search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.
    • காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்".

    அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்".

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் பல பிரபலங்களால் சில மாதங்களுக்கு முன் வெளியானது. T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.

    வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, தொடர்ச்சியாக வெற்றி படைப்புகளை தந்து வரும் நடிகர் அசோக் செல்வன், நடிகை அவந்திகா மிஸ்ரா உடன் இணைந்திருக்கும், ரொமான்ஸ் தெறிக்கும் படத்தில் நடித்துள்ளார்.

    ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையில், இப்படத்தினை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பாலாஜி கேசவன். ஒரு பிளே பாய் கதாப்பாத்திரத்தில் அசோக் செல்வன் நடித்துள்ளார். படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் . நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.

    இசை வெளியீட்டு விழாவில் இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சட்னி சாம்பார் தொடர் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது.
    • யோகி பாபு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் ராதா மோகனின் இயக்கத்தில், அதிரடியான காமெடி சரவெடி ஜானரில் உருவாகியுள்ள சீரிஸ், 'சட்னி - சாம்பார்'. நடிகர் யோகி பாபுவின் முதல் முழுநீள வெப் சீரிஸாக உருவாகியுள்ள, இந்த சீரிஸ், ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகத் தொடங்கியுள்ளது.

    இந்நிலையில் இந்த சீரிஸின் முதல் இரண்டு எபிஸோடுகள், பத்திரிக்கையாளர்களுக்காகச் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இத்திரையிடலைத் தொடர்ந்து வெப் சீரிஸ் குழுவினர், பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

    அந்நிகழ்வில்

    நடிகை வாணி போஜன் பேசியதாவது…

    ராதா மோகன் சாருடன் நான் இரண்டாவது முறையாக வேலை பார்க்கிறேன், சட்னி சாம்பார் சீரிஸ் மிக அற்புதமாக வந்துள்ளது. ராதா மோகன் சார் ஐ லவ் யூ. என்னுடன் வேலை பார்த்த அனைவருக்கும் எனது அன்புகள். இந்த சீரிஸ் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சியான அனுபவம், அனைவருக்கும் என் நன்றிகள்.

    இயக்குநர் ராதா மோகன் பேசியதாவது...

    திரைத்துறையில் 20 ஆண்டுகளைக் கடந்து இருக்கிறேன் என்கிறார்கள், 20 ஆண்டுகளைக் கடந்து இங்கு நிற்கிறேன் என்றால், அதற்கு நீங்கள் தந்த ஆதரவு தான் காரணம், பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். இந்த சீரிஸில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடித்திருக்கும் முதல் சீரிஸ், எங்களுக்காக அவர் மிக பிஸியான நேரத்தில் பத்து நாட்கள் கால்ஷீட் தந்தார், எல்லோரும் உங்களுக்கு பத்து நாள் கால்ஷீட் தந்தாரா? என ஆச்சரியப்பட்டார்கள். அவர் தந்த ஒத்துழைப்பிற்கு நன்றிகள். இந்தஎன்னுடைய உதவி இயக்குநர் குழுவிற்கு, என்றும் நான் நன்றி சொன்னதே இல்லை, அவர்கள் இல்லாமல் நான் இல்லை, அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இந்த சீரிஸ் என்னுடைய மற்ற படைப்புகள் போல உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • விக்னேஷ் சிவன் `லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
    • கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கிருத்தி செட்டி நடித்து உள்ளனர்

    'போடா போடி' படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி 'நானும் ரவுடி' பட வெற்றிக்கு பிறகு புகழின் உச்சத்திற்கு சென்றவர் விக்னேஷ் சிவன். இதைத் தொடர்ந்து அவர் 'தானா சேர்ந்த கூட்டம்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களை இயக்கினார்.

    இவர், தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கிருத்தி செட்டி நடித்து உள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்படத்தை நயந்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

    இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

    படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் எஸ்.ஜே சூர்யா இருக்கும் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் அவர் லவ் இன்சூரன்ஸ் கம்பனி கட்டடத்திற்கு மேல் கையில் ஒரு வாட்ச் போன்ற ஒன்றை வைத்து அமர்ந்து இருக்கிறார்.

    இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது, தனது காதலை அடைவதற்காக எதிர் காலத்திற்கு டைம் டிரேவல் செய்யும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆதித்யா தார் அடுத்து ரன்வீர் சிங் நடிப்பில் ஒரு அதிரடி ஆக்‌ஷன் படத்தை இயக்கவுள்ளார்.
    • இப்படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் பி62 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.

    2019 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஆதித்யா தார் இயக்கத்தில் விக்கி கௌஷல், யாமி கவுதம் , கிருத்தி குல்ஹாரி மற்றும் பலர் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் URI: தி சர்ஜிகல் ஸ்டிரைக்.

    இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஆதித்யா தார் அடுத்து ரன்வீர் சிங் நடிப்பில் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளார்.

    இப்படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் பி62 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. தற்பொழுது இப்படத்தில் நடிக்க போகும் நடிகர்களின் பட்டியலை ரன்வீர் சிங் அவரது இன்ஸ்டாகிராமின் பதிவிட்டுள்ளார்.

    இப்படத்தில் ரன்வீர் சிங்குடன் சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, மாதவன், அர்ஜூன் ராம்பல் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் எடுக்கப்படவுள்ளது. இப்படம் இந்தியன் இண்டலிஜன்ஸ் ஆஜென்சியின் பணிபுரியும் ஆபிசர்களை மையப்படுத்தின கதைக்களமாகும்.

    இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் நேற்று வெளியாகி உலகமெங்கும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • உலகளவில் முதல் நாளில் 100 மில்லியன் டாலரை வசூலித்துள்ளது

    மார்வல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தற்பொழுது அந்த வரிசையில் டெட்பூல் & வோல்வரின் திரைப்படம் அடுத்ததாக இடம் பெற்றுள்ளது.  இப்படம் நேற்று வெளியாகி உலகமெங்கும் உள்ள ரசிகர்களால்  கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஆங்கிலத்தில் மட்டும் இல்லாமல் இப்படத்திற்கு ஐதராபாதில் கட் அவுட், பேனர் என நம்மூர் ஹீரோக்களுக்கு வழிபாடு நடத்தும் வகையில் மக்கள் கொண்டாடினர். இத்திரைப்படம் ஆக்ஷன் மற்றும் காமெடியில் பட்டையை கிளப்பியுள்ளது.

    ரியான் ரெனால்ட்ஸ் டெட்பூலாகவும், ஹுக் ஜாக்மேன் வோல்வரினாகவும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் பதிந்துள்ளனர். இந்தியாவில் இப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் 20 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. உலகளவில் முதல் நாளில் 100 மில்லியன் டாலரை வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நமது இந்திய மதிப்பில் 830 கோடி ரூபாய்க்கு மேல் ஆகும் .

    இதன் மூலம் மார்வெல் திரைப்படம்  முதல் நாளில் இந்தியாவில் அதிக வசூல் செய்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம், ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் மற்றும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆப் மேட்னஸ் வரிசையில் தற்பொழுது டென்பூல் & வோல்வரின் இணைந்துள்ளது.

    தமிழ் டப்பிங் பணிகள் இப்படத்திற்கு சிறப்பாக செய்துள்ளனர், படத்தில் வரும் அனைத்து நகைச்சுவ காட்சிகளும் நொர்க் அவுட் ஆகியுள்ளது. நீங்கள் ஒரு மார்வல் மற்றும் டெட்பூல் & வோல்வரின் ரசிகனாக இருந்தால் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இப்படம் இருக்கும், திரையரங்களில் பார்க்க தவறவிடாதீர்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார்.
    • ராயன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

    தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றன.

    தணிக்கைக்குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ள ராயன் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்களில் ஹவுஸ் ஃபுல்லாக ஒடியது. தனுஷின் முந்தைய படங்களான கேப்டன் மில்லர், கர்ணன், வாத்தி ஆகிய திரைப்படங்களை ஒப்பீடும் பொழுது ராயன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, முதல் நாளில் 'ராயன்' ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இது உண்மையானால், தனுஷ் இதற்கு முன்னதாக நடித்திருந்த கர்ணன், திருச்சிற்றம்பலம் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்களின் முதல்நாள் வசூலை விட அதிகமாக இருக்கும். தமிழ் நாட்டில் மட்டும் 11 கோடி ரூபாய் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கர்ணன் திரைப்படம் முதல் நாளில் ரூ.10 கோடியும், திருச்சிற்றம்பலம் ரூ. 8 கோடியும், கேப்டன் மில்லர் ரூ. 9 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் ராயன் திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது S.I.R {சார்} என மாற்றப்பட்டு இருக்கிறது.
    • இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

    சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகினார்.

    தற்பொழுது அவர் விமல் நடிப்பில் மா.பொ. சி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த மாதம் வெளியான நிலையில். படத்தின் தலைப்பு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் மாற்றியுள்ளனர். முதலில் மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது S.I.R {சார்} என மாற்றப்பட்டு இருக்கிறது.

    படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. படத்தின் முதல் பாடலான 'பனங்கருக்கா' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் . படத்தின் அடுத்த பாடலான பூவாசனை பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடலின் வரிகளை விவேகா எழுதியுள்ளார். இப்பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார். இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சட்னி சாம்பார் வெப் தொடரை ராதாமோகன் இயக்கியுள்ளார்.
    • ரோஷன் மாத்யூ மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியாகி இருக்கும் படம் பாரடைஸ்.

