search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதிக்கு ஏற்கனவே ஆராதனா என்ற மகளும் குகன் என்ற மகனும் உள்ளனர்.
    • தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    ஜூன் 2 அன்று நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதிக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

    இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆராதனா என்ற மகளும் குகன் என்ற மகனும் உள்ள நிலையில் மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கு பவன் என்று சிவகார்த்திகேயன் பெயர் சூட்டியுள்ளார்.

    தனது 3வது குழந்தைக்கு பவன் என பெயர் சூட்டிய, அந்நிகழ்வின் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த கசடதபற திரைப்படத்தை இயக்கினார்.
    • இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

    வடிவேலு நடிப்பில் 2006 ஆம் ஆண்டு இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களை இயக்கினார்.

    கடைசியாக 2021 ஆம் ஆண்டு வெளிவந்த கசடதபற திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் போட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இக்கதை சூழல் 80 வருடங்களுக்கு முன் இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு முன் நடக்கும் கதையாக அமைந்து இருக்கிறது. ஜப்பான் நாடு, மெட்ராஸ் ப்ரெசிடன்சியாக மீது குண்டு வீசிய போது அங்கு இருந்து 10 நபர்கள் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிக்க பதுங்குகிறார்கள்.

    இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் முதல் பாடலான `சோக்கா நானும் நிக்கிறேன்' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இப்பாடலின் வரிகளை கோல்ட் தேவராஜ் எழுதியுள்ளார். பத்ம பூஷன் விருது பெற்ற சுதா ரகுநாத் இப்பாடலை பாடியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 2006ம் ஆண்டு பிரபல நடிகர் சூர்யாவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • சமீபத்தில் ஷைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இந்திப்படங்களில் நடித்தார்.

    மும்பையில் பிறந்து வளர்ந்து, ஹிந்தி மொழி திரைப்படங்கள் மூலம் அறிமுகமாகியிருந்தாலும், இன்று கோலிவுட் உலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் ஜோதிகா. இவர் கடந்த 2006ம் ஆண்டு பிரபல நடிகர் சூர்யாவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இப்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில வருடங்களாகவே தனது கணவரின் தயாரிப்பில் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். பல ஆண்டுகள் கழித்து தற்பொழுது பாலிவுட் உலகிலும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். சமீபத்தில் ஷைத்தான் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இந்திப்படங்களில் நடித்தார்.

    இந்நிலையில் இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த அம்பானி மற்றும் ராதிகா ஆகியோரின் திருமணத்தில், சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் தம்பதிகளாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    இந்த திருமண விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், சல்மான் கான், இயக்குனர் அட்லி, விக்னேஷ் சிவன், நயன்தாரா என்று இந்திய திரை உலகின் பெரும் நட்சத்திரங்கள் நேரில் பங்கேற்ற நிலையில், வெளிநாடுகளில் இருந்தும் பல துறையை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

    மேலும் இந்த விழாவில் பங்கேற்ற நடிகை ஜோதிகா, 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்தின்போது தனது கணவர் சூர்யா அணிவித்த, இரண்டு அடுக்கு வைர மோதிரத்தை, அவர்கள் அன்பின் அடையாளமாக இந்த திருமணத்திலும் அணிந்து வந்திருந்தது வெகுவாக பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.


     



    அந்த விழாவின் போது சூர்யாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சூர்யா பட்டு வேட்டி சட்டையிலும் , ஜோதிகா பிங்க் நிற புடவையிலும் சூர்யாவுடன் இணைந்து மிகவும் அழகாக போஸ் கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பதிவி"ஒன்றாய் இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஒருநாள் போதுமா" சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் பாடல் வரிகளை எழுதி பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார்.
    • சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

    படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது.

    இந்நிலையில், கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    படத்தின் டிரைலர் குறித்து தற்பொழுது அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் டிரைலர் வரும் ஜூலை 16 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த மாதம் வெளியான ஹிட் லிஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
    • மேஜர் ரவி இயக்கத்தில் சரத் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் "ஆபரேஷன் ராஹத்".

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். இதுவரை நூற்றிருக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன், போர் தொழில், பரம் பொருள் ஆகிய திரைப்படத்தின் மூலம் சரத் குமாருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    அடுத்தடுது போலீஸ் கதாப்பாத்திரத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். கடந்த மாதம் வெளியான ஹிட் லிஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    இந்நிலையில் சமீபத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கும், நிக்கோலாய் சச்தேவ் பிரம்மாண்டமாக திருமணம் நடத்து முடிந்தது. கடந்த ஜூலை 3ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.


    இந்நிலையில் மேஜர் ரவி இயக்கத்தில் சரத் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் "ஆபரேஷன் ராஹத்". கே கிருஷ்ணகுமார் எழுதிய, இந்த பான்-இந்திய திரைப்படத்தை பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது. தயாரிப்பு குழுவில் மேஜர் ரவியின் மகன் அர்ஜுன் ரவி ஒளிப்பதிவாளராகவும், ரஞ்சின் ராஜ் இசையமைப்பாளராகவும், டான் மேக்ஸ் எடிட்டராகவும் உள்ளனர்.

    இந்நிலையல் படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. டீசர் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    இது குறித்து நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது,

    "உங்கள் வாழ்த்துக் குழுவிற்கு நன்றி... "ஆபரேஷன் ராஹத்" - இந்த சிறந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி" என்றும் தெரிவித்துள்ளார்,

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அடுத்ததாக சித்தார்த்தின் 40-வது திரைப்படத்தை தயாரித்துள்ளது.
    • இப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படம் இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கவுள்ளார்.

