என் மலர்
- 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
- தி ராஜா சாப் படப்பிடிப்பில் நடிகை மாளவிகா மோகனன் இணைந்துள்ளதாக தகவல்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ், பாகுபலி திரைப்படம் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார்.
பாகுபலியை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் பான் இந்தியா அளவில் வெளியிடப்படுகிறது.
அந்த வகையில், சாஹோ, ராதே ஷ்யாம், ஆகிய பான் இந்தியா திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.
'சலார்' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
பிரபாஸ் ஒப்பந்தமாகி இருக்கும் மற்றொரு திரைப்படம் 'தி ராஜா சாப்'. இப்படத்தின் அறிவிப்பு முதல் தோற்றத்துடன் கடந்த ஜனவரி மாதம் வெளியானது.
மாருதி இயக்கும் இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். பீப்பிள் மீடியாபேக்டரியின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தில் பிரபாஸூடன், மாளவிகா மோகனன், நிதி அர்வால், ரித்தி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் பரவிய நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை மாளவிகா மோகனன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
- தாரகை சினிமாஸ் தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் "அறம் செய்".
- முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது
Thaaragai cinemas தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் "அறம் செய்". நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது....
,இந்தப்படம் கண்டிப்பாகச் சர்ச்சையில் சிக்குமெனத் தெரியும். முழுக்க முழுக்க அரசியலில் நடந்த உண்மை சம்பவங்களை எடுத்திருக்கிறார் ஆனால் போஸ்ட்ரில் இப்படத்தில் அரசியல் இல்லை எனப் பொய் சொல்லியிருக்கிறார்.
நடிகர் ஜீவா பேசியதாவது...
பாலு எஸ் வைத்தியநாதன் இந்தப்படத்தின் நாயகன் இயக்குநர் ஒன் மேன் ஆர்மி மாதிரி செயல்பட்டு தன் மனதிலிருந்ததை படமாக எடுத்துள்ளார். மிக இளகிய மனதுக்காரர் நல்ல மனிதர். ஹீரோயின் மேகாலி நல்ல நடிகை, நன்றாக டான்ஸ் ஆடியுள்ளார், அவருடன் எனக்கு சாங்க் இருக்கிறது எனச் சொல்லிவிட்டு பாலு சார் அவரே தனியாக போய் டான்ஸ் ஆடிவிட்டு வந்துவிட்டார். என்று நகைச்சுவையாக பேசியுள்ளனர்.
யூடியூபில் டிரெண்டான திருச்சி சாதனா முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அரசியல் கருத்துகளை முன் வைக்கும் திரைப்படமாக அமைந்துள்ளது. Thaaragai cinemas பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்தை, ஸ்வேதா காசிராஜ் இணை தயாரிப்பு . செய்துள்ளார். விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குநர் கே.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர் சி நாயகனாகவும், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளனர்.
- படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு கடந்த ஆண்டு வெளியிட்டது.
சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 சமீபத்தில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் 100 கோடி வசூலித்த பெருமையை பெற்றது. சுந்தர் சி அடுத்ததாக கலகலப்பு பாகம் 2 மற்றும் சில படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். அதே சமயம் படங்களிலும் நடித்து வருகிறார்.
இயக்குநர் கே.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர் சி நாயகனாகவும், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்கும் "ஒன் 2 ஒன்" படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்த படத்தை 24 HRS புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தை குறித்து புதிய அப்டேட் வந்துள்ளது. படத்தின் டிரைலர் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுக் குறித்து வெளியிட்ட போஸ்டரில் சுந்தர் சி மிகவும் கோவத்துடன் காணப்படுகிறார். அனுராக் காஷ்யப் ஒரு முகமுடியை பார்த்து சிரித்துக் கொண்டு இருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அனுராக் காஷ்யப் லியோ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தாலும், சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா திரைப்படத்தில் அசத்தலான வில்லன் நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.
இவர்களுடன் பரமபதம் விளையாட்டு படத்தில் நடித்த விஜய் வர்மன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - எஸ். கே.ஏ. பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன், படத்தொகுப்பு சி.எஸ். பிரேம் குமார், கலை இயக்கம் - ஆர். ஜனார்த்தனன் மேற்கொண்டுள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா அடுத்ததாக 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார்.
- படத்தை 10 மொழிகளில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா அடுத்ததாக 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். சிவா இதற்கு முன் நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 அஜித் படங்களை இயக்கியவராவர்.
மாபெரும் பொருட் செலவில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது . படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொள்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
கங்குவா படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகியது. வெளியான குறுகிய நேரத்தில் பலக் கோடி பார்வைகளை பெற்றது. டீசரில் சூர்யா மிக அற்புதமாக நடித்து இருப்பார். படத்தை 10 மொழிகளில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தின் மீது ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர் பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுக்குறித்து படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டரில் மனித பிணங்கள் மலைப் போல குவித்து வைக்கப்பட்டுள்ளது அதன் மேல் சூர்யா ஒரு வாழ் ஏந்தியப் படி காணப்படுகிறார்.
