search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் குபேரா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

    கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ராஷ்மிகா. எனினும் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து விஜய்யின் வாரிசு படத்தில் ராஷ்மிகா நடித்திருந்தார்.

    இருப்பினும் தமிழில் போதிய வரவேற்பு கிடைக்காததால் தெலுங்கு, இந்தி மொழி படங்களில் அவர் நடித்து வருகிறார். அண்மையில் ராஷ்மிகா நடிப்பில் இந்தியில் வெளியான அனிமல் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

    அவர் தற்போது புஷ்பா 2, ரெயின்போ, கேர்ள்ஃப்ரண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதே போல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் குபேரா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.

    இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் தனது கையைத் தொட்டு செல்ஃபிக்கு போஸ் கொடுக்கச் சொன்னதால் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு அசவுகரியம் ஏற்பட்டது. இருப்பினும் அவர் அமைதியாகவும், பணிவாகவும் அந்த சூழ்நிலையை கையாண்டார்.

    இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோ காட்சிகளை கண்ட ராஷ்மிகாவின் ரசிகர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர்' வெப் தொடரில் கேப்டன் அமெரிக்காவாக ஆண்டனி மெக்கீ நடித்திருந்தார்.
    • டீசரில் இறுதியில் வரும் ரெட் ஹல்க் கதாபாத்திரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

    2011 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் அமெரிக்கா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனையடுத்து, அப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்து வெற்றி பெற்றது.

    கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் பல ஆண்டுகளாக நடித்து வந்த க்றிஸ் எவான்சின் ஒப்பந்தம் 2019 ஆண்டு முடிவடைந்தது. இதனையடுத்து, 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் எண்டுகேம் படத்தில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரம் தன்னுடைய பொறுப்பை தன் நண்பர் ஃபால்கன்/ஆண்டனி மெக்கீயிடம் ஒப்படைப்பதை போல முடித்திருந்தனர்.

    அதன் பின்னர் பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர்' வெப் தொடரில் கேப்டன் அமெரிக்காவாக ஆண்டனி மெக்கீ நடித்திருந்தார்.

    தற்போது ஆண்டனி மெக்கீ நடிப்பில் கேப்டன் அமெரிக்கா: ப்ரேவ் நியூ வேர்ல்ட்' என்ற படம் உருவாகியுள்ளது. நேற்று வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. .

    இந்த டீசரில் இறுதியில் வரும் ரெட் ஹல்க் கதாபாத்திரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. காமிக்ஸை பொறுத்தவரை ஹல்க்கை அழிப்பதற்காக தண்டர்போல்ட் ராஸ் ரெட் ஹல்க் ஆக மாறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணம் நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.
    • ஆனந்த் அம்பானி அக்ஷய் குமாரை நேரில் சந்தித்து திருமண அழைப்பு விடுத்தார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தற்போது இந்தியில் 'சர்ஃபிரா' என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.

    அக்ஷய் குமார் நாயகனாக நடிக்கும் இப்படத்தை தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இயக்கியுள்ளார். இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

    இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வந்த அக்ஷய் குமாருக்கு திடீரென உடல்நல குறைவு செற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். படம் வெளியான அன்று அவரால் ரசிகர்களை சந்திக்க முடியவில்லை.

    மேலும், முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணம் நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆனந்த் அம்பானி அக்ஷய் குமாரை நேரில் சந்தித்து திருமண அழைப்பு விடுத்தார். ஆனால், தற்போது கரோனா பாதிப்பு காரணமாக அக்ஷய் குமாரால் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் இந்தாண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • தனது அப்பா சிரஞ்சீவிக்கு ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் என்ற சொகுசு காரை ராம் சரண் வாங்கி கொடுத்தார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவான ராம்சரண் ஆடம்பர சொகுசு கார்களை வாங்கி குவிப்பதில் ஆர்வம் உள்ளவர். தற்போது அவர் 7.5 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் காரை வாங்கியுள்ளார்.

    கருப்பு நிறத்திலுள்ள இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் இந்தாண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு செல்வதற்காக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இந்த புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்து இறங்கினார் ராம் சரண். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    அண்மையில் தனது அப்பா சிரஞ்சீவிக்கு ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் என்ற சொகுசு காரை ராம் சரண் வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராம் சரணிடம் உள்ள சொகுசு கார்கள் :

    மெர்சிடிஸ் - மேபேக் ஜிஎல்எஸ் 600 - ரூ. 4 கோடி

    ஆஸ்டன் மார்ட்டின் வான்டேஜ் வி 8 - ரூ 3.2 கோடி

    ஃபெராரி போர்டோஃபினோ - ரூ 3.50 கோடி

    ரேஞ்ச் ரோவர் ஆக்டோபயோகிராபி - ரூ 2.75 கோடி

    பி.எம்.டபுள்யூ 7 சீரிஸ் - ரூ. 1.75 கோடி

    மெர்சிடிஸ் - பென்ஸ் ஜிஎல்இ 450 ஏஎம்ஜி கூபே ரூ.1 கோடி

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர், ஹீரோ ஆகிய இருவருக்கும் இது முதல் படம்.
    • படம் காமெடி கலந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுமுக இயக்குநர் அருண் இயக்கத்தில் பிரபல யூடியூபர்"ஜம்ப்கட்ஸ்" ஹரி பாஸ்கர் மற்றும் பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியா ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இயக்குநர் அட்லீ வெளியிட்டுள்ளார்.

    தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி புதிய படம் குறித்த அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டார். அதன்படி, ஜூலை 12ம் நாள் தேதி போஸ்டர் வெளியாகும் என அறிவித்திருந்தார்.

    அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஓஷோ வெங்கட் இசையில், குலோத்துங்க வர்மன் ஒளிப்பதிவில், ராமசுப்பு படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

    இயக்குநர், ஹீரோ ஆகிய இருவருக்கும் இது முதல் படம். இருப்பினும், Mr.House keeping படம் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது.

    இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இதற்குமுன்னர் சில படங்களில் துணை இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் (சந்திரமுகி 2) பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் தற்போது முதன்முறையாக ஒரு படத்தை தனித்து இயக்கியுள்ளார்.

    இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் அட்லீ வெளியிட்டுள்ள நிலையில், படம் காமெடி கலந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பூவே உனக்காக திரைப்படம் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
    • சூர்யாவை வைத்து இவர் இயக்கிய உன்னை நினைத்து இயக்கினார்.

    குடும்பங்கள் கொண்டாடும் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் விக்ரமன். 'புதிய பாதை' படத்தில், இயக்குனரும், நடிகருமான பார்த்திபனிடம் துணை இயக்குனராக பணியாற்றியதை தொடர்ந்து, 1990-ம் ஆண்டு வெளியான 'புது வசந்தம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

    இந்த படத்தை தொடர்ந்து, பெரும்புள்ளி கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக சூர்ய வம்சம், உன்னை நினைத்து, வனத்தைப்போல உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கினார்.

    இதில் பூவே உனக்காக திரைப்படம் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

    மேலும் சூர்யாவை வைத்து இவர் இயக்கிய உன்னை நினைத்து இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் விக்ரமன் கடைசியாக 2014ம் ஆண்டில் நினைத்தது யாரோ என்கிற படத்தை இயக்கினார். அதன்பிறகு, அவரது மனைவிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால், திரைப்படங்கள் இயக்கவில்லை.

    இந்நிலையில், இயக்குனர் விக்ரமன் உன்னை நினைத்து படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாகவும், சந்தானம் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

    • அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'புஷ்பா தி ரைஸ்' திரைப்படம்
    • இந்த படம் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'புஷ்பா தி ரைஸ்' திரைப்படம் இந்தியா முழுவதும் 400 கோடிக்கும் மேல் வசூலித்து பெரும் வெற்றியடைந்தது.

    இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்றன.

    இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 'புஷ்பா 2 தி ரூல்' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படம் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அண்மையில் 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    தமிழ்நாடு விநியோகிக்கும் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனை மகிழ்ச்சியுடன் அந்நிறுவனம் அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
    • ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.

    கடந்த சில மாதங்களாக ஜெயம் ரவி நாயகனாக நடித்த எந்த திரைப்படமும் மக்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை. அவர் கடைசியாக சைரன் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    ஜெயம் ரவி அதற்கடுத்து பல சுவாரசியமான படங்களில் கமிட் ஆகியுள்ளார் இதனால் இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    ஜெயம் ரவி தற்பொழுது பிரதர், ஜீனி , மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது.

    பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையை மேற்கொண்டுள்ளார்.

    சில வாரங்களுக்கு முன் படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் வாங்கியுள்ளது என்ற அப்டேட்டை ஒரு வீடியோ மூலம் யூ டியூபில் வெளியிட்டனர். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.

    இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட்டை நாளை காலை 11:11 மணிக்கு வெளியிடப்போவதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • `சப்த சாகரதாச்சே எல்லோ சைட் பி’ என்ற கன்னட படத்தில் நடித்ததன் மூலம் இந்திய திரை உலகில் பிரபலமானவர் சைத்ரா ஜே.ஆச்சார்.
    • தமிழ் திரையுலகில் புதிதாக 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    `சப்த சாகரதாச்சே எல்லோ சைட் பி' என்ற கன்னட படத்தில் நடித்ததன் மூலம் இந்திய திரை உலகில் பிரபலமானவர் சைத்ரா ஜே.ஆச்சார். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் தமிழ் திரையுலகில் புதிதாக 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    அதில் ஒரு படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார். கிராமிய குடும்பக் கதையான இந்த படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவில் பட்டியில் நடைபெற்று வருகிறது.

    படத்தில் சசிகுமாருடன் சைத்ரா ஜே.ஆச்சார் இணைந்து நடித்து வருகிறார். படத்துக்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் தலைப்பு மதர் இந்தியா என வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சைத்ரா இரண்டாவதாக தமிழில் நடிக்க இருக்கும் படம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முன்னணி நடிப்பில் தர்ம பிரபு, காக்டெய்ல், பண்ணி குட்டி, கூர்க்கா என பல படங்கள் வெளியாகியுள்ளது.
    • யோகி பாபு இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவித்த வண்ணம் உள்ளது.

