என் மலர்
- ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம் 2010-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது.
- ஷங்கர் அதை கைவிடாமல் சில வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து அந்த படத்தை இயக்கினார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம் 2010-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் முதலில் கமல்ஹாசனை நடிக்க வைக்க ஷங்கர் அணுகியதாகவும் சில காரணங்களால் படத்தில் இருந்து அவர் விலகியதால் ரஜினிக்கு கைமாறியதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதனை கமல்ஹாசனே தெரிவித்து உள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் கூறும்போது, ''எந்திரன் படத்தை எடுக்க நானும் ஷங்கரும் 1990-களில் முயற்சி செய்தோம். இந்த படத்துக்காக எனக்கு மேக்கப் டெஸ்ட்டும் எடுக்கப்பட்டது.
ஆனால் படத்தின் பட்ஜெட் மற்றும் சம்பளம் போன்ற சில பிரச்சினைகள் காரணமாக அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக அந்த படத்தை எடுப்பது பாதுகாப்பு அல்ல என்று தோன்றியது. அதனால் நான் நடிக்கவில்லை.
ஆனால் ஷங்கர் அதை கைவிடாமல் சில வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து அந்த படத்தை இயக்கினார். அது பெரிய வெற்றி பெற்றது'' என்றார்.
அதன் பின் எந்திரன் 2.0 படத்தில் முதலில் கமல்ஹாசன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டியது எனவும், அப்போது கமல் மற்ற படங்களில் கமிட் ஆயிருந்ததால் அவரால் நடிக்க இயலவில்லை. என்று சமீபத்தில் நடந்த நேர்காணலில் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘காதல் தி கோர்' படம் பெரிய வெற்றி பெற்றது.
- இந்த புகைப்படம் கொச்சி தர்பார் ஆர்ட் கேலரி சமீபத்தில் நடந்த புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.
மலையாள சூப்பர் ஸ்டாரான நடிகர் மம்முட்டி தமிழிலும் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'காதல் தி கோர்' படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் மம்முட்டி ஜோடியாக ஜோதிகா நடித்து இருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மம்முட்டியின் பிரம்மயுகம் படமும் வசூல் சாதனை நிகழ்த்தியது. சமீபத்தில் மம்மூட்டி மற்றும் கன்னட பிரபலமான ராஜ் பி ஷெட்டி இணைந்து டர்போ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார்.
சினிமாவை தாண்டி இன்னொரு புறம் மம்முட்டிக்கு புகைப்படங்கள் எடுப்பது பிடிக்கும். படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அங்குள்ள அழகான விஷயங்களை தனது கேமராவில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்வது உண்டு. அப்படி மம்முட்டி எடுத்த புகைப்படங்களில் இந்திய புல்புல் பறவையின் புகைப்படமும் ஒன்று. இந்த புகைப்படம் கொச்சி தர்பார் ஆர்ட் கேலரி சமீபத்தில் நடந்த புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது. பின்னர் மம்முட்டி எடுத்த புல்புல் பறவை புகைப்படத்தை ஏலம் போட்டனர்.
ஏலத்தின் ஆரம்ப விலையாக ரூபாய் 1 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. பின் அந்த புகைப்படத்தை தொழில் அதிபரான அச்சு உல்லட்டில் [லீனா க்ரூப் ஆஃப் பிசினஸ்] ரூ.3 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார்.
இந்த புகைப்பட கண்காட்சி மறைந்த எழுத்தாளரான இந்துச்சூடன் சார்பாக நடைப்பெற்ற கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இத்தனை வருடங்கள் கழிந்தும் ரஜினிகாந்த் இன்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.
- 70 வயது ஆனாலும் இன்னும் துடிப்புடன் பலப் படங்களை தயாரித்து மற்றும் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.
