என் மலர்
- ராயன் படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளனர்.
- இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
தனுஷின் 50-வது படமாக உருவாகும் ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும் என்று படக்கிழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள ராயன் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் பிரித்விராஜ்
- இந்த படத்தை அதிக பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்துடன் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் பிரித்விராஜ் தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார். சில மாதங்களுக்கு முன் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படத்தில் பிரம்மிக்கும் அளவு நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் பிரித்விராஜ். அதைத்தொடர்ந்து மலையாளத்தில் குருவாயூர் அம்பலநடையில் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ராஜமவுலி இயக்கும் SSMB29 படத்தில் வில்லனாக நடிக்க பிரித்விராஜ் ஒப்பந்தமாகி உள்ளார்.
இதில் நாயகனாக மகேஷ்பாபு நடிக்கிறார். இந்த படத்தை அதிக பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்துடன் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அனைத்து மொழிகளில் இருந்தும் முன்னணி நடிகர் நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.
உலகத்தை சுற்றும் ஒரு சாகச பயணத்தை பின்னணியாக கொண்டு தயாராகும் படம் இது என்றும் பெரும் பகுதி படப்பிடிப்பு அமேசான் காடுகளில் நடத்தப்படும் என்றும் ராஜமவுலி ஏற்கனவே அறிவித்துள்ளார்.
மகேஷ் பாபுவுக்கு வில்லனாக பிரித்விராஜ் நடிக்க இருப்பது படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சுவிட்சர்லாந்தில் 77-வது லோகார்னோ திரைப்பட விழா அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
- 2002-ல் வெளியான தேவதாஸ் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
சுவிட்சர்லாந்தில் 77-வது லோகார்னோ திரைப்பட விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ம்தேதி முதல் 17-ம்தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவரவிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
58 வயதாகும் ஷாருக்கான் இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். பாசிகர், தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே ஆகிய படங்கள் பெரிய வரவேற்பை பெற்றன. தி பாந்தன், டான் 2. ஓம் சாந்தி ஓம் படங்களின் வெற்றியால் அவரது ரசிகர்கள் 'கிங் கான்' என்று அழைத்தனர்.
2002-ல் வெளியான தேவதாஸ் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஷாருக்கான் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பதான், ஜவான் படங்களும் பெரிய வெற்றி பெற்றன. இரண்டு திரைப்படங்களும் 1000 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஷாருக்கானுக்கு லோகார்னோ திரைப்பட விழாவில் பெருமை மிகு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிவகார்த்திகேயன் தற்பொழுது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்பொழுது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. அதைத்தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'SK 23' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
எச் வினோத் துணிவு படத்திற்கு பிறகு நடிகர் விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியது. அதற்கடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது. பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தியுடன் ஒரு படமும் அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
எச் வினோத் விஜய் மற்றும் தனுஷை வைத்து படத்தை இயக்கியப்பின் சிவகார்த்திகேயனின் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட்.
- மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது S.I.R {சார்} என மாற்றப்பட்டு இருக்கிறது.
சின்ன திரையில் அறிமுகமாகி பின் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருக்கிறார் போஸ் வெங்கட். பின் 2020 ஆம் ஆண்டு கன்னி மாடம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக்க அறிமுகமாகினார்.
தற்பொழுது அவர் விமல் நடிப்பில் மா.பொ. சி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த மாதம் வெளியான நிலையில். படத்தின் தலைப்பு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் மாற்றியுள்ளனர். முதலில் மா.பொ.சி என தலைப்பிடப்பட்ட படம் தற்பொழுது S.I.R {சார்} என மாற்றப்பட்டு இருக்கிறது.
படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. படத்தின் முதல் பாடலான 'பனங்கருக்கா' பாடல் நாளை [ஜூலை 5] வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இப்பாடலை பிரபல இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி இணைந்து பாடியுள்ளனர். சமீபத்தில் இருவருக்கும் விவாகரத்து ஆனது. இதனால் இப்பாடலிற்கு ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த பாடலிற்கு விவேகா பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி வருகிறார்.
- 9 மணி நேரம் நடந்த இவ்விழாவில் மாணவ மாணவிகளுக்கு பரிசை வழங்கினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகத்தில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி வருகிறார்.
இந்த ஆண்டுக்கான முதல் கட்ட பரிசளிப்பு விழா கடந்த 28-ந்தேதி சென்னையில் நடந்தது. அப்போது 127 தொகுதிகளை சேர்ந்த 800 மாணவ-மாணவிகளுக்கு விஜய் பரிசு வழங்கினார். 19 மாவட்டங்களில் உள்ள 107 தொகுதிகளை சேர்ந்த 640 மாணவ-மாணவிகளுக்கு விஜய் பரிசுத்தொகை வழங்கினார்.
