என் மலர்
- . இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர்.
- இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும். கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.
இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது
ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். சிறுமியின் பாலியல் வன்கொடுமையை மையமாக பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மக்களை ஆட்டிப்படைக்கிறது.
படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அரண்மனை திரைப்படத்திற்கு பிறகு 100 கோடி வசூலித்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. படம் வெற்றிகரமாக 25 நாட்கள் முடிவடைந்த நிலையில் தற்பொழுது ஓடிடி-யில் வெளியாகவுள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
மகாராஜா திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி நெட்பிலிகஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
திரையரங்கில் பார்க்க தவரவிட்ட மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி படத்தை பார்க்குமாரு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வித்தியாசமான ஒரு நல்ல காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும்.
- சாய்பல்லவிக்கு காமெடி படத்தில் நடிக்க ஆசை
தமிழில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சாய்பல்லவி மலையாளம், தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இந்தியில் தயாராகும் ராமாயண படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சாய்பல்லவிக்கு காமெடி படத்தில் நடிக்க ஆசை உள்ளதாம்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 'நான் தெலுங்கில் நடித்த பிதா, லவ் ஸ்டோரி, சியாம் சிங்கராய், விராட்ட பருவம், எம்சிஏ இப்படி எந்த படத்தை எடுத்துக்கொண்டாலும் எல்லாமே கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்கள் தான்.
நடனத்தின் மூலமும் எனக்கு நல்ல பெயர் பெற்றுக்கொடுத்த படங்கள் இவை. ஆனால் நான் இந்த படங்களை எல்லாம்விட வித்தியாசமான ஒரு நல்ல காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்.
அந்த படத்தில் எனக்கென்று முழு அளவிலான காமெடி கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படிப்பட்ட வாய்ப்பு எந்த மொழியில் கிடைத்தாலும் உடனே நடிக்க சம்மதிப்பேன்' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வெப் தொடரில் விலை மாதுவாக நடித்து இருக்கிறார்.
- சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளும் பெண்ணின் பயணம் இது.
நடிகை அஞ்சலி ஏற்கனவே திரைக்கு வந்து வெற்றி பெற்ற கேங்க்ஸ் ஆப் கோதாவரி என்ற தெலுங்கு படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதில் அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தன.
தற்போது மீண்டும் பஹிஷ்கரன் என்ற வெப் தொடரில் விலை மாதுவாக நடித்து இருக்கிறார். கிராமத்தில் நடக்கும் பழிவாங்கும் கதையம்சம் கொண்ட தொடராக உருவாகி உள்ளது. இந்த தொடரை முகேஷ் பிராஜா இயக்கி உள்ளார்.
இதுகுறித்து அஞ்சலி கூறும்போது, 'இந்த தொடரில் புஷ்பா என்ற பெண் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். இது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அப்பாவியான விலைமாதுவாக இருந்து சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ளும் பெண்ணின் பயணம் இது. புஷ்பா என்றால் மர்மம். பிரச்சினைகளை எப்படி சமாளித்து அவள் முன்னேறினாள் என்ற கதையம்சத்தில் உருவாகி உள்ளது' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இவர்களது திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.
- இவர்களது சங்கீத் நிகழ்ச்சி கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் முடிவானது.
இவர்களது திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது.
திருமணத்திற்கு முன் ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் பிரமாண்ட விழா ஒன்று நடந்தது. அதில் ஏராளமான பிரபிலங்கள் கலந்துக் கொண்டனர். தமிழ் மற்றும் இந்தி திரையுலக நடிகர்கள் அதில் கலந்துக் கொண்டனர்.
ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இவர்களது சங்கீத் நிகழ்ச்சி கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த சங்கீத் நிகழ்ச்சியிலும் பல பிரபலங்கள் உற்சாகமாக கலந்துக் கொண்டனர். தோனி, ஷ்ரேயாஸ் ஐயர், நடிகை நேஹா சர்மா, மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
இவர்களுடன் பிரபல பாப் பாடகரான ஜஸ்டின் பீபர் கலந்துக் கொண்டார். அவர் ஆனந்த் அம்பானியின் சங்கீத் விழாவில் பங்கேற்ற வீடியோ மற்றும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் ஜஸ்டீன் பீபர், ஆனந்த் அம்பானி குடும்பத்தினர், நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. சங்கீத் விழாவில் ஜஸ்டீன் பீபர் அவரது பிரபலமான பாடல்களான பேபி, பீச்சஸ், லவ் யுவர்செல்ஃப் மற்றும் சாரி போன்ற பாடல்களை பாடி அரங்கத்தை அதிர வைத்தார்.
