search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • சென்னை சாலிகிராமத்தில் பிரசாத் லேபிள் நடந்த சர்தார் 2 படப்பிடிப்பில் சண்டை காட்சி படமாக்கப்பட்டது.
    • இந்த விபத்து தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, இயக்குநர் பிஎஸ் மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சர்தார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சரஸ் நிறுவனம் தயாரித்தது.

    கார்த்தி இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார். கார்த்தியுடன் ராஷி கன்னா, லைலா, முனிஷ்காந்த், மற்றும் பலர் நடித்து இருந்தனர்.

    இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சர்தார் 2 திரைப்படம் பூஜையுடன் கடந்த வாரம் துவங்கியது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

    இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் சர்தார் 2 படத்தின் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எந்த வித உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை, 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்

    மேலிருந்து கீழே விழுந்ததில், மார்பு பகுதியில் காயமடைந்து நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் ஏழுமலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த விபத்து தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இங்கே உள்ள கதாநாயகி ஸ்வேதாவைப் பார்க்கிறேன்.கொழு கொழு என்று இருக்கிறார்.
    • அப்போதெல்லாம் ஜோதிகா, குஷ்பூ போன்றவர்கள் கொழு கொழு என்று இருப்பார்கள்.

    முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்' திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

    அந்த விழாவில் கலந்த்து கொண்டு பேசிய இயக்குநர் பேரரசு, "தமிழ் சினிமாவில் சதி நடக்கிறது. இயக்குநர்கள் எல்லாம் நடிகர்களாகி விட்டதால், இயக்குநர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இப்போது இயக்குநர்கள் எல்லாமே நடிகர்கள் ஆகிவிட்டார்கள்.இங்கே வந்திருக்கும் ஆர்.வி. உதயகுமார், சிங்கம் புலி, சரவண சுப்பையா எல்லாரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்தப் படத்தில் பாடல் எழுதியிருப்பவர் பெயர் ராசாவாம் .அவர் எழுதிய பாடலைப் பார்க்கும்போது இனி அவர் மன்மத ராசா. அந்த அளவிற்கு எழுதி இருக்கிறார் .இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதை சொன்னதைப் பற்றிப் பேசினார்.நாங்கள் எல்லாம் இரண்டு மணி நேரம் மூச்சு முட்டக் கதை சொல்வோம். இவர் இரண்டே வரியில் கதை சொல்லி தயாரிப்பாளரைச் சம்மதிக்க வைத்திருக்கிறார்.

    இங்கே உள்ள கதாநாயகி ஸ்வேதாவைப் பார்க்கிறேன். கொழு கொழு என்று இருக்கிறார். அப்போதெல்லாம் ஜோதிகா, குஷ்பூ போன்றவர்கள் கொழு கொழு என்று இருப்பார்கள். பிறகெல்லாம் சிம்ரன், திரிஷா என்று இளைத்தவர்களாக இருப்பார்கள். கொழு கொழுவென இருந்தால் மக்களுக்குப் பிடிக்கும். இந்த கதாநாயகி ஸ்வேதா அப்படி இருக்கிறார்.

    சினிமாவில் இயக்குநருக்குக் கதைப்பிடிப்பும் கதாநாயகிக்குச் சதைப்பிடிப்பும் தேவை.

    இந்த இரண்டாவது கதாநாயகி கன்னடத்து பைங்கிளி தமிழைக் கொஞ்சி கொஞ்சிப் பேசினார். கேட்பதற்கு அழகாக இருந்தது.நாங்கள் மொழி பேதம் பார்ப்பதில்லை. சரோஜாதேவியை எல்லாம் கன்னடத்துப் பைங்கிளி என்று கொண்டாடினோம் .உங்களையும் வரவேற்போம்" என்று பேசினார். 

    • இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
    • படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியானது. இப்படத்தை 'பேச்சுலர்' பட இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார்.

    விஷ்ணு விஷால் நடிப்பில் அண்மையில் வெளியான 'லால் சலாம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிக்கும் புதிய படத்துக்கு 'ஓர் மாம்பழ சீசனில்' என பெயரிடப்பட்டுள்ளது.

    இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

    படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்தோ, தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தோ தகவல் வெளியாகவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    விஷ்ணு விஷால் நடித்துள்ள 'மோகன்தாஸ்' திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தமன்னா என நடிகைகள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
    • அதனால் தான் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    ஆசியாவின் பெரும் பணக்காரர்முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த அம்பானிக்கு ராதிகா மெர்ச்செண்டுடன் கோலாகலமாக திருமணம் நடந்த முடிந்திருக்கிறது. மும்பையில் நடைபெற்றது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது. மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி நடந்த ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் டோனி, ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா, ஷாருக்கான், சல்மான் கான் என கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே கலந்து கொண்டது. ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தமன்னா என நடிகைகள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

     

    இந்நிலையில் ஆடுகளம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமாகி முன்னணி பாலிவுட் நடிகையாக வளம் வரும் டாப்ஸி தான் ஏன் இந்த திருமண நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்று மனம் திறந்துள்ளார்.

     

    அவர் கூறியதாவது, எனக்கு அவர்களை தனிப்பட்ட முறையில் தெரியாது; திருமணம் என்பது தனிப்பட்ட விசயம் என நினைக்கிறேன்; எனக்கு அல்லது எனது குடும்பத்துக்கும் சிறியதாவது பழக்கமிருந்தால் மட்டுமே நான் பெரும்பாலும் திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்வேன்; அதனால் தான் ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற 26-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.
    • ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

    தனுஷ் நடித்து இயக்கியுள்ள படம் ராயன். கலாநிதிமாறனின் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் வருகிற 26-ந்தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

    டிரைலர் தொடக்கத்தில் செல்வராகவன் தனுஷிடம் காட்டுல ஆபத்தான மிருகம் எது தெரியுமா? என கேட்பது போல் டிரைலர் தொடங்குகிறது. அதன்பின் வெட்டுக்குத்து என நகர்கிறது. எஸ்ஜே சூர்யா தைரியம் இருந்தால் எனது இடத்தில் வந்து செய்யப்பட்டும் என கர்ஜிக்க, அதன்பின் தனுஷ் ரவுடி கூட்டத்தை வேட்டையாடுவது போன்று முடிவடைகிறது.

    டிரெய்லரில் எஸ்ஜே சூர்யா கேங்ஸ்டாராக வருகிறார். பிரகாஷ் ராஜ், சரவணன், சந்திப் கிஷாண், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகின்றனர்.

    படத்தில் எஸ்.ஜே. கேங்ஸ்டாராக படம் மூலம் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ், சந்திப் கிஷாண், காளிதாஸ் ஜெயராம் ஆகியோருக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் இடையிலான பிரச்சனை படமாக நகரும் என எதிர்பார்க்கலாம்.

    பருத்திவீரனில் சரவணன் கேரக்டர் பேசப்பட்டது போன்று, இந்த படத்திலும் சரவணன் கேரக்டர் பேசப்படலாம்.

    புதுப்பேட்டை, வட சென்னை போன்று கேங்ஸ்டார் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அறிமுக இயக்குனர் அகஸ்டின் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சதுர்.
    • இந்தப் படத்தை மணிகண்டன் தயாரித்துள்ளார்.

    அறிமுக இயக்குனர் அகஸ்டின் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சதுர். இப்படத்தில் அமர் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் ஜீவா ரவி, இஷிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை மணிகண்டன் தயாரித்துள்ளார்.

    படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:-

    நான் கோவையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வி.எப். எக்ஸ். கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைக்கும் மேற்பார்வையாளர் பணி புரிந்தேன். ஏராளமான விளம்பர படங்களுக்கு கிராபிக்ஸ் செய்துள்–ளேன். அந்த அனுபவத்தால் ஒரு கதையை தயார் செய்தேன். அந்த கதை தான் 'சதுர்' படமாக உருவாகியுள்ளது.

    படத்தில் 4 காலகட்டத்தில் கதை இருப்பதால் சதுர் என பெயர் வைத்துள்ளோம். 500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னன் காலத்தில் ஒரு கதை. அடுத்து இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஹிட்லர் சம்பந்தப்பட்ட கதை, அதேபோல் 1967-ம் ஆண்டு தனுஷ்கோடி நகரம் கடலுக்குள் எப்படி சென்றது என்பது போன்ற கதை, அதோடு இந்த காலகட்டத்தில் நடக்கும் ஒரு கதை என 4 கால கதைகள் இதில் உள்ளது.

    கதாநாயகன் அமர் தொல்பொருள் துறை ஆராய்ச்சியாளராக நடித்துள்ளார். பெரிய படங்களுக்கு நிகராக 1250 கிராபிக்ஸ் காட்சிகள் இதில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்திய அளவில் அதிக கிராபிக்ஸ் காட்சிகள் உள்ள 20 படங்களில் இப்படமும் ஒன்று. தமிழகத்தில் 10 படங்களில் இப்படமும் இடம்பெறும். படம் முழுவதும் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • எம்.டி. வாசுதேவன் மலையாளத்தின் பிரபல திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார்.
    • நேற்று எம்.டி.வாசுதேவனின் 91 பிறந்த நாளை முன்னிட்டு இத்தொடரின் டிரெய்லர் வெளியானது.