தமிழ் திரையுலகில் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் - க்கு அடுத்து சினிமாவின் ஜாம்பவான்களாக இருப்பது கமல்ஹாசன் மற்றும் ரஜினி மட்டும் தான். இத்தனை வருடங்கள் கழிந்தும் ரஜினிகாந்த் இன்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். பலப் பேர் இந்த சினிமாத்துறையில் நாயகர்களாக வரவேண்டும் என்று வந்து சிலப்படங்களில் நடித்துவிட்டு காணாமல் போன எத்தனையோ நடிகர்களை பார்த்து இருக்கிறோம். 1975 ஆரம்பித்த திரைப்பயணத்தை இன்றும் 50 வருடங்களாக தன்னுடைய நிலையை தக்கவைத்து இருக்கிறார் ரஜினிகாந்த்.
கமல்ஹாசன் தமிழ் சினிமாவை உலகமெங்கும் கொண்டு சென்ற ஒரு உலகநாயகன், தான் நடிக்கும் படங்களாக இருக்கட்டும், இல்லை இயக்கும் படங்களாக இருக்கட்டும் எது செய்தாலும் அதனை உலக தரத்தில் செய்வது அவரது வழக்கம். 70 வயது ஆனாலும் இன்னும் துடிப்புடன் பலப் படங்களை தயாரித்து மற்றும் நடித்து வருகிறார்.
இந்த இருஜாம்பாவன்களும் அவர்களின் இளம் பருவத்தில் இணைந்து 16 படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் நடிப்பில் வெளிவந்த அபூர்வ ராகங்கள்,அவள் அப்படித்தான், 16 வயதினிலே, இளமை ஊஞ்சல் ஆடுகிறது, தில்லு முல்லு ஆகிய திரைப்படங்கள் மிகப் பெரியளவில் ஹிட் ஆனது.
ஒரு கட்டத்தில் தமிழ் சினிமா துறையில் இருவருக்கும் ஒரு பெரிய மார்க்கெட் உருவாகியதும் இருவரும் இணைந்து நடிப்பதை தவிர்த்தனர். படத்தின் ஒன்றாக நடிக்காவிட்டாலும் கலை நிகழ்ச்சிகளிலும், விருது வழங்கும் விழாவில் ஒன்றாக கலந்துக் கொள்வர். சமீபத்தில் கமல்ஹாசன் , அவர் ஏன் ரஜினிகாந்துடன் இணைந்து இத்தனை வருடங்கள் நடிக்கவில்லை, எதிர்காலத்தில் நீங்கள் ஒன்றாக நடிப்பதற்கோ இல்லை கவுரவ தோற்றத்தில் நடிப்பதற்கு எதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதற்கு அவர் " நாங்கள் இணைந்து நடிப்பது என்பது புதிதில்லை, நாங்கள் பலப் படங்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ளோம். ஆனால் ஒருக்கட்டத்தில் நாங்கள் ஒன்றாக இணைந்து நடிக்கக் கூடாது என்ற முடிவை எடுத்தோம். நாங்கள் போட்டியிடும் போட்டியாளர்கள் கிடையாது. துறையில் எப்பொழுதும் போட்டிகள் நிலவுவது சகஜம் தான், அவருடைய பாதை வேறு என்னுடைய பாதை வேறு. இதை நாங்கள் இப்பொழுதல்ல எங்களுடைய இளம் வயதில் எடுத்துக் கொண்ட முடிவு" என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
- இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் அஜித் குமார், படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
விடாமுயற்சி படத்தில் அஜித் குமார் ஜோடியாக திரிஷா நடிப்பதாக தெரிகிறது. இவர்களுடன் நடிகர் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடித்த முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது கார்த்திக்கு.
- மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியாவர் கார்த்தி.
இயக்குனர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக கார்த்தி அறிமுகமாகினார். நடித்த முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது கார்த்திக்கு.
அதைத்தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், தோழா போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார். 2017 ஆம் ஆண்டு எச்,வினோத் இயக்கத்தில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மிகவும் திரில்லராக எடுத்து இருப்பார் எச் வினோத்.
பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு கைதி திரைப்படத்தில் நடித்தார். இப்படம் கார்த்தி திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது.
கார்த்தி ஜப்பான் திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு பிறகு கார்த்தி சர்தார் 2, வா வாத்தியார் போன்ற படங்களில் நடித்து முடித்து விட்டு லோகேஷ் இயக்கத்தில் கைதி 2 படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கடுத்து எச். வினோத் இயக்கத்தில் தீரன் பாகம் 2ல் நடிக்கவுள்ளார்.
