என் மலர்
- மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார்.
- இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.
இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின் வடமாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது.
சிறு இடைவேளைக்கு பின் நடிகர் அஜித் குமாரின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு அஜர்பைஜானில் மீண்டும் தொடங்கியது. படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்படும் வீடியோவை பகிர்ந்து அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அப்டேட் கொடுத்தார்.
சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் அஜித் கருப்பு நிற கூலர்ஸுடன் . பிளாக் அன் பிளாக் ஜெர்கின் போட்ட டிரெஸ்ஸில் ஒரு தனி சாலையில் பாலைவனம் அருகில் கையில் ஒரு பையுடன் நடந்து வருமாறு காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் அஜித் மற்றும் திரிஷா இடம் பெற்றுள்ளனர். அஜித் சில வருடங்களாக சால்ட் அண்ட் பெப்பெர் மற்றும் முழு வெள்ளை முடியுடன் தான் காணப்படுகிறார், ஆனால் இந்த போஸ்டரில் கருப்பு நிற முடியுடன் காணப்படுகிறார். அஜித் அவருடைய விண்டேஜ் லுக்கில் காணப்படுவதால் இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் சமூக வலைத்தளங்களில் அந்த போஸ்டரை பகிர்ந்து வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்."
- தங்கலான் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் "தங்கலான்." மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தங்கலான் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக இருக்கிறது.
படத்தின் வெளியீட்டு தேதி குறுத்து தற்பொழுது அப்டேட் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூரவமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் விக்ரமின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'ஜமா' என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது
- இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற படத்தை இளவழகன் இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்தை கூழாங்கல் திரைப்படத்தை தயாரித்த நிறுவனமான லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.
'ஜமா' என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை தெருக்கூத்து கலைஞர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
நாடகத்தில் பெண் வேடம் அணியும் நபரின் வாழ்க்கையையும் நாடக கலைஞர்களை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.
இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் முதல் பாடலான நீ இருக்கும் உசரத்துக்கு பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் காதல் பாடலாக அமைந்துள்ளது. ராஜ கணபதி மற்றும் ஸ்ரீஷா இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த மார்ச் மாதம் ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- . தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ,இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
1.ஆடு ஜீவிதம்
மலையாள முன்னணி நடிகர்களுல் ஒருவர் பிரித்விராஜ். இவர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்குனர் பிளெசி இயக்கினார். இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையிலும் ஆடு ஜீவிதம் என்ற நாவலை தழுவி இயக்கப்பட்டதாகும். படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதுவரை 160 கோடி உலகளவில் இத்திரைப்படம் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டுவருடம் ஒருவன் பாலை வந்த்தில் அடிமையாக வாழ்ந்து அங்கு இருந்து அவன் தப்பித்தானா இல்லையா என்பதே இப்படத்தின் கதைக்களமாகும். இப்படம் தற்பொழுது பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ்- இல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ,இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
2. அஞ்சாமை
நீட் தேர்வினால் நடுத்தர குடும்பமும், மாணவர்களும் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்ற கதையை அடிப்படையாக கொண்ட திரைப்படம் அஞ்சாமை. இப்படத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் இன்று சிம்ப்லி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
3. ரயில்
பாஸ்கர் சக்தி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ரயில், வட மாநிலத்தவர் புலம் பெயர்ந்து பிழைப்பிற்காக தமிழ் நாட்டிற்கு வருவதையும், அவர்கள் படும் கஷ்டத்தையும் இதனால் தமிழனின் மனப்பான்மை அவர்களின் மீது எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை நகைச்சுவையாகவும், சிந்திக்கும் வகையில் இயக்கி இருக்கிறார். இப்படம் இன்று டெண்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
4. லாந்தர்
விதார்த் நடிப்பில் வெளியான லாந்தர் திரைப்படம் சிம்ப்லி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
5. தி அக்காலி
முகமத் ஆசிஃப் ஹமீத் இயக்கத்தில் நாசர், தலைவாசல் விஜய், வினோத் கிஷன், ஸ்வயம் சித்தா, ஜெயகுமார் ஜானகிராமன் நடிப்பில் வெளிவந்த தி அக்காலி திரைப்படம் இன்று ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
6. காடுவெட்டி
ஆர்கே சுரேஷ் நடிப்பில் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியானது காடுவெட்டி திரைப்படம். இப்படம் தற்பொழுது ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் இல் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டீன்ஸ்' படத்தின் புரோமோசனுக்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பார்த்திபன் பேசியுள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது.
- . எனவே பார்த்திபன் மறைமுகமாக ரஜினி படத்தை தாக்கிப் பேசுகிறாரா என்று ரசிகர்கள் கடுங்கோபத்தில் உள்ளனர்.