அக்டோபர் 10 ஆம் தேதி ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படமும் வெளியாகவுள்ளது. அதே நாலில் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் வெளியாகப்போவதால் . மிகப்பெரிய போட்டி இந்த இரண்டு படங்களிடையே உருவாகப்போவது உறுதி. இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சூர்யா தற்பொழுது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா44 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் அஜித் குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். குட் பேட் அக்லி திரைப்படத்தை மார்க் ஆண்டனி புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது.
இப்படத்தில் மூன்று வேடங்களில் அஜித் நடித்துள்ளார். ஃபர்ஸ்ட் லுக்கில் இதுவரை அஜித்தை பார்த்திராத லுக்கில் இருந்தார். தற்பொழுது படத்தின் செக்கண்ட் லுக் `காட் பிளஸ் யூ மாமே' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இதில் கழுத்தில் கர்ச்சீஃப் கட்டிக்கொண்டும் 63 என்ற எண்ணுடைய சிறை சீருடை மற்றும் கண்ணில் கூலர்ஸ் அணிந்து ஸ்வேக்-காக உள்ளார்.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அஜித் அணிந்திருக்கும் கண்ணாடியில் பில்லா அஜித்தின் புகைப்படம் இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் எம்மாதிரியான கதையை இயக்குகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சத்திற்கு சென்றுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்திருக்கும் படத்திற்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது.
- இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்திருக்கும் படத்திற்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தாயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. மேலும் கடந்த மே 9 ஆம் தேதி இப்படத்தில் ஏர்.ஆர் ரகுமான் இசையில் தனுஷ் பாடிய 'அடங்காத அசுரன்' என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
படம் வரும் ஜூலை 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படக்குழுவினர் தற்பொழுது புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் காளிதாஸ் ஜெயராம், தனுஷ், சுதீப் கிஷன் மற்றும் துஷரா மாவு மில்லில் மிகவும் கோபத்துடன் முறைத்துக்கொண்டு இருப்பது போல் இருக்கின்றனர். இப்போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தற்பொழுது தொடங்கியுள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ரோமியோ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்துள்ளார். விஜய் ஆண்டனியுடன் சரத்குமார் இணைந்து நடித்துள்ள புதிய படம் "மழை பிடிக்காத மனிதன்." இந்த படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் டீசரை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானது.
சில நாட்களுக்கு முன் படத்தின் சென்சார்ஷிப் போர்ட் U/A சான்றிதழை வழங்கியது என்ற அப்டேட்டை கொடுத்து இருந்தனர். தற்பொழுது படத்தின் டிரைலர் குறித்து அப்டேட்டை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படத்தின் டிரைலர் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் விரைவில் திரைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'.
- இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் கீர்த்தி சுரேஷ், நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது.
தற்பொழுது படத்தின் புதிய அப்டேட்டாக படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வெளியாகவுள்ளது. இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வருண் தவானை சுற்றி ஒரு கூட்டமே கத்தியுடன் சூழ்ந்துள்ளது. இவர் ஒற்றையாளாக முறைத்துக் கொண்டே நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
அதே டிசம்பர் 25 அன்று அமீர்கான் மற்றும் ஜெனிலியா நடித்திருக்கும் சிதாரே சமீன் பர் படமும் அன்று வெளியாகவுள்ளதால், எந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெகஷனில் அதிகம் வசூலிக்கும் ஒரு போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கல்கி 2898 கி.பி படத்தின் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி' கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
- இந்த வாகனம் கடந்த மாதம் சென்னை மஹேந்திரா சிட்டியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது.
இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது.
இத்திரைப்படத்தில் மஹேந்திரா கம்பெனி மூலம் பிரத்தியேகமாக உருவாக்கிய, படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி' கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுதும் அவருடன் வரும் இந்த புஜ்ஜி கதாபாத்திரத்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார்.
இந்த வாகனம் கடந்த மாதம் சென்னை மஹேந்திரா சிட்டிக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டது.
கற்பனையிலும் நினைத்து பார்த்திராத வடிவத்தில், மூன்று சக்கரங்களுடன், நவீன வசதிகளுடன், பார்த்தவுடன் எதிர்காலத்தை கண்முன் கொண்டு வரும் வகையிலான புஜ்ஜி வாகனம், பார்த்தவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்த வாகனத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வாகனம் கிட்டத்தட்ட 20 அடி நீளமும் 11 அகலமும் 7 அடி உயரமும் கொண்டது. இந்த வாகனத்தின் எடை 6 டன் அதாவது 6000 கிலோ ஆகும்.
2 மஹேந்திரா எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் 125 bhp மற்றும் 9,800 Nm டார்க் சக்தியுடன் இந்த வாகனம் இயக்கப்படுகிறது. இந்த வாகனத்தின் பின்புறம் 47 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தால் அதிகபட்சமாக 45 கிமீ வேகத்தில் பயணிக்கமுடியும். இந்த வாகனத்தில் 2 ஹப்லெஸ் டயர் முன்புறத்தில் 1 ஹப்லெஸ் டயர் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு டயரின் எடையும் 1 டன் ஆகும்.
