என் மலர்
- இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
- இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளது.
நடிகர் சூர்யாவின் 44 ஆவது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி மற்றும் காரத்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது.
நாளை நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், 'சூர்யா 44' படத்தின் அப்டேட் இன்று நள்ளிரவு 12.12 மணிக்கு வெளியாகும் என இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- `அந்தகன்' திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இப்பாடலை பாடியுள்ளனர்.
ஒருகாலத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக பிரசாந்த் திகழ்ந்தார். பின்னர் திரை துறையில் இருந்து சில ஆண்டுகளாக விலகி இருந்த அவர் தற்போது மீண்டும் சினிமாக்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
தற்போது 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக அவர் நடித்துள்ளார். 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.
நீண்ட நாட்களாக தள்ளிப்போன `அந்தகன்' திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது..
இந்நிலையில், 'அந்தகன்' படத்தின் தீம் பாடலை நடிகர் விஜய் வரும் 24ம் தேதி வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இப்பாடலை பாடியுள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கங்குவா.
- வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.
சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தின் முதல் பாடல் நாளைவெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.
கங்குவா படத்தின் முதல் பாடல் ஃபயர் சாங் என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த பாடல் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்படுகிறது. தற்பொழுது இப்பாடலின் ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் பாடலை ஒற்றை வரியில் விவரிக்கின்றனர். அதில் சிங்கத்தின் கர்ஜனை, காட்டு தீ, வைப் என படக்குழுவினர் கூறுகின்றனர்.
இதனால் இப்பாடலிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டூடண்ட் நம்பர்-1 என்ற படத்தின் மூலம் இயக்குனராக தன் திரை வாழ்வை ஆரம்பித்தார் ராஜமௌலி
- இந்த ஆவணப்படம் ராஜமவுலியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகிறது.
தெலுங்கில் மட்டுமல்லாது இந்தியளவில் பிரம்மாண்ட இயக்குனர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. 2001-ம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர்-1 என்ற படத்தின் மூலம் இயக்குனராக தன் திரை வாழ்வை ஆரம்பித்த ராஜமவுலி தொடர்ந்து சிம்ஹத்ரி, சை, சத்ரபதி உள்ளிட்ட படங்களை இயக்கி கமர்சியல் இயக்குனராக வெற்றி பெற்றார்.
இவையனைத்தும் எஸ்.எஸ்.ராஜமவுலியை சாதாரண இயக்குனராகவே அடையாளப்படுத்தியது. ஆனால், 2012-ம் ஆண்டு இவர் இயக்கிய 'நான் ஈ' திரைப்படம் கதை ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் நாடு முழுவதும் பேசப்பட்டது. தமிழிலும் அப்படம் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
இதன் வெற்றியைக் கணக்கில் வைத்த ராஜமவுலி இனிமேல் குறைந்த பட்ஜெட்டில் கமர்சியல் கதைகளை இயக்கவே கூடாது என்கிற முடிவில் 3 ஆண்டுகள் கடின உழைப்பால் 2015-ம் ஆண்டு இந்தியாவே திரும்பிப்பார்த்த பாகுபலி திரைப்படத்துடன் வந்தார். உலகளவிலும் இந்தியாவிலிருந்து இப்படி ஒரு படம் வந்திருக்கிறதா என வியக்கும் அளவுக்கு அதன் கதாபாத்திர வடிவமைப்புகளும் வி.எப்.எக்ஸ் காட்சிகளும் பேசப்பட்டன. இதன் இரண்டாம் பாகமான பாகுபலி - 2 வெளியாகி உலகளவில் ரூ.1850 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இறுதியாக, ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் ரூ.1350 கோடி வரை வசூலித்து ராஜமவுலியை இந்தியத் திரை வரலாற்றில் முக்கியமான ஆளுமையாகக் காட்டியது.
இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் சினிமாவில் ராஜமவுலியின் பங்களிப்பை கூறும் விதமாக, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிலிம் கம்பானியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து "மார்டர்ன் மாஸ்டர்ஸ் (modern masters)" என்கிய பெயரில் அவர் குறித்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளனர். இதனை, ராகவ் கண்ணா இயக்கியுள்ளார். மேலும், இந்த ஆவணப்படம் ராஜமவுலியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகிறது.
