என் மலர்
- இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
- ஆடுஜீவிதம் படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இயக்குநர் பிளெஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் , அமலாபால் நடிப்பில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளிவந்த படம் ஆடு ஜீவிதம். இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பிருத்விராஜ் இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்ததோடு, ஒரு காட்சிக்காக மூன்று நாட்கள் வரை பட்டினி கிடந்து நடத்திருந்தார். நீண்ட காலம் தயாரிப்பு பணியில் இருந்த ஆடுஜீவிதம் படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இந்த நிலையில், ஆடு ஜீவிதம் படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற 19 ஆம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஆடு ஜீவிதம் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஒருவரை லாரான்ஸ் நேரில் சந்தித்து பாராட்டி உள்ளார்.
- மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜீஆர், லாரன்ஸுக்கு முத்தம் கொடுப்பது போல ஒரு ஓவியம் இருந்தது.
சென்னை:
நடிகர் ராகவா லாரன்ஸ் 'மாற்றம்' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்தக் அறக்கட்டளை மூலம், மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள் மற்றும் ஏழை எளிய மாணவ மாணவிகள் படிப்பதற்கு உதவி செய்து வருவதோடு, கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளும் செய்து வருகிறார்.
அவரால் படித்து ஆளாக்கப்பட்ட மாணவர்கள் தற்போது நல்ல நிலைக்கு உயர்ந்திருப்பதை அடுத்து அவர்களும் ராகவா லாரன்ஸ் வழியில் ஏழை எளியோருக்கு உதவி செய்ய தயாராகி இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு மாற்றம் என்ற பெயரில் மே ஒன்றாம் தேதி முதல் சேவை அமைப்பு மூலம் ராகவா லாரன்ஸ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஒருவரை லாரான்ஸ் நேரில் சந்தித்து பாராட்டி உள்ளார். அவரது ஓவிய திறமையை சமூக வலைதளங்கள் மூலம் கண்டு ரசித்த லாரன்ஸ் அவரது திறமையை பாராட்ட விரும்பியதாக கூறினார்.
லாரன்ஸை சந்தித்த அந்த ஓவிய ஆசிரியர் ஒரு சிறப்பு பரிசை அவருக்கு வழங்கினார். அந்த ஓவியத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜீஆர், லாரன்ஸுக்கு முத்தம் கொடுப்பது போல ஒரு ஓவியம் இருந்தது. இதனை மகிழ்ச்சியுடன் லாரன்ஸ் ஏற்றுக் கொண்டார். பதிலுக்கு லாரன்ஸ் அந்த ஓவிய ஆசிரியருக்கு நிதி உதவி வழங்கினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வணக்கம் நண்பர்களே, ரசிகர்களே, அவர் மணலூர்பேட்டை கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் செல்வம். அவரது அற்புதமான ஓவியத் திறமையை உங்கள் அனைவராலும் சமூக ஊடகங்கள் மூலம் அறிந்து கண்டேன். அவரை நேரில் சந்தித்து அவரது திறமையைப் பாராட்ட விரும்பினேன். இன்று, நான் அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய பரிசை மிகவும் கவர்ந்தேன்! #Serviceisgod #Maatram
இவ்வாறு அவர் கூறினார்.
- வாஸ்கோடகாமா படத்தை ஆர்ஜிகே இயக்கி உள்ளார்.
- இந்த படத்திற்கு கலை இயக்க பணிகளை ஏழுமலை ஆதிகேசவன் மேற்கொண்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நகுல். அதன்பிறகு தனது உடல் எடையை குறைத்து மெல்லிய தோற்றத்திற்கு மாறி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவ்வாறு நகுல் நடித்து வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
எனினும், இடையில் சிலகாலம் அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், நகுல் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நகுல் நடித்துள்ள புதிய படம் வாஸ்கோடகாமா என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது.
ஆர்ஜிகே இயக்கி இருக்கும் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஜூலை 20 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் படி நகுல் நடிப்பில் உருவாகி இருக்கும் வாஸ்கோடகாமா திரைப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த படத்தின் சென்சார் விவரங்களும் வெளியாகி உள்ளது. வாஸ்கோடமாகா திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு சான்று வழங்கி உள்ளது.
அருன் என்.வி. இசையமைத்துள்ள இந்த படத்திற்கு எம்எஸ் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, தமிழ் குமரன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். உறியடி, உறியடி 2, ஃபைட் கிளப் போன்ற படங்களின் கலை இயக்குநராக பணியாற்றிய ஏழுமலை ஆதிகேசவன் இந்த படத்திற்கு கலை இயக்க பணிகளை மேற்கொண்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராமர் கோவில் பிரதிஷ்டை உள்பட சமீபத்திய நிகழ்வுகளில் அபிஷேக் பச்சன் தனியாகவே பங்கேற்று வருகிறார்.
- அம்பானி இல்ல திருமண விழாவில் அபிஷேக்கும், ஐஸ்வர்யா ராயும் தனித்தனியே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.
