்திசாலித்தனமாக படத்தை இயக்கியுள்ளார். படத்தில் நடித்த எஸ்.ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ் , சந்தீப் கிஷன் மற்றும் படத்தில் நடித்த அனைவரும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஏ.ஆர் ரகுமான் பின்னணி இசை மிகவும் அழகாக இருந்தது, என படக்குழு அனைவருக்கும் வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார்.
இதற்கு சந்தீப் கிஷன் நன்றி தெரிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் மகேஷ் பாபு நம் தமிழ் சினிமாவை பார்த்து விட்டு எந்த ஒரு ஈகோவும் அல்லாமல் பாராட்டுவது என்பது வியப்பளிக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரகுத் தாதா வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- படத்தின் அடுத்த பாடலான `ஏக் காவ் மே’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகுதாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுப்பெற்று டீசர் வெளியானது.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் எம்.எஸ் பாஸ்கர், தேவ தர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனரான சுமன் குமார் இதற்கு முன் ஃபேமிலி மேன் என்ற பிரபல வலைத் தொடருக்கு கதையாசிரியாவார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் முதல் பாடலான அருகே வா பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. இப்பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார்.
தற்பொழுது படத்தின் அடுத்த பாடலான `ஏக் காவ் மே' என்ற பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலை கானா பாடகரான கானா விமலா பாடியுள்ளார். பாடலின் வரிகளை பாக்யம் ஷங்கர் எழுதியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது.
- ஆகஸ்ட் 16ம் தேதிக்கு பிறகு புதிய திரைப்படங்களுக்கான ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ் சினிமாவில் இப்போது இருக்கக்கூடிய ஒரு மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து கழகங்களும் சேர்ந்த கூட்டமானது இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது. இதன்படி நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகளை கட்டுப்படுத்த திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய தேவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுள்ளதால் , அவருடைய புதிய திரைப்படங்களுக்கான பணிகளை தொடங்கும் முன்பு தங்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகு, ஓ.டி.டி.-யில் வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டது.
பல திரைப்படங்கள், திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கிக் கிடப்பதாகவும், அந்த நிலையை மாற்ற புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பின் படப்பிடிப்புகளை ஆரம்பிக்கலாம் என்பதால், ஆகஸ்ட் 16ம் தேதிக்கு பிறகு புதிய திரைப்படங்களுக்கான ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன்படி நடிகர் சங்கத்தை ஆலோசிக்காமல் நவ.1ந்தேதி முதல் படப்பிடிப்புகளை நிறுத்துவதாக அறிவித்ததற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், திரைத் தொழிலாளர்களை பாதிக்கும் தன்னிச்சையான இந்த முடிவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும், நட்புறவு பாதிக்காமல் பிரச்சனைக்கு தீர்வு காண தயாரிப்பாளர்கள் சங்கம் முன்வர வேண்டும் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டிமான்டி காலனி 2 படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை வழங்கியுள்ளது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி வெளியான டிமான்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகம் தற்பொழுது உருவாகியுள்ளது.
இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்யும் இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை வழங்கியுள்ள நிலையில் படத்தின் இரண்டாம் பாடலான நொடிகளே என்ற பாடல் வரும் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜமா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- படத்தின் டிரைலர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகிறது.
தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற படத்தை இளவழகன் இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்தை கூழாங்கல் திரைப்படத்தை தயாரித்த நிறுவனமான லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.
'ஜமா' என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை தெருக்கூத்து கலைஞர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
நாடகத்தில் பெண் வேடம் அணியும் நபரின் வாழ்க்கையையும் நாடக கலைஞர்களை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.
இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் டிரைலர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தி ராஜா சாப் படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.
- படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
பிரபாஸ் சமீபத்தில் நடித்த கல்கி 2898 ஏடி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படம் இதுவரை 1100 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் இப்படத்தின் பாகம் இரண்டிற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
அடுத்ததாக பிரபாஸ் நடிக்கும் படமான தி ராஜா சாப் படத்தை குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் கிலிம்ப்ஸ் வீடியோவை தற்பொழுது வெளியிட்டுள்ளனர். இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தை மாருதி இயக்கியுள்ளார். பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.
படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் பிரபாஸ் ஒரு பூங்கொத்தை எடுத்து அதில் உள்ள மலர்களை எடுத்து அவருக்கு அவரே திருஷ்டி கழிக்கும் விதமாக காட்சிகள் அமைத்துள்ளது. மிகவும் ஸ்டைலாக, சமீபத்தில் வந்த படங்களில் ஒப்பிடும் பொழுது இப்படத்தில் கூடுதல் அழகான லுக்கில் இருக்கிறார். இப்படம் பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தியன் 2 இதுவரை 150 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்தியன் 3 படம் இன்னும் சில மாதங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் ஜூலை 12 -ம் தேதி இந்தியன் 2 படம் வெளியானது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்தியன் முதல் பாகம் இன்னும் பலரால் ரசிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்தியன் 2 பெரும் எதிர்பார்புடன் வெளியாகியது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் இந்தியா முழுவதும் ரூ.26 கோடி வசூலித்துள்ளது. இப்படம் இதுவரை 150 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, 'கதறல்ஸ்' என்ற பாடல் தற்பொழுது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன் இந்தியன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள கலேண்டர் சாங் வெளியானது.
இந்தியன் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்தியன் 3 படம் இன்னும் சில மாதங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆரோக்கியம் குறித்து பேச நயன்தாரா யார்? என கொந்தளிப்புடன் மருத்துவர் பதிவிட்டுள்ளார்.
- சமந்தாவை போலவே, நயன்தாராவும் அவரது ஃபாலோவர்களை தவறாக வழி நடத்துகிறார் என ஆதங்கம்.
செம்பருத்தி டீ குடித்தால் நல்லது என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நயன்தாரா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
செம்பருத்தி டீ சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு என நயன்தாரா பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த மருத்துவர், செம்பருத்தி டீ சுவையானது என சொன்னால் மட்டும் போதும்.. ஆரோக்கியம் குறித்து பேச நயன்தாரா யார்? என கொந்தளிப்புடன் பதிவிட்டுள்ளார்.
நெபுலைசர் குறித்து சமந்தா பதிவிட்டபோதும் எதிர்க்குரல் எழுப்பியவர்தான் Liverdoc என்ற ஐடியில் உள்ள மருத்துவர் ஆபி பிலிப்ஸ்.
உடல் ஆரோக்கியம் தொடர்பான பதிவா? உணவு ஆலோசகருக்கான விளம்பரமா? என டாக்டர் நயன்தாராவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சமந்தாவை போலவே, நயன்தாராவும் அவரது ஃபாலோவர்களை தவறாக வழி நடத்துகிறார் என மருத்துவர் சரமாரியாக புகார் தெரிவத்துள்ளார்.
இந்த சர்ச்சையை தொடர்ந்து, செம்பருத்தி டீ தொடர்பான பதிவை நயன்தாரா நீக்கியுள்ளார்.
மேலும், முட்டாள்களுடன் விவாதிக்க விரும்பவில்லை என மார்க் ட்வைன் கருத்தை நயன்தாரா பதிவு செய்துள்ளார்.