ஆனந்த் அம்பானியின் திருமணம் வரும் 12 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெறவுள்ளது. ஜூலை 14 ஆம் தேதி வரவேற்பு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'விழா' படத்தின் மூலம் கதாநாயகனாக ஆனார் மாஸ்டர் மகேந்திரன்.
- 'கூலி' படத்தில் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என தகவல்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கி பிறகு கதாநாயகனாக வலம் வருபவர் மாஸ்டர் மகேந்திரன்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, நட்புக்காக போன்ற பல படங்களில் நடித்த பிறகு 'விழா' படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார்.
இவர், சமீபத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில் சிறு வயது விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ஆக்சன் படமாக தயாராகும் 'கூலி' படத்தில் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் பொதினேனி.
- 2024 ஆகஸ்ட் 15-ல் வெளியாக இருக்கிறது.
தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் பொதினேனி. தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் இவர் சமீபத்தில் வாரியர், ஸ்கந்தா போன்ற படங்களில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து டபுள் இஸ்மார்ட் எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படமானது 2019ல் வெளியான இஸ்மார்ட் சங்கர் எனும் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது. இந்த படத்தை விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பூரி ஜெகன்நாத் தயாரிக்க மணி ஷர்மா படத்திற்கு இசையமைக்கிறார். இதில், காவியா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படம் கடந்த மார்ச் 8-ம் தேதியே தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டு தற்போது இப்படம் ஆனது 2024 ஆகஸ்ட் 15-ல் வெளியாக இருக்கிறது. இதனை பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2006 ஆம் ஆண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார் பிரஜின்.
- தற்பொழுது ராஞ்சா எனும் புதிய படத்தில் நடித்துள்ளார்.
விஜேவாக பணிப்புரிந்து பின் சின்னத்திரையில் அறிமுகமாகி தனக்கென ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் பிரஜின். 2006 ஆம் ஆண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 2016 ஆம் ஆண்டு பழைய வண்ணாரப்பேட்டை எனும் படத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். கடந்த ஆண்டு டி3, அக்கு போன்ற படங்களில் நடித்தார்.
தற்பொழுது ராஞ்சா எனும் புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவானா வருண் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூன் மாதம் முடிந்தது. படத்தை அறிமுக இயக்குனரான சந்தோஷ் ராவணன் இயக்கியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி , சசி குமார் மற்றும் சமுத்திரகனி வெளியிட்டனர்.
சம்பசிவன் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் மற்றும் சிவி குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹரி எஸ் ஆர் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ் லுக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தியன் 2 படமானது வருகின்ற ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- இன்று ப்ரோமோஷன் பணிக்காக ஐதராபாத் சென்றனர் படக்குழுவினர்.
கடந்த 1996 இல் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். அதைத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து சங்கர், கமல் கூட்டணியில் தற்போது இந்தியன் படத்தில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள இந்த படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு பல சிக்கல்களை தாண்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி இந்தியன் 2 படமானது வருகின்ற ஜூலை 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக உலகமுழுவது நடைப்பெற்று வருகிறது. இன்று ப்ரோமோஷன் பணிக்காக ஐதராபாத் சென்றனர் படக்குழுவினர்.
சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த படக்குழு அதில் சங்கர் படத்தை பற்றிய சுவாரசிய தகவலை கூறினார். " படத்துல ஒரு ரோப் சீன் இருக்கு அவர் நாளு நாள் அந்த ரோப் ல தொங்கிக்ட்டே நடிச்சாரு, அதுலயும் ப்ராஸ்த்டிக் மேக்அப் போட்டுகிட்டு, பஞ்சாபி மொழி பேசனும், கேமராக்கு லிப் சிங்க் கொடுக்கனும், இதயும் எந்த வித சலிப்பு இல்லாம் அநடிச்சாரு, 70 வயசு ஆனாலும் கதாப்பாத்திரத்திற்கு அவரு போடுற முய்ற்ச்சி என்ன பிரமிக்க வைக்கிறது, இவ்ளோ ஆரவம் காம்மிக்கிற ஒரு நடிகர் இருகும் போது நம்ம என்ன நெனச்சாலும் அத ஸ்கிரீன்ல கொண்டு வர முடியும் " என கூறினார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தியன் 2 படமானது வருகின்ற ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
கடந்த 1996 இல் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். அதைத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து சங்கர், கமல் கூட்டணியில் தற்போது இந்தியன் படத்தில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள இந்த படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு பல சிக்கல்களை தாண்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி இந்தியன் 2 படமானது வருகின்ற ஜூலை 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். உலகம் முழுவது ப்ரோமோஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றனர். லண்டனில் படம் விளம்பரம் செய்ய்ப்பட்டது, துபாய் நகரத்தில் பாம் ஐலேண்டில் இந்தியன் 2 போஸ்டருடன் ஸ்கை டைவிங் செய்யப்பட்டது. நேற்று செய்தியாளர்களை படக்குழுவினர் சந்தித்து பேசினர்.