எச்.வினோத் தளபதி 69 படத்தை இயக்கி முடித்தப்பின் தீரன் பாகம் இரண்டை இயக்கவுள்ளார். இவ்வாறு கார்த்தி பல சுவாரசியமான லைன் அப்ஸில் உள்ளார். அடுத்து வெளிவரும் கார்த்தி திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- திரிஷா நடிப்பில் அபியும் நானும் திரைப்படத்தை இயக்கினார்.
- தற்பொழுது ராதா மோகன் சட்னி சாம்பார் எனும் வெப் தொடரை இயக்கியுள்ளார்.
2007 ஆம் ஆண்டு ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா, பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மொழி. இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. படம் முழுக்க பேசாமல் தன்னுடைய முக பாவனையிலேயே மக்கள் மனதை கட்டிப் போட்டார் ஜோதிகா.
அதைத் தொடர்ந்து திரிஷா நடிப்பில் அபியும் நானும் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றுக் கொடுத்தது. அதற்கடுத்து நாகர்ஜூனா நடிப்பில் பயணம் திரைப்படத்தை இயக்கினார்.
கடந்தாண்டு எஸ்.ஜே சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான பொம்மை திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
தற்பொழுது ராதா மோகன் சட்னி சாம்பார் எனும் வெப் தொடரை இயக்கியுள்ளார். இதில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவருடன் வாணிபோஜன் இணைந்து நடித்துள்ளார். மேலும் கயல் சந்திரன், நிதின் சத்யா, தீபாசங்கர், சம்யுக்தா விஸ்வநாத், சுந்தர் ராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். வாணி போஜன் இதற்கு முன் ராதா மோகன் இயக்கத்தில் மலேசியா டூ அமினிசியா என்ற படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
ராதா மோகன் இயக்கும் முதல் வெப் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாலியான குடும்ப பொழுதுபோக்கு தொடராக உருவாகியுள்ள இந்த தொடரின் முதல் தோற்றத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் சில நாட்களுக்கு முன் வெளியிட்ட சூழ்நிலையில் தற்பொழுது தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.
அமுதா கஃபே நடத்தி வரும் ஒரு குடும்பம் அந்த ஹோட்டலில் சாம்பார் மிகவும் ஃபேமசாக இருக்கிறது. அந்த சாம்பார் ருசிக்கு காரணம் யோகி பாபுவின் கைப்பக்குவம், மற்றொரு நண்பர்கள் நட்த்தும் ஹோட்டலில் சட்னி மிகவும் ஃபேமசாக இருக்கிறது. இதனால் இவர்கள் இருவரும் அவர்களில் ரெசிப்பியை மாற்றிக் கொள்ள முடிவெடுத்து யோகி பாபுவிடம் கேட்பது போன்ற காட்சிகள் டிரைலரில் இடம் பெற்றுள்ளது. விரைவில் ரிலீய்ஸ் நீதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தியன் பாகம் 1 இயக்கி 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2 வெளியாகவுள்ளது.
- அவர் அடுத்து இயக்கப்போகும் படங்களைப் பற்றி கூறினார்.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டம் என்று கூறினாலே நமக்கு நியாபகத்திற்கு வரும் முதல் இயக்குனர் ஷங்கர் ஆவார். அவரின் கதையை நேர்த்தியாகவும் , மிக பிரம்மாண்டமாகவும் எடுக்கும் திறம் பெற்றவர். இவர் தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தியன் பாகம் 1 எடுத்து 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் 2 வெளியாகவுள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. உலகமெங்கும் பல நகரங்களில் படக்குழுவினர் சென்று ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்படும் போது அங்கு நடந்த நேர் காணலில் அவர் அடுத்து இயக்கப்போகும் படங்களைப் பற்றி கூறினார். அதில் அவர் கூறியது " தற்பொழுது எனக்கு 3 ஐடியாக்கள் உள்ளன, ஒன்று ஒரு வரலாற்று சிரப்புமிக்க திரைப்படம், மற்றொன்று ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஒரு படம், மற்றொன்று சை ஃபை கதைக்களத்துடன் 2012 என்ற பெயரில் உருவாகவுள்ளது" என கூறினார்.