இந்த ஆவணப்படத்தில் ராஜமவுலியின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்தும், திரைத்துறை வாழ்க்கை குறித்தும் பேச இருக்கிறது. பிரபல இயக்குனர்களான ஜேம்ஸ் காமரூன், ஜோ ரஸ்ஸோ மற்றும் கரன் ஜோஹர் இவரைப் பற்றி பேசியுள்ளனர்.
ராஜமவுலியின் திரைத்துறை நண்பர்களான பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், ராணா தகுபதி மற்றும் ராம் சரண் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆவண படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இதில் ராஜ மவுளி எப்படி கதையை அணுகுகிறார் மற்றும் ஒரு காட்சி அமைப்பிற்காக எவ்வளவு மெனெக்கெடுகிறார் என்ற காட்சிகள் அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படம் குறித்த அறிவிப்பை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- நீண்டநாள் ஆசை ஒன்று நிறைவேறி இருக்கிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகர் சேரன். தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் படியாக பல படங்களை இயக்கி நடித்துள்ள சேரன், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக தெரிவித்தார். அதன்படி இயக்குநரும், நடிகருமான சேரன் மலையாள திரையுலகில் நடிகராக களம் இறங்குகிறார்.
இது தொடர்பான பதிவில், "நண்பர்களே... முதன்முதலாக நீண்டநாள் ஆசையாக இருந்த ஒன்று நிறைவேறி இருக்கிறது.. மலையாள திரைப்படம் ஒன்றில் ஆகச்சிறந்த நடிகரான டொவினோ தாமஸ் உடன் இணைந்து 'இஸ்க்' படத்தின் இயக்குனரான அனுராஜ் மனோகர் இயக்கத்தில் நடிக்கிறேன்.. என்றும்போல உங்கள் ஆதரவும் அன்பும் தேவை.. நன்றி," என குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- துருவ் விக்ரம் கடந்த 2019- ம் ஆண்டு ஆதித்ய வர்மா என்ற படத்தில் அறிமுகமானார்.
- இயக்குனர் மாரி செல்வராஜுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்
பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கடந்த 2019- ம் ஆண்டு ஆதித்ய வர்மா என்ற படத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து 'மகான்' படத்தில் தந்தையுடன் நடித்தார். இந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவர் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.
இந்நிலையில் துருவ்விக்ரம் இயக்குனர் மாரி செல்வராஜுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார். இப்படத்திற்கு பைசன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் தற்பொழுது படத்தின் 70 சதவீத படப்பிடிப்புகள் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரித்துள்ளார்.
- படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.
ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் 'வீராயி மக்கள்'.
விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…
இயக்குநர் கோகுல் பேசியதாவது…,
இது போன்ற மண் சார்ந்த படங்கள் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். நாகரிகம் என்பது கிராமத்தில் தோன்றியது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை, வெகுளியான மக்களை நாம் அங்குதான் பார்க்க முடியும், இப்படி ஒரு கதையை படமாக்க நினைத்த என் நண்பனுக்கு வாழ்த்துக்கள். படம் நிச்சயமாக வெற்றி பெறும் நன்றி.
நடிகர் வேல ராமமூர்த்தி பேசியதாவது,
இந்தப் படத்தில் நான் மகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். உண்மையில் சொல்ல போனால் நான் நடிக்க வில்லை, எனக்கு அந்த கதாபாத்திரம் இயல்பாகவே பொருந்தி விட்டது. இந்தப் படத்தில் நடிக்கும்போது என் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வு இருந்தது. என் அம்மாவைப் போல இந்த வீராயி என் கண் முன்னே தோன்றினார். இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே இப்படி ஒரு படத்தை உருவாக்க முடியும், ஒவ்வொரு காட்சியையும் ரசித்து உருவாக்கியுள்ளார். படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள் நன்றி.
தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் சுரேஷ் நந்தா பேசியதாவது…,
எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் நாகராஜிற்கு நன்றி. தயாரிப்பாளர் மற்றும் கதைநாயகன் என்பது பெரிய பொறுப்புதான் அதை சரியாக செய்துள்ளேன் என நினைக்கிறேன்.படத்தில் பணி புரிந்த அத்தனை நடிகர்களும் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.
