search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • 10 மொழிகளில் கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் படம் குறித்த முதல் ரிவியூவ் வெளியாகியுள்ளது.
    • இந்த படத்தில் பணியாற்றியதை நான் பெருமையாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். மாபெரும் பொருட் செலவில் பிரமாண்டமான முறையில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கடந்த மாதம் வெளியான கங்குவா படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரச் செய்தது.

    இதற்கிடையில் ரஜினியின் வேட்டையன் பட ரிலீஸை ஒட்டி  கங்குவா படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. 10 மொழிகளில் கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் படம் குறித்த முதல் ரிவியூவ் வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு முன்னதாக படத்தில் பணியாற்றியவர்களுக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் படத்தில் பாடல் எழுதியுள்ள பாடலாசிரியர் விவேகா படம் பார்த்த அனுபவத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

     

    அந்த பதிவில் அவர் கூறியதாவது, 'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்... இந்த படத்தில் பணியாற்றியதை நான் பெருமையாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

     

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • பா ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை.

    தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் நடித்துள்ளனர். இப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமூதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

    இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் மேற்கொண்டுள்ளார். பா ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை.

    இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் அப்பதிவில் " தங்கலான் படத்தின் பின்னணி இசையமைப்பு முடிவடைந்தது, நான் என்னுடைய பெஸ்ட்டை கொடுத்துள்ளேன், தங்கலான் எப்படிப்பட்ட திரைப்படம் என்று சொல்ல வார்த்தை இல்லை, கூடிய விரைவில் ஒரு அசத்தலான டிரைலர் வர இருக்கிறது, இந்தியன் சினிமா மிகப் பெரிய படைப்பான தங்கலானை பார்க்க இருக்கிறது" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

    திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கலான் திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமலா பாலுக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
    • அமலாபாலிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

    வட இந்தியாவில் பிரபலமான சினிமா மேக்கப் கலைஞர் மற்றும் சிகை அலங்கார நிபுணராக இருக்கும் ஹேமா தனக்கு நடிகை அமலாபாலிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

    அவர் கூறும்போது, "ஒருமுறை சென்னையில் அமலா பாலுடன் படப்பிடிப்புக்கு சென்றேன்.

    ஏப்ரல், மே மாதத்தில் கடும் வெயிலில் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது. நாங்கள் சென்ற இடத்தில் கொஞ்ச நேரம் நிழலில் உட்காரலாம் என்றால் கூட ஒரு செடியோ, மரமோ இல்லை.

    அதனால் கேரவேனுக்குள் உட்கார்ந்து கொண்டோம். ஆனால் நான் உட்கார்ந்த உடனே அமலா பால் தனது மானேஜரை அழைத்து என்னை வேனை விட்டு வெளியேறும்படி சொல்லி அனுப்பினார்.

    நானும் இன்னும் சிலரும் அங்கு உட்கார்ந்திருந்தோம். இவ்வளவு கடுமையான வெயிலில் எங்கு போய் நிற்பது என்று யோசித்தோம்.

    ஆனால் நாங்கள் இறங்கும் வரை அவர் விடவில்லை. அதனால் வேனை விட்டு இறங்கினோம். இதுபோன்ற சம்பவங்கள் அவர் மூலம் எனக்கு நிறையவே நடைபெற்றன.

    கேமரா முன் நடிக்கும் நடிகர்களை அழகாக காமிப்பதற்கு எங்களது முழு உழைப்பை நாங்கள் தருகிறோம், திரைத்துறையில் நாங்களும் முக்கிய பங்கை வகிக்கிறோம் ஆனால் ஒப்பனை கலைஞர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

    வட இந்தியாவில் தபு போன்ற ஸ்டார் நடிகைகளுடன் கூட சேர்ந்து பணியாற்றினோம். எங்களைப் போன்றவர்களுக்காக தபு வேனையெல்லாம் அவரே புக் செய்து எங்களை நன்றாக பார்த்துக்கொள்வார்'' என்றார்.

