என் மலர்
- அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- சாதி வளையம் வைத்து சாதி கொலையாக மாற்ற துடிப்பது சமூக ஆரோக்கியம் இல்லை.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி சென்னை பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டார். கொலை சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி இயக்குனர் பா.ரஞ்சித் தலைமையில் சென்னையில் நேற்று மாலை மாபெரும் பேரணி நடந்தது. இந்நிலையில் பிரபல சினிமா இயக்குனர் பேரரசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒருவர் கொலை செய்யப்பட்டால் ஏன் கொலை செய்யப்பட்டார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையின் பின்னணி என்ன? என்பதை ஆராய்வதை விட, அதை அரசியல் கொலையாகவும், சாதி கொலையாகவும் மாற்றிவிடவே பலர் துடிக்கின்றனர். அனுதாபம் காட்டுவதை விட சுயலாபம் காணவே பலர் துடிக்கின்றனர்.
ஒரு கட்சி இன்னொரு கட்சிமீது பழி சுமத்துவது, இறந்தவர் மீது சாதி வளையம் வைத்து சாதி கொலையாக மாற்ற துடிப்பது இதெல்லாம் சமூக ஆரோக்கியம் இல்லை.
சட்ட ஒழுங்கு பின்னடைவு என்பது வேறு. கொலைக்கு ஆளும் கட்சி காரணம் என்பது வேறு. கொலைக்கு நியாயம் கேட்பது வேறு! கொலையில் சுயலாபம் பார்ப்பது வேறு! கொலை செய்யப்பட்டவர் யார்? கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான உண்மையான காரணம் என்ன? இந்த விடையை நோக்கித்தான் அனைவரும் நகர வேண்டும்.
சிலரின் யூகங்கள் சமூகத்தில் தேவையில்லாத சலசலப்பை உருவாக்கும். எல்லாவற்றுக்கும் சாதியை முன்னிறுத்துவது
நாட்டை நூறு வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து விடும்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வாஸ்கோடகாமா படத்தை ஆர்ஜிகே இயக்கி உள்ளார்.
- இந்த படத்திற்கு கலை இயக்க பணிகளை ஏழுமலை ஆதிகேசவன் மேற்கொண்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நகுல். அதன்பிறகு தனது உடல் எடையை குறைத்து மெல்லிய தோற்றத்திற்கு மாறி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவ்வாறு நகுல் நடித்து வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில், நகுல் நடிப்பில் உருவாகி இருக்கி, விரைவில் வெளயியாக இருக்கும் புதிய படம் வாஸ்கோடகாமா. ஆர்ஜிகே இயக்கி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.
வாஸ்கோடகாமா திரைப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த படத்தின் சென்சார் விவரங்களும் வெளியாகி உள்ளது. வாஸ்கோடமாகா திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு சான்று வழங்கி உள்ளது.
அருன் என்.வி. இசையமைத்துள்ள இந்த படத்திற்கு எம்எஸ் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, தமிழ் குமரன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். உறியடி, உறியடி 2, ஃபைட் கிளப் போன்ற படங்களின் கலை இயக்குநராக பணியாற்றிய ஏழுமலை ஆதிகேசவன் இந்த படத்திற்கு கலை இயக்க பணிகளை மேற்கொண்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஏன் யாரும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை?
- இந்த ஆண்டு திரைத்துறைக்கு மிக மோசமான ஆண்டாக மாறி வருகிறது.
முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் 75 ஆவது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. அதில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த விஷால், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய நடிகர் விஷால், "தமிழ்நாட்டில் உள்ள ஜிஎஸ்டி வரி விவகாரத்தை கவனிக்குமாறு பிரதமரை வேண்டுகிறேன். தமிழகத்தில் மட்டும்தான் இரண்டு வரி வசூலிக்கும் முறை பின்பற்றப்படுகிறது. "ஒரே வரி ஒரே நாடு" என்று நீங்கள் கூறிய போது உங்களை நம்பினேன், எனினும் ஏன் தமிழகத்தில் மட்டும் இப்படி நடக்கிறது? ஏன் யாரும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை?"
"உண்மையில் இது திரைத்துறையை பெரிதும் பாதிக்கிறது. 8 சதவீதம் உள்ளாட்சி வரி செலுத்துவது அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பெரிய சுமையாக உள்ளது. திரைத்துறை மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு திரைத்துறைக்கு மிக மோசமான ஆண்டாக மாறி வருகிறது."
