search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • ராம் சரண் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் இப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.

    இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொள்ள தில் ராஜூ தயாரித்துள்ளார்.

    சில மாதங்களுக்கு முன் கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இப்பாடல் மக்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகியது.

    தற்பொழுது கேம் சேஞ்சர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என கூறியுள்ளார். இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இப்பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

    இயக்குனர் சிம்புதேவன் அடுத்ததாக யோகி பாபுவை வைத்து `போட்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இக்கதை சூழல் இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு 80 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையாக அமைந்து இருக்கிறது. ஜப்பான் நாடு, மெட்ராஸ் ப்ரெசிடன்சியாக மீது குண்டு வீசிய போது அங்கு இருந்து 10 நபர்கள் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிக்க பதுங்குகிறார்கள்.

    இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் இரண்டு பாடல்கள் கடந்த வாரத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து நாளை யோகி பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடா வா என்ற படத்தின் ப்ரோமோ பாடலை வெளியிடவுள்ளனர். இப்பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளம் "PERIYAR VISION-Everything for everyone” சென்னையில் தொடங்கப்பட்டது.
    • இந்த OTT தளம்தான் உலகின் முதல் சமூக நீதிக்கான தளமாகும்.

     திராவிடர் இயக்க வரலாற்றில் புதிய முயற்சியாக சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளம் "PERIYAR VISION-Everything for everyone" சென்னையில் தொடங்கப்பட்டது.

    இந்த OTT தளத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். திரைப்படங்களுக்கான OTT தளத்தை நாம் அறிவோம். சமூக நீதிக்கான OTT தளத்தையும் இனி தெரிந்து கொள்வோம். "PERIYAR VISION- Everything for everyone" என்ற இந்த OTT தளம்தான் உலகின் முதல் சமூக நீதிக்கான தளமாகும்.

    தி.க. தலைவர் கி.வீரமணி, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் இந்த OTT தளத்தைத் தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்வில் கனிமொழி எம்பி பேசுகையில், லிபர்ட்டி இன்று இந்த நாட்டில் யாருக்கும் இல்லாத சூழலில் இந்த திடலில்தான் அதை உருவாக்க முடியும் என்று நிரூபித்து உள்ளோம். அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் யாருக்கும் பேச்சுரிமை கிடையாது. சிந்தனை உரிமை கிடையாது எந்த லிபர்ட்டியும் கிடையாது. எல்லாருடைய லிபர்ட்டிக்காகவும் பாடுபட்ட பெரியார் கருத்துக்களை பதிவு செய்ய OTT தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலகத்திற்கே வழிகாட்டியாக இருக்கும் அற்புதமான செயல்.

    கொள்கைக்காக உலகில் தொடங்கப்படும் முதல் OTT தளம் இதுவாகதான் இருக்கும். அனைத்திலும் முன்னோடியாக இருக்கக்கூடிய திராவிடர் இயக்கம் இதிலும் முன்னோடியாக இருக்கிறது என்று பாராட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

    இவ்விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், "ஓடிடி தளம் இன்று மிகவும் முக்கியமான ஒன்று. சென்சார் போர்டில் இருக்கும் அளவிற்குப் பிரச்னைகள், கட்டுப்பாடுகள் இதில் இல்லை. 'பராசக்தி' படத்தில் ஆரம்பித்து, இப்போது நான் நடித்திருக்கும் 'சேகுவேரா' படம் வரை சென்சார் போர்டின் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    இளைஞராக இருக்கும்போது இதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். அன்றிலிருந்து இன்று வரை சென்சார் போர்டில் பிரச்சனைகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஓடிடி-யில் இப்போது அந்தப் பிரச்னைகள் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால், ஓடிடி-யைக் குறைந்தபட்ச சுதந்திரத்துடன் படைப்பாளிகளால் பயன்படுத்த முடிகிறது.

    இந்த ஓடிடியைப் பயன்படுத்தி திராவிட சித்தாந்தத்தை, பெரியார் கொள்கையை, சமத்துவ சிந்தனைகளை தலைமுறைகள் கடந்து நாம் எடுத்துச் செல்ல வேண்டும். பெரியாரை, அவரது சமத்துவ சிந்தனையை விஞ்ஞானப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. என்று கூறினார்.

    கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஓடிடி மக்களிடையே பரவி அதற்கான ஆதரவு பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற ஓடிடியில் வெளிவரும் கண்டண்ட்டுகளை பார்க்கும் மக்கள் இந்த ஓடிடி- யில் வரும் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் குறும் படங்களை பார்த்து ஆதரிக்க வேண்டும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராதா மோகன் இயக்கும் முதல் வெப் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
    • இதில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    2007 ஆம் ஆண்டு ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா, பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மொழி. இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

    அதைத் தொடர்ந்து திரிஷா நடிப்பில் அபியும் நானும் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றுக் கொடுத்தது. அதற்கடுத்து நாகர்ஜூனா நடிப்பில் பயணம் திரைப்படத்தை இயக்கினார்.

    கடந்தாண்டு எஸ்.ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான பொம்மை திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

    தற்பொழுது ராதா மோகன் சட்னி சாம்பார் எனும் வெப் தொடரை இயக்கியுள்ளார். இதில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    அவருடன் வாணிபோஜன் இணைந்து நடித்துள்ளார். மேலும் கயல் சந்திரன், நிதின் சத்யா, தீபாசங்கர், சம்யுக்தா விஸ்வநாத், சுந்தர் ராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். வாணி போஜன் இதற்கு முன் ராதா மோகன் இயக்கத்தில் மலேசியா டூ அமினிசியா என்ற படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

    ராதா மோகன் இயக்கும் முதல் வெப் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜாலியான குடும்ப பொழுதுபோக்கு தொடராக உருவாகியுள்ள இந்த தொடரின் முதல் தோற்றத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட சூழ்நிலையில் தற்பொழுது தொடரின் டீசர் வெளியாகியது.

    இந்த தொடர் வரும் ஜூலை 26 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 6 எபிசோட்கள் இடம்பெற்றுள்ளது. இதே நாளில் தான் தனுஷ் நடிப்பில் ராயன் திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆதி தற்பொழுது மீண்டும் ஈரம் படத்திற்கு பிறகு அறிவழகன் இயக்கும் 'சப்தம்' படத்தில் நடித்துள்ளார்.
    • தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    2009 ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த 'ஈரம்' படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை ஆதி வெளிப்படுத்தி மக்கள் மனதை வென்றார். இயக்குனர் அறிவழகனுக்கு ஈரம் திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதற்கடுத்து அறிவழகன் நகுல் நடிப்பில் வெளிவந்த வல்லினம் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த பார்டர், குற்றம் 23 திரைப்படத்தை இயக்கினார்.

    ஆதி தற்பொழுது மீண்டும் ஈரம் படத்திற்கு பிறகு அறிவழகன் இயக்கும் 'சப்தம்' படத்தில் நடித்துள்ளார். ஹாரர் கதைக்களப் பின்னணியில் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. . படத்தில் ஆதி ஒரு மருத்துவ கல்லூரி ப்ரொஃபெசராக காணப்படுகிறார். அந்த கல்லூரியில் ஒரு அமானுஷ்ய சத்தம் கேட்டுக் கொண்டே இருப்பது போன்ற காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளன. வெறும் சத்தத்தை வைத்தே திகிலான காட்சிகள் அமைந்துள்ளது டீசரில்.

    சப்தம் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.

    நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய பிரசாந்த் , தெலுங்கில் வினய விதய ராமா படத்தில் ராம்சரணுக்கு அண்ணனாக நடித்திருந்தார். அதன்பின் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

    திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நாளை மிகப் பெரிய அறிவிப்பை வெளியிடப்போவதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர் விஜய் , பிரசாத் மற்றும் பிரபு தேவா இடம் பெற்றுள்ளனர்.

    படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் எஸ்.ஜே சூர்யா அடுத்ததாக பகத் பாசிலுடன் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளார்.
    • அனைத்து கதாப்பாத்திரத்திலும் அவருடைய பெஸ்டை கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்பொழுது இயக்குனர் எஸ்.ஜே சூர்யா என்ற அடையாளத்தை மறைத்துவிட்டு நடிகர் எஸ்.ஜே சூர்யாவாக ஆகிவிட்டார். நடிக்கும் அனைத்து கதாப்பாத்திரத்திலும் அவருடைய பெஸ்டை கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த இறைவி படத்தில் தனுது அபாரமான நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதைதொடர்ந்து ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர், மாநாடு, டான் போன்ற பல படங்களில் நடித்து  மக்கள் மனதில் மீண்டும் ஒரு இடத்தை பிடித்தார்.

