என் மலர்
- இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்.
- தங்கலான் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, தற்பொழுது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
இந்த நிலையில், தங்கலான் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது.
திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலரும் படத்தின் முதல் பாடலான மேனா மினிக்கி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படம் வெளியாக இன்னும் சில வாரங்களே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர் படக்குழுவினர். இதையொட்டி படத்தின் முக்கிய பிரபலங்களான விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பா. ரஞ்சித், ஜி.வி பிரகாஷ் மற்றும் ஞானவேல்ராஜா இணைந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை ஜி.வி பிரகாஷ் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பவர் விஷால்.
- நடிப்பு மட்டுமின்றி திரையுலகில் பல துறைகளில் விஷால் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே படம் மூலம் அறிமுகமான விஷால் அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ரத்னம் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.
இந்த நிலையில், நடிகர் விஷால் நடிக்கும் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி விஷால் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தற்போது மம்மூட்டி நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், விஷால் - கவுதம் வாசுதேவ் மேனன் இணையும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கூழாங்கல் படத்தை இயக்கிய பிஎஸ் வினோத்ராஜ் தனது கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியிடவுள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தாயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மட்டும் வெளியாகியுள்ளது. இந்த படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரங்களை குவித்து வருகிறது.
அந்த வகையில் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை கொட்டுக்காளி திரைப்படம் வென்று அசத்தியுள்ளது.
சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது. இது தவிர்த்து தற்போது நடந்து வரும் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியுள்ளது.
20ஆவது FEST Festival விழாவில் சிறந்த படத்திற்கான 'GOLDEN LYNX' விருதை 'கொட்டுக்காளி' திரைப்படம் வென்றுள்ளது. பல சரவதேச விருதுகளையும் அங்கீகாரமும் இப்படத்திற்கு கிடைத்ததால். இப்படத்தின் மீது மக்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பல சர்வதேச ஊர்களுக்கு சென்றூ பாராட்டைப் பெற்ற கொட்டுக்காளி கடைசியாக தன் சொந்த மண்ணிற்கு வரவுள்ளது.
திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியிடவுள்ளனர். படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான கருடன் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக சூரி நடிப்பில் விடுதலை 2 மற்றும் ஏழு கடல் ஏழு மழை திரைப்படங்களில் நடித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது.
- இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கிஸ்மத்' படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம்.
தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான 'இஷ்க்', 'கும்பளங்கி நைட்ஸ்', 'ஆர்டிஎக்ஸ்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
இதன் மூலம் மலையாள சினிமாவில் அடுத்து வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார் ஷேன் நிகாம்.
ஷேன் நிகாம் தற்போது 'மெட்ராஸ்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக களம் இறங்கவுள்ளார்.
இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர். வசந்தகுமார் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்நிலையில், ஷேன் நிகாம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் 'மெட்ராஸ்காரன்' திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது. இதுக்குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல் ஐ சி (லவ் இன்ஷூரன்ஸ் கார்பரேஷன்) படத்தை இயக்கியுள்ளார்விக்னேஷ் சிவன்.
- அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஃபீல் குட் மற்றும் காமெடி படங்களை எடுப்பதில் முக்கியமானவர் விக்னேஷ் சிவன். போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். நானும் ரவுடி பட வெற்றிக்குப் பிறகு இவரின் புகழ் உச்சத்திற்கு சென்றது.
பின், சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். 2022ம் ஆண்டு மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார். இப்படத்தில் சமந்தா மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து இருந்தனர்.
இந்நிலையில் அடுத்ததாக லவ் டுடே படத்தை இயக்கி நடித்து மக்கள் மனதை கவர்ந்த பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல் ஐ சி (லவ் இன்ஷூரன்ஸ் கார்பரேஷன்) படத்தை இயக்கியுள்ளார்.
கிருத்தி செட்டி இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
படத்தை குறித்து புதிய அப்டேட் வந்துள்ளது. படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வரும் ஜூலை 25 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
- வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.
சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் தற்பொழுது வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே என ஒரு கூடத்தின் தலைவன் போருக்கு செல்வதற்கு முன் வெறியோடு பாடும் பாவனையில் உள்ளார் சூர்யா.
இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.இந்த பாடல் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்படுகிறது.
பாடலின் காட்சிகள் தற்பொழுது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சர்தார் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் சண்டை கலைஞர்கள் சங்க உறுப்பினர் ஏழுமலை மரணம் அடைந்தார்.
- படப்பிடிப்பில் பணிபுரியும்போது நமது சங்க உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் படப்பிடிப்பு நிலையங்களில் இருக்க வேண்டும்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்க (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், "கடந்த 17-ம் தேதி சர்தார் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் சண்டை கலைஞர்கள் சங்க உறுப்பினர் ஏழுமலை மரணம் அடைந்தார்.
படப்பிடிப்பில் பணிபுரியும்போது நமது சங்க உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் படப்பிடிப்பு நிலையங்களில் இருக்க வேண்டும். ஆம்புலன்சுடன் கூடிய மருத்துவ வசதிகள் அளிக்க வேண்டும் என்று பலமுறை தொடர்ச்சியாக தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருக்கிறோம். சில நிறுவனங்கள் தவிர பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் இந்த பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவது இல்லை. எனவே நமது இணைக்கப்பட்ட சங்கங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வருகிற 25-ம் தேதி வடபழனி கமலா தியேட்டரில் காலை 9 மணிக்கு சிறப்பு கூட்டம் நடைபெறும். அதில் அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்து கொள்ள ஏதுவாக 25-7-24 அன்று சென்னை நகரில் சின்னத்திரை, பெரிய திரை படப்பிடிப்புகள் நடைபெறாது.
வெளியூரில் நடக்கின்ற அனைத்து படப்பிடிப்புகளிலும் காலை 9 மணி முதல் 10 மணிவரை அனைத்து உறுப்பினர்களையும் படப்பிடிப்பு தளத்துக்கு வரவழைத்து பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- காதல்.. சிரிப்பு.. யுத்தம் உள்ளிட்ட வாசகங்களுடன் தொடங்கும் இந்த வீடியோவில் கழுத்தில் ரத்தத்துடன் சூர்யா
- இந்த கிலிம்ஸ் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது
இன்று [ஜூலை 23] நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், 'சூர்யா 44' படத்தின் அப்டேட் நேற்று நள்ளிரவு 12.12 மணிக்கு வெளியாகும் என இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார் .
இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது.
இந்நிலையில் நேற்று கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருந்தபடி சூர்யா 44 படத்தின் அதிரடியான கிலிம்ஸ் வீடியோ நாளிரவு 12.12 மணிக்கு வெளியாகியுள்ளது. காதல்.. சிரிப்பு.. யுத்தம் உள்ளிட்ட வாசகங்களுடன் தொடங்கும் INTHவீடியோவில் ரத்தத்துடன் கேங்ஸ்டர் தோற்றத்தில் துப்பாக்கியேந்தி மாஸ் காட்டும் லுக்கில் சூர்யா நடந்துவருவது விக்ரம் படத்தில் வரும் ரோலக்ஸ் கதாபாத்திரம் தந்த வைபை மீண்டும் தருவதாக உள்ளது. துப்பாக்கியை கேமராவின் முன் நீட்டி சூர்யாவின் சிக்நேச்சர் சிரிப்புடன் முடியும் இந்த கிலிம்ஸ் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரச் செய்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.
- ஒரு சில ரியாலிட்டி ஷோக்களில் மட்டும் பங்கேற்று வருகிறார்.
பாலிவுட் மற்றும் தமிழ் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகை ரம்பா. விஜயவாடாவில் பிறந்த ரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி.