'உலக அழகி' என்ற பட்டத்துடன் சினிமாவில் நுழைந்த ஐஸ்வர்யா ராய், பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தமிழில் 'இருவர்', 'ஜீன்ஸ்', 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்', 'ராவணன்', 'எந்திரன்', 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அமிதாப்பச்சன் மகனும், முன்னணி இந்தி நடிகருமான அபிஷேக் பச்சனை 2007ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.
சமீபகாலமாக ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்யப்போவதாக கூறப்பட்டது. ஆனால் ஆராத்யா படிக்கும் பள்ளியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக பங்கேற்றதால் பிரச்சினைகள் தீர்ந்தது என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் மீண்டும் விவகாரத்து சர்ச்சை எழுந்துள்ளது. அதை உறுதிபடுத்தும் விதமாக ராமர் கோவில் பிரதிஷ்டை உள்பட சமீபத்திய நிகழ்வுகளில் அபிஷேக் பச்சன் தனியாகவே பங்கேற்று வருகிறார்.
மும்பையில் நடந்த அம்பானி இல்ல திருமண விழாவிலும் அபிஷேக்கும், ஐஸ்வர்யா ராயும் தனித்தனியே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர். மேலும் அபிஷேக்கும், ஐஸ்வர்யா ராயும் தனித்தனியே வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திர ஜோடி விரைவிலேயே பிரிந்துவிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராஜ் அய்யப்பா நடிக்கும் லவ் இங்க் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
- முழு படமும் சென்னை மற்றும் தஞ்சை பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது.
சென்னை:
எம்.ஆர்.பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஏ.மகேந்திரன் ஆதிகேசவன் 'லவ் இங்க்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக பயணத்தைத் தொடங்குகிறார்.
தற்போதைய தலைமுறை மத்தியில் 'லவ் இங்க்' என்ற சொல் மிக பிரபலம். தங்களுக்கு விருப்பமான நபர்களின் பெயர்களையோ, காதல் சின்னத்தையோ ஜோடிகள் டாட்டூ போட்டுக் கொள்வதுதான் 'லவ் இங்க்'. இதனால் ஜோடிகளுக்கு இடையே காதல் கூடுகிறது என நம்பப்படுகிறது.
இந்நிலையில், 'லவ் இங்க்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. முழு படமும் சென்னை மற்றும் தஞ்சை பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது.
இந்தப் படத்தில் கதாநாயகனாக ராஜ் அய்யப்பா நடிக்கிறார். நடிகர் அஜித்குமாரின் 'வலிமை', அதர்வா முரளியின் '100' மற்றும் பல படங்களில் ராஜ் அய்யப்பா தனது இயல்பான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்றவர். நடிகை டெல்னா டேவிஸ் கதாநாயகியாக நடிக்கிறார். டெல்னா இதற்கு முன் டிவி சீரியல்களில் நடித்து லட்சக்கணக்கான ரசிகர்கள் இதயத்தை வென்றுள்ளார்.
இந்தப் படத்தை இயக்குநர் மேகராஜ் தாஸ் எழுதி இயக்கியுள்ளார். இதற்கு முன் சில படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.
மேலும் இதில் யோகி பாபு, திலீபன், விடிவி கணேஷ், முனிஷ்காந்த், அர்ஷத், பட்டிமன்றம் ராஜா, வினோதினி, மாறன், சுபாஷினி கண்ணன், கே.பி.ஒய்.வினோத், மௌரிஷ் தாஸ், ப்ரீதா, வினோத் முன்னா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்
- இப்படத்தில் கார்த்திக், சிம்ரன், வனிதா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர்.
வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய பிரசாந்த் , தெலுங்கில் வினய விதய ராமா படத்தில் ராம்சரணுக்கு அண்ணனாக நடித்திருந்தார். அதன்பின் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிக்காமல் இருந்த நிலையில் எடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்போவதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது.
அந்தகன் பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டான `அந்தாதூன்' படத்தின் ரீமேக் ஆகும். பொன்மகள் வந்தாள் பட இயக்குனர் ஜே.ஜே.பிரட்ரிக் அந்தகன் படத்தை இயக்குகிறார்.
மேலும் இப்படத்தில் கார்த்திக், சிம்ரன், வனிதா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அந்தகன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் பிரசாந்த் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தை கூழாங்கல் திரைப்பட தயாரிப்பாளர் தயாரித்துள்ளார்.
- இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற படத்தை இளவழகன் இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இப்படத்தை கூழாங்கல் திரைப்படத்தை தயாரித்த நிறுவனமான லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் படத்தை தயாரித்துள்ளது.
'ஜமா' என்பது தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை தெருக்கூத்து கலைஞர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சில இடங்களில் தெருக்கூத்து கலாச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி அவரது எக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில், ஜமா திரைப்படத்தின் டீசர் நாளை வெளியிடப்படும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து கொள்ளும் கவிஞன் ஆகவும் ஜொலிக்கிறார்.