    கடந்த ஆண்டு மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது மாவீரன் திரைப்படம். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து மாபெரும் வெற்றியடைந்தது.

    இதனைத் தொடர்ந்து சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அடுத்ததாக சித்தார்த்தின் 40-வது திரைப்படமான சித்தார்த் 40 திரைப்படத்தை தயாரிக்கவுள்ளனர். இப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படம் இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கவுள்ளார்.

    இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் யார் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் சரத் குமார், தேவையாணி, மீதா ரகுநாத், சைத்ரா அசார் போன்ற பிரபல நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.


    தேவையாணி மற்றும் சரத்குமார் 1990- களில் பல வெற்றிபடங்களான சூர்ய வம்சம், த்ன்காசி பட்டணம் மற்றும் பாட்டாளி போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர் தற்கு அடுத்து இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'ஜமா' என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது.
    • படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற படத்தை இளவழகன் இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

    இப்படத்தை கூழாங்கல் திரைப்படத்தை தயாரித்த நிறுவனமான லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் படத்தை தயாரித்துள்ளது.

    'ஜமா' என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை தெருக்கூத்து கலைஞர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. மிகவும் ஜாலியாக ஆரம்பித்த டீசர் காட்சிகள் போகப் போக மிகவும் சீர்யசாக நகர்கிறது.

    நாடகத்தில் பெண் வேடம் அணியும் நபரின் வாழ்க்கையையும் நாடக கலைஞர்களை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

    திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சில இடங்களில் தெருக்கூத்து கலாச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

    இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • . கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.
    • படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளது.

    குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும். கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

    இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது

    ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். சிறுமியின் பாலியல் வன்கொடுமையை மையமாக பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மக்களை ஆட்டிப்படைக்கிறது.

    படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளது. அந்த வெற்றியைத் தொடர்ந்து ஓடிடியிலும் மக்களின் வரவேற்பு அமோகமாகவுள்ளது.

    மகாராஜா திரைப்படம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி நெட்பிலிகஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த வார அதிகமாக பார்க்கப்பட்ட இந்திய திரைப்படங்களின் வார பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது மகாராஜா திரைப்படம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்தார்.
    • அதற்கு பின் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

    கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் சிவராஜ்குமார். கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அதற்கு பின் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

    இந்நிலையில் சிவராஜ்குமார் தற்பொழுது தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்திற்கு ஜாவா என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை ரவி அரசு இயக்க சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளனர். இதற்கு முன், நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடித்த 'ஈட்டி' மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'ஐங்கரன்'ஆகிய திரைப்படங்களை இயக்கிய ரவி அரசு மூன்றாவதாக தமிழில் இந்தப் படத்தை இயக்குகிறார்.

    சிவராஜ்குமார் காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் சமுத்திரகனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படம் தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு பணிகள் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது என தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது 'இந்தியன்'
    • இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

    இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மறைந்த நடிகரான விவேக் மற்றும் மனோபாலா நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இன்று முதல் நீட்கப்பட்ட வெர்ஷன் அனைத்து திரையரங்களில் திரையிடப்பட்டுள்ளது. முன்னதாக 3 மணி நேரம் இருந்த நீளம் இப்பொழுது குறைக்கப்பட்டு படத்தின் அளவு 2 மணி நேரம் 40 நிமிடங்களாக குறைக்கப்பட்டிருக்கிறது.

    தேவையற்ற சில காட்சிகளை குறைத்திருக்கலாம் என்ற விமர்சனங்கள் எழுந்தநிலையில், படத்தில் எதிர்மறையான விமர்சனங்களை தவிர்க்க படக்குழு இந்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார்.
    • இந்தியன் 3-க்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் வெளியாகி உள்ள இந்தியன் 2 திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

    இந்தியன் திரைப்படத்திற்கு அடுத்து சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தை பாராட்டி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "கலை மீது கமல் சார் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பதற்கு 'இந்தியன் 2' சாட்சி. சிறப்பான பின்னணி இசை கொடுத்துள்ள அனிருத் மற்றும் பிரமாண்டமான படைப்பை அளித்த இயக்குநர் சங்கருக்குப் பாராட்டுகள். இந்தியன் 3-க்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • இதுவரை நூற்றிருக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்,
    • கடந்த ஆண்டு இவரது 150- வது படமான தி ஸ்மைல் மேன் என்ற படத்தில் ஒப்பந்தம் ஆகினார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். இதுவரை நூற்றிருக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன், போர் தொழில், பரம் பொருள் ஆகிய திரைப்படத்தின் மூலம் சரத் குமாருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    அடுத்தடுது போலீஸ் கதாப்பாத்திரத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். கடந்த மாதம் வெளியான ஹிட் லிஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    கடந்த ஆண்டு இவரது 150- வது படமான தி ஸ்மைல் மேன் என்ற படத்தில் ஒப்பந்தம் ஆகினார். இப்படத்தை ஷ்யாம் பர்வீன் இயக்கியுள்ளார். தற்கு முன் மெமரீஸ் என்ற திரைப்படத்தை இயக்கியவராவார்.

    சரத்குமார் இப்படத்தில் அல்சைமர் நோய்க்கு பாதிக்கப்பட்ட ஒரு ரிடையர்ட் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார், அவரது நியாபகம் அழிவதற்க்குள் அவர் ஒரு தொடர் கொலைகள் செய்த குற்றவாளியை பிடிக்க வேண்டும் இதை மையமாக படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.

    சரத்குமாருடன் சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மர்யான் மற்றும் பலர் நடித்துள்ளனர். சரத்குமார் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×