என் மலர்
- நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை.
- நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது சங்கத்தின் பணத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த விவகாரத்தில் நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இனி விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என சங்கம் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தில் இருந்து முறைகேடாக ரூ.12 கோடி செலவழித்த தொகையை திரும்ப அளிக்குமாறு பலமுறை கூறியும் விஷால் பதில் அளிக்கவில்லை என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் விஷால் நடிக்கும் புதியப் படங்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து படங்களில் நடிப்டேன், முடிந்தால் தடுத்து பாருங்கள் என நடிகர் விஷால் தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.
இரட்டை வரி விதிப்பு, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டியவை என விஷாயல் தெரிவித்துள்ளார்.
உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள், தொழிலுக்கு உழைக்கு நிறைய இருக்கிறது என நடிகர் விஷால் காட்டமாக தெரிவித்துள்ளார்.
- இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்
- ஜோ" திரைப்படத்தின் வெற்றி ஜோடியான ரியோ- மாளவிகா மனோஜ் மீண்டும் இணைகிறார்கள்.
2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்து ஜோ திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.
. இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். இச்சமூதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இது இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த "ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்" நிறுவனம் சார்பாக, மணிகண்டன் கந்தசுவாமியின் மேற்பார்வையில் , அறிமுக இயக்குனர் "பிளாக் ஷீப்" கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.
பிளாக் ஷீப் நிறுவனத்தின் இணை தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில், "ஜோ" திரைப்படத்தின் வெற்றி ஜோடியான ரியோ- மாளவிகா மனோஜ் மீண்டும் இணைகிறார்கள்.
மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, சித்துகுமார் இசை, வருண் கே.ஜி.யின் எடிட்டிங், வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு, சந்துருவின் டிசைன், மீனாட்சியின் ஆடை வடிவமைப்பு, என ஒரு மெகா இளைஞர்கள் கூட்டணியில் இப்படம் உருவாகி உள்ளது. இந்த வருட பிற்பகுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதங்களாக நடைப்பெற்று தற்பொழுது நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடி அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். படத்தின் போஸ் ப்ரொடக்ஷன் பணிகளை வரும் நாட்களில் மேற்கொள்ளவுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கமலுடன் இணைந்து இப்படத்தில் சிம்பு மிக முக்கியமான ஒரு ரோலில் நடித்து வருகின்றார்.
- 'நாயகன்' படத்துக்குப் பின் 34-ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைஃப்' படத்தில் மீண்டும் மணிரத்தினத்துடன் இணைந்து உள்ளார் கமல்.
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் 'தக் லைஃப்'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கமலுடன் இணைந்து இப்படத்தில் சிம்பு மிக முக்கியமான ஒரு ரோலில் நடித்து வருகின்றார். கமலுக்கு மகனாக நடிக்க உள்ளதாக சில தகவல் வெளியானது.
கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34-ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைஃப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.
இப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைபெற்றது. இதையடுத்து 3-ம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றது.
இந்நிலையில் 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்ததை விட விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணி ரத்னம் மிக வேகமாக படப்பிடிப்பு பணிகளை முடித்து வருகிறார்.
இந்நிலையில் சிம்பு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தக் லைஃப் படத்தின் டப்பிங் பணியை தொடங்கியதாக அறிவித்துள்ளார். படத்தின் பணிகள் மிக விரைவில் நடைப்பெறுவதால் மிக சீக்கிரம் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
- இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
சூர்யாவின் 44- வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இயக்கி வருகிறார்.
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது.
சில நாட்களுக்கு முன் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வெளியானது.
காதல்.. சிரிப்பு.. யுத்தம் உள்ளிட்ட வாசகங்களுடன் தொடங்கும் வீடியோவில் ரத்தத்துடன் கேங்ஸ்டர் தோற்றத்தில் துப்பாக்கியேந்தி மாஸ் காட்டும் லுக்கில் சூர்யா நடந்துவருவது விக்ரம் படத்தில் வரும் ரோலக்ஸ் கதாபாத்திரம் தந்த வைபை மீண்டும் தருவதாக உள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது ஊட்டியில் தொடங்கியுள்ளது. அங்கு 15 நாட்கள் படப்பிடிப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
வடிவேலு நடிப்பில் 2006 ஆம் ஆண்டு இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி திரைப்படத்தை இயக்கி சிம்புதேவன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார்.
கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த கசடதபற திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் போட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இக்கதை சூழல் இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு 80 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையாக அமைந்து இருக்கிறது. ஜப்பான் நாடு, மெட்ராஸ் ப்ரெசிடன்சியாக மீது குண்டு வீசிய போது அங்கு இருந்து 10 நபர்கள் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிக்க ஒரு படகு ஓட்டும் நபருடன் கடலுக்கு தப்பிக்கின்றனர்.
இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தில் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்தின் பெரும்பாலும் காட்சிகளை கடலில் எடுத்துள்ளனர். படத்தின் டிரைலரை பார்த்தி படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இனி விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் ஆலோசிக்க வேண்டும்.
- தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது முறைகேடு.
தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது சங்கத்தின் பணத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த விவகாரத்தில் நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இனி விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என சங்கம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சங்கத்தில் இருந்து முறைகேடாக ரூ.12 கோடி செலவழித்த தொகையை திரும்ப அளிக்குமாறு பலமுறை கூறியும் விஷால் பதில் அளிக்கவில்லை.
இதனால், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் விஷால் நடிக்கும் புதியப் படங்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது.
- 'தி கோட்' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
- கோட் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் 2 பாடல்கள் வெளியாகி வைரலாகின. 'தி கோட்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டு 'தி கோட்' படத்தின் இசைப்பணியை யுவன் சங்கர் ராஜா தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தெ மெஜிஷ்யியன் ஹாஸ் ஸ்டார்டட் ஹிஸ் வொர்க் என தலைப்பில் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- செல்வராகவன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- ஒட்டுமொத்த குழுவிற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
தனுஷ் இயக்கி நடித்துள்ள புதிய படம் ராயன். இது தனுஷின் 50 ஆவது படம் ஆகும். இன்று (ஜூலை 26) வெளியாகும் நிலையில், ராயன் படம் பார்த்து விட்டதாக இயக்குநர், நடிகருமான செல்வராகவன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான பதிவில், "ராயனை பார்த்துவிட்டேன். அற்புதமாக இருக்கிறது. நடிகராகவும், இயக்குநரகாவும் தனுஷ் மிளிர்கிறார். உன்னை நினைத்து பெருமையாக இருக்கு தம்பி. அனைத்து நடிகர்களின் பணியையும் ரசித்தேன். ஏஆர் ரகுமான் சார் நம்மை புது உலகிற்கு அழைத்து செல்கிறார். ஒட்டுமொத்த குழுவிற்காக மகிழ்ச்சி அடைகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் யோகி பாபு முதல் முறையாக ஒரு முழு நீள வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார்,
- இந்த சீரிஸின் சாராம்சத்தை படம்பிடித்து காட்டும் வகையில், ஒரு பெப்பி ராப் பாடலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில், ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கும் 'சட்னி - சாம்பார்' சீரிஸை, ஜூலை 26 முதல் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த சீரிஸின் சாராம்சத்தை படம்பிடித்து காட்டும் வகையில், ஒரு பெப்பி ராப் பாடலை வெளியிட்டுள்ளது.
நடிகர் யோகி பாபு முதல் முறையாக ஒரு முழு நீள வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார், ஆதலால் இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான ராதாமோகன் பாணியில் சிரிப்பு சரவெடி நிறைந்த ஒரு அழுத்தமான பொழுதுபோக்கு குடும்ப சித்திரமாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
இதயம் கவரும் இந்த பெப்பி ராப் பாடல், உணவைத் தயாரிக்கும் சமையல்காரர்களுக்கிடையேயான போரையும், உணவுகளுக்கு இடையிலான நிலைப்பாட்டையும் காட்டுகிறது. இந்த ராப் பாடல் வரிகளை ராகுல் ஸ்ரீதர் (ஹிப்பி எழுத்தாளர்) எழுதியுள்ளார்.
'சட்னி - சாம்பார்' சீரிஸை அறிமுகப்படுத்தும் விதத்தில் படக்குழுவினர் காமிக் வடிவில் இதன் களத்தை விவரிக்கும் ஒரு சிறுகதையையும் வெளியிட்டுள்ளனர். இந்த காமிக் வடிவ கதையில் இயக்குநர் ராதாமோகனுக்கும் யோகி பாபுவின் கதாபாத்திரத்திற்கும் இடையிலான கற்பனை உரையாடல் இடம்பெற்றுள்ளது. ராப் மியூசிக்கும் மற்றும் காமிக் வடிவ தொடரும் இந்த சீரிஸ் மீதான ஆர்வத்தைக் கூட்டுகிறது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளது. யோகிபாபு வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். யோகிபாபு கதை நாயகனாக ஒரு சீரிஸில் நடிப்பது இதுவே முதன் முறையாகும்.
இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.
'சட்னி - சாம்பார்' முழுக்க முழுக்க குடும்பங்கள் சிரித்து ரசிக்கும், யூத்ஃபுல் எண்டர்டெய்னர் சீரிஸாக இருக்கும்.
இந்தத் சீரிஸில் காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, மைனா நந்தினி, சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R.சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
- கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிரச் செய்துள்ளது. அவரின் 50 ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைதுள்ளார். படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர். இந்நிலையில், தனுஷிற்கு நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
50வது படத்திற்கு வாழ்த்துகள் தனுஷ். உங்களின் அயராத உழைப்புக்கும், சினிமா மீதான ஆர்வத்துக்கும் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள். ராயன் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், "'மின்மினி' படத்தின் பாடல்கள், டிரெய்லர் எல்லாமே சூப்பராக உள்ளது"
- ’மின்மினி’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வெளியாகிறது.