இந்த மூன்று திரைப்படங்களும் மிகப் பெரிய பொருட் செலவிலும் அதில் நிறைய VFX காட்சிகள் இடம் பெற்றிருக்கும் அப்படங்களில் உலகில் உள்ள அனைத்து புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளார் என்பதையும் கூறீனார்.
மேலும் அவர் ராம் சரண் நடிப்பில் இயக்கிக் கொண்டு இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு இன்னும் 15 - 20 நாட்கள் தான் படப்பிடிப்பு பணிகள் இருக்கிறது என கூறியுள்ளார். இந்தியன் 3 பாகத்தில் பெரும்பாலான காட்சிகளை படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டதால் இன்னும் 6 மாதங்களில் அப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது.
- சிறந்த படத்திற்கான 'GOLDEN LYNX' விருதை வென்ற 'கொட்டுக்காளி' திரைப்படம் வென்றுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தாயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மட்டும் வெளியாகியுள்ளது. இந்த படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரங்களை குவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது நடந்து வரும் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை கொட்டுக்காளி திரைப்படம் வென்று அசத்தியுள்ளது.
சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது. இது தவிர்த்து தற்போது நடந்து வரும் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' தேர்வாகியுள்ளது.
இந்நிலையில், போர்ச்சுக்கலில் நடைபெற்ற புதிய படங்கள், இயக்குநர்களுக்கான 20ஆவது FEST Festival விழாவில் சிறந்த படத்திற்கான 'GOLDEN LYNX' விருதை 'கொட்டுக்காளி' திரைப்படம் வென்றுள்ளது.
இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகை சுனைனாவுக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
- இந்த சேனலுக்கு 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.
தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, திருத்தணி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, கவலை வேண்டாம், , சில்லுக்கருப்பட்டி, தொண்டன், லத்தி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
இறுதியாக ரெஜினா என்ற திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். அண்மையில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற இணைய தொடரிலும் சுனைனா நடித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை சுனைனா புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதைக் கண்ட ரசிகர்கள், சுனைனா காதலிப்பதாக பல செய்திகளை இணையத்தில் தெரிவித்து வந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் நடிகை சுனைனா, தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததாகவும், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனையடுத்து சுனைனாவுக்கு யாருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. யார் அந்த மாப்பிள்ளை என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், சுனைனா துபாயைச் சேர்ந்த பிரபல யூடியுபரான கலித் அல் அமேரி என்பரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த வாரம் தனக்கு நிச்சயம் ஆகிவிட்ட தகவலை கலித் அல் அமேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவரை திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணைப் பற்றி தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக இருந்தனர்.
இந்நிலையில், தனது திருமண ஏற்பாடுகளுக்காக கலித் துபாயில் இருந்து இந்தியா வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண் நடிகை சுனைனா என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
துபாயைச் சேர்ந்த கலித் அல் அமேரி தனது பெயரில் ஒரு பிரபல யூடியுப் சேனலை நடத்தி வருகிறார். பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிடும் இந்த சேனலுக்கு 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளார்கள். சமீபத்தில் நடிகர் மம்மூட்டியுடனான இவரது நேர்காணல் சமூக வலைதளத்தில் வைரலானது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கும் படம் பாட்டல் ராதா.
- குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பா.ரஞ்சித். அதைத்தொடர்ந்து கார்த்தியை வைத்து இயக்கிய மெட்ராஸ் படத்தின்மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தார். தனது 3 வது படத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்கினார்.
ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த 2016 வெளியான கபாலி பெரிதும் பேசப்பட்ட நிலையில் தொடர்ந்து ரஜினியை வைத்து காலா படத்தை இயக்கினார். தனது படங்களில் சமூக பிரச்சனைகளை தொடர்ந்து பேசிவரும் பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக வளம் வருகிறார்.