பார்த்திபன் இயக்கிய 'டீன்ஸ்' திரைப்படம் கடந்த ஜூன் 12 ஆம் தேதி 'இந்தியன் 2' படத்துடன் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் 'டீன்ஸ்' படத்தின் புரோமோசனுக்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பார்த்திபன் பேசியுள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் பேசிய பார்த்திபன், "இப்போதெல்லாம் ஒரு படம் ஹிட் ஆகவேண்டும் என்றால் கதை சரியாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. தமன்னாவை ஆட வைத்தால் போதும் கதை சரியாக இல்லை என்றாலும் கூட படம் ஹிட் ஆகிவிடும்" என கூறியுள்ளார்.
சமீப காலமாக வெளியாகி வரும் ஒரு சில படங்களில் நடிகை தமன்னா நடனமாடிய பாடல்கள் படத்திற்கு வலு சேர்ப்பதாக இருந்தது.நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படத்தில் தம்மன்னாவின் துள்ளலான நடனத்துடன் இடம்பெற்ற 'காவலா' பாடல் பெரும் ஹிட் அடித்தது. எனவே பார்த்திபன் மறைமுகமாக ரஜினி படத்தை தாக்கிப் பேசுகிறாரா என்று நெட்டிஸின்கள் கடுங்கோபத்தில் உள்ளனர்.
கடைசியாக சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த 'அரண்மனை 4' படத்தில் ராஷி கண்ணா மற்றும் தமன்னா இணைந்து நடனமாடிய 'அச்சசோ' பாடலும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ''இந்தியன் ௨ படம் குறித்து யாரும் நன்றாக சொல்லவில்லை அதனால் இன்னும் படம் பார்க்கவில்லை'' என்று பார்த்திபன் கூறியது விவாதப் பொருளானதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தியன் 2 வசூல் ரீதியாக இந்த படம் தொடர்ந்து அசத்தி வருகிறது.
- எல்லோருமே தங்களை அறிவாளியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான படம் "இந்தியன் 2." இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இருப்பினும், வசூல் ரீதியாக இந்த படம் தொடர்ந்து அசத்தி வருகிறது.
இந்தியன் 2 படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வருவது குறித்த கேள்விக்கு, அப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த பாபி சிம்ஹா பதில் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், "எல்லோருமே தங்களை அறிவாளியாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விஷயம் நல்லா இருக்கு என்றால் அதை நல்லா இருக்குனு சொன்னால் நம்மை முட்டாளா நினைத்துக் கொள்வார்கள் போன்று, ஏதோ நொட்டு சாக்கு சொல்லணும் என்று ஏதோ ஒன்னு பேசிக்கிட்டு இருக்காங்க. அந்த அறிவாளிகளை பற்றி நாம கவலைப்படத் தேவையில்லை. நமக்குத் தேவை ஆடியன்ஸ். ஃபேமிலி கிரவுடு வருது. நமக்கு அதுதான் தேவை. அறிவாளிகள் தேவை இல்லை," என்று கூறி உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடந்த ஜூலை 16 ஆம் தேதி படத்தின் அதிரடியான டிரைலர் வெளியானது
- படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிரச் செய்துள்ளது. அவரின் 50 ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். ஏ.ஆர்.ரகுமான் இசையமைதுள்ளபடத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையில் கடந்த ஜூலை 16 ஆம் தேதி படத்தின் அதிரடியான டிரைலர் வெளியானது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர். இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ஓ ராயா பாடலின் லிரிக் வீடியோ இன்று [ஜூலை 19]மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த பாடலுக்கு தனுஷ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஏ.ஆர் ரகுமானுடன் தனுஷ் மற்றும் கனவ்யா துரைசாமி ஆகியோர் இந்த படலை இணைந்து பாடியுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அம்பானி இல்ல திருமணத்திலும் இருவரும் தனித்தனியாகவே வந்து இருந்தனர்.
- விவாகரத்து யாருக்கும் எளிதானது அல்ல.
நடிகை ஐஸ்வர்யாராயும், இந்தி நடிகர் அபிஷேக் பச்சனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் இருவரும் விவாகரத்து செய்து பிரியப்போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. சமீபத்தில் நடந்த அம்பானி இல்ல திருமணத்திலும் இருவரும் தனித்தனியாகவே வந்து இருந்தனர்.
தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் விவாகரத்து குறித்து வெளியிட்ட பதிவுக்கு அபிஷேக் பச்சன் லைக் செய்து இருப்பது பரபரப்பாகி உள்ளது.