இந்த வாகனத்தின் மையத்தில் ஓட்டுநருக்கு ஒரு இருக்கை உள்ளது. வாகனத்தின் பின்புறத்தில் கைது செய்யப்பட்டவர்களை அடைப்பதற்கு ஒரு சிறிய சிறை ஒன்று உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி நிறைய பிரச்சனை கொடுத்திருந்தார்கள்.
- முதன் முறையாக 9 நாடுகளில் 25 நாட்கள் என கடந்து வெள்ளிவிழா கொண்டாடியது.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1992ம் ஆண்டு வெளிவந்த படம் அண்ணாமலை. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, மனோரமா, ஜனகராஜ் எனப் பலரும் நடித்துள்ளனர். சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருக்கும் ஏழை பால் வியாபாரி அண்ணாமலை மற்றும் பணக்கார ஹோட்டல் வியாபாரி அசோக், இருவருக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயலும் அசோக்கின் தந்தை எதிர்க்கும் நட்பைச் சுற்றியே படக் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.
இசை மற்றும் ஒலிப்பதிவு தேவாவால் இசையமைக்கப்பட்டது மற்றும் பாடல்களுக்கான வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார். ஒளிப்பதிவை பி.எஸ்.பிரகாஷ், படத்தொகுப்பை கணேஷ் குமார் இருவரும் செய்திருந்தனர். 1992 காலங்கட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றது அண்ணாமலை படம்.
இந்த படம் வெளியான சமயத்தில் பல பிரச்சனைகள் நடந்திருந்தது. அண்ணாமலை படத்துக்கு அப்போது ஆட்சியில் இருந்த தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி நிறைய பிரச்சனை கொடுத்திருந்தார்கள். படத்தின் போஸ்டர்கள் நிறைய ஓட்ட கூடாது என பல இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்தது. இதனால் படத்திற்கு போதிய அளவு விளம்பரமும் கிடைக்கவில்லை. இருந்தாலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. அதுமட்டுமில்லாமல் 175 நாட்கள் ஓடி வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் அண்ணாமலை திரைப்படம் வெளியாக இன்றுடன் 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது குறித்து சமூக வலைதளங்களில் ரஜினியின் அண்ணாமலை படம் குறித்து பேசப்பட்டு வருகிறது. அதில் இடம் பெற்றுள்ள "மலைடா அண்ணாமலை" "அசோக் உன் காலெண்டரி குறிச்சு வைச்சுக்கோ" போன்ற வசனங்களும் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
அண்ணாமலை படம் 32 ஆண்டு நிறைவடைந்ததையடுத்து தனது எக்ஸ்தளத்தில் அண்ணாமலை பட போஸ்டரை பகிர்ந்துள்ளார் குஷ்பூ. அதில் கூறியிருப்பதாவது.
உலக சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் வெளியாகிய அண்ணாமலை 27-6-1992ல் 56 அரங்கில் 50 நாள், 22 அரங்கில் 100நாள், 15 அரங்கில் 120 நாள், முதன் முறையாக 9 நாடுகளில் 25 நாட்கள் என கடந்து வெள்ளிவிழா கொண்டாடியது.
அன்றைய ஆளுங்கட்சியின் தடைகளை வென்று, 61 வருட தமிழ் சினிமா வரலாற்றில் அதுவரையிருந்த வசூல் சாதனைகளை முறியடித்து புதிய வசூல் சாதனை படைத்த அண்ணாமலை இன்று 32 ஆண்டு நிறைவு அடைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சாக்ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
- இதே போன்று செய்து என்னை டேக் செய்யுங்கள் என கூறியுள்ளார்.
ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் களமிறங்கிய நடிகை சாக்க்ஷி அகர்வாலுக்கு தொடக்கத்தில் பெரிய கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை.
அதன்பிறகு காலா, விசுவாசம், டெடி உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் நடித்திருந்தார். துணை நடிகையாக இருந்து, தற்போது கதாநாயகியாக சாக்ஷி அகர்வால் வளர்ந்து வளர்ந்துள்ளார். இந்த ஆண்டு அவருடைய நடிப்பில் "கெஸ்ட்" மற்றும் "தி நைட்" என்கின்ற இரு திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது,
இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்ட சாக்ஷி அகர்வால், இதே போன்று செய்து என்னை டேக் செய்யுங்கள் என தலைப்பிட்டிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்குகிறார்.
- இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
2003-ம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான 'குறும்பு' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஷ்ணுவர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் அறிந்து அறியாமலும், பட்டியல் போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.
அஜித் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான 'பில்லா' திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது. 2021-ம் ஆண்டு ஷெர்ஷா எனும் இந்தி திரைப்படத்தை கரன் ஜோஹர் தயாரிப்பில் இயக்கினார்.
அதனை தொடர்ந்து நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு நேசிப்பாயா என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தை மாஸ்டர் திரைப்படத்தை தயாரித்த XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/