இயக்குநராக மட்டுமின்றி நீலம் என்று அமைப்பைத் தொடங்கி சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இதுவரை நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், ஜே - பேபி, ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இடையில் நீலம் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படம் பேசுபொருளாக மாறியது.
தொடர்ந்து, இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது. இப்படத்திற்கு 'பாட்டல் ராதா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இப்படம் மகிழ்ச்சி, மற்றும் பொழுதுபோக்கு நிரம்பிய எமோஷனல் ரோலர் கோஸ்டாராக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாட்டல் ராதா படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டீசரை நடிகர் சிலம்பரசன் மற்றும் நடிகர் ஆர்யா தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
- சமீபத்தில் வெளியான 'கதறல்ஸ்' மற்றும் 'பாரா பாரா' என்ற பாடல்கள் மக்கள் மனதில் நீங்காது ஒலித்து கொண்டு இருக்கிறது.
- வரும் ஜூலை 12 ஆம் தேதி இந்தியன் 2 வெளியாகவுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கதறல்ஸ்' மற்றும் 'பாரா பாரா' என்ற பாடல்கள் மக்கள் மனதில் நீங்காது ஒலித்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் காலண்டர் பாடலின் வீடியோ இன்று வெளியாகி உள்ளது. இதனை படத்தின் நிறுவருமான லைகா வெளியிட்டுள்ளது.
- விஜய் அரசியலில் நுழைந்துள்ளதன் மூலம் த்ரிஷாவும் அரசியலில் நுழைய விரும்புகிறார்.
- திரிஷா மாதிரியான ஒட்டுண்ணிகள் விஜயின் வாழ்க்கையில் நுழைகிறார்கள்.
சுசி லீக்ஸ் மூலமாக பின்னணி பாடகி சுசித்ரா கோலிவுட் வட்டாரத்தையே கதிகலங்க வைத்தார். சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா பிரபலங்களான தனுஷ், த்ரிஷா, ஹன்சிகா, அனிருத், டிடி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியான படங்களுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சுசித்ரா அப்போது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அண்மையில் சுசித்ரா ளித்த பேட்டியில் அவரது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் குறித்தும் நடிகர் தனுஷ் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
நடிகர் விஜய்யின் பிறந்தநாளான கடந்த ஜூன் 22ஆம் தேதியில் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தனர். அதே நாளில் நடிகை த்ரிஷாவும் நடிகர் விஜய்யுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சுசித்ரா நடிகரும் தவெக தலைவருமான விஜய் மற்றும் திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய பேசி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், விஜய்யுடன் அவரது மனைவி சங்கீதா மீண்டும் ஒன்று சேர வேண்டும். ஒரு சின்ன சண்டையால் பிரிந்த குடும்பத்தை அவர் ஈகோவினால் சேர்த்து வைக்காமல் இருப்பதால் தான் திரிஷா மாதிரியான ஒட்டுண்ணிகள் நுழைகிறார்கள். லிப்டில் அவங்க எடுத்த போட்டோவை பதிவிட்டதில் இருந்து விஜயை திரிஷா சொந்தம் கொண்டாட முயற்சி செய்கிறார்கள் என்று தெரிகிறது.
இதன்மூலம் திரிஷா விஜய்யுடன் இணைய விரும்புவதாகத் தெரிகிறது. ஏனெனில், நடிகர் விஜய் அரசியலில் நுழைந்துள்ளதன் மூலம் த்ரிஷாவும் அரசியலில் நுழைய விரும்புகிறார்.
ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு ஒரு ஒட்டுண்ணி தான். ஜெயலலிதா எம்.ஜி.ஆர் யிடம் இருந்து அரசியல் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டு அதன்பிறகு எம்.ஜி.ஆரையே ஒதுக்கி விட்டார். திரிஷாவும் ஜெயலலிதா போலவே இருக்க விரும்புகிறார். அதனால் விஜய் திரிஷாவை விட்டு விலகி, அவருடைய மனைவி சங்கீதாவுடன் இணையவேண்டும் என சுசித்ரா அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.
இப்படி விஜய்யையும் திரிஷாவையும், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவோடு அவர் ஒப்பிட்டு பேசி இருப்பது சமூக வலைதளத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.