அந்த பதிவில், ''விவாகரத்து யாருக்கும் எளிதானது அல்ல. இறுதிவரை சேர்ந்து வாழ வேண்டும் என்ற கனவு இல்லாதவர் யாரும் இல்லை. கையை பிடித்துக்கொண்டு சாலையை கடக்கும் வயதான தம்பதி வீடியோக்களை பார்க்கும்போது அதுபோன்று நாமும் இருக்க வேண்டும் என்ற ஆர்வம் எல்லோருக்கும் வரும். ஆனால் சில நேரம் வாழ்கையில் நாம் விரும்புவது நடக்காது. பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்துவிட்டு பிரிவதை மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த பதிவை அபிஷேக் பச்சன் 'லைக்' செய்து இருப்பதால் நிஜமாகவே விவாகரத்து செய்ய முடிவு எடுத்து விட்டார்களா? அதைத்தான் மறைமுகமாக சொல்லி இருக்கிறாரோ என்று பலரும் பேசத்தொடங்கி உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
- இந்த பாடல் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்படுகிறது.
சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தின் முதல் பாடல் ஜூலை 23 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இந்த படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.
கங்குவா படத்தின் முதல் பாடல் ஃபயர் சாங் என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த பாடல் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்படுகிறது. இதுதவிர, கங்குவா படத்தின் பேட்ச்ஓர்க் படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
வடிவேலு நடிப்பில் 2006 ஆம் ஆண்டு இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார்.
கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த கசடதபற திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் போட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இக்கதை சூழல் 80 வருடங்களுக்கு முன் இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு முன் நடக்கும் கதையாக அமைந்து இருக்கிறது. ஜப்பான் நாடு, மெட்ராஸ் ப்ரெசிடன்சியாக மீது குண்டு வீசிய போது அங்கு இருந்து 10 நபர்கள் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிக்க பதுங்குகிறார்கள்.
இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் முதல் பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாடலான `தக்கிட தகிமி' என்ற பாடல் தேவாவின் குரலில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஷேன் நிகாம் தற்போது 'மெட்ராஸ்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக களம் இறங்கவுள்ளார்.
- திரைப்படம் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடித்து விரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கிஸ்மத்' படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம்.
தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான 'இஷ்க்', 'கும்பளங்கி நைட்ஸ்', 'ஆர்டிஎக்ஸ்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
இதன் மூலம் மலையாள சினிமாவில் அடுத்து வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவராக திகழ்கிறார் ஷேன் நிகாம்.
ஷேன் நிகாம் தற்போது 'மெட்ராஸ்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக களம் இறங்கவுள்ளார்.
இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஆர். வசந்தகுமார் படத்தொகுப்பு செய்கிறார். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததையொட்டி படக்குழுவினர் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
அதில் பல அதிரடியான ஆக்ஷன் காட்சிகள், எமோஷனல், காதல் காட்சிகளின் உருவாக்கும் வீடியோ இடம்பெற்றுள்ளது. இத்திரைப்படம் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடித்து விரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஷேன் நிகாம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் 'மெட்ராஸ்காரன்' திரைப்படத்தின் டீசர் வரும் 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
- தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, கலிங்கா, வீரம் , தம்பி, அண்ணாத்த படங்களில் நடித்தவர் நடிகர் பாலா.
- சில நாட்களாகச் சந்தித்து வந்த,தன் உடல் நிலை பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் விடுபட்டு மீண்டு விட்டார்.
தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, கலிங்கா, வீரம் , தம்பி, அண்ணாத்த படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இவர் மலையாளத்தில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி, மோகன் லால், பிருத்திவிராஜ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மலையாளத்தில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் படங்களில் நடித்து வெற்றி பெற்றுள்ளவர்.
சில நாட்களாகச் சந்தித்து வந்த,தன் உடல் நிலை பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் விடுபட்டு மீண்டு விட்டார். அவர்மீது அன்பு கொண்ட ரசிகர்களின் வேண்டுதல்கள் அந்த இறைவனுக்கே கேட்டு விட்டது போலும். ஓராண்டு காலத்திற்குப் பிறகு தற்போது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டார்.மீண்டும் படங்களில் நடிப்பதற்காகக் கதை கேட்கத் தொடங்கி விட்டார்.அப்படிக் கேட்டதில் ஒரு நல்ல கதை அமைந்து இருக்கிறது.விரைவில் நடிக்கவும் இருக்கிறார்.அதற்காக எடுத்த புகைப்படம் தான் இது.
தமிழில் புகழ்பெற்ற இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி இவர் என்பதால் தமிழிலும் பட வாய்ப்புகள் வரும் என்று தெரிகிறது..அடுத்து நடிக்க இருக்கும் மலையாளம் மற்றும் தமிழ்ப் பட விவரங்கள் விரைவில் வெளியாகும் .
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.