தனது 15 வயதில் மலையாள படத்தின் மூலம் சினிமா உலகத்தில் காலடி எடுத்து வைத்தார் ரம்பா. அதை தொடர்ந்து தெலுங்கில் நடித்தார். தமிழில் 'உழவன்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ரம்பா. அப்படத்தை தொடர்ந்து 'உள்ளத்தை அள்ளித்தா', 'சுந்தர புருஷன்', 'செங்கோட்டை', 'விஜபி', 'அருணாச்சலம்', 'காதலா காதலா' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
கடைசியாக 'பெண் சிங்கம்' என்ற படத்தில் நடித்த ரம்பா, 2010ம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
100 படங்களுக்கு மேல் நடித்த இவர், தற்போது திரையுலகிலேயே தலைகாட்டாமல் ஒரு சில ரியாலிட்டி ஷோக்களில் மட்டும் பங்கேற்று வருகிறார். மேலும், சமூக வலைதள பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ரம்பா அடிக்கடி குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜயை, ரம்பா குடும்பத்துடன் சந்தித்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க விரும்புவதாக நடிகை ரம்பா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டேன். அதற்கு பின் சினிமாவில் நடிக்காமல் இடைவெளி ஏற்பட்டு விட்டது. நடித்து பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் மீண்டும் சினிமாவில் நடிப்பீர்களா என பலரும் கேட்கின்றனர். எனக்கு பிடித்தமான கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் நடிப்பேன் என கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஜர்பைஜானின் நடந்து வந்த விடாமுயற்சி படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தது.
- திரிஷா மற்றும் அஜித் இணைந்து இருக்கும் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.
இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர் இவர்களுடன் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின் வடமாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது.
சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து இரண்டு போஸ்டர்களை வெளியிட்டனர். சமீபத்தில் திரிஷா மற்றும் அஜித் இணைந்து இருக்கும் ஒரு விண்டேஜ் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்.
கடந்த சில நாட்களாக அஜர்பைஜானின் நடந்து வந்த படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தது. இந்நிலையில், விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேனி, அஜித்குமார், அர்ஜுன் ஆகியோர் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை ஆரவ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கவின் நடித்து வெளியான ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான்.
தமிழ் திரைத்துறையில் அடுத்து வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான கவின் 'நட்புனா என்ன தெரியுமா' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதன்பிறகு கவின் பிக்பாஸ் மூன்றாம் சீசனில் பங்கேற்றார். பிக் பாஸ் கவினுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பிக்பாஸிற்கு பிறகு 'லிஃப்ட்' என்ற படத்தில் நடித்தார். ஓடிடியில் மட்டும் வெளியான லிஃப்ட் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் இளன் இயக்கத்தில் கவின் நடித்து வெளியான ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக கவின் நடன இயக்குநரான சதீஷ் இயக்கும் கிஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் ப்ளடி பக்கர் என்ற திரைப்படத்திலும் நடிக்கவிருக்கிறார். வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அசோசியேட்டான விஷ்னு எடவன் இயக்கும் முதல் படத்தில் கவின் நடிக்கவுள்ளார் என்றும் இப்படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கவுள்ளது எனவும் செய்திகள் வெளியானது.
வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், நயன்தாரா - கவினின் புகைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த படத்தை கவினும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதன்மூலம் கவின் - நயன்தாரா இணைந்து நடிப்பது உறுதியாகியுள்ளது. ஆகவே இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் பட தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிவதாக ஜோ பைடன் தெரிவித்தார்.
- அதிபர் வேட்பாளராக கமலா தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிவதாக ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
இதனையடுத்து, அதிபர் வேட்பாளராக கமலா தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார். அதிபர் தேர்தலில் வென்றால் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சாதனையை கமலா ஹாிஸ் படைப்பார்.
2009 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை சந்தித்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவில், "அமெரிக்க ஜனாதிபதியாக இருக்க கூடிய பெண்ணுடன் இருப்பதாக" கமலா ஹாரிஸை குறிப்பிட்டு அவர் பதிவிட்டிருந்தார்.
கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட போதும் மல்லிகா ஷெராவத்தின் இந்த எக்ஸ் பதிவு வைரலானது.
தற்போது ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட பின்பு அந்த எக்ஸ் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அன்றே கணித்த மல்லிகா ஷெராவத் என்று இந்த பதிவை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.