search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • பேச்சி எனும் திகில் நிறைந்த திரில்லர் படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் பால சரவணன். விஜய் டி.வியில் சின்னத்திரையில் நடித்து பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகினார். சசிகுமார் நடிப்பில் வெளிவந்த குட்டிப்புலி படத்தின் மக்களின் கவனத்தை பெற்றார்.

    அதைத்தொடர்ந்து டார்லிங் மற்றும் திருடன் போலீஸ் திரைப்படத்தில் பால சரவணனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தாண்டு வெளியான அயலான், இங்க நான் தான் கிங்கு, ஹிட் லிஸ்ட் போன்ற வெற்றிப் படங்களில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தற்பொழுது பேச்சி எனும் திகில் நிறைந்த திரில்லர் படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் காயத்ரி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ராமசந்திரன் இயக்கியுள்ளார். சமீபத்தில் படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர் வெளியானது.

    இப்படம் பிரபல இயக்குனர் இமயம் பாலு மகேந்திராவின் குறும்படத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமாகும். படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை வழங்கியுள்ளது. திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்தலிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தை தயாரித்து படத்தின் இசையை மேற்கொண்டுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.
    • படத்திற்கு ஸ்வீட்ஹார்ட் என்று பெயரிட்டுள்ளனர்.

    யுவன் ஷங்கர் ராஜா இசைக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளன. தற்பொழுது விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இசையமைப்பது மட்டுமல்லாமல் அவர் படங்களை தயாரித்தும் வருகிறார்.

    இத்ற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமா காதல் மற்றும் ஹை ஆன் லவ் என்ற படங்களை தயாரித்தார். இந்த இரண்டு படமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தை தயாரித்தார்.

    தற்பொழுது யுவனின் YSR பிலிம்ஸ் நிறுவனம் அவர்களது 4 - வது திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர். இப்படத்தின் அனவுன்ஸ்மண்ட் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தை ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். படத்தில் இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி , ரெஞ்சி பானிக்கர் , அருணாச்சலம் பா, துளசி, சுரேஷ் சக்கரவர்த்தி நடிக்கவுள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கவுள்ளார்.

    படத்தின் அனவுன்ஸ்மண்ட் வீடியோ மிகவும் நகைச்சுவை பாணியில் இருக்கின்றது. இப்படத்தை தயாரித்து படத்தின் இசையை மேற்கொண்டுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. படத்திற்கு ஸ்வீட் ஹார்ட் என்று பெயரிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படமும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எமக்கு தொழில் ரோமான்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.
    • தயாரிப்பாளர் திருமலை அசோக் செல்வன் மீது உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

    அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்".

    T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.

    வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ரா உடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் படத்தில் நடித்துள்ளார்.

    ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில், இப்படத்தினை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி கேசவன்.

    அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் .படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.

    படக்குழுவினர், இயக்குனர், தியாகராஜா குமாரராஜா மற்றும் பலர் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர். ஆனால் படத்தின் நாயகன் அசோக் செல்வன் கலந்துக் கொள்ளவில்லை.

    விழாவில் பேசிய தயாரிப்பாளர் அவரது ஆதங்கத்தையும், தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு படத்தை தயாரிக்க எவ்வளவு கஷட்டப்படுகிறார்கள் என்பதை பற்றி பேசினார். அஷோக் செல்வன் மற்றும் நடிகர்கள் யாரும் விழாவில் கலந்துக் கொள்ளாததால் படக்குழுவினர் அவர்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

    தயாரிப்பாளர் திருமலை அசோக் செல்வன் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவதற்கு முன்பே பணம் வேண்டும் என்று கேட்டார், அதையும் நாங்கள் கொடுத்தோம், இன்று அவர் வரவில்லை. போன் செய்தாலும் அவர் எடுக்காமல் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்

    இசை வெளியீட்டு விழாவில் இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • . போட் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    வடிவேலு நடிப்பில் 2006 ஆம் ஆண்டு இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி திரைப்படத்தை இயக்கி சிம்புதேவன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார்.

    கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த கசடதபற திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் `போட்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இக்கதை சூழல் இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு 80 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையாக அமைந்து இருக்கிறது. ஜப்பான் நாடு, மெட்ராஸ் ப்ரெசிடன்சியாக மீது குண்டு வீசிய போது அங்கு இருந்து 10 நபர்கள் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிக்க ஒரு படகு ஓட்டும் நபருடன் கடலுக்கு தப்பிக்கின்றனர்.

    இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைப்பெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். அவ்விழாவில் யோகி பாபு 3 மணி நேரம் தாமதமாக வந்து கலந்துக் கொண்டார். அவர் நேர தாமதம் ஆனதுக்கு அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டார். மற்றொரு படப்பிடிப்பில் இருந்து வருவதால் தாமதம் ஆனது என்றார்.

    படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி, இயக்குனர் சிம்புதேவனுக்கு நன்றி, படத்தை நீங்கள்தான் மக்களிடம் கொண்டு சென்று வெற்றிப் பெற செய்ய வேண்டும் என செய்தியாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.

    ஆனாலும் செய்தியாளர் விடாமல் கேட்ட கேள்வியால் சற்று கடுப்பான யோகிபாபு அனைவருக்கும் நன்றி மேடையில் இருந்து கீழே இறங்கினார் அப்பொழுதும் விடாமல் ஒரு செய்தியாளர் கேள்விகளை கேட்டார். அப்பொழுது அதற்கு அவரைப் பார்த்து யோகி பாபு , மைக் ஆஃப் பண்ணிட்டு வெளியே வா சொல்றேன் என சொடக்குப் போட்டு சொல்லிவிட்டு கிழம்பி சென்றார், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
    • இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் தனுஷுக்கு திரைப்பிரபலங்கள் அவர்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

    தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாள் வசூல் மட்டும்13 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் தனுஷுக்கு திரைப்பிரபலங்கள் அவர்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

    இந்நிலையில் ராயன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள சந்தீப் கிஷன் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், " ஹேப்பி பர்த்டே டு மை ராயன், தனுஷ் அண்ணா, உங்களை போல் இருப்பது வாழ்வில் மிகவும் கடினம், தொடர்ந்து நடித்தும் எங்களை நடிக்க தூண்டுதலாக இருப்பதற்க்கு மிக்க நன்றி , நீங்கள் மிகவும் திறம்மைவாய்ந்தவர், உங்களுக்கு எப்பொழுதும் நல்லதே நடக்கும், ராயன் குடும்பத்தில் என்னை சேர்த்ததற்கு நன்றி இப்படிக்கு அவரது கதாப்பாத்திர பெயரான முத்துவேன் ராயன் " என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தற்போது 'ராயன்' வெளியாகி BLOCKBUSTER HIT ஆகியுள்ளது.
    • துர்கா கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமானவள் என நம்பியதற்கு நன்றி.

    தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றன.

    ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில் ராயன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள துஷாரா விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், "25.11.2023 என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். D50 படம் தொடர்பாக தனுஷ் உங்களை சந்திக்க விரும்புகிறார் என்ற ஃபோன் கால் மூலம் எல்லாம் தொடங்கியது. இது கனவுபோல் இருக்கிறது. இறுதியாக நான் அவரை சந்தித்தேன். அந்த உணர்வை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.

    தற்போது 'ராயன்' வெளியாகி BLOCKBUSTER HIT ஆகியுள்ளது. தனுஷின் வெற்றியை என்னுடையது போல் உணர்கிறேன். இந்த பயணத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். நீங்கள் ஒரு முன்னுதாரணம், லெஜண்ட் தனுஷ் சார். துர்கா கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமானவள் என நம்பியதற்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
    • படத்தின் புது போஸ்டர் வெளியிடப்படுகிறது.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித் நடிக்கும் 62 - வது படமாக இது உருவாகி வருகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர் இவர்களுடன் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இதுதவிர பல்வேறு பகுதிகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

    விடாமுயற்சி படத்தின் 4-வது லுக் போஸ்டரில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் இடம்பெற்று இருக்கிறார். வழக்கம்போல் இந்த போஸ்டரிலும் புதிய புகைப்படம் தவிர ரிலீஸ் மற்றும் இதர பணிகள் என படத்தின் நிலை குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், விடாமுயற்சி படத்தின் புது அப்டேட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷின் கதாப்பாத்திரம் ஒரு பிச்சைக்காரன் தோற்றத்தில் உள்ளது.
    • நாகர்ஜூனா, ராஷ்மிகாவின் கேரக்டர் இண்ட்ரோ வீடியோ வெளியா வரவேற்பை பெற்றது.

    தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

    அதைத்தொடர்ந்து நாகர்ஜூனா, ராஷ்மிகாவின் கேரக்டர் இண்ட்ரோ வீடியோ வெளியா வரவேற்பை பெற்றது. நாகர்ஜூனா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் கதாப்பாத்திரங்கள் பணத்தை சார்ந்து இருக்கிறது. ஆனால் தனுஷின் கதாப்பாத்திரமோ ஒரு பிச்சைக்காரன் தோற்றத்தில் உள்ளது.

    இந்நிலையில், நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு 'குபேரா' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டாக்டர் டூம் படத்தின் மூலம் வில்லன் நடிகராக மாறுகிறார்.
    • மார்வல் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

    ஹாலிவுட்டில் பிரபல நிறுவனங்களில் ஒன்று மார்வல் ஸ்டூடியோஸ். இதன் "அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே" நிகழ்ச்சி சான் டியாகோ காமிக்-ஆன் 2024-இல் நடைபெற்றது. இந்த காமிக்-ஆன் நிகழ்வில் மார்வல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் "டாக்டர் டூம்" படத்தின் புதிய அப்டேட் வெளியானது.

    இந்த படத்தில் புகழ்பெற்ற நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் நடிக்கிறார். படம் தொடர்பான அறிவிப்பை ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் மார்வல் ஸ்டூடியோஸ் தலைவர் கெவின் ஃபெய்க் இணைந்து வெளியிட்டனர்.

    உலகளவில் புகழ்பெற்ற "அயன்மேன்" கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர், டாக்டர் டூம் படத்தில் ஃபென்டாஸ்டிக் ஃபோரில் புதிய வில்லின் கதாபாத்திரமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அயன்மேன் மற்றும் மார்வெல் சினிமேடிக் யூனிவர்ஸில் கதாநாயகனாக நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர், டாக்டர் டூம் படத்தின் மூலம் வில்லன் நடிகராக மாறுகிறார்.

    மார்வல் யூனிவர்சில் அதிக ரசிகர்களை கொண்ட ராபர்ட் டவுனி ஜூனியர் மீண்டும் எம்சியூ-வில் இணைந்து இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், புதிய மார்வல் படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி இருக்கிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் நெல்சன் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
    • இரண்டாம் பாகத்திற்கான கதையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்து இருப்பவர் நெல்சன். இவர் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் மற்றும் ஜெயிலர் போன்ற படங்கள் வசூலை வாரிக் குவித்தன.

    இந்த நிலையில், இயக்குநர் நெல்சன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவனை நேரில் சந்தித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தொல் திருமாவளவன் கலந்து கொண்டுள்ளார்.

    நிகழ்ச்சியின் ஓய்வு நேரத்தில் திருமாவளவன் வருகை குறித்து அறிந்து கொண்ட இயக்குநர் நெல்சன் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்துள்ளார்.

    இயக்குநர் நெல்சன் மற்றும் திருமாவளவன் சந்திப்பு குறித்த தகவலை விடுதை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இத்துடன் இருவர் சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.

    ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கி வெளியான ஜெயிலர் படம் வசூலில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், இயக்குநர் நெல்சன் தற்போது ஜெயிலர் இரண்டாம் பாகத்திற்கான கதையை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ராயன் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றன.

    ராயன் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், நடிகர் தனுஷின் பிறந்தநாளை ஒட்டி, அவர் இயக்கி, நடித்துள்ள ராயன் படத்தின் BTS காட்சிகளை நள்ளிரவு 12 மணிக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    அந்த வீடியோவில் ராயன் படத்தில் நடித்த நடிகர்களுக்கு இயக்குநர் தனுஷ் நடிப்பு சொல்லிக்கொடுக்கும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது.
    • ரசிகர்களிடம் அருண் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நடிகர் அருண் விஜய் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது, கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அருண் விஜய்யுடன் புகைப்படம் எடுக்க முயன்றனர்.

    அவர்களுடன் அருண் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இருப்பினும் கூட்டம் அதிகமாக இருந்ததால், போலீசார் அவரை கூட்டத்தில் இருந்து மீட்டு சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றனர். பின்னர் வெளியே வரும்போது புகைப்படம் எடுக்க முயன்ற ரசிகர்களின் கூட்டத்திற்கு நடுவே அருண் விஜய் சிக்கிக் கொண்டார்.

    இதனிடையே கூட்டத்தில் சிலர் அருண் விஜய் காலில் மிதித்தால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அருண் விஜய்யை பத்திரமாக மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×