கடந்த சில நாட்களாகவே இதுக் குறித்த போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விழாவில் விஜய் நீட் தேர்வைப் பற்றி பேசியது ரசிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
9 மணி நேரம் நடந்த இவ்விழாவில் மாணவ மாணவிகளுக்கு பரிசை வழங்கினார். அதை முடித்துவிட்டு சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பினார். அங்கு அவர் வீட்டிற்கு முன் ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்தது. இதனால் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரது வீட்டு மாடியில் நின்று அனைவருக்கும் நன்றியை தெரிவித்துவிட்டுச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திரைப்படம் தற்பொழுது 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- மகாராஜா திரைப்பட குழுவினரை இயக்குனர் வெங்கட் பிரபு சந்தித்தார்.
குரங்கு பொம்மை திரைப்படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கினார். இப்படம் வெளியாகி மக்கள் இடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
திரைப்படம் தற்பொழுது 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படம் தற்பொழுது உலகமெங்கும் உள்ள பார்வையாளர்களிடம் பாராட்டை பெற்று வருகிறது. திரைப்படம் அமெரிக்காவில் திரையிடப்பட்டது. அந்த திரையிடலுக்கு படக்குழிவினர் கலந்துக் கொண்டனர்.
இயக்குனர் வெங்கட் பிரபு கோட் திரைப்படத்தின் VFX பணிகளுக்காக அவரும் அமெரிக்காவில்தான் தற்பொழுது உள்ளார். இதனால் நேற்று மகாராஜா திரைப்பட குழுவினரை இயக்குனர் வெங்கட் பிரபு சந்தித்தார். அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நான் கேரளாவிற்கும் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் எம்.பி.யாக பிரதிபலிப்பேன்.
- சபரிமலையை தொட நினைத்தவர்கள் எல்லாம் காணாமல் தான் போவார்கள்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி சுரேஷ் கோபி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேரள மக்கள் வழங்கிய ஆசிர்வாதத்தால் நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வாகி உள்ளேன். நான் கேரளாவிற்கும் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் எம்.பி.யாக பிரதிபலிப்பேன். மக்களுக்கு முக்கியமாக எதை செய்ய வேண்டுமோ அதை செய்வேன். என் பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் இருக்கிறது. சுற்றுலாத்துறை மூலமாக எந்த திட்டமாக இருந்தாலும் செய்து கொடுக்கலாம். பெட்ரோலியம் துறையில் துறை சார்ந்த அனுபவங்கள் எதுவும் தற்போது என்னிடம் இல்லாததால், அதை கற்றுக்கொண்டு வருகிறேன்.
பெட்ரோலிய பொருட்கள் விலை குறைப்பு பற்றி யோசிக்காமல் அதற்குரிய வேறு வழி என்ன என்று யோசிக்க வேண்டும். சபரிமலையை தொட நினைத்தவர்கள் எல்லாம் காணாமல் தான் போவார்கள்.
கேரளாவில் பிறந்தாலும் சென்னை என்னை வளர்த்த இடம். நடிக்க வாய்ப்பு தந்து, தூங்க இடம் தந்தது. தமிழ்நாட்டை நேசிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவரிடம் நீட் குறித்து நடிகர் விஜய் பேசியது குறித்து கருத்து கேட்டபோது, அரசியல் பற்றி கேட்க வேண்டாம் என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விலை உயர்ந்த ஜூகு தாரா பகுதியில் அலுவலகம் அமைந்துள்ளது.
- ரூ,7.84 கோடிக்கு அடமானம் வைத்து கடன் பெற்று இருக்கிறார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த வருடம் வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு தமன்னா ஆடிய குத்தாட்டம் ரசிகர்களை கவர்ந்தது.
இந்தியில் பிசியாக நடித்து வரும் தமன்னா தற்போது மும்பையில் 6 ஆயிரத்து 65 சதுர அடி கொண்ட அலுவலகத்தை ரூ,18 லட்சம் மாத வாடகைக்கு எடுத்துள்ளார்.
5 ஆண்டுகளுக்கு வாடகை ஒப்பந்தம் போட்டு இருக்கிறார். இதற்காக ரூ,75 லட்சம் செக்யூரிட்டி டெபாசிட் செலுத்தி உள்ளார். விலை உயர்ந்த ஜூகு தாரா பகுதியில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.