    அமலா பாலுக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் வீட்டுக்கும் வரும் போட்டாவை இன்ஸ்டாவில் பகிர்ந்தார். மகனுக்கு இலாய் என்ற பெயரை வைத்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக ஆடுஜீவிதம் திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூலை அள்ளியது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
    • திரைப்பிரபிலங்களில் இருந்து அரசியல் பிரபலங்கள் வரை இந்திய அணியை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றன.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஐசிசி உலகக் கோப்பையை வென்றுள்ளது.

    இந்த வரலாற்று வெற்றியை கொண்டாட திரைப்பிரபிலங்களில் இருந்து அரசியல் பிரபலங்கள் வரை இந்திய அணியை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றன. இந்திய அணியை பாராட்டும் வகையில் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் அவரது ஒரு பாடலை பரிசாக வழங்கியுள்ளார்.

    டீம் இந்தியா ஹை ஹும் என்ற தலைப்பிடப்பட்ட அந்தப் பாடல், சமீபத்தில் வெளியான மைதான் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலாகும்.

    இதுக் குறித்து ஏ.ஆர் ரகுமான் அவரது எக்ஸ் பக்கத்தில் இந்தியா அணிக்கு வாழ்த்து தெரிவித்து இந்த பாடலின் யூடியூப் லிங்கை அதில் பதிவு செய்துள்ளார். இப்பாடலின் காட்சிகள் தற்பொழுது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அனுராக் காஷ்யப் மற்றும் சுந்தர் சி நடித்த ஒன் 2 ஒன் திரைப்படத்தின் டீசர் வெளியானது.
    • அனுராக் காஷ்யப் மற்றும் குல்ஷன் தேவைய்யா ’பேட் காப்’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளனர்.

    மகாராஜா திரைப்படத்தில் அவரது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் அனுராக் காஷ்யப். இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

    சமீபத்தில் அனுராக் காஷ்யப் மற்றும் சுந்தர் சி நடித்த ஒன் 2 ஒன் திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில் அவர் சமீபத்தில் கலந்துக் கொண்ட பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அவர் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்.

    அங்கு  ஜெயில் குறித்து கேட்கப்பட்ட  கேள்விக்கு பதிலளிக்கு விதமாக " ஆம் நான் ஜெயிலில்  இருந்திருக்கிறேன்,  யார அடிக்கக்கூடாதோ அவங்கள அடிச்சதுனால நான் ஜெயிலுக்கு போனேன், நான் தப்பான ஆள் மேல கைய வச்சிட்டேன். நான் ஒரு இரவு முழுசா ஜெயில்ல இருந்தேன். யார் அடிச்சு நான் ஜெயிலுக்கு போனேனோ அவரே தான் என்னோட வாழ்க்கை மாறுனதுக்கு முக்கியமான காரணம், அவரே தான் என்னய ஜெயில்ல இருந்து வெளில கொண்டு வந்தாரு" என்று கூறினார்.

    இவ்வாறு கூறியவுடன் அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சி அடந்தனர், மேலும் அனுராக் யார் அந்த நபர் என்ற விவரத்தை கூறவில்லை.

    தற்பொழுது அனுராக் காஷ்யப் மற்றும் குல்ஷன் தேவைய்யா 'பேட் காப்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளனர். இந்த தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இந்த தொடரை ஆதித்யா தத் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த கூட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது உண்டு .
    • அவரது பின் தொடர்ச்சியாக நடிகர் சித்திக் தேர்தலில் போட்டியிட்டார்.

    கோகுலம் கருத்தரங்க மையத்தில் நேற்று மாலை நடந்த அம்மா அமைப்பின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் மலையாள நடிகர் சங்கம் தேர்தல்  நடைபெற்றது . இந்த கூட்டத்தில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது உண்டு . இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக திரைப்பிரபலங்கள் பல நாடுகளில் இருந்து வந்து கலந்துக் கொண்டனர்.