"யாரும் இழப்பை பற்றி வெளியில் பேசுவதில்லை. அனைவரும் வலியை மனதிற்குள் வைத்துக் கொள்கின்றனர். நாங்கள் ஆடம்பர வாழ்க்கையை கேட்கவில்லை, அனைவரும் சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.
- இந்தி திணிப்புக்கு எதிராக இடம்பெற்று அழுத்தமான வசனங்கள் டீசரில் இடம் பெற்றது.
- இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி தற்போது இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள 'ரகுதாத்தா' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுப்பெற்று டீசர் வெளியானது.
காமெடியாகவும் 'இது எல்லாம் மீறி இந்தியை திணித்தே தீருவோம் என்றால்.. இந்தி தெரியாது போயா' போன்ற இந்தி திணிப்புக்கு எதிராக இடம்பெற்று அழுத்தமான வசனங்கள் டீசரில் இடம் பெற்றது.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் எம்.எஸ் பாஸ்கர், தேவ தர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனரான சுமன் குமார் இதற்கு முன் ஃபேமிலி மேன் என்ற பிரபல வலைத் தொடருக்கு கதையாசிரியாவார்.
இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ரகுதாத்தா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, மேடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது:-
ரகு தாத்தா.. பெண்கள் மீதான திணிப்பு பற்றியது. டீசரிலும் பார்த்திருப்பீர்கள். எல்லா விதமான திணிப்பு பற்றியும் தான் இந்த படம்.
இந்த படத்தில் சின்ன மெசேஜ் சொல்ல முயற்சி செய்திருக்ககோம். ஆனால், உபதேசம் சொல்ற மாதிரி இருக்காது.
இந்தப் படம் பார்க்கும்போது தெரியும். அதில், இந்தியை படத்தில் டிரை பண்ணியிருக்கோம். இதில் எந்த அரசியல் சாயலும், சர்ச்சைக்குரியதாகவும் எதுவும் இல்லை.
படத்திற்கு வரும் மக்கள், ஜாலியாக படத்தை பார்த்து செல்லும் வகையில் கதை அமைந்திருக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா.
- இப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் வாஸ்கோடகாமா.இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த' வாஸ்கோடகாமா ' திரைப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே. எஸ். ரவிகுமார்,நடிகை தேவயானி கலந்து கொண்டார்கள்.
விழாவில் நடிகை தேவயானி பேசும் போது,
"என் தம்பி நகுல் நடித்த பட விழாவில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
அவனுக்கு நான் முறையில் அக்கா என்றாலும் வயதில் சின்னவனாக இருப்பதால் அவனை நான் அம்மாவைப் போல் பார்த்துக் கொள்வேன்.அவனுக்கு நான் இன்றும் அம்மாதான்.சின்ன வயதில் இருந்து துறுதுறு என்று இருப்பான். நல்ல திறமைசாலி.
இன்று என் அப்பாவும் அம்மாவும் இல்லை. ஆனால் இங்கே நாங்கள் இருப்பதைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நான் இங்கே இருப்பதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஆசீர்வாதம் இங்கே நிரம்பி இருப்பதாக நினைக்கிறேன்.எப்போதும் அவனுக்கு ஆதரவாக இருந்த அவர்கள் இப்போதும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன் "என்று கூறி வாழ்த்தினார் .
நாயகன் நகுல் பேசும் போது,
"எனது வாழ்க்கை எங்கே தொடங்கி எங்கே போகிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. மும்பையில் பள்ளியில் படித்த போது அக்கா இங்கே நடிக்க வந்து விட்டார். அவருக்காக, அவர் அழைத்ததால் இங்கு வந்து விட்டோம்.
நான் முதலில் பைலட் ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டு முயன்றேன் . பிறகு விஸ்காம் சேர்ந்தேன். அதுவும் ஒரு காதலுக்காக மாறினேன். அதுவும் நிறைவேறவில்லை.
ராணுவத்தில் சேர ஆசைப்பட்டேன் .அதற்காக எடையெல்லாம் குறைத்தேன்.அதுவும் நடக்கவில்லை .
ஏதோ ஒரு அதிர்ஷ்டம், ஏதோ ஒரு ஆசீர்வாதம் காரணமாக இங்கு வந்து சேர்ந்து விட்டேன்.
ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தால் தான் பாய்ஸ் படத்தில் நடிக்க வந்தேன். பிறகு காதலில் விழுந்தேன் வந்தது. நான் ஒன்று நினைத்தால் எல்லோரும் இன்னொன்றை என்னிடம் ரசித்தார்கள். நான் பாடலாம் என்றால் அவர்கள் நகுல் நன்றாக ஆடுகிறார் என்றார்கள்.