    1. சட்னி சாம்பார் {தமிழ்}

    யோகி பாபு தற்பொழுது உள்ள நகைச்சுவை நடிகர்களுள் முன்னணி இடத்தில் இருப்பவர். பல தமிழ் திரைப்படங்களில் நடித்த யோகி பாபு தற்பொழுது முழு நீள வெப் தொடரில் களம் இறங்கியுள்ளார். அவர் நடிக்கும் வெப் தொடரை ராதாமோகன் இயக்கியுள்ளார்.

    வழக்கமான ராதாமோகன் பாணியில் சிரிப்பு சரவெடி நிறைந்த ஒரு அழுத்தமான பொழுதுபோக்கு குடும்ப சித்திரமாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளது. யோகிபாபு, வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த சீரிஸ் ஜூலை 26 ஆம் தேதி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

    2.பாரடைஸ் {மலையாளம்}

    ரோஷன் மாத்யூ மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியாகி இருக்கும் படம் பாரடைஸ். இப்படத்தை பிரபல இயக்குனரான பிரசன்னா இயக்கியுள்ளார். இப்படத்தை மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

    ஒரு தம்பது அவர்களது 5 - வது திருமண நாளை கொண்டாடுவதற்கு இலங்கை சுற்று பயணம் செல்கின்றனர். அங்கு ஏற்கனவே சில பிரச்சனைகள் நிலவி வருவதால் அங்கு அவர்கள் மாட்டிக் கொள்கின்றனர், அதன் பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதைக்களம்.

    இப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகியுள்ளது.

    3 Mr.& Mrs. மஹி {இந்தி}

    இப்படத்தில் ஜான்வி கபூர் மற்றும் ராஜ்குமார் ராவ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம், கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிகம் ஆர்வம் கொண்ட தம்பதி, தன் மனைவிக்கு கிரிக்கெட் விளையாடவும் மிகப் பெரிய ஆற்றல் இருக்கிறது என்பதை அறிந்துக் கொண்டு தன் மனைவிக்கு கதாநாயகனானும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராக இருந்த ராஜ்குமார் ராவ் அவருக்கு பயிற்சி அளிக்கிறார். இதுவே இப்படத்தின் கதைக்களமாகும்.

    4 பையா ஜி {இந்தி}

    பிரபல நடிகர் மனோஜ் பாஜ்பயி நடிப்பில் பையா ஜி எனும் திரைப்படம் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இது ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

    5 பிளடி இஷ்க் {இந்தி}

    விக்ரம் பட் இயக்கத்தில் வர்தன் புரி, அவிகா, கோர், ஜெனிஃபர் மற்றும் ஷியாம் கிஷோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பிளடி இஷ்க். இத்திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜோதிபா பூலே தனது மனைவி சாவித்திரிபாயை படிக்க வைத்தார்.
    • இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக சாவித்ரிபாய் உருவெடுத்தார்.

    அண்மையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு இயக்குநர் சுதா கொங்கரா பேட்டி அளித்தார். அப்போது சாவர்க்கர் குறித்து அவர் பேசிய விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகின.

    "நான் அடிப்படையிலேயே வரலாறு மாணவி. நான் வுமன் ஸ்டடிஸ் படிப்பு படித்துக்கொண்டு இருக்கும் போது, எனக்கு பாடம் எடுத்த ஆசிரியர் ஒருவர், சாவர்க்கர் கதையை சொன்னார். அதாவது, சாவர்க்கர் மிகப் பெரிய தலைவராக இருந்த போது, அவர் தன்னுடைய மனைவியை நீ படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தார்.

    ஆனால் அவரது மனைவிக்கு வீட்டில் இருக்க வேண்டும், வீட்டில் உள்ள வேலைகளை கவனித்துக் கொண்டு இல்லத்தரசியாக தன்னுடைய வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும்.

    அந்த நேரத்தில் பெண்கள் யாரும் படிக்க மாட்டார்கள். அவர் படிக்கச் செல்லும் போது, தெருவில் பலர் அவரை அவமானப்படுத்துவார்கள். இதனையடுத்து, அவர் நான் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று சொல்லி, வீட்டிற்கு வந்து விடுவார்.