    மோகன்லால், மஞ்சு வாரியர், விஜய் பாபு, லால், இந்திரஜித், டொவினோ தாமஸ், கிரேஸ் ஆண்டனி, மதுபால் போன்றவர்கள் கலந்துக் கொண்டனர்,

    இம்முறை மோகன்லால் எதிர்ப்பின்றி அம்மா அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கடந்த எட்டு முறை அம்மா அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த நடிகர் பாபு தானாக முன்வந்து தனது பதவியை நிறைவு செய்ததுடன் இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்ததை அடுத்து அவரது பின் தொடர்ச்சியாக நடிகர் சித்திக் தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து நடிகை குக்கு பரமேஸ்வரன் , உண்ணி சிவபால் ஆகியோர் போட்டியிட்டனர் . இந்த தேர்தலில் நடிகர் சித்திக் , நடிகர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் . இவரை எதிர்த்துப் போட்டியிட்ட குக்கு பரமேஸ்வரன் மற்றும் உண்ணி சிவபால் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

     

    அத்துடன் கடந்த காலங்களில் நான்கு முறை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்தவர் நடிகை குக்கு பரமேஸ்வரன். துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை மஞ்சு பிள்ளை தோல்வி அடைந்தார் . அனூப் சந்திரன், ஜெயன் சேர்த்தலா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட பத்திரிக்கை தாக்கல் செய்து இருந்தாலும், நடிகர் மோகன்லால் தேர்தலில் போட்டியிட தயாரானவுடன் அவர்கள் தங்களது மனுவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    நடிகர் உண்ணி முகுந்தன் இந்த அமைப்பின் பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடிகர் இடைவேளை பாபு கடந்த 2018 -ம் ஆண்டு முதல் தொடர்ந்து பொதுச் செயலாளர் பதவி வகித்து வருகிறார். இம்முறை நடந்த தேர்தலில் நடிகர்கள் ஜெகதீஷ் மற்றும் ஜெயன் சேர்த்தலா ஆகியோர் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    நடிகர் சங்கத்தின் தலைவராக மோகன்லால் தொடர்ந்து  மூன்றாம் முறை வெற்றிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு விழிப்புணர்வு.
    • முழுமையாக எனக்கு தெரியாமல் செய்தவை.

    தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சமந்தா ஒருபுறம் நாக சைதன்யாவுடன் விவாகரத்து, மற்றொரு புறம் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு காரணங்களால் சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

    வெளிநாடுகளுக்கும் சென்று சிகிச்சை பெற்று வந்தார். தற்போது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் ஒரு ரசிகர் சமந்தாவிடம் இப்போதெல்லாம் நன்றாகத்தான் பேசுகிறீர்கள். ஆனால் இதற்கு முன் நீங்களே ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை விளம்பரம் செய்தீர்கள் அல்லவா? என்று கேட்டார்.

    அதற்கு பதில் அளித்து சமந்தா கூறும்போது ''இதற்கு முன் நான் சில தவறுகள் செய்தது உண்மைதான். ஆனால் அவையெல்லாம் முழுமையாக எனக்கு தெரியாமல் செய்தவை. அதன் பிறகு அவற்றை விளம்பரம் செய்வதை முழுமையாக நிறுத்தி விட்டேன்.

    இப்போது எதை செய்கிறேனோ அதைப்பற்றி மட்டும்தான் பேசுகிறேன்'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கிளம்பி உள்ளது.
    • டெக்சாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது.

    ஒரு கம்பெனிக்கு விளம்பர தூதுவராக ஒப்பந்தமான பிரபல பாலிவுட் சீனியர் நடிகை மாதுரி தீட்சித் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் ஆகஸ்டு மாதத்தில் தனது கம்பெனிகளின் விளம்பரத்திற்காக டெக்சாசில் பிரமாண்டமான ஒரு நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்.

    இந்த கம்பெனியின் விளம்பரதாரரான மாதுரி தீட்சித் டெக்சாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தெரிவித்து உள்ளார்.

    ஆனால் அந்த தொழில் அதிபர் பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் தொடர்பு வைத்து இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் இந்திய அரசாங்கம் அவர் நடத்தும் நிறுவனங்களை பிளாக் லிஸ்டில் வைத்தது.

