என் மலர்
- கும்கி, கயல் மற்றும் தொடரி போன்ற வெற்றிப்படங்களை இயக்கினார் பிரபு சாலமன்.
- இப்படத்திற்கு மாம்போ என தலைப்பிட்டுள்ளனர்.
2010 ஆம் ஆண்டு விதார்த் மற்றும் அமலா பால் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் மைனா. இப்படத்தை பிரபு சாலமன் இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று பல விருதுகளை குவித்தது. இதற்கு முன் பிரபு சாலமன் கிங், கொக்கி, லீ, லாடம், போன்ற படங்களை இயக்கி இருந்தாலும். மைனா திரைப்படமே தமிழ் திரையுலகை திரும்பி பார்க்கச் செய்தது.
அதற்கடுத்து கும்கி, கயல் மற்றும் தொடரி போன்ற வெற்றிப்படங்களை இயக்கினார். கடைசியாக செம்பி திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் செம்பி மற்றும் அஸ்வின் குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் பிரபு சாலமனின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு மாம்போ என தலைப்பிட்டுள்ளனர். இது ஒரு சிறுவனுக்கும் , சிங்கத்திற்கும் இடையே உள்ள நட்பை பிரதிபளிக்கும் படமாக அமைந்துள்ளது.
இப்படத்தில் வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீ ஹரி நடிகராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் உண்மையான சிங்கத்தை வைத்து எந்த வித சி.ஜி காட்சிகளும் இல்லாமல் படமாக்க முயற்சித்துள்ளனர். இதற்காக விஜய் ஸ்ரீ சிங்கக்த்துடன் பயிற்சி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசியாவிலேயே உண்மையான சிங்கத்தை வைத்து படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுவே ஆகும்.
இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். டி.இமான் படத்தின் இசையே மேற்கொள்கிறார். இப்படத்தை காஜா மைதீன் மற்றும் அப்துல் கானி தயாரித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார்.
- இது ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 26 - வது படமாகும்.
கடந்த 2020 - ஆண்டு பிப் -14 ந்தேதி இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'ஓ மை கடவுளே' காதல் நகைச்சுவை படம் வெளியாகி வெற்றி பெற்றது.
இந்நிலையில் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இது ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 26 - வது படமாகும்.
இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்கியது. இந்த புதிய படத்திற்கு 'டிராகன்' என "டைட்டில்" வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், வி.ஜே. சித்து , ஹர்ஷத் ஆகியோர் நடிக்கின்றனர்.
பிரதீப் ரங்கனாதனும் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரதீப் ரங்கனாதனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் `ஒருவன் என்று தான் ஒரு உச்சத்தை தொட முடியும் என நம்புகிறானோ அப்பொழுது தான் ஒரு ஸ்டார் பிறக்கிறான்" என்று எழுதியுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.
- படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
'போடா போடி' படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி 'நானும் ரவுடி' பட வெற்றிக்கு பிறகு புகழின் உச்சத்திற்கு சென்றவர் விக்னேஷ் சிவன். இதைத் தொடர்ந்து அவர் 'தானா சேர்ந்த கூட்டம்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களை இயக்கினார்.
இவர், தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கிருத்தி செட்டி நடித்து உள்ளனர். இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், படக்குழு சார்பில் டைட்டில் லுக் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து எல்ஐகே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
- வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பாபு-2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.
- புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர். புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பாபு-2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் படம் வெளி வருவதில் தாமதம் ஏற்படும் என கூறப்பட்டது.
இந்நிலையில் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா - 2' திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், 2025 ஏப்ரலுக்கு தள்ளிப் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில காட்சிகள் ரிஷூட் மற்றும் இறுதிகட்ட பணிகள் காரணமாக படம் வெளியீடு தள்ளிப் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- ‘வணங்கான்’ திரைப்படப் பணிகள் அனைத்தும் விரைவில் முடிய உள்ளது.
- பாலா இயக்கத்தில் நடித்தது சுகமான, பிரமாதமான அனுபவம்.
வேளாங்கண்ணி பேராலயத்திற்கு நடிகர் அருண் விஜய் வந்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தார். அவருக்கு பேராலய பங்குதந்தை அற்புதராஜ் ஆசி வழங்கினார்.
பின்னர் அருண் விஜய் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
ஜனரஞ்சகமான திரைப்படங்களை மக்கள் விரும்புவதால் ஆக்ஷன் படத்தில் விரும்பி நடிக்கிறேன். தற்போது நடித்து வரும் 'ரெட்ட தல' திரைப்படம் வித்தியாசமான கதைக்களம் கொண்டது. இறுதிக்கட்ட சண்டை காட்சிகள் வேளாங்கண்ணி , வெள்ளைற்று அலையாத்தி காடுகள் நிறைந்த பகுதியில் நடைபெற்று வருகிறது. காலம் வரும்போது அப்பா முத்திரை பதித்த 'நாட்டாமை' திரைப்படம் போல் நானும் அதுபோல் படத்தை தேர்ந்தெடுத்து நடிப்பேன்.