பல தடைகள் தாமதங்களுக்குப் பிறகு எப்படியோ அடுத்தடுத்த படங்கள். இப்படித்தான் மாசிலாமணி வந்தது, பிறகு வல்லினம் வந்தது.சில மாதங்கள் எந்த வேலையும் இல்லாமல் கூட இருந்தேன் .ஒரு கட்டத்தில் புலம்பதில் பயனில்லை என்று புரிந்தது. எதெது எப்போது நடக்குமோ அதது அப்போது நடக்கும் என்கிற தெளிவு வந்தது.
இரண்டு மணி நேரம் சிரிக்கச் சிரிக்க இந்த வாஸ்கோடகாமா படத்தின் கதையைச் சொன்னார் ஆர்ஜிகே. அதேபோல் எடுத்துள்ளார். இதுவரை நான் நடிக்காத டார்க் ஹ்யூமர் கதை இது .
சினிமாவில் விமர்சனம் கூடாது என்பது அல்ல ,அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சினிமா நூற்றாண்டு கண்டு விட்டது. இதை நம்பி பலபேர் இருக்கிறார்கள். விமர்சனம் என்கிற பெயரில் சினிமாவை அழித்து விடாதீர்கள்." என்று கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அடுத்ததாக ஹலிதா `மின்மினி' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
- படத்தின் ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா மேற்கொண்டுள்ளார்.
பூவரசம் பீபீ , ஏலே போன்ற படங்களை தனக்கென ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் படங்களை இயக்கி மக்கள் மனத்தில் இடம் பிடித்தவர் ஹலிதா ஷமீம். இவர் இயக்கத்தில் வெளியான சில்லு கருப்பட்டி படம் மக்களிடம் பரவலான பாராட்டைப் பெற்றது.
அடுத்ததாக ஹலிதா `மின்மினி' என்ற படத்தை இயக்கியுள்ளார். எஸ்தர் அனில், கௌரவ் காளை மற்றும் பிரவின் கிஷோர் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாதியின் படப்பிடிப்பை 2015 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளார் ஹலிதா. அதில் நடித்த நடிகர்கள் நிஜ காலத்திலேயே வளர வேண்டும் என்பதற்காக, 7 ஆண்டுகள் காத்து இருந்து அவர்கள் வளர்ந்தப் பிறகு இரண்டாம் பாதியை படமாக்கியுள்ளார்.
படத்தின் ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா மேற்கொண்டுள்ளார். படத்தின் இசையை ஏ.ஆர் ரகுமானின் மகளான கதிஜா ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தை முரளி கிருஷ்ணன் உடன் இணைந்து ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தயாரித்துள்ளார்.
படத்தை உலகளவில் டெண்ட் கொட்டா மற்றும் சிம்பா நிறுவனம் வெளியிடவுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. சில மாதங்களுக்கு முன் படத்தின் சிறப்பு திரையிடல் நடைப்பெற்று நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆனந்த் இயக்கும் இப்படத்திற்கு "நண்பன் ஒருவன் வந்தப் பிறகு" என தலைப்பிடப்பட்டுள்ளது.
- திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து வெளியான மீசைய முறுக்கு படத்தில் நடித்து பலருக்கும் பரீட்சையமான முகமானார் ஆனந்த். இந்நிலையில் ஆனந்த் தற்பொழுது இயக்குனர் அவதாரத்தை எடுத்துள்ளார்.
ஆனந்த் இயக்கும் இப்படத்திற்கு "நண்பன் ஒருவன் வந்தப் பிறகு" என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தயாரித்துள்ளார். இப்படத்தில் ஆனந்த் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க அவருடன் பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், மோனிகா, யூடியூபர் இர்ஃபான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
முழுக்கமுழுக்க இப்படம் இளம் தலைமுறையின் நட்பைப் பற்றி பேசக்கூடியப் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் முக்கியமான இரண்டு பாடலை தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ்குமார் பாடியுள்ளனர்.
திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். படத்தின் டிரைலர் நாளை காலை 11.11 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளனர். படத்தின் டிரைலரை தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவான்களாக திகழும் ஏ.ஆர் ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அனிருத் வெளியிடவுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அதர்வா டிஎன்ஏ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்
- இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கியுள்ளார்.