    எம்.டி. வாசுதேவன் மலையாளத்தின் பிரபல திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். அசுரவித்து, மஞ்சு, ரண்டமூசம் மற்றும் வாரணாசி ஆகிய படைப்புகளின் மூலம் அறியப்பட்டவர்.

    எம்.டி.வாசுதேவனின் 9 சிறுகதைகளின் அடிப்படையில் ஆந்தலாஜி தொடராக உருவாகியுள்ளது. இந்தத்தொடரில் கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி, பகத் பாசில் உள்ளிட்ட இந்திய சினிமாவின் பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று எம்.டி.வாசுதேவனின் 91 பிறந்த நாளை முன்னிட்டு இத்தொடரின் டிரெய்லர் வெளியானது. சிறந்த நடிகர்கள் நடித்த, 8 இயக்குனர்களால் இயக்கப்பட்ட 9 படங்களில் உள்ள கண்ணோட்டத்தை இந்த டிரெய்லர் வெளிப்படுத்துகிறது.

    "ஒல்லாவும் தீரவும், கடுகண்ணவ ஒரு யாத்ரா, காழ்சா, ஷீலாலிகாதம், வில்பனா, ஷெர்லாக், ஸ்வர்கம் துரக்குண சமயம், அபயம் தீடி வேண்டும், கடல்கட்டு" இந்த 9 படங்களின் தொகுப்பை கொண்டு இந்த 'மனோரதங்கள்' தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

    இத்தொடர் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிலிக்ஸ் வாங்க இருந்தனர் ஆனால் சூழ்நிலை காரணமாக ஜீ5 ஓடிடி தளம் இத்தொடரை வெளியிடவுள்ளது.

    மோகன்லால் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த தொடர் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 'மனோரதங்கள்' தொடர் அடுத்த மாதம் 15-ம் தேதி ஜீ-5 ல் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

    தொடரின் டிரைலர் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அனைத்து திரை ஜாம்பவாங்கள் ஒன்றாக ஒரே தொடரில் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிரியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சர்தார் 2 திரைப்படம் பூஜையுடன் கடந்த வாரம் துவங்கியது.
    • இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

    கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, இயக்குநர் பிஎஸ் மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் சர்தார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சரஸ் நிறுவனம் தயாரித்தது.

    கார்த்தி இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து இருப்பார். கார்த்தியுடன் ராஷி கன்னா, லைலா, முனிஷ்காந்த், மற்றும் பலர் நடித்து இருந்தனர்.

    இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சர்தார் 2 திரைப்படம் பூஜையுடன் கடந்த வாரம் துவங்கியது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.

     

    படத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படத்தில் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    சர்தார் 2 திரைப்படத்தில் எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
    • இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

    இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன், விசாரணை, ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற பல வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நிலையான இடம் பிடித்தவர். பெயருக்கு ஏற்றார் போல இயக்கும் படம் அனைத்தும் வெற்றியே.

    தொடர்ந்து அவர் இயக்கிய எல்லா திரைப்படமும் வெற்றி பெற்றதன் காரணத்தினால் அவர் இயக்கும் திரைப்படத்திற்கு மக்களின் எதிர்பார்ப்பு எப்பொழுதும் உண்டு.

    இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை திரைப்படத்தை இயக்கியிருந்தார். விடுதலை படத்தின் முதல் பாகமாக வெளியான இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதியுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, இளவரசு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். சூரியின் திரைப்பயணத்தில் இப்படம் திருப்பு முனையாக அமைந்தது.

    இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இதில் எஸ் ஜே சூர்யா நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

    விடுதலை பாகம் ஒன்று பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் பாராட்டை வென்றது. விடுதலை 2 படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு பல கட்டங்களாக நடைபெற்றது. இது குறித்து படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டரில்

    "உயிர்ப்ப ஊரல்லர் மன்ற செயிர்ப்பவர்

    செம்மல் சிதைக்கலா தார்"

    என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது. அதற்கு விளக்கமானது பகைவரின் செருக்கைக் கெடுக்கும் வாய்ப்பு வந்த போதும், அவர் மீதுள்ள இகழ்ச்சியால் அதனைச் செய்யாத அரசர், பின்னர், உயிரோடு இருப்பதற்கு உரியவர் ஆகார் என்பதாகும்.