    இதை கவனித்த சாவார்க்கர், நான் உன்னை அழைத்துச் செல்கிறேன். யார் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என்று, மறுபடியும் அவரது கையைப் பிடித்து பள்ளிக்கு அழைத்துச் செல்வார். இது சரியா தவறா…? என்ற கேள்வியை கேட்டேன். என்னுடைய தாத்தா, சகுந்தலாவின் கதையை சொல்லும் பொழுதும், எனக்கு பல கேள்விகள் எழுந்தன. அவர் ராமர் சீதையோடு வனவாசம் சென்றதை, மிகவும் பக்தி மயமாக சொல்லிக் கொண்டிருப்பார். அவரிடம் நான் பல கேள்விகளை எழுப்புவேன்.

    ஆண், பெண் விவகாரத்தில் ஏன் அங்கு வித்தியாசம் என்ற ஒன்று வருகிறது. நான் உடல் ரீதியான வித்தியாசத்தை சொல்லவே இல்லை. எனக்கு அது தேவையே கிடையாது. ஒரு ஆண் அளவுக்கு ஒரு பெண்ணுக்கு வலிமை இல்லை என்பது ஒத்துக்கொள்கிறோம்.. ஆனால், நான் ஒரு பெண் என்பதாலேயே நான் தாழ்வு மனப்பான்மையோடு இருக்கிறேன் என்று சொல்வதெல்லாம் கேள்விக்கு உட்பட்டது. இந்த மாதிரியான கேள்விகளை என்னுடைய படங்களில் எந்த அளவுக்கு எழுப்ப முடியுமோ, அந்த அளவுக்கு நான் எழுப்புவேன்" என்று சுதா கொங்கரா பேசியிருந்தார்.

    இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரி பாய் புலேவின் வரலாற்றை சாவர்க்கரின் வரலாறு என சுதா கொங்கரா திரித்து பேசியதாக விமர்சித்தனர்.

    ஜோதிபா பூலே தனது மனைவி சாவித்திரிபாயை படிக்க வைத்தார். அப்போது அவர்கள் இருவரும் அந்த பிற்போக்கு சமூகத்தால் ஒடுக்கப்பட்டனர். அந்த ஒடுக்குமுறையை மீறி இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக சாவித்ரிபாய் உருவெடுத்தார். இதுதான் வரலாறு என்று பலரும் சுதா கொங்கராவை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

    இந்நிலையில் ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரிபாய் புலேவின் வரலாற்றை சாவர்க்கரின் வரலாறு என மாற்றி கூறியதற்கு சுதா கொங்கரா மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷின் 50 ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
    • ராயன் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்.

    நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    தனுஷின் 50 ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ்.

    ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்நிலையில், "ராயன் படக்குழுவினரின் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், "ராயன் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். ராயன் பட இயக்குநர் தனுஷுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • Inside Out 2, வெளியான 19 நாட்களில் ரூ.12,000 கோடி வசூல் செய்துள்ளது.
    • Inside Out 2 மட்டும்தான் இந்தாண்டில் 1 பில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்த ஒரே படம்

    பிரபல அனிமேஷன் படமான Inside Out 2, வெளியான 19 நாட்களில் 1.462 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.12,000 கோடி) வசூலை சாதனை படைத்துள்ளது.

    இதன்மூலம் உலகளவில் இதுவரை வெளியான அனிமேஷன் படங்களிலேயே அதிக வசூலை குவித்த படம் என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளது.

    இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு வெளியான Frozen 2 திரைப்படம் 1.45 பில்லியன் டாலர் வசூல் செய்ததே சாதனையாக இருந்தது. இப்போது அந்த சாதனையை Inside Out 2 முறியடித்துள்ளது.

    இந்தாண்டில் 1 பில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்த ஒரே படம் என்ற சாதனையையும் Inside Out 2 படைத்துள்ளது.

    2015 ஆம் ஆண்டு வெளியான Inside Out படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் 859 மில்லியன் டாலர் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரஜின் தற்பொழுது ராஞ்சா எனும் புதிய படத்தில் நடித்துள்ளார்.
    • தற்பொழுது படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    விஜேவாக பணிப்புரிந்து பின் சின்னத்திரையில் அறிமுகமாகி தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் பிரஜின். 2006 ஆம் ஆண்டு முதல் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 2016 ஆம் ஆண்டு பழைய வண்ணாரப்பேட்டை எனும் படத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். கடந்த ஆண்டு டி3, அக்கு போன்ற படங்களில் நடித்தார்.

    தற்பொழுது ராஞ்சா எனும் புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவானா வருண் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூன் மாதம் முடிந்தது. படத்தை அறிமுக இயக்குனரான சந்தோஷ் ராவணன் இயக்கியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    தற்பொழுது படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. மோஷன் போஸ்டரை பிரபல மலையாள நடிகர்களான நிவின் பாலி மற்றும் அஜு வர்கீஸ் இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சம்பசிவன் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் மற்றும் சிவி குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹரி எஸ் ஆர் இசையமைத்துள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×