'வணங்கான்' திரைப்படப் பணிகள் அனைத்தும் விரைவில் முடிய உள்ளது. அப்படத்தில் தான் ஏற்ற கதாபாத்திரத்தை காதலித்து நடித்தேன். டைரக்டர் பாலா அப்படத்திற்காக கூடுதலாக உழைத்தார். அவரது இயக்கத்தில் நடித்தது சுகமான, பிரமாதமான அனுபவம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடிகர் அருண் விஜயை ரசிகர்கள் சூழ்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தெரிகிறது.
- தமன்னா கதாநாயகியாக நடிப்பார் என கூறப்பட்டது.
சுந்தர் சி இயக்கி, நடித்து வெளியான அரண்மனை 4 வசூலில் பட்டையை கிளப்பியது. இதைத் தொடர்ந்து இவர் எடுக்கும் புதிய படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே சுந்தர் சி தனது அடுத்த படத்தில் வடிவேலுவை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும், இந்த படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், சுந்தர் சி இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்று வருவதாக தெரிகிறது.
மேலும், இதில் வடிவேலு மற்றும் ராஷி கண்ணா முதன்மை பாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
- ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
'போடா போடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகி 'நானும் ரவுடி' பட வெற்றிக்கு பிறகு புகழின் உச்சத்திற்கு சென்ற விக்னேஷ் சிவன், 'தானா சேர்ந்த கூட்டம்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இதையடுத்து, தற்போது எல் ஐ கே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கிருத்தி ஷெட்டி நடித்து உள்ளனர்.
எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை இன்று அதிகாலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Happy Birthday @pradeeponelife? #LoveInsuranceKompany ♥️
— Seven Screen Studio (@7screenstudio) July 24, 2024
@VigneshShivN @IamKrithiShetty@iam_SJSuryah @anirudhofficial@iYogiBabu @Gourayy @sathyaDP @PradeepERagav@PraveenRaja_Off @Rowdy_Pictures @proyuvraaj pic.twitter.com/je1mDeFXQl
- பதான், ஜவான் திரைப்படங்கள் 1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தன.
- இந்த பெருமையை பெறும் முதல் இந்திய நடிகர் ஷாருக்கான் தான்.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் இந்திய சினிமாத்துறையில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார். கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளியான பதான், ஜவான் திரைப்படங்கள் 1000 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தன
இந்நிலையில், ஷாருக்கானுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அவரின் உருவம் பதித்த சிறப்பு தங்க நாணயம் ஒன்றை பாரீஸில் உள்ள க்ரெவின் மியூஸியம் வெளியிட்டுள்ளது.
இந்த பெருமையை பெறும் முதல் இந்திய நடிகர் என்ற சாதனையை ஷாருக் கான் படைத்துள்ளார்.
இந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஷாருக்கானுக்கு லோகார்னோ திரைப்பட விழாவில் ஷாருக்கானுக்கு பெருமை மிகு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சினிமாவின் உயரிய விருதுகளான ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.
- அக்டோபர் 4ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஹாலிவுட்டில் டூட் பிலிப்ஸ் இயக்கத்தில், ஹாக்கின் பீனிக்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஜோக்கர் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் டூட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில் ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'ஜோக்கர்.
ஆர்தர் (ஜாக்குவன் பீனிக்ஸ்) கதையின் ஹீரோ மேடை காமெடியனாகும் முயற்சியில் தன் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு கலைஞன்.
அந்த கலைஞனை ஒரு கட்டத்தில் குடும்பமும் சமூகம் எப்படி மனநோயாளியாக மாற்றுகிறது என்பதை அட்டகாசமான திரைக்கதையால் சொன்ன படம்தான் 'ஜோக்கர்.
ஜோக்கர் படத்தில் நாயகனாக நடித்து அசத்தியதற்காக ஜாக்குவன் பீனிக்ஸுக்கு சினிமாவின் உயரிய விருதுகளான ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.
ஜோக்கர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில்,
இப்படம் அக்டோபர் 4ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ஜோக்கர் 2 டிரெய்லரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
- இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
- இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு இன்று காலை அறிவித்தது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி வெளியான டிமான்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகம் உருவாகும் என அப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து அறிவித்தார்.
இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்யும் இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு இன்று காலை அறிவித்தது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் டிரைலர் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராயன் திரைப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- ராயன் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிரச் செய்துள்ளது. அவரின் 50 ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைதுள்ளார். படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர். இந்நிலையில், ராயன் திரைப்படத்திற்கு 26ம் தேதி சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணிக்குள் 5 காட்சிகள் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அந்தகன் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகிறது.
- சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இப்பாடலை பாடியுள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் பிரசாந்த், பின்னர் திரை துறையில் இருந்து சில ஆண்டுகளாக விலகி இருந்தார். தற்போது கம் பேக் கொடுக்கும் வகையில், மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், நடிகர் பிரசாந்த், 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.
இந்தப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், 'அந்தகன்' படத்தின் தீம் பாடலை நடிகர் விஜய் வரும் 24ம் தேதி வெளியிடுவார் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, அந்தகன் படத்தின் தீம் பாடலை நடிகர் விஜய் இன்று வெளியிட்டுள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இப்பாடலை பாடியுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.