இயக்குநர் நாகராஜ் பேசியதாவது…,
இந்த படம் முழுக்க நான் வாழ்ந்து பார்த்த அன்பு, கோவம், வாழ்க்கை, வாழ்வியல்,இயக்குநர் சுசீந்திரன் சாருக்கும் நன்றி அவருடன் பணி புரிந்தது ஒரு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்தது. இந்தச் சூழலில் நான் மாரிமுத்து சாரை நினைத்துப் பார்க்கிறேன், அவரது முயற்சி இந்த படத்திற்கு பெரிய உதவியாக இருந்தது. இந்தப் படம் ஒரு கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் நடக்கும் சந்தோசத்தை போல, வேறு எந்த வீட்டிலும் இருக்காது. எத்தனை முரண்கள் இருந்தாலும் ஒருவர் ஒருவரை அரவணைத்து கொள்வது ஒரு அழகு. இப்படி பட்ட அழகான காட்சிகள் பல இந்தப் படத்தில் இருக்கிறது. கண்டிப்பாக உங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். இந்தப் படம் நிச்சயமாக உங்கள் ஆள் மனதை தொடும் என்று நம்புகிறேன். என்னுடன் பணி புரிந்த அனைவருக்கும் நன்றி.
இப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான வேல ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, பாண்டி அக்கா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம். சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார்.
நேற்று படத்தின் பாடல்களும் மற்றும் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார்.
- அஜர்பைஜானின் நடந்து வந்த படப்பிடிப்பு பணிகள் நேற்று முடிவடைந்தது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.
இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர் இவர்களுடன் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின் வடமாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது.
சிறு இடைவேளைக்கு பின் நடிகர் அஜித் குமாரின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கியது. படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்படும் வீடியோவை பகிர்ந்து அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அப்டேட் கொடுத்தார்.
சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து இரண்டு போஸ்டர்களை வெளியிட்டனர். சமீபத்தில் திரிஷா மற்றும் அஜித் இணைந்து இருக்கும் ஒரு விண்டேஜ் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்.
கடந்த சில நாட்களாக அஜர்பைஜானின் நடந்து வந்த படப்பிடிப்பு பணிகள் நேற்று முடிவடைந்தது. இதுக்குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் படக்குழு ஒன்றாக இருந்த க்ரூப் போட்டோவை பதிவிட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகும். ஆனால் அதில் எதிலும் இயக்குனர் மகிழ் திருமேனி அஜித்துடன் காணப்படவில்லை. தற்பொழுது வெளியிட்ட புகைப்படத்தின் அஜித் பக்கத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி காணப்படுகிறார். அடுத்த படப்பிடிப்பு பணி ஐதராபாத்தில் 8 நாட்கள் நடைப்பெறவுள்ளது
இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராம் சரண் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
- தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.
இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொள்ள தில் ராஜூ தயாரித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இப்பாடல் மக்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகியது.
தற்பொழுது கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என கூறியுள்ளார். இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- இப்பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இயக்குனர் சிம்புதேவன் அடுத்ததாக யோகி பாபுவை வைத்து `போட்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இக்கதை சூழல் இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு 80 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையாக அமைந்து இருக்கிறது. ஜப்பான் நாடு, மெட்ராஸ் ப்ரெசிடன்சியாக மீது குண்டு வீசிய போது அங்கு இருந்து 10 நபர்கள் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிக்க பதுங்குகிறார்கள்.
இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் இரண்டு பாடல்கள் கடந்த வாரத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து நாளை யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடா வா என்ற படத்தின் ப்ரோமோ பாடலை வெளியிடவுள்ளனர். இப்பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளம் "PERIYAR VISION-Everything for everyone” சென்னையில் தொடங்கப்பட்டது.
- இந்த OTT தளம்தான் உலகின் முதல் சமூக நீதிக்கான தளமாகும்.
திராவிடர் இயக்க வரலாற்றில் புதிய முயற்சியாக சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளம் "PERIYAR VISION-Everything for everyone" சென்னையில் தொடங்கப்பட்டது.
இந்த OTT தளத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். திரைப்படங்களுக்கான OTT தளத்தை நாம் அறிவோம். சமூக நீதிக்கான OTT தளத்தையும் இனி தெரிந்து கொள்வோம். "PERIYAR VISION- Everything for everyone" என்ற இந்த OTT தளம்தான் உலகின் முதல் சமூக நீதிக்கான தளமாகும்.