அதுமட்டுமன்றி தமன்னா அந்தேரி வீர் தேசாய் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனக்கு சொந்தமான மூன்று வீடுகளை வங்கியில் ரூ.7.84 கோடிக்கு அடமானம் வைத்து கடன் பெற்று இருக்கிறார். இதற்காக ரூ,4.70 லட்சத்துக்கு முத்திரை கட்டணமும் செலுத்தி இருக்கிறார்.
தமன்னா தற்போது ஜான் அபிரகாமுடன் வேதா படத்திலும் ஸ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ் ஆகியோருடன் ஸ்த்ரீ 2 படத்திலும் நடித்து வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.
- சவால்களை நீங்கள் எதிர்கொள்ளும் விதம் அற்புதம்.
இந்தி நடிகையான ஹினா கான் சமீபத்தில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள தகவலை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். நோயில் இருந்து விரைவில் மீள்வேன் என்றும், இந்த கஷ்ட நேரத்தில் அனைவரும் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். ஹினா கான் விரைவில் குணமாக வேண்டி பலரும் வாழ்த்தினர்.
இந்த நிலையில் நடிகை சமந்தாவும் ஹினா கான் குணம் அடைய வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து சமந்தா கூறும்போது, "நோய் பாதிப்பில் இருந்து குணம் அடைய உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். தைரியமாக இரு. ஹினாகான் ஒரு போராளி'' என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சமந்தாவுக்கு நன்றி தெரிவித்து ஹினா கான் வெளியிட்டுள்ள பதிவில், "நீங்கள் பெரிய நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகை. வாழ்க்கையில் வரும் சவால்களை நீங்கள் எதிர்கொள்ளும் விதம் அற்புதம்.
உங்களிடம் இருந்து நான் நிறைய கற்று கொண்டு வருகிறேன். உங்கள் அன்புக்கும், ஆசிர்வாதங்களுக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.
நடிகை சமந்தாவும் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்தின் முதல் பாடலும் டீசரும் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
- படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் இயக்கும் இயக்குனர்களில் இயக்குனர் ராம் மிக முக்கியமானவர். இவர் எடுக்கும் திரைப்படங்கள் ஒரு வாழ்க்கையின் தீஸிஸ் என்று சொல்லலாம். சமூதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து படங்களை இயக்குவார்.
2018 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி மற்றும் சாதனா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் பேரன்பு. அதைத்தொடர்ந்து தற்பொழுது ஏழு கடல் ஏழு மழை திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் சுரேஷ் காமாட்சியின் 'வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடித்து விரைவில் திரையில் வெளியாகவுள்ளது. இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட்டு பல விருதுகளை வென்றும், சர்வதேச பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்று வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன்' போட்டிப் பிரிவிற்காகத் தேர்வு செய்யப்பட்டு, ரோட்டர்டாம் நகரின் சிறப்புமிக்க பாதே சினிமாஸ் திரையரங்கில் மூன்று காட்சிகள் பொதுமக்களின் பார்வைக்காக இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.
படத்தின் முதல் பாடலும் டீசரும் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. தற்பொழுது படத்தின் இரண்டாம் பாடலை வரும் ஜூலை 5 ஆம் தேதி மாலை 6 மணியளவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் படத்தின் இரண்டாம் பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். யுவனின் இசையில் சந்தோஷ் பாடுவது இதுவே முதல்முறை. இரண்டு நபர்களுமே தமிழ் இசை உலகில் பெரும் ஜாம்பவான்கள். இதனால் இப்பாடலிற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஏழேழு மலை என தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாடலிற்கு மதன் கார்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும்.
இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது
ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார். சிறுமியின் பாலியல் வன்கொடுமையை மையமாக பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.
அரண்மனை 4 - க்கு பிறகு 50 கோடியை தாண்டும் திரைப்படமாக மகாராஜா அமைந்துள்ளது. இப்படம் நேற்றுவரை 82 கோடி ரூபாய் உலகளவில் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வேகமாக வசூலித்து வந்த மகாராஜா திரைப்படம் பிரபாசின் கல்கி298 ஏடி திரைப்படம் வெளியாகியதால் கொஞ்சம் வசூலில் மந்தம் தட்டியது. இதனால் திரைப்படம் 100 கோடியை எட்டுவதற்கு தாமதம் ஆனது.
ஆனால் தற்பொழுது திரைப்படம் 100 கோடி வசூலில் தாண்டியுள்ளது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அரண்மனை திரைப்படத்திற்கு பிறகு 100 கோடி வசூலித்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.