    அந்த நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாதுரி தீட்சித் மீது சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் கிளம்பி உள்ளது.

    பாகிஸ்தான் தொழில் அதிபரின் பின்புலம் என்ன என்று தெரிந்து கொள்ளாமலேயே அந்த நிறுவனத்திற்கு விளம்பரதாரராக எப்படி நீங்கள் இருக்கலாம். டெக்சாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது என்று வலைத்தளத்தில் பலரும் வற்புறுத்தி வருகிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

    பா. ரஞ்சித்தின் அடுத்த படைப்பான தங்கலான் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் நடித்துள்ளனர். இப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமூதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

    இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் மேற்கொண்டுள்ளார். பா ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை.

    பா. ரஞ்சித்துடன் இணைந்து தமிழ் பிரபா கதையை எழுதியுள்ளார். தங்கலான் திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது. முதலில் திரைப்படம் ஜன்வரி 26 ஆம் தேதி வெளியாகப்போவதாக கூறினர் ஆனால் சில காரணங்களால் படத்தை சொன்ன தேதியில் வெளியிட முடியவில்லை.

    தற்பொழுது படத்தின் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகும் என  தகவல் வெளியாகியுள்ளது இம்முறை சொன்ன தேதியில் வெளியாகும் என ரசிகர்களால் நம்பப் படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பல ஹாரர் கதைக்களத்துடைய படங்களை இயக்கியுள்ளார்.
    • இந்திய நடன இயக்குனரான ஷியாமக் தாவரை சந்தித்த தருணத்தை பகிர்ந்தார்.

    இந்தி சினிமாவில் சர்ச்சைக்குறிய இயக்குனர்களில் ஒருவர் ராம் கோபால் வர்மா, அவர் பல ஹாரர் கதைக்களத்துடைய படங்களை இயக்கியுள்ளார். ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த ராட் ராத்ரி, பூத், ஃபூங்க் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    என்னதான் இயக்குனர் ஹாரர் திரைப்படங்களை இயக்கி இருந்தாலும் அவர் வாழ்க்கையில் இம்மாதிரி அமானுஷ்ய சம்பவங்களை எதிர் கொண்டிருப்பாரா என்ற கேள்வி இருக்கும். அப்படி ஒரு சம்பவத்தை ஆர்.ஜி.வி சமீபத்திய ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

    அந்த நேர்காணலில் இந்திய நடன இயக்குனரான ஷியாமக் தாவரை சந்தித்த தருணத்தை பகிர்ந்தார். அவர்கள் இருவரும் விமான பயணத்தின் போது சந்தித்ததாகவும், தனக்கு பின்னாடி இருக்கையில் தாவர் அமர்ந்திருந்தார். இதனால் ஆர்.ஜி.வி அவருடன் பேசலாம் என பின் இருக்கைக்கு சென்று பேசியுள்ளார். அப்போது தாவர் ஆர்ஜிவி ஐ பார்த்து `உங்க அப்பா இறந்துட்டாரா?' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

    இந்த சந்திப்பிற்கு 15 நாட்கள் முன் ஆர்ஜிவி இன் தந்தை இறந்ததால் இவர் ஆமா என்று பதிலளித்துள்ளார். பின் சிறிய அமைதிக்கு பின் தவார் " உங்க அப்பா இப்போ நம்ம கூட தான் இருக்காரு" என்று கூறியுள்ளார்.

    இதை கேட்ட ஆர்ஜிவி- க்கு பெரும் அதிர்ச்சி பின் "எனக்கு இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் நம்பிக்கை இல்ல" என்று கூறியுள்ளார்.

    அதற்கு தாவர் " அவருக்கும் இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் நம்பிக்கை இல்ல அவர் உன்னைய பற்றி ரொம்ப கவலை படுறாரு" என்று ஆர்ஜிவியின் தந்தை கூறியதாக கூறினார்.