    யோகி பாபு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நகைச்சுவை தொடரான "லொள்ளு சாப" தொடரில் சிறு வேடங்களில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ள, இவர் வெள்ளித்திரையில் யோகி திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு பின்னர் இவர் தனது பாபு என்னும் பெயரினை யோகி பாபு என தமிழ் திரைத்துறையில் மாற்றியுள்ளார்.

    தமிழ் சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பல தடைகளை கடந்து ஒரு நகைச்சுவளராக பிரபலமாகியுள்ள இவர், மூன்று முறை ஆனந்த விகடன் சார்பில் சிறந்த நகைச்சுவையாளர் விருதினை பரியேரும் பெருமாள், கோலமாவு கோகிலா, ஆண்டவன் கட்டளை திரைப்படத்திற்காக பெற்றுள்ளார்.


    பையா திரைப்படத்தில் மும்பை ரௌடிகளில் ஒருவராகவும், இயக்குனர் சுந்தர்சியின் கலகலப்பு திரைப்படத்தில் பிம்ப் ஏன்னும் கதாபாத்திரத்திலும், வேலாயுதம் திரைப்படத்தில் ஒரு கிராமத்து வாசியாகவும், பின் அட்டகத்தி, சூது கவ்வும், பட்டத்து யானை என பல தமிழ் படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார்.

    2014 ஆம் ஆண்டு வெளியான மான் கராத்தே திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள "வௌவால்" கதாபாத்திரம் தமிழ் சினிமா ரசிகர்கள் கவனத்திற்கு சென்று பிரபலமானது.

    தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர், சில காலத்திற்கு பின்னர் நாயகனாகவும் நடிக்க தொடங்கியுள்ளார். இவரது முன்னணி நடிப்பில் தர்ம பிரபு, காக்டெய்ல், பண்ணி குட்டி, கூர்க்கா என பல படங்கள் வெளியாகியுள்ளது.


    சமீபத்தில் நடிகர் யோகி பாபு புதிதாக நடிக்க உள்ள படம் 'கெனத்த காணோம்'. இப்படத்தில் கதாநாயகனான யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடிக்க உள்ளார்.

    இந்நிலையில் நடிகர் யோகி பாபு நலிந்த நடிகர்களுக்க உதவும் வகையில் நிதி உதவி வழங்கியுள்ளார்.

    தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவரும், நடிகர் சங்க அறக்கட்டளையின் உறுப்பினருமான பூச்சி

    முருகனிடம் ரூ. 6 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார். திரைப்பட முன்னணி நடிகர் யோகி பாபு இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவித்த வண்ணம் உள்ளது.

    • தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.
    • ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் `தேரே இஷ்க் மெயின்’ புதிய இந்தி படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.

    கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக தனது 50-வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார்.

    தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.

    அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜா வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகும் படத்தில் இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார்.

    இதையடுத்து ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் `தேரே இஷ்க் மெயின்' புதிய இந்தி படம் ஒன்றில் தனுஷ் நடிக்க உள்ளார்.

    படத்தில் அவருக்கு ஜோடியாக டிரிப்தி டிம்ரி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    டிரிப்தி டிம்ரி, ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் படத்தில் மாறுபட்ட கதா பாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் டிரிப்தி டிம்ரி மற்றும் ரன்பீர் கபூருக்கும் இடையே உள்ள காதல் ,ரொமான்ஸ் காட்சிகள் கடுமையான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்தன. இந்த விமர்சனங்களும் எதிர்ப்புகளும் அவரை இந்திய திரையுலகில் மேலும் பிரபலமடைய செய்தது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த பாட் நியூஸ் திரைப்படத்திலும் இதுப்போன்ற கவர்ச்சி காட்சிகளில் நடித்துள்ளார். அந்த காட்சி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதனால் ஆனந்த் எல் ராய் இயக்கும் தேரே இஷ்க் மெயின் திரைப்படத்தில் எம்மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்க போகிறார் என ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனுஷ் 4 வயதில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார்.
    • நிச்சயதார்த்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    தமிழ் திரை உலகில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கதாநாயகனாக பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் நெப்போலியன். அரசியலில் ஈடுபட்டு மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தார்.

    நெப்போலியனுக்கு திருமணமாகி மனைவி ஜெயசுதா மற்றும் தனுஷ், குணால் என்ற 2 மகன்கள் உள்ளனர். தனுஷ் 4 வயதில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் இயற்கை முறை சிகிச்சை பெற்றார்.

    தனுசின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்காக நெப்போலியன் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார். இந்நிலையில் நெப்போலியன் மூத்த மகன் தனுசுக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தார்.

    திருநெல்வேலியை சேர்ந்த அக்சயா என்பவருடன் தனுசுக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டது. இவர்களது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி வீடியோகால் மூலம் நடந்தது.

    நிச்சயதார்த்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நெப்போலியன் செய்து வருகிறார்.

    திருமண விழாவில் திரை உலக நட்சத்திரங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×