    கடந்த ஆண்டு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் மார்க் ஆண்டனி திரைப்படம் வசூலில் மாபெரும் உச்சத்தை தொற்றது. தமிழ் மற்றும் தெலுங்குவில் பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

    வீர தீர சூரன், இந்தியன் 3, ராயன், கேம் சேஞ்சர், எல்.ஐ.சி, சூர்யாஸ் சாட்டர்டே பல சுவாரசிய லைன் அப்ஸ்களை கையில் வைத்துள்ளார் எஸ்.ஜே சூர்யா.

    இந்நிலையில் எஸ்.ஜே சூர்யா அடுத்ததாக பகத் பாசிலுடன் இணைந்து படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை விபின் தாஸ் இயக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

     

    இதற்கு முன் மலையாளத்தில் ஜெய ஜெய ஜெய ஹே மற்றும் குருவாயூர் அம்பலநடையில் படங்களை இயக்கியவர் விபின் தாஸ், இந்த இருப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றது. பகத் பாசிலின் நடிப்பில் சளைத்தவர் கிடையாது.

    பகத் ஃபாசில் சமீபத்தில் நடித்து வெளியான ஆவேசம் திரைப்படம் பார்த்து எஸ்.ஜே சூர்யா அவரின் மிகப்பெரிய ஃபேன் ஆகியதாக கூறியுள்ளார். இந்த உச்சக்கட்ட நடிகர்கள் இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்க இருப்பதால் இப்படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தற்பொழுது தக் லைஃப் , விடா முயற்சி , கோட் ஆகிய டாப் ஹீரோ திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
    • வெப் தொடர் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நட்சத்திர கதாநாயகியாக இருப்பவர் நடிகை திரிஷா. தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கடந்த 22 வருடங்களாக தக்க வைத்துள்ளார் என்பது பெருமைக்குறியது.

    கடந்தாண்டு வெளியான லியோ மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் திரிஷா, இந்த இரண்டு திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற்றது.

    தற்பொழுது தக் லைஃப் , விடா முயற்சி , கோட் ஆகிய டாப் ஹீரோ திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் திரிஷா நடித்து இருக்கும் பிருந்தா எனும் வெப் தொடர் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    திரிஷா ஓடிடி தொடரில் நடிப்பது இதுவே முதல்முறை, தொடரின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இத்தொடரை சூர்யா வங்களா இயக்கியுள்ளார். இது ஓடிடி தளமான சோனி லைவில் வெளியாகவுள்ளது.

    சஸ்பன்ஸ் திரில்லர் கதைக்களத்துடன் அமைந்திருக்கும் இக்கதையில் இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ், ஆமானி, ரவிந்திர விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷக்திகாந்த் கார்த்திக் இசை அமைத்துள்ளார். இத்தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் வெளியாகவுள்ளது.

    படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த தொடரில் பெண் எஸ் ஐ காவலர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ட்ரைலரின் முதல் காட்சியிலே திரிஷாவை ஒரு கொலை வழக்கில் குற்றவாளியை கண்டு பிடிக்க முடியாததால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறாள். பின் பிளாஷ் பேக்கில் அவள் எப்படி திறமையான் போலீஸ் அதிகாரியாக இருந்தாள் மற்றும் கிரிமினலை எப்படி அவள் கண்டுப்பிடித்தல் என்பதே தொடரின் அடிப்படை கதைக்களம் ஆகும். இந்த தொடரின் மீது ரசிகர்கள் மத்தியின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகுதாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகுதாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுப்பெற்று டீசர் வெளியானது.

    காமெடியாகவும் 'இது எல்லாம் மீறி இந்தியை திணித்தே தீருவோம் என்றால்.. இந்தி தெரியாது போயா' போன்ற இந்தி திணிப்புக்கு எதிராக இடம்பெற்று அழுத்தமான வசனங்கள் டீசரில் இடம் பெற்றது.

    இப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் எம்.எஸ் பாஸ்கர், தேவ தர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனரான சுமன் குமார் இதற்கு முன் ஃபேமிலி மேன் என்ற பிரபல வலைத் தொடருக்கு கதையாசிரியாவார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், ரகுதாத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். படத்தின் இடம்பெற்றுள்ள `அருகே வா, என்ற பாடலின் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை எழுதி பாடியுள்ளார் ஷான் ரோல்டன். இது ஒரு காதல் பாடலாக அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அதைத்தொடர்ந்து சாந்தகுமார் இயக்கத்தில் மௌனகுரு திரைப்படத்தில் நடித்தார்.
    • பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    2010 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வம்சம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் நடிகர் அருள்நிதி. அதைத்தொடர்ந்து சாந்தகுமார் இயக்கத்தில் மௌனகுரு திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது அவருக்கு, வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார் அருள்நிதி.