அதில் கமல்ஹாசன் , " வழக்கமாக சென்சார் போர்டு உறுப்பினர்கள் சுலபமாக எந்த ஒரு படத்தையும் பாராட்ட மாட்டார்கள். ஆனால் இந்தியன் 2 படத்தை பார்த்த பின் பாராட்டினார்கள்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து உங்களுக்கு இந்தியன் 2 பிடிக்கவில்லை என்ற கருத்து பரவி வருகிறது என்று நடிகர் சித்தார்த் கேள்வி எழுப்பினார் அதற்கு பதிலளிக்கும் வகையில் " இந்தியன் 2 படம் எல்லாம் முடிந்து படப்பிடிப்புக்கு தயாரா ஆயிடுச்சு, அதனால எனக்கு இப்போ அடுத்து வர போற இந்தியன் 3 மேல இருக்கு, சாப்பிடும் போது சாம்பார் நல்லா இருந்துச்சு, ரசம் நல்லா இருந்துச்சு அதனால இப்போ பாயாசம் நல்லா இருக்குமேன்னு நான் பேசிட்டு இருக்கேன்" என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார்.
- படத்தின் செகண்ட் லுக் தற்பொழுது வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.
இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கிறார்கள். நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின் வடமாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது.
இந்த படத்தில் அஜித்குமார் 'டூப்' இல்லாமல் துணிச்சலாக நடித்து இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் கடந்த வாரம் வெளியிட்டனர். விடாமுயற்சி படத்தின் தலைப்பிற்கு கீழ் திருவினையாக்கும் என பதிவிட்ட போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது.
அதைத்தொடர்ந்துபடத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.இதில் ஒரு போஸ்டரில் கார் சேசிங் காட்சி அமைந்துள்ளது. மற்றொரு போஸ்டரில் அஜித் கையில் பெரிய ஷாட்கன்னுடன் நெஞ்சில் கைவைத்தப்படி நிற்கிறார்.
போஸ்டரில் எஃபர்ட் நெவர் ஃபையில் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. கண்டிப்பாக படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கவுள்ளார்.
- நடிகர் ஆர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு நடித்து 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் வெளியாகியது. இதில் சந்தானத்திற்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி', 'இவன் வேற மாதிரி' போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை தீபா மற்றும் பலர் நடித்து இருந்தனர். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஜீ5 இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கியது. திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகியப் பின் படம் ரசிகர்கள் அனைவராலும் பாராட்டுப் பெற்றது.
இப்படத்தின் அடுத்த பாகத்தை இயக்கவுள்ளனர் அதற்கான பூஜை விழா இன்று நடைப்பெற்றது. முதலாம் பாகத்தை இயக்கிய ப்ரேம் ஆனந்த் இப்படத்தையும் இயக்கவுள்ளார். படத்தில் நடிகர் ஆர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். கதாநாயகியாக மீனாக்ஷி சவுத்ரி நடிக்கவுள்ளார்.
இத்திரைப்படத்தின் கதை ஒரு சொகுசு கப்பலில் தொடங்கி தீவு ஒன்றில் நடைபெறும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக பிரம்மாண்ட பட்ஜெட்டில் அரங்கங்களை அமைக்கவுள்ளனர்.
நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள் மற்றும் ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை நடிகர் ஆர்யா வழங்க உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்தின் முதல் பாடலான கரம் கரம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. அவர் கடைசியாக நடித்து வெளியான ஹாய் நானா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நானி மற்றும் மிருணாள் தாகூரின் கெமிஸ்டிரி நன்றாக மக்களிடம் வொர்க் அவுட் ஆகியது.
இதைத்தொடர்ந்து நானி அடுத்ததாக சரிபோதா சானிவரம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். சமீபத்தில் படத்தின் முதல் பாடலான கரம் கரம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரியங்கா மோகன் இப்படத்தில் பெண் காவல் அதிகாரியாக , சாருலதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த போஸ்டரில் மிகவும் அப்பாவித்தனமான முகத்துடன் அழகாக காணப்படுகிறார்.
இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.