தி.க. தலைவர் கி.வீரமணி, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் இந்த OTT தளத்தைத் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் கனிமொழி எம்பி பேசுகையில், லிபர்ட்டி இன்று இந்த நாட்டில் யாருக்கும் இல்லாத சூழலில் இந்த திடலில்தான் அதை உருவாக்க முடியும் என்று நிரூபித்து உள்ளோம். அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் யாருக்கும் பேச்சுரிமை கிடையாது. சிந்தனை உரிமை கிடையாது எந்த லிபர்ட்டியும் கிடையாது. எல்லாருடைய லிபர்ட்டிக்காகவும் பாடுபட்ட பெரியார் கருத்துக்களை பதிவு செய்ய OTT தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகத்திற்கே வழிகாட்டியாக இருக்கும் அற்புதமான செயல்.
கொள்கைக்காக உலகில் தொடங்கப்படும் முதல் OTT தளம் இதுவாகதான் இருக்கும். அனைத்திலும் முன்னோடியாக இருக்கக்கூடிய திராவிடர் இயக்கம் இதிலும் முன்னோடியாக இருக்கிறது என்று பாராட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இவ்விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், "ஓடிடி தளம் இன்று மிகவும் முக்கியமான ஒன்று. சென்சார் போர்டில் இருக்கும் அளவிற்குப் பிரச்னைகள், கட்டுப்பாடுகள் இதில் இல்லை. 'பராசக்தி' படத்தில் ஆரம்பித்து, இப்போது நான் நடித்திருக்கும் 'சேகுவேரா' படம் வரை சென்சார் போர்டின் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இளைஞராக இருக்கும்போது இதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். அன்றிலிருந்து இன்று வரை சென்சார் போர்டில் பிரச்சனைகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஓடிடி-யில் இப்போது அந்தப் பிரச்னைகள் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால், ஓடிடி-யைக் குறைந்தபட்ச சுதந்திரத்துடன் படைப்பாளிகளால் பயன்படுத்த முடிகிறது.
இந்த ஓடிடியைப் பயன்படுத்தி திராவிட சித்தாந்தத்தை, பெரியார் கொள்கையை, சமத்துவ சிந்தனைகளை தலைமுறைகள் கடந்து நாம் எடுத்துச் செல்ல வேண்டும். பெரியாரை, அவரது சமத்துவ சிந்தனையை விஞ்ஞானப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. என்று கூறினார்.
கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஓடிடி மக்களிடையே பரவி அதற்கான ஆதரவு பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற ஓடிடியில் வெளிவரும் கண்டண்ட்டுகளை பார்க்கும் மக்கள் இந்த ஓடிடி- யில் வரும் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் குறும் படங்களை பார்த்து ஆதரிக்க வேண்டும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராதா மோகன் இயக்கும் முதல் வெப் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- இதில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா, பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மொழி. இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
அதைத் தொடர்ந்து திரிஷா நடிப்பில் அபியும் நானும் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றுக் கொடுத்தது. அதற்கடுத்து நாகர்ஜூனா நடிப்பில் பயணம் திரைப்படத்தை இயக்கினார்.
கடந்தாண்டு எஸ்.ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான பொம்மை திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
தற்பொழுது ராதா மோகன் சட்னி சாம்பார் எனும் வெப் தொடரை இயக்கியுள்ளார். இதில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவருடன் வாணிபோஜன் இணைந்து நடித்துள்ளார். மேலும் கயல் சந்திரன், நிதின் சத்யா, தீபாசங்கர், சம்யுக்தா விஸ்வநாத், சுந்தர் ராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். வாணி போஜன் இதற்கு முன் ராதா மோகன் இயக்கத்தில் மலேசியா டூ அமினிசியா என்ற படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
ராதா மோகன் இயக்கும் முதல் வெப் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாலியான குடும்ப பொழுதுபோக்கு தொடராக உருவாகியுள்ள இந்த தொடரின் முதல் தோற்றத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட சூழ்நிலையில் தற்பொழுது தொடரின் டீசர் வெளியாகியது.
இந்த தொடர் வரும் ஜூலை 26 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 6 எபிசோட்கள் இடம்பெற்றுள்ளது. இதே நாளில் தான் தனுஷ் நடிப்பில் ராயன் திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.