நடிகர் அதர்வா, பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது ஒத்தைக்கு ஒத்த போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
அதே சமயம் இவர் எம் ராஜேஷ் இயக்கத்தில் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இதற்கிடையில் அதர்வா டிஎன்ஏ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதர்வா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
இதில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடிக்கிறார். இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்குகிறார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
கடந்த 2016-ம் ஆண்டு தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியான 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். அதன் பின்னர் 'மான்ஸ்டர்', 'பர்ஹானா' போன்ற திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றார். 'டிஎன்ஏ' படம் ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது நிறைவடைந்துள்ளது. இதுக்குறித்து படக்குழுவினர் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களை 5 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.
- திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய பிரசாந்த் , தெலுங்கில் வினய விதய ராமா படத்தில் ராம்சரணுக்கு அண்ணனாக நடித்திருந்தார். அதன்பின் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.
இந்நிலையில் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள `அந்தகன்' திரைப்படத்தின் குழுவிற்கு ஜூலை 24-ம் தேதி மிக பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது என்று படக்குழு கூறியுள்ளது. திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
24. 7. 24
— Prashanth (@actorprashanth) July 20, 2024
A big surprise from the team of #AndhaganThePianist
Coming soon...@actorthiagaraja @actorprashanth #Karthik @SimranbaggaOffc @PriyaAnand @thondankani @iYogiBabu #Andhagan#Andhagan #AndhaganThePianist #TopStarPrashanth #AndhaganfromAug
#RaviYadhav… pic.twitter.com/lwl3hHOK7k
- விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார்.
- விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்கிறார்.
சேதுபதி, சித்தா படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. இன்று எஸ் ஜே சூர்யாவின் பிரந்தநாலை முன்னிட்டு படக்குழுவினர் அவரை வாழ்த்தி போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் எஸ்ஜே சூர்யா போலீஸ் வேடத்தில் உள்ளார். இதன் மூலம் படத்தின் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்பாடலை பால் டப்பா பாடியுள்ளார்.
- இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
ஜெயம் ரவி சைரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பல சுவாரசியமான படங்களில் கமிட் ஆகியுள்ளார் இதனால் இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் படங்களின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதில் பிரதர் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், இறுதிக்கட்ட பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பிரதர் படத்தின் முதல் பாடல் "மக்காமிஷி" தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை பால் டப்பா பாடியுள்ளார். மக்காமிஷி என்ற வார்த்தைக்கு கெத்து, திமிரு, ஸ்வாக் என்று அர்த்தம். இப்பாடம் ஒரு ஜாலியான வைப் செய்யும் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் வீடியோ பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
பால் டப்பாவின் வரிகளும், குரலும் அதற்கு ஜெயம் ரவி நடனம் ஆடுவது என புதுவிதமாக அமைந்துள்ளது.
பிரதர் படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- எஞ்சாய் எஞ்சாமி பாடல் மூலம் பட்டித் தொட்டி முதல் பிரபலமானவர் தெருக்குரல் அறிவு.
- சுயாதீன கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய இசை ஆல்பம் "வள்ளியம்மா பேராண்டி"
எஞ்சாய் எஞ்சாமி பாடல் மூலம் பட்டித் தொட்டி முதல் பிரபலமானவர் தெருக்குரல் அறிவு. அதைத்தொடர்ந்த் பல படங்களில் பின்னணி பாடகராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தெருக்குரல் அறிவு எழுதி, மெட்டமைத்து, இசை வடிவமைத்து, சுயாதீன கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய இசை ஆல்பம் "வள்ளியம்மா பேராண்டி". இசை உலகில் கோலோச்சும் முன்னணி நிறுவனமான சோனி மியூசிக் (Sony Music) நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது. இந்த ஆல்பம் பாடல் வெளியீடு விழா, திரைப்பிரபலங்களுடன் ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
பாடகர் ஆண்டனி தாசன் பேசியதாவது...
என்னைப்போல் திறமையானவர்களை அறிமுகப்படுத்தும் இயக்குநர் ரஞ்சித் அவர்களுக்கு நன்றி. இந்த ஆல்பத்திற்கு தம்பி அறிவு என்னை அழைத்தது மகிழ்ச்சி. இந்த ஆல்பம் உங்கள் அனைவரையும் கவரும் நன்றி.
இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது...