ஸ்டேஜ் அன்ரியல், பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் & ஆங்கர் பே ஸ்டுடியோஸ் வழங்கும் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், கதிஜா ரஹ்மான், கௌரவ் காளை, எஸ்தர் அனில் மற்றும் பலர் நடித்துள்ள 'மின்மினி' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், "'மின்மினி' படத்தின் பாடல்கள், டிரெய்லர் எல்லாமே சூப்பராக உள்ளது. பெரிய மெனக்கெடல் இந்தப் படத்திற்கு தேவைப்படுகிறது. ஹலிதா படங்களின் டைட்டிலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். சில்லுக்கருப்பட்டி, மின்மினி என டைட்டில் எல்லாமே ஹைக்கூ போல இருக்கும். படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், ரஹ்மான் சார் குடும்பத்தின் இசை இளவரசி கதிஜாவுக்கும் வாழ்த்துக்கள்" என்றார்.
ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் மனோஜ் பரமஹம்சா, "ஆட்டோ சங்கர் எடுத்தபோது என்னைப் பலரும் திட்டினார்கள். ஆனால், அதற்கு பதிலடியாக நிச்சயம் நல்ல படம் கொடுப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது. அப்படியான ஒரு படமாக 'மின்மினி' அமைந்திருக்கிறது. லாபம் தர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் படம் எடுக்கவில்லை. நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற ஆசைதான். இளையராஜா இசை தரும் உணர்வை கதிஜா கொடுத்திருக்கிறார். " என்றார்.
நடிகை எஸ்தர், "நான் சின்ன பொண்ணாக இருந்தபோது இந்தப் படத்தில் கமிட் ஆனேன். பல லொகேஷன்ஸ் பல நினைவுகள் இருக்கிறது. ஹலிதாவுக்கு நன்றி. இந்தப் படத்தின் இசை கேட்கும்போது எமோஷனல் ஆகிவிடுவேன். கதிஜா அந்தளவு நல்ல இசையைக் கொடுத்துள்ளார். எனது நண்பர்கள், குடும்பம் என எல்லோரும் 'மின்மினி'க்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். மறக்க முடியாத அனுபவமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது".
இசையமைப்பாளர் கதிஜா ரஹ்மான், "இது நடக்கிறது என்று நம்ப முடியவில்லை. இந்தப் படத்திற்காக கடந்த 2022-ல் ஹலிதா மேம் என்னை அணுகினார். அவருக்கும் என் இசை பிடித்திருந்தது. ஹலிதா மேம் தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தது எனக்கு வேலை செய்ய இன்னும் எளிதாக இருந்தது. ".
இயக்குநர் ஹலிதா ஷமீம், "'மின்மினி' படத்திற்காக ஷங்கர் சார் வரை ரீச் ஆகி இருக்கிறது. குழந்தைகளை சின்ன வயதில் வைத்து படம் எடுத்து பின்னர் அதற்காக காத்திருந்தார்களே அந்தப் படமா என பலரும் கேட்கிறார்கள். இதைப் புதுமுயற்சியாக செய்ய வேண்டும் என்று நினைத்து நாங்கள் செய்யவில்லை. படம் எடுக்க ஆரம்பித்தபோது கூட இப்படி காத்திருப்போம் என்று நாங்களும் நினைக்கவில்லை. ஏனெனில், குழந்தைகளாக இவர்கள் சின்சியராக நடித்துக் கொடுத்ததை இவர்கள் வளர்ந்த பிறகு வந்த போர்ஷனை பிற நடிகர்கள் நடித்துக் கொடுப்பார்களா எனத் தெரியவில்லை. அதனால்தான், அவர்களுக்காகக் காத்திருந்தேன். இந்தப் படத்தை நம்பி இத்தனை வருடங்கள் கழித்தும் முதலீடு செய்த தயாரிப்பாளர்கள், படத்தை வெளியிடுபவர்கள் எல்லோருக்கும் நன்றி. கண்டிப்பாக நீங்கள் படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்ல வேண்டும்" என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
- இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகை மாளவிகா மோகனன் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்திலும் தனுஷுடன் இணைந்து மாறன் என்ற படத்தில் நடித்தார். தமிழில் அறிமுகமான குறிகிய காலத்தில் ஸ்டார் நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமானார்.
பின்னர் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 15-ந் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழு ஈடுபட்டு வருகின்றனர். அதில் கலந்து கொண்ட மாளவிகா சிவப்பு நிற சேலையில் ஜொலித்தார்.
இப்படியாக படங்களில் பிஸியாக இருக்கும் மாளவிகா, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இன்ஸ்டாவில் அடிக்கடி போட்டோஷூட் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருவார்.
அந்தவகையில் தற்போது இவர் சிகப்பு நிற புடவையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.