    இந்த குறளுக்கும் விடுதலை படத்திற்கும் எம்மாதிரியான ஒப்பீட்டு இருக்குமென பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.

    தற்பொழுது விடுதலை பாகம் 2- இன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11.30 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது.
    • சினிமா தலைசீவ வழியில்லாதவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும்.

    அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ நடராஜ் தயாரிப்பில் ஈ.கே. முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் 'பார்க்' என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் இசை மட்டும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவில் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகத் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குநர் சிங்கம் புலி பேசும்போது, "நான் போட்டோ ஸ்டுடியோவில் பிலிம்களை டெவலப் செய்யும் டார்க் ரூமில் ஆறு மாதம் தங்கி இருந்தேன். ஒன்றுமே பார்க்க முடியாது. லைட் போட மாட்டார்கள் சின்ன சிவப்பு விளக்கு மட்டுமே எரியும். எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது."

     


    "இப்படி எல்லாம் சிரமப்பட்டுத் தான் சினிமாவுக்கு வந்தோம். இப்படிச் சிரமப்படுவது பிற்காலத்தில் நன்றாக இருப்பதற்காகத்தான். கதாநாயகன் தமன் வெளிநாட்டில் ஏர்லைன்ஸில் மாதம் 4 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர். அதையெல்லாம் விட்டுவிட்டுச் சினிமாவுக்கு வந்திருக்கிறார்."

    "சினிமா அவரைக் கைவிடாது. ஏனென்றால் அவர் சினிமாவை நேசிக்கிறார். சினிமா இரண்டு பேருக்கு வாய்ப்பு கொடுக்கும். தலை சீவ முடியாத அளவிற்கு அடர்த்தியான முடி கொண்டவர்களுக்கும், தலையில் முடியே இல்லாது தலைசீவ வழியில்லாதவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும்," என்று தெரிவித்தார்.

    இயக்குநர் முருகன் இயக்கி இருக்கும் பார்க் படத்திற்கு அமரா இசையமைக்க, பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஐரா படத்தை எஸ்.ஏ.அர்ஜூன் இயக்கினார்.
    • எஸ்.ஏ அர்ஜூன் அடுத்ததாக பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கு படத்தை இயக்கவுள்ளார்.

    2019 ஆம் ஆண்டு நயன் தாரா மற்றும் கலையரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது ஐரா திரைப்படம், இப்படத்தை எஸ்.ஏ.அர்ஜூன் இயக்கினார். இப்படத்தில் நயன் தாரா இரு வேடங்களில் நடித்து இருதார். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து , பிளட் மனி மற்றும் புர்கா திரைப்படத்தை இயக்கினார்.

    தற்பொழுது எஸ்.ஏ அர்ஜூன் அடுத்ததாக பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கு படத்தை இயக்கவுள்ளார். சர்ஜூன் இயக்கும் இப்படத்திற்கு பிரபல விமர்சகரான பரத்வாஜ் ரங்கன் கதை மற்றும் திரைக்கதை எழுதவுள்ளார்.

    இப்படத்தில் நயன் தாரா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணம் கடந்த 12-ந்தேதி மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.
    • விழா புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தற்போது இந்தியில் 'சர்ஃபிரா' என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.

    அக்ஷய் குமார் நாயகனாக நடித்த இப்படத்தை தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இயக்கியுள்ளார். இத்திரைப்படம் கடந்த 12-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.

    இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வந்தபோது அக்ஷய் குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

    முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணம் கடந்த 12-ந்தேதி மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.

    ஆனந்த் அம்பானி அக்ஷய் குமாரை நேரில் சந்தித்து திருமண அழைப்பு விடுத்து இருந்த நிலையில் அவரது மகன் திருமணத்தில் அக்ஷய் குமாரால் கலந்துகொள்ள முடியவில்லை.

    இந்நிலையில் கொரோனா பரிசோதனையில் நெகட்டிங் வந்த பின்னர், புதுமண தம்பதிகளுக்கு அன்பான வாழ்த்துகளை தெரிவிக்க அக்ஷய் விழாவில் கலந்து கொண்டார்.

    நேற்று மாலை நடைபெற்ற அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு பிந்தைய விழாவில் அக்ஷய் குமாரும் அவரது மனைவி ட்விங்கிள் கன்னாவும் கலந்து கொண்டனர்.

    நேற்று நடந்த விழா புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதில் அக்ஷய் மற்றும் ட்விங்கிள் இருவரும் ஒரே வண்ண உடைகளை அணிந்து அரங்கிற்குள் நுழைவதை காண முடிந்தது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×