    இதனால் அதிர்ச்சி, பயம், கோபம் என பல எமோஷன்களை மேற்கொண்ட ஆர்ஜிவி அந்த இருக்கையில் இருந்து எழுந்து பழைய இருக்கையில் சென்று அமர்ந்து விட்டார். இவ்வாறு இந்த வித்தியாசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார் இயக்குனர் ஆர்ஜிவி.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 'இந்தியன் 2' படத்தின் டிரெய்லர் கடந்த 25-ந் தேதி வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
    • திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    'இந்தியன் 2' படத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கமல் ஹாசன், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    இந்த நிலையில் 'இந்தியன் 2' படத்தின் டிரெய்லர் கடந்த 25-ந் தேதி வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் புரமோசனுக்காக 'இந்தியன் 2' படக்குழுவினர் மலேசியா சென்றுள்ளனர். திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்தநிலையில், மலேசியாவில் நடைபெற்று வரும் புரமோசன் நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஒரு விறுவிறுப்பான தகவல் வெளியிட்டுள்ளார். அது சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது. அதில் 'இந்தியன் 2' படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நான் நடித்து இருக்கிறேன். பாகம் 3 -இல் தான் முழு காட்சிகளில் வருவேன், எனக்கும் கமல்ஹாசன் சாருக்கும் நிறைய காம்பினேஷன் காட்சிகள் இருக்கிறது என கூறினார்.

    மேலும் அந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் 'நான் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க காரணமே இந்தியன் 3 ஓட கதை தான். நான் இந்தியன் 2 விட இந்தியன் 3 காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். அதுல் நான் சேனாதிபதியோட அப்பாவா நடித்திருக்கிறேன்,' என கூறியுள்ளார்.

    இந்தியன் படத்தின் 2-ம் மற்றும் 3 -ம் பாகத்திற்கான படப்பிடிப்பை ஷங்கர் இயக்கி முடித்துள்ளார். இரண்டாம் பாகம் வெளியான அடுத்த சில மாதங்களில் 3 -ம் பாகத்திற்காக அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வேகமாக பைக் ஓட்டி வீடியோவை யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர் தான் டிடிஎப் வாசன்.
    • இந்நிலையில் டிடிஎஃப் வாசனின் அடுத்த படத்தை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    வேகமாக பைக் ஓட்டி வீடியோவை யூடியூபில் வெளியிட்டு பிரபலமானவர் தான் டிடிஎப் வாசன். அவரை யூடியூப்பில் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். தமிழ் சினிமாவில் அவர் நடிக்க உள்ள படத்திற்கு மஞ்சள் வீரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை செல் அம் என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே திருவிக பூங்கா என்கிற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

    இப்பட பூஜை விழாவில் இருந்தே இப்படத்தின் சர்ச்சையும், கேளி மற்றும் கிண்டல்கள், ட்ரோல் செய்த வண்ணம்தான் உள்ளது. சில நாடகளுக்கு முன் கூட மதுரையில் கார் ஓட்டிக் கொண்டு செல்ஃபோன் பேசிய படி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். தற்பொழுது ஜாமினில் வந்துள்ளார். இப்படி டிடிஎப் வாசன் என்ன செய்தாலும் அது சர்ச்சையாகவே முடியும் வழக்கமாகிவிட்டது.

    இந்நிலையில் டிடிஎஃப் வாசனின் அடுத்த படத்தை  குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு ஐபிஎல் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ராதா ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கருணாகரன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு விநாயகமூர்த்தி இசையமைக்க உள்ளார்.

    இப்படத்தில் இரண்டாம் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்படத்தில் கிஷோர் மற்றும் அபிராமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்பொழுது வெளியாகிய போஸ்டரில் டிடிஎப் வாசன் மிகவும் கோபமாகவும் அவருக்கு பின்னாடி ஒரு கார் ரோட்டில் இருக்கிறது.

    தலைப்பில் Indian Penal Law{IPL} என குறிப்பிட்டுள்ளது. இப்படம் கார் ரேசிங் தொடர்பான கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×