- ரசிகர்கள் திரைப்பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் மட்டும் இல்லாமல் தமிழ் இலக்கியம், பண்பாடு ஆகிய தளங்களில் மிகவும் முக்கியமான ஆளுமையாக விளங்கி வருபவர் கவிப்பேரரசு என அழைக்கப்படும் வைரமுத்து. 1953ஆம் ஆண்டு பிறந்த இவர் இன்று அதாவது ஜூலை 13ஆம் தேதி தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு அவரது ரசிகர்கள் திரைப்பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் திரையுலகில் தனது பாடல் வரிகளால் மக்களை மகிழ்வித்து வரும் கலைஞன் ஆக இருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து கொள்ளும் கவிஞன் ஆகவும் ஜொலிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்தை தனது எக்ஸ் தளபக்கத்தில் தெரிவித்து அதில்
இன்று பிறந்தநாள் கொண்டாடும் மனதிற்கினிய நண்பர், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பல்லாண்டு வாழ மனதார வாழ்த்தி மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் மனதிற்கினிய நண்பர், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பல்லாண்டு வாழ மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.@Vairamuthu
— Kamal Haasan (@ikamalhaasan) July 13, 2024
- 'சூரியவம்சம்' படத்தில் இடம்பெற்ற கிளாசிக் பாடலான 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' பாடலை எழுதியவரும் ரவி சங்கரே ஆவார்.
- சென்னை கே.கே.நகர் பகுதியில் ஒரு சிறிய வீட்டில் 63 வயதான ரவி சங்கர் வசித்து வந்தார்.
பாரதிராஜாவின் மகன் மனோஜ் மற்றும் காதலர் தின நாயகன் குணால் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'வருஷமெல்லாம் வசந்தம்' படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரவி சங்கர் இயக்கிய முதலும் கடைசியுமான படம் வருஷமெல்லாம் வசந்தம்.
அந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுக்கும் பாடலாசிரியர் அவரே. அதுமட்டுமின்றி விக்ரமன் இயக்கிய 'சூரியவம்சம்' படத்தில் இடம்பெற்ற கிளாசிக் பாடலான 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' பாடலை எழுதியவரும் ரவி சங்கரே ஆவார். வருஷமெல்லாம் வசந்தம் படத்துக்கு பிறகு படம் எதுவும் இயக்காமல் திருமணம் செய்து கொள்ளாமல் சென்னை கே.கே.நகர் பகுதியில் ஒரு சிறிய வீட்டில் 63 வயதான ரவி சங்கர் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று [ஜூலை 12] இரவு தனது அறையில் ரவி சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனிமை மற்றும் பட வாய்ப்புகள் இல்லாததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
- இப்படத்திலும் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
- இப்படத்தின் இயக்குநர் யார் என்று படக்குழு இன்னமும் அறிவிக்கவில்லை.
2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே பாலாஜி அறிமுகமானார்.
அண்மையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஆர்.ஜே பாலாஜி. இயக்கவுள்ளார் என்றும் இப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக திரிஷா நடிக்கவுள்ளதாகவும் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கு மாசாணி அம்மன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. .
இந்நிலையில், 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தின் 2ம் பாகம் உருவாகவுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இப்படத்திலும் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்று படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.
ஆனால் இப்படத்தின் இயக்குநர் யார் என்று படக்குழு இன்னமும் அறிவிக்கவில்லை. இப்படத்தை ஆர்.ஜே பாலாஜிக்கு பதிலாக வேறொரு இயக்குநர் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.
அதே சமயம் திரிஷாவை வைத்து மாசாணியம்மன் என்ற படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது.
- திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆன்ந்த அம்பானியின் ஆடம்பர திருமணம் நேற்று மும்பையில் நடைபெற்றது. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய வைபவங்களும், கொண்டாட்டங்களும் கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்தது.
நேற்று மும்பை பி.கே.சி.யில் உள்ள அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான ஜியோ வேர்ல்டு டிரைவ் கன்வென்சன் அரங்கில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்தது.
திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் வீரர் டோனி, ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
திருமண நிகழ்வில் நீட்டா அம்பானியுடன் இணைந்து ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- தமிழகம் முழுவதும் நேற்று காலை 9 மணியளவில் இந்தியன் 2 படம் வெளியானது.
- ரசிகர்கள் மத்தியில் ஒரு கவலையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் முதல் பாகம் இன்னும் பலரால் ரசிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியன் 2 பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.
இப்படத்திற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியன் 2 படத்தை வெளியிட தடையில்லை என்று உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் நேற்று காலை 9 மணியளவில் இந்தியன் 2 படம் வெளியானது. உலகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் நேற்று இந்தியன் 2 வெளியானது. படம் வெளியான திரையங்குகள் முன்பு கூடிய ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர்.
இருப்பினும், ரசிகர்கள் மத்தியில் ஒரு கவலையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம், இந்தியா முழுவதும் ரூ.26 கோடி வசூலித்துள்ளது. தமிழில் ரூ.17 கோடியும், தெலுங்கில் ரூ.7.9 கோடியும், இந்தியில் 1.1 கோடியும் வசூலித்துள்ளது.
முன்னதாக, கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' ரூ.32 கோடியும், சமீபத்தில் வெளியான 'கல்கி 2898 ஏடி' ரூ. 95 கோடியும் முதல் நாளில் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.