    அதற்கடுத்து தகராறு,டிமான்டி காலனி, ஆறாது சினம், களத்தில் சந்திப்போம் , தேஜாவு என வித்தியாசமான கதைகளில் நடித்தார். கடைசியாக 2023 ஆம் ஆண்டு வெளியான கழுவேத்தி மூர்கன் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    தற்பொழுது டிமாண்டி காலனி பாகம் இரண்டில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடிக்கும் அடுத்த படத்திற்கான அப்டேட் கிடைத்துள்ளது. சமீபத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்ற மகாராஜா திரைப்படத்தை தயாரித்த பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் அருள்நிதியை வாழ்த்தி பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். படத்தை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிமான்டி காலனி படக்குழுவும் அருள்நிதியை வாழ்த்தி போஸ்டரை வெளியிட்டுள்ளனர். படத்தின் அப்டேட்டை இன்று மாலை 5.01 மணிக்கு வெளியிடப்போவதாக கூறியுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆனந்த் இயக்கும் இப்படத்திற்கு "நண்பன் ஒருவன் வந்தப் பிறகு" என தலைப்பிடப்பட்டுள்ளது.
    • முழுக்கமுழுக்க இப்படம் இளம் தலைமுறையின் நட்பைப் பற்றி பேசக்கூடியப் படமாக உருவாகியுள்ளது.

    ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து வெளியான மீசைய முறுக்கு படத்தில் நடித்து பலருக்கும் பரீட்சையமான முகமானார் ஆனந்த். இந்நிலையில் ஆனந்த் தற்பொழுது இயக்குனர் அவதாரத்தை எடுத்துள்ளார்.

    ஆனந்த் இயக்கும் இப்படத்திற்கு "நண்பன் ஒருவன் வந்தப் பிறகு" என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தயாரித்துள்ளார். இப்படத்தில் ஆனந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க அவருடன் பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், மோனிகா, யூடியூபர் இர்ஃபான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    முழுக்கமுழுக்க இப்படம் இளம் தலைமுறையின் நட்பைப் பற்றி பேசக்கூடியப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் முக்கியமான இரண்டு பாடலை தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ்குமார் பாடியுள்ளனர்.

    திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தற்பொழுது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. படத்தின் டிரைலர் ஒரு ஃபீல் குட் படத்துக்கான அனைத்து விஷயங்களும் அதில் அமைந்து இருக்கிறது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆனந்த இயக்குனராக அறிமுகமாகும் இப்படம் நல்ல வரவேற்பை பெரும் என நம்பப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
    • சாதி வளையம் வைத்து சாதி கொலையாக மாற்ற துடிப்பது சமூக ஆரோக்கியம் இல்லை.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். கொலை சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி இயக்குனர் பா.ரஞ்சித் தலைமையில் சென்னையில் நேற்று மாலை மாபெரும் பேரணி நடந்தது. இந்நிலையில் பிரபல சினிமா இயக்குனர் பேரரசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒருவர் கொலை செய்யப்பட்டால் ஏன் கொலை செய்யப்பட்டார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையின் பின்னணி என்ன? என்பதை ஆராய்வதை விட, அதை அரசியல் கொலையாகவும், சாதி கொலையாகவும் மாற்றிவிடவே பலர் துடிக்கின்றனர். அனுதாபம் காட்டுவதை விட சுயலாபம் காணவே பலர் துடிக்கின்றனர்.

    ஒரு கட்சி இன்னொரு கட்சிமீது பழி சுமத்துவது, இறந்தவர் மீது சாதி வளையம் வைத்து சாதி கொலையாக மாற்ற துடிப்பது இதெல்லாம் சமூக ஆரோக்கியம் இல்லை.

    சட்ட ஒழுங்கு பின்னடைவு என்பது வேறு. கொலைக்கு ஆளும் கட்சி காரணம் என்பது வேறு. கொலைக்கு நியாயம் கேட்பது வேறு! கொலையில் சுயலாபம் பார்ப்பது வேறு! கொலை செய்யப்பட்டவர் யார்? கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான உண்மையான காரணம் என்ன? இந்த விடையை நோக்கித்தான் அனைவரும் நகர வேண்டும்.

    சிலரின் யூகங்கள் சமூகத்தில் தேவையில்லாத சலசலப்பை உருவாக்கும். எல்லாவற்றுக்கும் சாதியை முன்னிறுத்துவது

    நாட்டை நூறு வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து விடும்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×