காஸ்ட்லெஸ் கலக்டிவ் செய்யும் போது தான் அறிவை முதல் முறை பார்த்தேன். கலை இலக்கியத்தை அரசியல் வடிவமாக்கி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் என் நோக்கம், அந்த வகையில் இயங்கும் அறிவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலிருந்து அவரைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். காலாவில் மிக முக்கிய பாடலை எழுதினார். பல முக்கிய பாடல்களை எழுதியிருக்கிறார். அம்பேத்கருடைய சிந்தனைகள் எனக்கும் அவனுக்குமான நெருக்கமான சிந்தனையாக, உறவாக மாறியது. அம்பேத்கரிய சிந்தனைகளை எளிய வடிவமாக்கி எப்படி சந்தைப்படுத்துவது என்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆனால் அறிவு கொண்டு செல்லும் ராப் பாடல்கள் வெற்றி பெறுவதோடு அந்த அரசியலையும் மக்களிடம் கொண்டு செல்வதை நேரில் கண்டிருக்கிறேன். அது தான் அவருக்குப் பெரிய புகழைப் பெற்றுத் தந்துள்ளது. அது எளிதில் கிடைக்காது. உலகளவில் தனி இசைக் கலைஞர்கள் மிகப்பெரிய புகழ் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அது இங்கு ஏன் நிகழவில்லை எனும் போது தான் அறிவின் பங்கு மிக முக்கியமானதாகிறது. அவர் மூலம், இப்போது பல கலைஞர்கள் வெளி வந்துள்ளனர். எஞ்ஞாயி எஞ்சாமி பாடலின் வெற்றியில் அவரது பாடல் வரிகள் மிக முக்கியமானது. ஆனால் அதன் பிரச்சனைகளில் சிக்கி வெளிவந்ததற்குப் பதிலடி தான் இந்த 12 பாடல்கள் என நினைக்கிறேன். என்னால் இசையமைக்கவும் முடியும் என நிரூபிக்கும் விதமாக இந்த பாடலை உருவாக்கியுள்ளார். சோனி நிறுவனம் மூலம் இது மக்களிடம் சென்றடையும் என நம்புகிறேன். அறிவுக்கு இது முதல் படி தான். விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அவர் இன்னும் உயரம் செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன் நன்றி.
தெருக்குரல் அறிவு பேசியதாவது...
நான் படிக்கும் காலத்தில் நான் கேட்ட குரல் ஆண்டனி தாசன் அண்ணன் குரல் தான். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் வந்தது மகிழ்ச்சி. இண்டிபெண்டட் மியூசிக் உள்ளே நான் வரக் காரணமே காஸ்ட்லெஸ் கலக்டிவ் மூவ்மெண்ட் தான். அது எனக்கு மட்டுமல்ல, பல கலைஞர்களுக்கு அடையாளம் தந்தது அந்த காஸ்ட்லெஸ் கலக்டிவ் தான், அதை உருவாக்கிய அண்ணன் பா ரஞ்சித்துக்கு நன்றி. வள்ளியம்மா பேராண்டி என்பதில் வள்ளியம்மா வரலாறு மிக முக்கியம். பிரிட்டிஸ் காலத்தில் இங்கிருந்து இலங்கைக்கு அழைத்துச் சென்று தேயிலைத் தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு, பல கஷ்டங்களைத் தாண்டி, இங்கு மீண்டும் வந்து வாழ்வை எதிர்கொண்ட வள்ளியம்மாயின் வரலாறு மிக முக்கியம் என் அடையாளம் அது தான். பொதுவாகப் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எனக்கு நம்பிக்கையே இல்லை. இங்கே என் போல் வாழ்பவர்கள் எப்போது கொல்லப்படுவார்கள் என்றே தெரியாத சூழல் நிலவுகிறது. இந்த உலகில் என்னை அடையாளப் படுத்தும் முயற்சியாகத் தான் வள்ளியம்மா பேராண்டி ஆல்பத்தை உருவாக்கினோம். இந்த குழுவில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கு என் நன்றிகள். இந்த பயணத்தில் எனக்கு முன் பயணித்த அத்தனை கலைஞர்களுக்கும் என் நன்றிகள். பல பாடல்கள் நம் ஆயாக்களிடம் இருந்து தான் வந்தது, ஆனால் அந்த அடையாளத்தை நாம் மறந்து விடுகிறோம். இந்த அடையாளத்தைத் தொலைத்துவிட்டால் நாம் வேரற்ற மரமாக வெட்டி வீழ்த்தப்படுவோம். எஞ்ஞாயி எஞ்சாமி பாடலின் போது நான் பேசியது பிரச்சனையானது. உன் ஆயா பற்றி பாடவா வந்துள்ளாய் எனக் கேட்டபோது, ஆம் என் ஆயா பற்றிப் பாடத்தான் நான் வந்துள்ளேன் என்றேன். என் மீதான கேள்விகளுக்கான பதில் தான் இந்த ஆல்பம். நாம் வாழும் இன்றைய உலகில் அன்பை மீட்டெடுப்போம் நன்றி.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்